கணினிகளுக்கு இடையிலான வலையமைப்பு என்பது ஒரு கணினியை ஏனைய கணினிகளோடு பல் பயன் பெறும் நோக்குடன் வலைப்பின்னல் அமைப்பின் ஊடு இணைத்துக்கொள்ளும் செயற்பாடு கணினி வலையமைப்பு ஆகும். இது 3 வகைப்படும்.
- LAN – Local Area Net work
- MAN – Metropolitan Area Net work
- WAN – Wide Area Net work
LAN:
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை இணைப்பதன் மூலம் குறிப்பிட்ட புவியியல் எல்லைக்குள் அதாவது குறிப்பிட்ட அறை அல்லது அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் வலைப்பின்னல். இங்கு புவியியல் எல்லை வரையறை செய்யப்பட்டுள்ளது.
Eg : பாடசாலை கணனி ஆய்வு கூட வலையமைப்பு
MAN
நிறுவனங்களுக்கு இடையிலான அல்லது தலைமை நிறுவனத்துக்கும் அதன் கிளை நிறுவனத்துக்கும் இடையிலான வலையமைப்பு இதுவாகும். இது பல LAN களைக்கொண்டிருக்கும்.
Eg: வங்கிகளுக்கு இடையிலான வலையமைப்பு
WAN
நகரங்களுக்கு இடையிலான அல்லது நாடுகளுக்கு இடையிலான வலையமைப்பு இதுவாகும். இங்கு புவியியல் எல்லை வரையறை செய்யப்படமாட்டாது. இது பல LAN, WAN களைக் கொண்டிருக்கும்.
வலையமைப்பின் நன்மைகள்
- தகவல்களையும், தரவுகளையும் மிக விரைவாக கணினிகளுக்கு இடையில் பரிமாறலாம்;
- ஒரே நேரத்தில் பலர் ஒன்றாக இணைந்து வேலை செய்யக் கூடிய வசதி.
- ஒரு கணினியில் உள்ள மென்பொருட்கள், தகவல்களை மற்றய கணினிகளில் பயன்படுத்தக்கூடிய வசதி.
- Printer,Scanner போன்ற peripheral device களை ஏனைய கணினிகளோடு பகிர கூடிய வசதி.
வலையமைப்பின் தீமைகள்:
- செலவு அதிகம்.
- கணினிகளை பாதுகாப்பது,பராமரிப்பது கடினம்.
- வலையமைப்பில் ஏற்படும் பாதிப்பானது குறித்த நிறுவனத்தின் அனைத்து செயற்பாடுகளையும் பாதிப்படைய செய்யும்.
வலைப்பின்னல் ஏற்படுத்த தேவையான கருவிகள்:
- sever, Personal computer
- Communication media (Twisted pair wire,Coaxial cable,Fiber optical)
- Modem, Network card
- Hub / Switch,,Router
- Network soft ware
வலையமைப்பின் வகைகள் (Network topology)
Star topology
Ring topology
Bus topology
Mesh topology