தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, December 3, 2014

ஒரே நிமிடத்தில் எந்த இணையதளத்தையும் பிடிஎப் கோப்பாக சேமிக்கலாம்

சில இணையதளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது
பல நல்ல தகவல்கள் அந்த இணையதளத்தில் இருக்கலாம் அந்த
தகவல்களை பிடிஎப் ஆக மாற்றும் வசதி இருக்காது ஆனால் நாம்
அப்படி பட்ட சில முக்கியமான இணையதளங்களை சில நிமிடங்களில்
பிடிஎப் கோப்பாக மாற்றலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.
இணையதள முகவரி : படம் 1
இந்த இணையதளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி நாம்
பிடிஎப் ஆக சேமிக்க வேண்டிய இணையதளத்தின் முகவரியை கொடுக்க
வேண்டியது தான். கொடுத்து முடித்ததும் “ P ” என்ற படத்தை அழுத்தி
நம் கணினியில் பிடிஎப் ஆக சேமித்துக்கொள்ளலாம். பல இணைய
தளங்களில் இந்த வசதி இருந்தாலும் நம் தமிழில் உள்ள அத்தனை
பக்கங்களையும் சரியாக தமிழில் எந்த பிழை செய்தியும் இல்லாமல் பிடிஎப் ஆக மாற்ற இந்த இணையதளம் உதவுகிறது.

USB டிரைவை PCயாக மாற்றலாம்!

நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. ஏன், லேப் டாப் கம்ப்யூட்டரைக் கூடத் தூக்கிச் செல்வது எளிதான காரியம் இல்லை. யு.எஸ்.பி. டிரைவைத்தான் எடுத்துக் செல்கிறோம். இதனால் நாம் வேறு ஒருவரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் அதன் டெஸ்க் டாப், சூழ்நிலை ஆகியவை நமக்கு அந்நியமான ஒரு வேலை தளத்தைத் தருகிறது.
அப்படியானால் நாம் பாக்கெட்டில் போட்டுச் செல்லும் யு.எஸ்.பி. டிரைவில் நம் கம்ப்யூட்டரின் சூழ்நிலையை நமக்குத் தரும் வகையில் அமைத்திட முடியுமா? ஆம், முடியும். இதற்கு ஒரு வழியாகத்தான் MojoPac என்னும் புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது.
மிக எளிதாக இதனை உங்கள் யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் உங்கள் டிரைவை இணைத்துச் செயல்படுத்தத் தொடங்கினாலும் அது உடனே உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் சூழ்நிலையைத் தருகிறது. இதனால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த MojoPac புரோகிராம் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி ஒரு புதிய சூழ்நிலையை உருவாக்குகிறது. உங்கள் யு.எஸ்.பி. டிரைவ் உங்களின் இ: டிரைவாக மாறுகிறது.

இதனால் எந்த கம்ப் யூட்டரில் இதனைப் பயன்படுத்துகிறீர்களோ அதில் உள்ள புரோகிராம்களுக்கு உங்களுக்கு அனுமதி கிடைக்காது. ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குத் தேவயான புரோகிராம்களை நீங்கள் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராம்கள் நீங்கள் எங்கெல்லாம் இந்த டிரைவை இணைத்துப் பயன் படுத்துகிறீர்களோ அங்கெல் லாம் கிடைக்கும்.

இதன் வேகத்தை அதிக பட்சம் பயன் படுத்த வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து அதில் யு.எஸ்.பி. டிரைவ் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். இதில் ஹார்ட்வேர் என்னும் பகுதியில் யு.எஸ்.பி. டிரைவைத் தேர்ந்தெடுத்து அதில் புராபர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ஏற்கனவே “Optimize for quick removal” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதற்குப் பதிலாக “Optimize for Performance” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
தரவிறக்கம் செய்ய : http://www.mojopac.com/
MojoPac போல செயல்படும் புரோகிராம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த Portable Apps Suite என்னும் புரோகிராம் கிடைக்கிறது.

தரவிறக்கம் செய்ய :http://portable-apps-suite.en.softonic.com/download
ஏற்கனவே தெரிந்த பல புரோகிராம்களை விட்டுவிட்டு தெரியாத ஆனால் பல பயன்பாடுகளைத் தருகின்ற புரோகிராம்கள் குறித்து மேலே தகவல்கள் தரப்பட்டுள் ளன. தேவைப்பட்டால் மட்டுமே இறக்கி இன்ஸ் டால் செய்து பயன்படுத்தவும்.

ஹார்ட் டிஸ்க் (HARD DISK) பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க,,,



முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம். அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம். அதனை நம் பயன்பாட்டுக்கு C: - 20GB , D: - 30GB , E: - 30GB என்று வேண்டிய அளவுகளில் பிரித்து கொள்ளலாம். உபயோகிக்கும் போது C: - இயங்குதளம் , D: - மென்பொருள்கள் , E: - பாடல்கள் , வீடியோ என்று சேமித்து விருப்பப்படி உபயோகித்து கொள்ளலாம்.

பெரும்பாலும் இவை நீங்கள் கணினி வாங்கும் போதே செய்யப்பட்டு வந்து விடும். இதில் எனக்கு ஒரு பிரச்சினை தோன்றியது. C: -ல் 20GB மட்டும் இருந்ததால் நிறுவும் மென்பொருள்களால் நிறைந்து நாளடைவில் Disk is full என்று வந்து விட்டது. D: -ல் அதிகமான இடம் இருந்தாலும் அதனை C: -க்கு நகர்த்துவது கடினமான காரியம்.

[1.png]



இது போன்ற தருணங்களில் முன்பு FDISK எனும் DOS டூலை உபயோகித்து வந்தேன். மொத்த ஹார்ட்டிஸ்க்கையும்
திரும்ப பிரித்து C: அதிகமாகவும் D: , E: அளவு குறைவாகவும் நிறுவ வேண்டி இருந்தது. இந்த டூலை உபயோகிக்கும் போது ஹார்ட்டிஸ்க்கில் இருந்த அனைத்து தகவல்களும் அழிந்து விடும். மீண்டும் format செய்து புதியது போல் இயங்குதளம் நிறுவி உபயோக படுத்த வேண்டி இருக்கும். :(

ஆனால் Easeus Partition Master மென்பொருளை அறிந்து கொண்ட பிறகு இந்த வேலை மிக எளிதாயிற்று. இதன் மூலம் எளிய வழி முறைகள் மூலம் பார்டிசன் அளவுகளை கூட்டலாம் / குறைக்கலாம். பார்டிசன்களை அப்படியே காப்பி செய்து கொள்ளலாம். புதிய பாடிசன்களை உருவாக்கலாம். பார்டிசன்களை நீக்கலாம். ஏற்கனவே உள்ள பார்டிசன்களை இரண்டாக பிரிக்கலாம். மேலும் பல வசதிகள் உள்ளன. பார்டிசன்களை Format செய்து கொள்ளலாம்.

இவை அனைத்தையும் உங்கள் ஹார்ட்டிஸ்கில் எவ்வித தகவல் இழப்பும் (Data Loss) இன்றி செய்ய முடியும். இந்த மென்பொருள் இல்ல பயனர்களுக்கு (Home Use) முற்றிலும் இலவசம். இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் இயங்கும்.

மேலும் ஸ்க்ரீன்ஷாட்கள் .இத்தனை உபயோகித்து உங்கள் ஹார்ட்டிஸ்க் பார்டிசன்களில் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள். மாற்றங்கள் செய்த பின்பு மாற்றங்கள் சேமிக்கப்பட்டு உங்கள் கணினியை மீண்டும் துவக்க (Restart) சொல்லும். கணினி மீண்டும் துவங்க ஆரம்பிக்கும் போது நீங்கள் செய்த மாற்றங்கள் செயல்படுத்த படும்.

முக்கிய குறிப்பு : சோதித்து பார்க்கும் போது உங்கள் கணினியில் ஏதேனும் முக்கிய கோப்புகள் / தகவல்கள் இருந்தால் அவற்றைUSB டிரைவிலோ, DVD யிலோ Backup எடுத்து கொள்ளவும். நீங்கள் தெரியாமல் ஏதேனும் தவறுகள் செய்ததால் தகவல்களை இழக்க நேரிடலாம். 

இணைய இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல்

இணைய இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல்களை பயன்படுத்துவதற்கு

நம்மில் பலர் இணையத்தை இரவில் மட்டும் அல்லது குறிப்பிட்ட அளவு மாதம் குறிப்பிட்ட KB/MB அளவு மட்டு பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம்.

இத்தகைய வசதி உள்ளவர்களுக்கு இந்த Gmail Offlineல் பயன்படுத்தும் வசதி மிக மிக உபயோகமாக இருக்கும். நீங்கள் இணைய இணைப்பு கொடுத்தவுடன் மின்னஞ்சல்கள் Desktopக்கு வந்து விடும்.

இதனால் இணைப்பு இல்லாத போதும் நாம் மின்னஞ்சல்களை பார்க்கலாம். அதே போல இணைப்பு இல்லாத போதும் மின்னஞ்சல் அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும் மெயில் Outboxல் தங்கி விடும் எப்போது இணைப்பு கொடுக்கிறோமோ அப்போது மின்னஞ்சல் சென்று விடும்.

மடிக்கணணி வைத்திருப்பவர்கள் பயணம் செய்து கொண்டே மின்னஞ்சல் பார்த்து Reply கொடுக்க வசதியாக இருக்கும். முதலில் உங்கள் ஜிமெயில் லொகின் செய்து settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள்.

இல்லாவிட்டால் http://tools.google.com/gears/ சென்று நிறுவிக் கொள்ளவும். பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள். offline - enable கொடுத்து save செய்யவும். பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும்.

இதில் install offline access for gmailக்கு next button கிளிக் செய்யவும். அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும். ஜிமெயில் உங்கள் desktopக்கு வந்து விடும். உங்கள் மின்னஞ்சல்கள் அனைத்தும் உங்கள் கணணிக்கு தரவிறக்கம் ஆக தொடங்கும். இனி நீங்கள் இணைய இணைப்பு இல்லாமல் கூட மின்னஞ்சல்களை அனுப்பலாம்.

அழகான Wallpaper வேண்டுமா?


கணணிகளைப் பயன்படுத்துபவர்கள் அதனை கவர்ச்சிகரமானதாக வைத்திருப்பதற்கு விரும்புவர், இதற்காக Wallpaper, Themes, Screen Server போன்றவை உதவுகின்றன.
இவற்றில் Wallpaper களினை மாற்றம் செய்வதற்குரிய வசதி அனைத்துவிதமான இயங்குதளங்களிலும் காணப்படுகின்றன. இவற்றினை விட மேலதிகமான மென்பொருட்கள் மூலமும் ஒன்றிற்கு மேற்பட்ட Wallpaper புகைப்படங்களை நிர்வகிக்க முடியும்.
இதற்கென விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இயங்கக்கூடிய பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
இணையதள முகவரி

கணணியில் வரவிருக்கும் தொழில்நுட்ப மாற்றங்கள்

அடுத்த 10 ஆண்டுகளில் கணணியில் என்ன என்ன மாற்றங்கள் வரும் என்பதை கணித்து நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
1. அதிக இடத்தை எடுத்துக் கொண்டு மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கணணியின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கணணிகள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
2. கணணிகள் திருடு போகாது. பயோமெட்ரிக் பயன்பாடு பரவலாகி, கைரேகைகளுக்கு மட்டுமே கணணியின் கதவு திறக்கும்.
3. கீ போர்டுகள் ஓரம் கட்டப்படும். டச் ஸ்கிரீன் இப்போதே வந்துவிட்டது. இனி சைகை மூலம் நாம் கணணியையும், மென்பொருள் அப்ளிகேஷனையும் இயக்கலாம். அடுத்ததாக நம் குரல் மூலமே அனைத்தையும் இயக்கும் வழிகள் கண்டறியப்படும்.
4. கணணிகள் கையடக்க சாதனமாக மாறும். அலுவலகத்தில் டெஸ்க்குகளில் உள்ள இணைப்புகளில் இணைத்த பின்னர், டாப்பில் உள்ள
பெரிய திரைகளில் கணணிகள் இயங்குவதைப் பார்க்கலாம். எனவே டெஸ்க்டாப் கணணி இனி டெஸ்க்கில் உள்ள டாப் கணணியாக இயங்கும்.
5. வீடுகளில் உள்ள கணணிகள் நமக்காக, நம் பெர்சனல் தேவைகளுக்காக இயங்கும். நாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் நம்மை ஓய்வெடுக்கச் சொல்லி, நமக்காக சாதனங்களை இயக்கும். சமையல், வாஷிங், டிவி, ஏர்கண்டிஷனர் இயக்கம் ஆகியவற்றைக் கணணியே பார்த்துக் கொள்ளும்.
6. டிவிடிக்கள் பல டெராபைட்டுகள் கொள்ளளவினைக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் பிளாட்டர் படு வேகத்தில் சுழலும். ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தில் எழுதுவதற்கு ஒரு பக்கத்தில் ஒரு லேசரும், இன்னொரு பக்கத்தில் இன்னொன்றுமாக இயங்கும்.
7. இப்போதிருக்கும் சிபியு அப்படியே இருக்கும். ஆனால் எலக்ட்ரானிக் மைக்ரோ ப்ராசசருக்குப் பதிலாக ஆப்டோ எலக்ட்ரானிக் இன்டக்ரேய்டட் சர்க்யூட் அமைக்கப்படும்.
இதனை ஸ்விட்ச் ஆன் செய்திட சிலிகான் இருக்கும். ஆனால் மற்ற இயக்க வேலைகளை ஆப்டிக்ஸ் பார்த்துக் கொள்ளும். தற்போது கிடைக்கும் இயக்க வேகத்தினைக் காட்டிலும் 100 மடங்கு அதிக வேகத்தில் சிபியு இயங்கும்.
8. இனி ராம் மெமரி ஹோலோகிராபிக் ஆக இருக்கும். இது முப்பரிமாணம் உடையதால், எத்தனை அடுக்குகளையும் இது கொள்ளும். எனவே கொள்ளளவு கற்பனையில் எண்ண முடியாத அளவில் அமையும்.
9. இன்டெல் நிறுவனத்தின் புதிய ப்ராசசர்கள் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் செயல்படும்.
10. இன்டர்நெட் டிவி புழக்கம், கணணியுடன் இணைக்கப்படும் டிவி, ஸ்மார்ட் போன், பல மானிட்டர்களுடன் இயங்கும் கணணி, புளு ரே டிவிடி, விண்டோஸ் புதிய சிஸ்டம் தரும் முழு பயன்பாடு, நம் வேலைகளுக்கேற்ப இயக்க வேகத்தை மாற்றிக் கொள்ளும் சிப் என வரும் ஆண்டுகளில் முற்றிலும் புதிய தொழில்நுட்பங்கள் வர இருக்கின்றன.

ஜிமெயிலில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களையும் Delete செய்வதற்கு



உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் குப்பை கூடையாக மாறிவிட்டதா? அனைத்து மின்னஞ்சல்களையும் ஒரே நொடியில் அழிக்க வேண்டுமா?

முதலில் ஜிமெயிலுக்கு செல்லுங்கள், இன்பாக்ஸில் உள்ள மின்னஞ்சல் அனைத்தும் உங்களுக்கு தேவையில்லை என உறுதி செய்த பிறகு Select பகுதியில் உள்ள சிறிய கட்டத்தை டிக் குறியிட்டு தெரிவு செய்யவும்.

இப்பொழுது அந்த பக்கத்தில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் தெரிவு செய்யப்படும். அத்துடன் மேல் பகுதியில் ஒரு செய்தியும் வரும், அதில் நீங்கள் இப்பொழுது தெரிவு செய்துள் மின்னஞ்சல்களின் எண்ணிக்கையும், 

அருகில் Select all என்று உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களின் எண்ணிக்கையும் காட்டும்.

இரண்டாவதாக உள்ளதை கிளிக் செய்தால் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் தெரிவு செய்யப்படும்.

இனி வழக்கம் போல Delete பட்டனை அழுத்தினால் ஒரு எச்சரிக்கை செய்தி வரும், அதில் OK கொடுத்தால் போதும். உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் அழிக்கப்பட்டு விடும்.

இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் மீண்டும் வேண்டுமென்றால், Trash போல்டரில் இருந்து மறுபடியும் இன்பாக்சிற்கு கொண்டு வரலாம்.

இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி?

முன்னொருபோதும் இல்லாதவாறு ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த ஓர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாக கணினிகள் மாறி விட்டதைத் தொடந்து மக்களுக்கியேயான தொடர்பாடல் முறைகளும் மாறியிருப்பதைக் காண் கிறோம்.. 

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் பொருத்து இந்த ஒவ்வொரு முறையும் அதற்கேயுரிய சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன. 

எந்த வகையிலான கணினி வலையமைப்பை உருவாக்கும் போதும் சில அடிப்படை விடயங்களைக் கருத்தில் கொள்ள் வேண்டியுள்ளது, உதாரணமாக் வலையமைப்பு உருவாக்கப் போவது கம்பியூடா (wired) அல்லது கம்பியில்லாமலா (wireless) என்பது. அதேபோன்று ஒரு வலையமைப்பில் முகிய பங்காற்றுவது ப்ரொட்டகோல் (Protocol) எனப்படும் தொடர்பாடல் விதி முறைகளாகும். இரு வேறு பட்ட கணினிகள் தொடர்பாடும் போது இணைப்பு மொழியாக் இந்த ப்ரொட்ட்கோல் தொழிற்படுகிறது. தற்போது கணினி வலையமைப்பில் TCP/IP எனும் தொடர்பாடல் விதிமுறையே பயன் பாட்டிலுள்ள்து.. இந்த விதி முறையே உலகலாவிய கணினி வலையமைப்பான இணையத்திலும் பயன் படுத்தப்படுகிறது. 

பைல் மற்றும் வளங்களைப் பாரிமாறிக் கொள்ளும் வசதி, மின்னஞ்சல், கணினி வழி உரையாடல், பேஸ் புக் போன்ற சோஷியல் நெட் வொர்க் (Social Networking) சேவைகள் போன்றன் இன்றைய கணினிகளால் இணைந்து விட்ட உலகின் வியக்கத் தக்க பயன்பாடுகளாக்ப் பரபரப்பாகப் பேச்ப்படுகிறது. உலகம் முழுதுமுள்ள கணினிகளின் வலையமைப்பே இதனைச் சாத்தியமாக்கியது. 

இனி விடயத்திற்கு வருவோம். வீட்டிலோ அலுவலகத்திலோ கணினிகளை ஓர் அறையின் மூலையில் வெளியுலக் தொடர்பேதுமில்லால் (Stand alone) தனியாக வைத்துப் பாவிக்கும் காலம் எப்போதோ மலையேறி விட்டது இருப்பது இரண்டே இரண்டு கணினிகளாயினும் அவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் பயன் படுத்துவதில் பல அனுகூலங்கள் உள்ளன. இரண்டு கணினிகளை இணைத்து ஒரு சிறிய கணினி வலயமைப்பை உருவாக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழி முறைகளும் உள்ளன. அவற்றுள் அதிக செலவில்லாமல் இணைக்கக் கூடியது க்ரொஸ் ஒவர் (cross-over) கேபல் கொண்டு இணைப்பதாகும். அதன் மூலம் இரண்டு கணினிகளுக்கிடையே பைல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இணைய இணைப்பு மற்றும் ப்ரிண்டர்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்..இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்வதாயின் ஒரு கணினியில் இரண்டு நெட்வர்க் கார்டுகளை (Network Interface Card) பொருத்த வேண்டி யிருக்கும். ஒரு கார்டை ப்ரோட்பேண்ட் (Broadband) இணைப்புக்கான ரூட்டரிலும் (Router) மற்றொரு கார்ட் அடுத்த கணினியை இணைக்கவும் பயன் படுத்தப்படும். 

ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பைப் ப்கிர வேண்டிய அவசியமில்லை அல்லது நீங்கள் பயன் படுத்துவது டயல் அப் (Dial up) இணைப்பு எனின் ஒரு கணீனியில் இரண்டு நெட்வர்க் கார்டுகள் தேவைப் படாது.. இரண்டு கணினிகளை இணைப்பது பைல்களைப் பரிமாற மட்டுமே எனின் இரண்டு கணினிக்ளிலும் ஒவ்வொரு நெட்வர்க் கார்ட்இருந்தாலே போதுமானது. 

எனினும் இவ்வாறு இரண்டு கணினிகளை இணைக்கும் போது சில வரையறைகளும் உள்ள்ன என்பதைக் கவனத்திற் கொள்ள் வேண்டும். உதாரணமாக் இணைய இணைப்பையோ அல்லது ப்ரிண்டரையோ பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு கணிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்,. 

இடையில் ஹப் (Hub) , ஸ்விச் (Switch) போன்ற வேறு எந்த சாதனங்களும் இல்லாமல் நெட்வர்க் கார்ட் ஊடாக மட்டுமே இணைப்பதற்கு இரண்டு கணினிகளையும் விசேட cross-over கேபல் பயன் படுத்தப்படுகிறது.. இந்த க்ரொஸ் ஓவர் கேபல் வழமையான (Ethernet) ஈதர்நெட் கேபலிலிருந்து வேறுபட்டது. இத்னை நாமாகவே த்யாரித்துக் கொள்ளவும் முடியும். 

இரண்டு கணினிகளையும் கேபல் கொண்டு இணைத்து விட்டால் மாத்திரம் அவற்றிற்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள் முடியாது. அடுத்த வேலையாக இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரிகளை கீழுள்ளவாறு மாற்றியமைக்க வேண்டும். 

விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் முதல் கணினியில் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில் Local Area Network என்பதன் கீழ் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனை மஞ்சள் நிறத்தில் விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும் காண்பிக்கும். 

அடுத்து அந்த ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள்., அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General டேபின் கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள் Properties பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்து கீழுள்ள்வாறு அதன் ஐபி முகவரியை மற்றியமையுங்கள்.. 

முதல் கணினியில் (PC-1) ஐபி முகவரியாக 192.168.0.1 எனவும் இரண்டாவது கணினியில் (PC-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள். இப்போது இரண்டு கணினிகளையும் இணைத்தாயிற்று, இதனை உறுதி செய்து கொள்ள வேண்டுமானால் மறு படியும் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்ய் வரும் விண்டோவில் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனில் ம்ஞ்சல் நிற விழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம். சில வேளை அந்த ஐக்கன் மேல் பூட்டு வடிவில் ஒரு ஐக்கன் இருப்பதை அவதானித்தால் Firewall இயக்க நிலையிலுள்ளது என்பதையே காட்டுகிறது. அவ்வாறிருந்தால் பைல் பரிமாறம் செய்வதை விண்டொஸ் அனுமதிக்காது. அதனை இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் க்ளிக், செய்து தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுங்கள்.. தற்போது இந்த சிறிய வலையமைப்பில் பைல், போல்டர் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாயிருக்கும். 

IP Address: 192.168.0.1 
Subnet Mask: 255.255.255.0 
Default Gateway: 192.168.0.1 
Preferred DNS Server: 192.168.0.1 

படங்கள் பிரசுரமாகுமாயிருந்தால் 
நிழற் படுத்தப் பட்ட பகுதி அவசியமில்லை இரண்டாவது கணினியிலும் கீழே காட்டியுள்ளது போன்று ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள். 

IP Address: 192.168.0.2 
Subnet Mask: 255.255.255.0 
Default Gateway: 192.168.0.1 
Preferred DNS Server: 192.168.0.1 

அதி வேக ப்ரோடபேண்ட் இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரியை மாற்றியமைக்கும் இடத்தில் “Obtain an IP address automatically” என்பதைத் தெரிவு செய்ய் வேண்டும். 

எனினும் அதிவேக இணைய இணைப்பை இரண்டு கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் நேரடியாக் க்ரொஸ் ஓவர் கேபல் கொண்டு இணைப்பதை விட இடையில் இரண்டு அல்லது நான்கு போர்டுக்ள் (Ports) கொண்ட ரூட்டர் மூலம் இணைப்பதே சிறந்த வழி முறையாகும். எனினும் அதற்கு க்ரொஸ் ஓவர் கேபலை விட செலவு சற்று அதிகமாயிருக்கும். .என்பதை நினைவில் கொள்ளவும்

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews