ஜாவா இன் அடிப்படை விளக்கம்
ஜாவா ஆனது உயர் தர மொழிகளில் ஒன்றாகும். இது அமைப்புகளை (object oriented language) கொண்ட கணணிமொழி ஆகும். ஜாவா coding ஆனது Text Editor களில் ஆங்கில சொற்களை பாவித்து எழுதப்படும். Text Editor க்குஉதாரணம் ஆக Notepad, word pad. Notepad++ போன்றனவற்றை கொள்ளலாம்.ஜாவா code இனை சேமித்து DOSகட்டளையின் முலம் நெறிபடுத்தி (Compile) விளைவு பெறப்படும் (Run). ஜாவா code ஆனது சிறிய பெரியஎழுத்துகள் வேறுபாடை கொண்டது இதனை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
Notepad இனை பெறல். Start-->All programs-->Accessories--> Notepad ஜாவா code இன் அடிப்படை கட்டமைப்பு (எதாவது ஒரு Text Editor அழுத்தலாம்) public class Example { public static void main(String arg[ ] ) { statement1; statement2; ---------------- statement3; } } இதனை சேமிக்கும் முறை இதனை சேமிக்கும் போது வகுப்பு (class) பெயர் இல் சேமித்தல் வேண்டும் Example.java DOS கட்டளை இனை திறக்கும் முறை Start-->Run Run Box இல் cmd என அழுத்தி ok பொத்தனை அழுத்தவும்.
compile செய்யும் முறை
javac Example.java Run செய்யும் முறை java Example உதாரணம் 1 class Example1 { public static void main(String arg[ ]) { System.out.print("Hello World"); } } சேமித்தல் :- Example1.java Compile செய்தல் :- javac Example1.java வெளியீடை பெறல் :- java Example1 வெளியீடு :- Hello World இங்கு வகுப்பு (class) பெயர் Example1 ஆகும். public static void main(String arg[ ]) இது பிரதான மேதொட் (method)ஆகும். System.out.print(); இது ஆச்சு பதிக்க பயன்படும் மெதேட் ஆகும். உதாரணம் :02 class Example2 { public static void main(String arg[ ]) { System.out.println(“Hello”); System.out.print(“Welcome to \n”); System.out.print(“our webpage”); } } சேமித்தல் :- Example2.java Compile செய்தல் :- javac Example2.java வெளியீடை பெறல் :- java Example2 வெளியீடு :- Hello Welcome to our webpage வெளியீட்டில் புதிய வரியை பெற System.out.println(); மேதொட் அல்லது \n பாவிக்கபடும். மாறிகள் (Variables) சிறிய முழு எண்கள் (integers) int பெரிய முழு எண்கள் (double) double தசம எண்கள் (float) float உண்மை அல்லது பொய் (boolean) boolean சொற்கள் (String) String எழுத்துகள் (characters) char ஜாவா இல் மாறிகளை உருவாக்குதல் int x; இங்கு x ஆனது மாறியின் பெயர் உதாரணம் ஆக int y; double z; float x=0.00f; String s; char c; ஜாவா இல் மாறிகளுக்கு பெறுமானங்களை இடல் int x=10; double z=10000; float a =10.09f; String s="jaffna " char a ="A"; இங்கு சொற்கள் , எழுத்துகளுக்கு இற்கு " " பயன்படுத்தப்பட வேண்டும். தசம எண்களுக்கு கட்டியவாறு f இடப்பட வேண்டும். செயட்படுத்திகள் (Operations) செயட்படுத்திகள் பல வகைப்படும் 1) கணித்தல் செயட்படுத்திகள் (Arithmetic Operations) + ஊட்டல் (2+4=6) - கழித்தல் (4-2=2) * பெருக்கல் (4*2=8) / வகுத்தல் (9/2=4) % மீதிகாணல்(9/2=1) 2) ஒப்பிடும் செயட்படுத்திகள் (comparison Operatin) > பெரிது < சிறிது <= சிறிது அல்லது சமன் >= பெரிது அல்லது சமன் = = சமன் != சமன் அல்ல 3) ஊட்டும் அல்லது குறைக்கும் செயற்படுத்திகள். ++ ஊட்டுதல் (increment) -- குறைத்தல் (decrement) இங்கு x++ எனின் x=x+1 என்ற கருத்தை தரும். if Condition இது கட்டுபாடுகளை இட பயன்படுகிறது உதாரணமாக ஒரு நபர் வாக்களிக்கும் உரிமை உள்ளவரா இல்லையா என காண (18 வயது அல்லது அதற்கு மேல் உண்டு எனக் கொண்டால் ) class Vote { public class static void main(String arg[ ]) { int age=19; if(age>=18) { System.out.print("Yes"); } else System.out.print("No"); } சேமித்தல் :- Vote.java Compile செய்தல் :- javac Vote.java வெளியீடை பெறல் :- java Vote வெளியீடு :- Yes இங்கு அவருடைய வயது 18 ஜ விட பெரிது எனவே அவருக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. பெறுபேறுகளுக்கு தரத்தினை இடல் உதாரணம் 5A 75 இற்கு மேல் B 65 இற்கும் 75 இற்கும் இடையில் C 55 இற்கும் 65 இற்கும் இடையில் S 45 இற்கும் 55 இற்கும் இடையில் W 45 இற்கு கீழ் public class Grade { public static void main(String arg[ ]) { int mark=60; if(mark>75) System.out.print("Grade=A"); else if(mark>65) System.out.print("Grade=B"); else if(mark>55) System.out.print("Grade=C"); else if(mark>45) System.out.print("Grade=S"); else System.out.print("Grade=W"); } } சேமித்தல் :- Grade.java Compile செய்தல் :- javac Grade.java வெளியீடை பெறல் :- java Grade வெளியீடு :- Grade = C for loop திரும்பத்திரும்ப செய்ய வேண்டிய சில விடையங்களை இதனுடாக செய்வது மிகவும் இலகு ஆனது. இதனது அடிப்படை கடமைப்பு பின்வருமாறு அமையும் for(ஆரம்ப பெறுமானம் ; கட்டுப்பாடு ; அதிகரிப்பு / குறைவு) உதாரணமாக அமது பெயரை திரும்ப திரும்ப ஐந்து தடவைகள் பதிவு செய்ய பின்வருமாறு எழுதலாம். class ForDemo { public static void main(String arg[ ]) { for(int i = 0; i<5;i++) { System.out.print("gatherpage"); } } } சேமித்தல் :- ForDemo.java Compile செய்தல் :- javac ForDemoe.java வெளியீடை பெறல் :- java ForDemo வெளியீடு :- gatherpage gatherpage gatherpage gatherpage gatherpage இங்கு i ஆனது 0 தொடக்கம் 4 வரை இயங்கும் போது ஐந்து தடவைகள் பதிவு செய்யபடுகின்றது. உதாரணம் :-7ஒன்று தொடக்கம் பத்து வரையான இலக்கங்களை ஒன்றன் கீழ் ஒன்றாக பதிவு செய்தல் class Number { pubilc static void main(String arg[ ]) { for(int i = 1;i<=10;i++) { System.out.println(i); } } } வெளியீடு :- 1 2 3 4 5 6 7 8 9 10 உதாரணம் :-8ஒன்றுக்கும் பத்துக்கும் இடையில் உள்ள ஒற்றை எங்களை பதிவு செய்தல். class Odd { public static void main(String arg[ ]) { for(int i= 1;i<=10;i+=2) { System.out.println(i); } } } வெளியீடு :- 1 3 5 7 9 | ||||