இணையத்தின் வரலாறு
இணையத்தைப் பயன்படுத்தும் நீங்கள் இணையத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.
1967ம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புத்துறை (Department of Defense) தங்களதுபாதுகாப்புக்காக ARPANET என்ற வலையமைப்பை ஆரம்பித்தது. ARPA என்பது Advanced Research Project Agencyஎன்பதன் சுருக்கம். ஆரம்பத்தில் கலிஃபோர்னியாவில் மூன்று கணிணிகளுடனும் உதாவில் (Utah) ஒரு கணிணியுடனும் இந்த வலைப்பின்னல் தொடர்பு ஆரம்பிக்கப்பட்டது. இராணுவ கருவி ஆராச்சியளர்கள்,இரானுவ உதவி பெறும் பல்கலைக்கழகங்கள் இந்த வலையமைப்பில் செயற்பட்டன.
ARPANET வெற்றியைப் பார்த்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் எல்லாம் சேர்ந்து இந்த வலையமைப்பை இரண்டாகப் பிரித்தார்கள். ஒன்று MILNET என்ற பெயரில் ஒன்று மற்றயது ARPANET ல் இணைத்தார்கள்.
1970ம் ஆண்டில் மேலும் பல வலையமைப்புக்கள் தோன்றின. BITNET, USENET, UUCP போன்ற வலையமைப்புக்கள் செம்மையாகச் செயலாற்றின.
1980ம் ஆண்டளவில் NSFNET என்ற பெயரில் புதிய வலையமைப்பு தோன்றியது. National Science Foundation என்பதன் சுருக்கமே NFS ஆகும். பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராச்சிக் கூடங்களில் உள்ள சுப்பர் கணிணிகள் இதில் இணைக்க அனுமதிக்கப்பட்டன.
இணையத்தை சைபர்ஸ்பேஸ் (Cyber Space), இனபோமேஷன் சுப்பர்ஹைவே (Information Superhighway)என்றெல்லாம் அழைக்கின்றனர்.
சாலைகளில் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் வேறுபட்ட வாகனங்களைவைத்திருப்பவர்கள் பயணம் செய்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.அல்லவா? அதைப் போண்றுதான் வித்தியாசமான கணிணிகளை (Windows, Macintosh, Linux) வைத்திருப்பவர்கள் வித்தியாசமான வசதிகளை ( E-Mail, Discussion Group, Games)அனுபவிக்கலாம்.
தகவல்கள் இணையத்தில் தங்கு தடையின்றிதுரித வேகத்தில் பிரயானம் செய்வதனால்இணையத்தை சுப்பர்ஹைவே என்கிறார்கள்.
1982ம் ஆண்டு வில்லியம் கிப்ஸன் (William Gibson) என்பவர் தனது நேரோமென்சர் (Neuromancer)என்ற விஞ்ஞான நாவலில் சைபர்ஸ்பேஸ் என்ற வார்த்தையை புகுத்தினார்.கணிணி மயமான வருங்கால உலகை சைபர்ஸ்பேஸ் என் குறிப்பிட்டார். இணைய் உலகமும் சைபர்ஸ்பேஸ் போன்றதே என்பதைக் குறிக்க இணையத்தை சைபர்ஸ்பேஸ் என் அழைக்கின்ற்னர்.
இணையம் இலவசமா?
இணையத்தில் யாரும் நுழையலாம், அதில் எந்தக் கட்டணமும் கிடையாது ஆனால் இணயத்தில் நுழைய நீங்கள் கட்டணம் கட்ட வேண்டும். இணைய வசதியை வழங்கும் நிறுவனங்கள் உண்டு. இவற்றை இணைய சேவை வழங்குநர்கள் (Internet Service Providers) என்பர். சுருக்கமாக ISP எனலாம்.இவர்களிடம் பணம் கட்டி சந்தாதாரர் ஆக வேண்டும். இலங்கையில் பிரதான இணைய சேவை வழங்குனராக Srilanka telecom, Mobitel, Dialog போன்ற நிறுவனங்கள் காணப்படுகின்றன.