தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, February 13, 2014

இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசி



ஸ்மார்ட் கைப்பேசி உலகில் முதன் முறையாக இரண்டு இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசியினை Geeksphone Revolution நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.
இக்கைப்பேசியில் கூகுளின் Android இயங்குதளம் மற்றும் Mozilla Firefox இயங்குதளம் ஆகியன நிறுவப்பட்டுள்ளன.
இதன் மூலம் விரும்பிய இயங்குதளத்தில் குறித்த கைப்பேசியினை இயக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இதில் Dual Core Intel Atom Z560 1.6GHz Processor, 1GB RAM மற்றும் 4GB சேமிப்பு நினைவகம் என்பன காணப்படுகின்றன.
மேலும் 4.7 அங்குல தொடுதிரையினை உடைய இக்கைப்பேசியில் 8 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளது.
இம்மாதம் 20ம் திகதி வெளியிடப்படவுள்ள இக்கைப்பேசியின் பெறுமதியானது 289 யூரோக்கள் ஆகும்.

ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்.

செல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என்று நினைத்து கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் . நடைமுறை வாழ்க்கையில் பயன் தரகூடிய செயலிகளும் பல இருக்கின்றன. அது மட்டுமா ஆபத்து காலத்தில் உதவிக்கான கோரிக்கை விடுக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன. செல்போன் செயலிகளில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த உயிர்காக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
 
எப்படியும் பெரும்பாலானோர் கைகளில் செல்போன் வைத்திருக்கின்றனர். ஆபத்து என வரும் போது இந்த செல்போன்கள் மூலமே ஒரு கிளிக்கில் உதவி கோர வழிசெய்யும் ஆபத்பாந்தவனாக  உயிர் காக்கும் செயலிகள் அமைந்துள்ளன.
 
ஆபத்து என தெரிந்தால் , செல்போனில் வேண்டியவர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கோரலாம் தான். ஆனால் சில நேரங்களில் செல்போனில் உள்ள எண்களில் வேண்டியவர்களின் எண்ணை தேடி கண்டுபிடித்து அவர்களை அழைத்து உதவி தேவை என சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியில் சிக்கி கொள்ளலாம். அதோடு ஆபத்து சூழ்ந்திருக்கும் போது பயத்திலும் பதட்டத்திலும் செல்போனில் உரியவர்களை அழைத்து உதவி கோருவது கடினமாக இருக்கலாம். எதிர்பாரமால் விபத்து ஏற்படும் சூழல், உடனடி மருத்துவ உதவி தேவையான் நிலை மற்றும் வன்செயலாளர்களிடம் சிக்கி கொள்ளும் ஆபத்தான நிலைகளில் இந்த செயலிகள் உதவிக்கு வருகின்றன. பெண்கள், குழ்ந்தைகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இவை ஆபத்து காலத்தில் கைகொடுக்கும்.

ஹெல்ப் மீ ஆன் மொபைல்
ஹெல்ப் மீ ஆன் மொபைல் செயலி பாதுகாப்பை விரல் நுனியில் கொண்டு வருகிறது. ஆண்ட்ராய்டு போனுக்கான இந்த செயலியின் மூலம் ஆபத்தான நேரங்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கோரலாம். இந்த செயலியை பயன்படுத்துவதும் எளிதானது. ஆண்ட்ராய்டு போனில் இவற்றை டவுண்லோடு செய்து கொண்டால் போதுமானது.  இந்த செயலியில் உள்ள பாதுகாவலர் பகுதியில் பயனாளிகள் வீட்டில் அறியப்படும் பெயரை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பாதுகாவலர்களின் செல்போன் எண்களை குறிப்பிட வேண்டும். தந்தை, சகோதரர், மாமா, நண்பர் ஆகியோரது செல்போன் எண்களை குறிப்பிடலாம். ஆபத்தில் சிக்கி கொள்ளும் நிலை ஏற்பட்டால் , இந்த செயலியின் உதவி தேவை பகுதியை கிளிக் செய்தால் போதும் , அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு அந்த கோரிக்கை குறுஞ்செய்தியாக போய் சேர்ந்துவிடும். மேலும், பயனாளியின் இருப்பிடம்  ஜிபிஎஸ் மூலம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். அது மட்டும் அல்லாமால் , செல்போனில் இருந்து ஆபத்து எச்சிரிக்கை ஒலி கேட்டிக்கொண்டே இருக்கும். இதில் அருகே உள்ளவர்களை உதவிக்கு அழைக்கும் அபயக்குரலாக செயலபடும்.
 
இந்த செயலியை பெண்கள் விஷமிகள் மத்தியில் சிக்கி கொண்டால் அல்லது முன்பின் தெரியாதவர்களால் பின் தொடர்ப்பாட்டால் பயன்படுத்தலாம். மேலும் விபத்து நேரங்களிலும் பயன்படுத்தலாம்.
அதே போல, எங்காவது சென்றிருக்கும் போது எதிர்பார்த்ததை விட கூடுதல் நேரம் ஆகிவிட்டால் , இதில் உள்ள நான் இங்கிருக்கிறேன் வசதி மூலமாக பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தை பாதுகாவலர்களுக்கு தெரிவிக்கலாம். செல்போன் சார்ந்த மதிப்புகூட்டப்பட்ட சேவைகளை வழ்ங்கி வரும் ஆன்மொபைல் நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி உள்ளது. நிறுவன இணையதளம் மற்றும் கூகிள் பிலே ஸ்டோரில் தரவிறக்கம் செய்யலாம்.
இணையதள முகவரி; http://www.helpme-onmobile.com/

 
நிர்பயா செயலி.
ஆபத்தில் சிக்கி கொள்ளும் பெண்களுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள செயலி இது. கடந்த ஆண்டு தில்லியில் வன்செயலாலர்களின் கொடுரத்துக்கு பலியான இளம்பெண் நிர்பயா பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிர்பயாவுக்கு நேர்ந்த கதி இனி வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படாமல் தடுக்க உதவும் வகையில் இந்த செயலியை ஸ்மார்ட் கிலவுட் இன்போடெக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. நிர்பயா – பி பியர்லெஸ் எனும் பெயரிலான இந்த செயலியில் உதவி தேவை எனும் செய்தியை குடும்பத்தினர் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அதே போல உதவி தேவை எனும் தகவலை பேஸ்புக் பக்கத்திலும் நண்பர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள இந்த செயலி வழி செய்கிறது. விஅப்த்து மற்றும் மருத்துவ அவசர நிலைகளிலும் இந்த செயலியை பயன்படுத்தலாம். குடும்பத்தினர் தவிர காவல்தூறையினர் , மருத்துவமனை மற்றும் அவசர உதவி எண்கள் ஆகியவற்றுக்கும் உடனயாக தகவல் அனுப்ப முடியும். ஆண்ட்ராட்யு, ஐபோன் விண்டோஸ் போன் என எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம். ஆங்கில் மொழியிலானது.
இணையதள முகவரி; http://www.smartcloudinfotech.com/nirbhaya.html

ஆறு பேர் வட்டம்.
சர்கில் ஆப் 6 செயலி , ஆபத்து காலத்தில் மட்டும் அல்லாது சிக்கலான எந்த சூழலிலும் உதவி கிடைக்கசெய்கிறது. இந்த செயலியில், உங்கள் உதவி வட்டத்தில் ஆறு நபர்களின் தொடர்பு எண்களை குறிப்பிடலாம். உதவி தேவைப்படும் சூழலில் இந்த ஆறு பேருக்கும் பயனாளியின் இருப்பிடம் பற்றிய விவரத்துடன் தகவல் தெரிவிகக்ப்படும். மூன்று விதமான உதவிகளை கோரலாம். ஆபத்து இல்லை ஆனால் அச்சமூட்டும் சூழலில் இருந்தால் , உடனே வந்து அழைத்து செல்லுமாறு செய்தி அனுப்பலாம். இதற்காக கார் ஐகானை கிளிக் செய்தால் போதும். பெரும் ஆபத்து என்றால் , உதவி தேவை என்னும் தகவல் தெரிவிக்கலாம். இதே போலவே மிகவும் அறுவையான ஆசாமிகளிடம் மாட்டிக்கொண்டால் வந்து காப்பற்றுங்கள் எனும் செய்தியையும் அனுப்பலாம். குடும்ப சிக்கல் அல்லது காதல் விவகாரம் போன்றவ்ற்றால் மன் உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால் ஆலோச்னை மற்றும் ஆறுதல் தேவை என்றும் செய்தி அனுப்பலாம். அவசர எண்களை தொடர்பு கொள்ளும் வசதியும் இருக்கிறது. சர்வதேச அலவிலான செயலி இது. ஆங்கிலம் தான் பிரதான மொழி என்றாலும் இப்போது இந்தி மொழி வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராட் ,ஐபோன் இரண்டிலும் செயல்படுகிறது.
 
அமெரிக்காவில் பயனுள்ள செயலிகளுக்காக வெள்ளை மாளிகை நடத்திய போட்டியில் தேர்வான செயலி இது,.
இணையதள முகவரி; http://www.circleof6app.com/

கணினி ரகசியத் தன்மையை பாதுகாப்பது எப்படி

DES Data Encryption Standard: மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method) வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64 – பிட் அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.

Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும்.

அதிவேக இணையத்தை முறையாக பயன்படுத்துவது எப்படி?

நம் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இணையத்தை பயன்படுத்த நினைப்போம். அதிவேக இணையம் என்ற விளம்பரத்தில் மயங்கி, புதிய இணைப்பு ஒன்று வாங்கி விடுவோம். ஆனால் வாங்கிய பிறகு நடப்பது வேறு. இணையத்தில் ஒரு வலைத்தளத்தை கிளிக் செய்துவிட்டு, சாப்பாடு சாப்பிட்டு விட்டு வரலாம் என்று தோன்றும். அவ்வளவு மெதுவாக இணையம் வேலை செய்யும்.

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேகமாக இணையத்தைப் பயன்படுத்து குறித்து இப்போது பார்ப்போம்.

இணைய இணைப்பு கிடைக்கும் முன்பு வரை நமக்கு இணைப்பின் வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் பிறகுதான் நமக்கு தெரியும். நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இணையத்தின் பிளான் அன்லிமிடட் என்றால் அதற்கு தகுந்தாற் போல் குறைவான வேகமே இருக்கும் இந்தப் பிரச்சனையை நீக்கி முழு இணைய வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இணைய இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில் இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதற்காக நாம் பெரிதாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத் தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடெட் இணைய (Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக (Limited Speed) இருக்கும். பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை டவுன்லோட் செய்ய முடியும். இதைத் தவிர்த்து அதிவேகமாக இணையத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows XP ) கணினி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும். முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை அழுத்த வேண்டும். அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை அழுத்த வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை அழுத்தி, Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை அழுத்தி சேவ் செய்து வெளியே வரவேண்டும். அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பாருங்கள். இணைய இணைப்பின் வேகம் இப்போது முழுமையாகத் தெரியும்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews