பயர்பொக்ஸின் புதிய வசதி: உங்கள் நீட்சியின் வேகத்தை அறிந்து கொள்ள
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு அடுத்து அதிகமாக உபயோகப்படுத்தப்படும் பிரவுசர் மொசில்லா நிறுவனத்தின் பயர்பொக்ஸ் ஆகும்.
தற்போது இதன் புதிய பதிப்பான பயர்பொக்ஸ் 4 வெளியிட்டு உள்ளார்கள். இருக்கும் எல்லாம் பிரவுசர்களின் ஒரே பிரச்சினை வேகம் தான். இதில் எது சிறப்பாக செயல்படுகிறதோ அந்த மென்பொருள் தான் அதிகமாக விரும்பப்படுகிறது.
பிரவுசர்களில் இல்லாத சில வசதிகளை பெற நாம் நீட்சிகளை உபயோகிக்கிறோம். இது ஒரு அளவிற்கு இருந்தால் பராவாயில்லை. கணக்கில்லாமல் நீட்சிகளை நம் கணணியில் சேர்த்து கொள்கிறோம். இதனால் தான் பிரச்சினையே, சில மூன்றாம் நபர் நீட்சிகளை உபயோகிப்பதால் நம்முடைய பிரவுசரின் வேகம் பாதிக்கப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவுகட்டும் வகையிலே பயர்பொக்சை திறக்கும் பொது தாமதமாகும் நீட்சிகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த நீட்சிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது Foxlingo எனப்படும் நீட்சியாகும். இது தான் அதிக நேரம் எடுத்து கொள்வதாக பயர்பொக்ஸ் அறிவித்துள்ளது.
இதில் எது அதிக சதவீதம் காட்டுகிறதோ அந்த நீட்சி தான் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறது. இது போல சுமார் 50 நீட்சிகளின் பெயர்கள் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இனி பயர்பொக்ஸ் உபயோகிப்பாளர்கள் இந்த பட்டியலில் அதிக சதவிகிதத்தை உடைய நீட்சியை தவிர்த்தால் உங்கள் பிரவுசரை வேகமாக்கலாம்.
முழு பட்டியலையும் பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
|