தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, December 17, 2014

பாதுகாப்பான இணையத் தேடலை மேற்கொள்வதற்கு





பாதுகாப்பான இணையத்தள தேடலை மேற்கொள்வதற்கு குகூன் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது.
இந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடும் போது தேடியந்திரங்களோ, இணையதளங்களோ குக்கீஸ் மூலம் உங்கள் இணைய செயல்பாடுகளை கண்காணிக்க முடியாமல் செய்கிறது.
இதன் மூலம் உங்களை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவதையும் தடுக்கிற‌து.
அத்துடன் மட்டுமல்லாமல் இணையம் மூலம் வைரஸ் மற்றும் மால்வேர் போன்றவை உள்ளே வராமலும் இது தடுக்கிற‌து.
மேலும் ஒரு மாற்று மின்னஞ்சலையும் உருவாக்கி தந்து குப்பை மின்னஞ்சல்களில் இருந்தும் காப்பாற்றுகிற‌து.

நேரடியாக அடுத்தவர் வலைப்பூவில் Gadget Add செய்யலாம்



  • வலைப்பூக்களில் ஒரு அமைப்பு, குழு, அல்லது சமூக சேவை தளங்கள் தங்கள் வலைப்பூவுக்கு என்று ஒரு Logo செய்து அதனை அடுத்தவர் வலைப்பூக்களில் Add செய்ய வழி செய்து இருப்பார்கள். ஆனால் அதனை பயன்படுத்துபவர்கள் அந்த Coding ஐ copy செய்து மீண்டும் தங்கள் Blogger Account க்கு சென்று அதை Paste செய்ய வேண்டி இருக்கும். இதை நேரடியாக ஒரே Click மூலம் அவர்கள் Layout க்கு சென்று Copy, Paste போன்ற எதுவும் செய்யாமல் Add செய்யும்படி செய்தால் எளிது தானே. அதன் வழிகளைதான் நான் சொல்லப் போகிறேன்.

    கீழே படத்தில் இரண்டும் உள்ளது. எது உங்கள் வாசகர்களுக்கு எளிது என்பது உங்களுக்கே தெரியும்.
    இதில் படம் இரண்டில் உள்ளது போல செய்ய உங்களுக்கு சொல்லப் போகிறேன்.
    எப்படி செய்வது இதை?
    நான்  இங்கே என் லோகோ சேர்ப்பது எப்படி என சொல்கிறேன்.

      http://www.baleprabu.com/
  • " title="பலே பிரபு">https://lh4.googleusercontent.com/-Gkiyd-d32Pg/TmianrCtniI/AAAAAAAABO4/18JEiHLTWeI/Bale%252520Prabu.gif" alt="பலே பிரபு" border="0" height="157" width="300" />

    "type="hidden">
      http://baleprabu.com/
    " type="hidden">
      https://lh4.googleusercontent.com/-Gkiyd-d32Pg/TmianrCtniI/AAAAAAAABO4/18JEiHLTWeI/Bale%252520Prabu.gif
    " type="hidden">
    http://www.blogger.com/img/add/add2blogger_sm_b.gif" name="bloggerbutton" type="image">

    இதில் சிவப்பு நிறத்தில் உள்ளவற்றை மாற்றி உங்கள் வலைப்பூ முகவரி கொடுக்க வேண்டும், நீல நிறத்தில் உள்ளவற்றை மாற்றி உங்க Logo URL கொடுக்க வேண்டும், பச்சை நிறம் உங்கள் தலைப்பு.

    இதை முடித்தவுடன் உங்கள் வலைப்பூவில் Blogger-->Layout-->Add New Gadget--> HTML/Java Scriptபகுதியில் இதை Paste செய்து விடுங்கள் அவ்வளவே. 
    இது இந்த படத்துடன் தோன்றும்.

    மென்பொருள்களுக்கு பூட்டு போட

    பாதுகாப்பாக கோப்புகளை வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் வைத்து பூட்டி வைத்திருப்பார்கள். மேலும் அந்த குறிப்பிட்ட கோப்புக்கும் கடவுச்சொல்லை கொண்டு பூட்டி வைத்திருப்பார்கள். எவ்வாறு கோப்பு மிக முக்கியம் என்று நினைத்து பாதுகாப்பாக வைத்திருக்கிறமோ அதே போன்று கணினியில் நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களையும் மிகவும் பத்திரமாக வைக்க என்னுவோம். அதை எவ்வாறு பத்திரமாக வைக்க முடியும் என்று நினைப்பீர்கள். நம் கணினியில் நிறுவப்பட்டு இருக்கும் மென்பொருள்களை பிறர் பயன்படுத்தாதவாறு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைக்க முடியும். இதனால் நாம் மட்டுமே அந்த குறிப்பிட்ட மென்பொருளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
    மென்பொருளை தரவிறக்க சுட்டி 
    சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். மென்பொருளை கணினியில் நிறுவும் போதே முதன்மை கடவுச்சொல் கேட்கும் அதை உள்ளிட்டு மென்பொருளை முழுமையாக நிறுவிக்கொள்ளவும். பின் Password Door அப்ளிகேஷனை திறக்கவும்.
    கணினியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்கள் அனைத்தும் பட்டியலிடப்படும். அந்த வரிசையில் நீங்கள் தேடும் மென்பொருள் இல்லையெனில் Browse Folder ஐகானை அழுத்தி மென்பொருளை தெரிவு செய்து கொள்ளவும்.

    அடுத்து தோன்றும் விண்டோவில் விருப்ப தேர்வுகளை தெரிவு செய்து பின் OK பொத்தானை அழுத்தவும்.
    அடுத்து தோன்றும் விண்டோவானது, பூட்டு போட்ட மென்பொருள்களை நீக்கவும், புதியதாக மென்பொருள்களை சேர்க்கவும் முடியும்.  கடவுச்சொல் கொண்டு பூட்டி வைத்த மென்பொருளை திறக்கும் போது மேலே தோன்றும் விண்டோ போல் தோன்றும் அதில் முதன்மை கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் திறந்து கொள்ள முடியும்.

    செல்பேசியினால் ஏற்படும் பாதிப்புகள்!

    உள்ளங்கையில் அடங்கும் ‘செல்’பேசி உயர்ந்த பணக்காரர் முதல் தாழ்ந்த ஏழைவரை தாராளமாய் பயன்படுத்தும் தகவல் தொடர்புக் கருவியாகிவிட்டது.  ‘செல்பேசி இல்லாதவன் செல்லாக் காசு’ என்று சொல்லும் அளவிற்கு செல்பேசி நம்முடன் இரண்டறக் கலந்துவிட்டது.
    செல் பேசியைக் காட்லும், செல்பேசிக்காக நிறுவப்படும் ஊசிக் கோபுரங்கள், இயல்பான மனித வாழ்க்கையை ஏராளமாய் நாசப்படுத்துகின்றன;  அவை வெளிப்படுத்தும்  கதிர்வீச்சின் பாதிப்புகள் செவிப்புலன்களை மழுங்கடிக்கின்றன.
    செல் பேசியிலிருந்து வெளியேறும் மின்காந்த கதிர்வீச்சு செவிமடுக்கும் போதெல்லாம், காதையொட்டி அமைந்துள்ள திசுக்களை நசுக்கிவிடுகிறது.  இதனால் கேட்கும் திறனைக் ‘காது’ மெதுவாக இழந்துவிடுகிறது.  செல்பேசியும், வானொலி போன்ற ஓர் ஒலிபரப்புச் சாதனமே.  இவற்றிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சை கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.  பதினாறு வயதுக்குக் குறைந்த சிறுவர்கள் அதிக நேரம் செல்பேசியைப் பயன்படுததும்போது பாதிப்பு பன்மடங்கு பெருகும்,  படிக்கும் நேரமும் பாதியாய் குறையும்.
    இதய நோய் உள்ளவர்கள் செல்பேசியை பயன்படுத்தினால் செவிப்புலன் மட்டுமல்ல உடல் நலமும் கெடும்; காதோடு பேசும் கதிர்வீச்சின் வெளிப்பாடு அதிகமாகும் போதெல்லாம், அது, காலனுக்கு விடும் அழைப்பாக மாறிடும்; காத்திருக்கும் மரணத்தை நாளைக்கே தழுவ நேரிடும்; புற்றுநோயும், மலட்டுத் தன்மையும் ஏற்படுகிற அபாயம் கூட இல்லாமல் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
    செல்பேசியிலிருந்து கதிர்வீச்சுகள் வெளியேறுகின்றன.  அக்கதிர்வீச்சுகளிலிருந்து நிறைய நோய்கள் உடலில் குடியேறுகின்றன.  அவை:- தோலில் தடிப்புகள் உண்டாதல் - தலைமுடி கொட்டுதல் - மூளையில் உள்ள நரம்புச் செல்கள்  பாதிப்படைதல் - இரத்த நாளங்கள் அழிதல் - தைராயிடு சுரப்பிகள் கெடுதல் - தொற்று நோய்த் தாக்குதல் -‘லுக்கேமியா’, ‘லிம்போமா’ போன்ற புற்று நோய்கள் ஏற்படுதல் - இன்னும், லிம்போசைட் செல்களின் எண்ணிக்கை குறைதல் போன்றவை! 
    மக்கள் அதிகம் கூடும் இடங்கள், குடியிருப்புகள், பெட்ரோல் நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் செல்பேசி கோபுரங்களை நிறுவக் கூடாதென நடுவணரசு தடைவிதித்துள்ளது.  காரணம்:- செல்பேசி கோபுரம் நிறுவப்பட்டுள்ள இடத்திலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் வசிப்பவர்களுக்கு மூளைப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.
    பெட்ரோல் நிலையங்களில் செல்பேசியைப் பயன்படுத்தினால், அதிலிருந்து வெளியேறும் வெப்பத்தின் மூலம் விரைவாக, பெட்ரோலில் தீ பிடித்து எரியும்! அதனால் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கெல்லாம் செல் பேசியை இயக்கக் கூடாதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் யாரும் அதை கடைபிடிப்பது இல்லை;  இது சோதனைக்குத் தூதுவிடும் வேதனைக்குரியது.
    செல்பேசியில் பேசிக்கொண்டே வாகனங்கள் ஓட்டுவதால் அதிகளவு விபத்துகள் நடைபெற்று உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.  எனவே, செல்பேசியில் பேசிக்கொண்டு வாகனங்கள் ஓட்டுவதைக் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.
    இந்தியாவில் தற்போது செல்பேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை இருபத்தி ஓர் கோடி.  இது 2010-ஆம் ஆண்டில் ஐம்பது கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது செல்பேசி பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையில் உலகில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.  அதனால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் செல்பேசி தயாரிப்பு மற்றும் சேவையில் அதிக முதலீடுகளை அள்ளி வந்து கொட்டுகின்றன.  பலமடங்கு லாபத்தைத் தள்ளிக்கொண்டு போகின்றன.
    செல்பேசிகள், மைக்ரோவ்வேவ் அடுப்புகள், கணினிகள், தொலைக் காட்சிப் பெட்டிகள், மின்சாரக் கடிகாரங்கள், குக்கர்கள், எக்ஸ்ரே கருவிகள், ஸ்கேனர்கள் போன்றவை கதிர்வீச்சை அதிகம் உமிழும் தன்மையுடையவை.  மக்கள் மேற்கண்ட மின்சாதனங்கைளப் பயன்படுத்தும்போது அதிக விழிப்புடன் இருப்பது அவசியம்.
    செல்பேசி மற்றும் செல்பேசிக் கோபுரங்களிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சைத் தடுக்கும் புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டியது உடனடித்தேவை.    
    ‘செல்பேசி’ கோபுரங்கள் விதிமுறைகளுக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.  விதிமுறைகளுக்குப் புறம்பாக நிறுவப்பட்டுள்ளவற்றை அகற்றிடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
    செல்பேசிகளாலும், செல்பேசி கோபுரங்களாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பாமர மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்.  விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.  செல்பேசியில் குறைந்த நேரத்தில் சுருங்கப் பேசி விளங்க வைக்கப் பழகிட வேண்டும்.  அப்போது கட்டணமும் குறையும், கதிர்வீச்சின் பாதிப்பும் குறையும்.

    Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

    சொயற்படுத்துங்கள்

    Blog Archive

    Total Pageviews