தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, July 31, 2013

கணினியின் அடிப்படை-3

கணினியின் நன்மைகளும் தீமைகளும் (சிறப்பு இயல்புகள்)
மிக விரைவானது (Speed) 
பல மில்லியன் கணக்கான கணக்குகளை ஒரு செக்கனில் தீர்க்கும் திறன் கொண்டது. இதனது இவ்வேகம் கேட்ஸ்(Hertz - Hz) எனும் அலகில் அளக்கப்படுகிறது. அத்தோடு இவ்வேகம் கணினிக்குக் கணினி மாறுபடுகின்றது.

மிகவும் திருத்தமானது (Accuracy)
இலத்திரனியல் சுற்றுக்கள் பொறியியல் பகுதிகளைப்போன்று இலகு வில் பழுதடைவதில்லை. அத்தோடு, வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப மிகவும் திருத்தமானவையாகவும் நம்பகமானவையாகவும் வெளியீடுகளை தரும்.
 
நினைவகம் (Storage)
இதில் அதிகளவிலான தரவுகளைச் சேமித்துவைப்பதுடன் உரிய நேரத்தில் அவற்றை மிகவிரைவாகவும் எடுக்கக்கூடியதாகவுள்ளது.
 
உணர்ச்சியின்மை (No Feeling)
கணினியானது ஒரு வகை இயந்திரமாகும். இதற்கு மனிதர்களை போல் தனிமை, களைப்பு, வெறுமை போன்ற உணர்வுகள் இல்லை எனவே கவலையீனமாகவோ இல்லது களைப்பினாலோ மனிதர்கள் விடும் தவறுகளை கணினி ஏற்படுத்தாது.
 
 நுண்மதியின்மை (No Intelligent) 
அறிவுறுத்தல்கள் இல்லாமல் கணினி எதனையும் செய்யாது. கணினியானது மனிதனின் நுண்மதியினால் எழுதப்படும் நிகழ்ச்சித்திட்டத்தின்படியே செயற்படுகின்றது. எனவே, நிகழ்ச்சித் திட்டங்கள் பிழையாக இருப்பின் எப்போதும் பிழையான பெறுபேறுகளையே கணினி தரும்.
தவறான தரவுகளைக் கொடுத்தால் தவறான பெறுபேறுகளே கிடைக்கும். மனிதனின் முக்கியமான திறன்களான சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல், காரணங்களைக் கண்டறிதல், சுயமாக உருவாக்கல்,போன்றவற்றைக் கணினி கொண்டிருக்கமாட்டாது.


கணினியின் கட்டமைப்பு (Structure of computer)
கணினியின் அடிப்படைக் கட்டமைப்பு (Basic Structure of computer)


எந்தவொரு கணினியும் மேல் உள்ள படம் காட்டுவதனைப்போல், முக்கியமான மூன்று அடிப்படைக் கட்டமைப்புக்களைக் கொண்டிருக்கும். 
கணினியின் இன் தொழிற்பாட்டுக் கட்டமைப்பு (computer Blog Diagram)  

 
கணினியாது பொதுவாக உள்ளீட்டுச் சாதனங்கள் (Input Device), வெளியீட்டுச் சாதனங்கள் (output Device),தேக்கச்சாதனங்கள் (Storage Device) மைய செயற்பாட்டுத் தொகுதி (Central Processing Unit) போன்ற 4 பகுதிகளை உள்ளடக்கியதாக காணப்படும்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews