ஹார்ட்வேர் இடத்தில் சாப்ட்வேர்(SOFTWARE)
1. மானிட்டர் ஸ்விட்ச்:
மானிட்டரை நாம் நேரடியாக பவர் பிளக் அல்லது யு.பி.எஸ். ப்ளக்கில் இணைத்திருப் போம். கம்ப்யூட்டரில் வேலை முடியும்போது, மானிட்டருக்கு வரும் மின்சாரத்தை நிறுத்த, மானிட்டரை ஸ்விட்ச் ஆப் செய்திடுவோம். இதற்கான புஷ் பட்டன் ஸ்விட்ச் அனைத்து மானிட்டர்களிலும் அதன் முன்புறத்தில் இருக்கும்.
இதன் தொடர் பயன்பாட்டால், இந்த ஸ்விட்ச் நாளடைவில் இயங்காமல் போய்விடும். அதற்காக நாம் வேறு மானிட்டரை வாங்குவது வீண் செலவு. இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள ஒரு சாப்ட்வேர் Monitor Off என்ற பெயரில் கிடைக்கிறது.
இதன் மூலம் மவுஸ் கர்சரை நகர்த்தியோ, அல்லது கீ போர்டில் ஒரு கீயை அழுத்தியோ மானிட்டருக்கு வரும் மின்சக்தியை நிறுத்தலாம். கூடுதலாக இன்னும் பல வசதிகளையும் இது தருகிறது. இதனை சோதித்துப் பார்க்க இலவசமாய் டவுண்லோட் செய்திடலாம். இணைய தள முகவரி:http://www.rtsoftwares.com/Utilities/TurnOffMonitor/setup.exe
2. சிடி ராம் டிரைவ் பட்டன்:
அடுத்ததாக நமக்குத் தொல்லை தருவது சிடி ராம் டிரைவின் பட்டன். பெரும்பாலான டிரைவ்களில் நமக்கு முதல் தொல்லை தருவது, சிடி ட்ரேயினை வெளியே, உள்ளே கொண்டு வரும் பட்டன் தான். பலர் இந்த ட்ரேயினை மூடுகையில் தங்கள் கைகளாலேயே தள்ளி மூடுவார்கள்.
திறக்க மட்டுமே பட்டனைப் பயன்படுத்துவார்கள். இது நாளடைவில் பட்டனை முடக்கிவிடும். அப்போது கம்ப்யூட்டரில் சிடி டிரைவ் ப்ராப்பர்ட்டீஸ் சென்று அந்த மெனுவில் எஜக்ட் பிரிவில் கிளிக் செய்து இதனைத் திறக்கலாம்.
ஆனால் மூடுவதற்கு பட்டன் வேலை செய்யவில்லை என்றால், கைகளால் தான் மூடுகிறோம். இதற்கான ஒரு சாப்ட்வேர் ட்ரே 2.5 (Optical Drive Tray)என்ற பெயரில் கிடைக்கிறது. இந்த பைலின் அளவு 713 கேபி. இதனைப் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவ்களின் கதவுகளை இயக்கலாம். இதனைப் பெற அணுக வேண்டிய இணைய முகவரி: http://www.softpedia.com/prog Download/
இப்போது பல சாப்ட்வேர் APPLICATION களில் ஆன் ஸ்கிரீன் கீ போர்டு கிடைக்கிறது. இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கீ போர்டுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இந்த வகையில் இன்னும் சில முன்னேற்றங்களுடன் TouchIt 4.3.03 (On Screen Keyboard) என்னும் சாப்ட்வேர் கிடைக்கிறது.
இதன் மூலம் கீ போர்டுக்கான பல வசதிகளைப் பெறலாம். இதனைப் பெற இணையத்தில்http://www.softpedia.com/get என்ற முகவரிக்குச் செல்லவும்.
4. கீ போர்டு விளக்குகள்:
கீ போர்டில் நம் லாக், ஸ்குரோல் லாக், முக்கியமாக கேப்ஸ் லாக் அழுத்தப் பட்டிருக்கிறதா என்று அறிய, இந்த கீகளுக்கான சிறிய எல்.இ.டி. ஒளி கிடைக்கும்படி கீ போர்டில் தனி இடம் இருக்கும். நாளடைவில் இவை தங்கள் செயல்பாட்டை இழக்கும்.
இந்த விளக்குகளை மானிட்டர் திரையிலேயே காட்டும்படி சாப்ட்வேர் ஒன்று கிடைக்கிறது. இதன் பெயர் டி.கே. கீ போர்டு(DK:Keyboard) இதனை இயக்கிவிட்டால், திரையில் சிறிய பாப் அப் பலூன் குமிழ் விளக்காக, இந்த கீகள் அழுத்தப்படும் போது ஒளிரும். இதனைப் பார்த்த பலரும், கீ போர்டு நன்றாக இயங்கினாலும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பெற http://www.softpedia என்ற முகவரியைப் பயன்படுத்தவும்.
5.மவுஸ்:
உங்கள் மவுஸ் திடீரென உடைந்து போய்விட்டதா? கீழே விழுவதனால் அல்லது தரையில் இருக்கையில் அதனை அறியாமல் மிதித்துவிடுவதனால் உடையும் வாய்ப்புகள் உண்டு. இதனை இன்னொரு மவுஸ் தான் ஈடு கட்ட முடியும்.
இருப்பினும் அவசரத் தேவைக்கு, உங்களிடம் பழைய ஜாய் ஸ்டிக் அல்லது கேம் பேட் (Game Pad) இருந்தால் அதனைப் பயன்படுத்தலாம். இதற்கான சாப்ட்வேர் பெயர் JMouse 1.0. இதனை இயக்கினால் அது இணைக்கப்பட்ட ஜாய் ஸ்டிக் அல்லது கேம் பேடினைப் புரிந்து கொண்டு மவுஸ் இயக்கத்தினைத் தருகிறது.
இந்த சாப்ட்வேர் http://www.softpedia.com/progDownload/JMouseDownload என்ற இணைய முகவரியில் இலவசமாகக் கிடைக்கிறது.