தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, December 8, 2014

முழு இணைய பக்கத்தையும் Screen Shot எடுப்பதற்கு

எந்தவொரு மென்பொருளும் நிறுவாமலேயே Screen Shot எடுக்கலாம் என்ற போதிலும், முழு தளத்தையும் நம்மால் ஸ்கிறீன் ஷாட் எடுக்க இயலாது.

இந்த தளத்தில் சென்று உங்களுக்கு ஸ்கிறீன் ஷாட் எடுக்க வேண்டிய பக்கத்தின் முகவரி மட்டும் கொடுத்தால் போதும், அது முழு பக்கத்தையும் எடுத்து தந்து விடும்.

Capturefullpage

FireShot – Webpage Screenshots – Firefox Add-On
Firefox Browser-ஐ பயன்படுத்துபவர்கள் இந்த Add-On ஐ நிறுவி ஸ்கிறீன் ஷாட் 
எடுக்கலாம். அதை பேஸ்புக்கில் பகிரலாம், உங்கள் கணணியில் சேமிக்கலாம், பிரிண்ட் செய்யலாம். இதிலேயே இமேஜ் எடிட் செய்யும் வசதியும் உள்ளது.

FireShot

கூகுள் குரோம் பயன்படுத்துபவர்கள் இந்த Add-On ஐ நிறுவி ஸ்கிறீன் ஷாட் எடுக்கலாம். இதில் ஸ்கிறீன் ஷாட் எடுக்க பல வித வசதிகளும் உள்ளன. குறிப்பிட்ட பகுதி, முழு பக்கம், முழு ஸ்கிறீன் என இதிலேயும் இமேஜ் எடிட் செய்யும் வசதியும் உள்ளது.
Screen Capture

ஸ்கிறீன் ஷாட் எடுக்க பயன்படும் மிக அருமையான மென்பொருள் என்றால் அது இது தான். இதை நிறுவி விட்டு, தேவையான பக்கத்தை ஓபன் செய்து வைத்துக் கொண்டு ஸ்கிறீன் ஷாட் எடுக்க கிளிக் செய்தால் போதும், அதன் பின்னர் இதிலேயே எடிட் செய்தும் கொள்ளலாம்.
DuckLink

வர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்

அடுத்த 10 ஆண்டுகளில் கம்ப்யூட்ட ரில் என்ன மாற்றங்கள் வரும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி யின் அடிப்படையில் கணித்த சில எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.


1. அதிக இடத்தை எடுத்துக் கொண்டு, மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கம்ப்யூட்டரின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கம்ப்யூட்டர்கள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

2. கம்ப்யூட்டர்கள் திருடு போகாது. பயோமெட்ரிக் பயன்பாடு பரவலாகி, கைரேகைகளுக்கு மட்டுமே கம்ப்யூட்டரின் கதவு திறக்கும்.

3. கீ போர்டுகள் ஓரம் கட்டப்படும். டச் ஸ்கிரீன் இப்போதேவந்துவிட்டது. இனி சைகை மூலம் நாம் கம்ப்யூட்டரையும், சாப்ட்வேர் அப்ளிகேஷனையும் இயக்க லாம். அடுத்ததாக நம் குரல் மூலமே அனைத்தையும் இயக்கும் வழிகள் கண்டறியப்படும்.

4. கம்ப்யூட்டர்கள் கையடக்க சாதனமாக மாறும். அலுவலகத்தில் டெஸ்க்குகளில் உள்ள இணைப்புகளில் இணைத்த பின்னர், டாப்பில் உள்ள பெரிய திரைகளில் கம்ப்யூட்டர் இயங்குவதைப் பார்க்கலாம். எனவே டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இனி டெஸ்க்கில் உள்ள டாப் கம்ப்யூட்டராக இயங்கும்.

5.வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்கள் நமக்காக, நம் பெர்சனல் தேவைகளுக்காக இயங்கும். நாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் நம்மை ஓய்வெடுக்கச் சொல்லி, நமக்காக சாதனங்களை இயக்கும். சமையல், வாஷிங், டிவி, ஏர்கண்டிஷனர் இயக்கம் ஆகியவற்றைக் கம்ப்யூட்டரே பார்த்துக் கொள்ளும்.

6. டிவிடிக்கள் பல டெராபைட்டுகள் கொள்ளளவினைக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் பிளாட்டர் படு வேகத்தில் சுழலும். ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தில் எழுதுவதற்கு ஒரு பக்கத்தில் ஒரு லேசரும், இன்னொரு பக்கத்தில் இன்னொன்றுமாக இயங்கும்.

7.இப்போதிருக்கும் சிபியு அப்படியே இருக்கும். ஆனால் எலக்ட்ரானிக் மைக்ரோ ப்ராசசருக்குப் பதிலாக ஆப்டோ எலக்ட்ரானிக் இன்டக்ரேய்டட் சர்க்யூட் அமைக்கப்படும். இதனை ஸ்விட்ச் ஆன் செய்திட சிலிகான் இருக்கும். ஆனால் மற்ற இயக்கவேலைகளை ஆப்டிக்ஸ் பார்த்துக் கொள்ளும். தற்போது கிடைக்கும் இயக்க வேகத்தினைக் காட்டிலும் 100 மடங்கு அதிக வேகத்தில் சிபியு இயங்கும்.

8. இனி ராம் மெமரி ஹோலோகிராபிக் ஆக இருக்கும். இது முப்பரிமாணம் உடையதால், எத்தனை அடுக்குகளையும் இது கொள்ளும். எனவே கொள்ளளவு கற்பனையில் எண்ண முடியாத அளவில் அமையும்.

9.இன்டெல் நிறுவனத்தின் புதிய ப்ராசசர் கள் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் செயல்படும்.

10. இன்டர்நெட் டிவி புழக்கம், கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் டிவி, ஸ்மார்ட் போன், பல மானிட்டர்களுடன் இயங்கும் கம்ப்யூட்டர், புளு ரே டிவிடி, விண்டோஸ் புதிய சிஸ்டம் தரும் முழு பயன்பாடு, நம் வேலைகளுக்கேற்ப இயக்க வேகத்தை மாற்றிக் கொள்ளும் சிப் என வரும் ஆண்டுகளில் முற்றிலும் புதிய தொழில் நுட்பங்கள் வர இருக்கின்றன.

தொலைகாட்சி சானல்களை இலவசமாய் கண்டுகளிக்க புதிய சாப்ட்வேர்...


தொலைகாட்சி சானல்களை இலவசமாய் கண்டுகளிக்க புதிய சாப்ட்வேர்...

அனைத்து முக்கிய கட்டண தொலைகாட்சி அலைவரிசைகளையும் சிரமமின்றி அதுவும் இலவசமாக கண்டுகளிக்கும்வண்ணம் ஒரு மென்பொருள் வயர்லெஸ் டிவி குழுமத்தின் மூலம் அறிமுகம் செயப்பட்டுள்ளது.தற்போது குறிப்பிட்ட சானல்கள் மட்டும் தெரியும் வகையில் உள்ளது.இன்னும் சிலநாட்களில் ஐநூறுக்கும் அதிகமான சானல்களை கண்டுகளிக்க ஏர்பாடு செய்யப்படும்.ஒருமுறை பயன்படுத்தி பாருங்கள்.இதன் அருமை உங்களுக்கே புரியும்.

டவுன்லோட் லிங்க் : [You must be registered and logged in to see this link.]

டவுன்லோட் லிங்க் : wirelesstv.in/download.htm

இன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன?



இணையம் என்பது உள்ளுரம் வாய்ந்த ஓர் அமைப்பு. ஒரே ஒரு சாதனத்தைச் சார்ந்தோ அல்லது ஒரே ஒரு கேபிள் இணைப்பிலோ இது இயங்குவது இல்லை. இணையம், பல கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க்குகள் இணைந்த ஒரு நெட்வொர்க். உலகைப் பல முனைகளிலிருந்து இது இணைக்கிறது.

கண்டங்களைத் தாண்டி, கடல்களுக்கு ஊடாக, விண்வெளியில் சாட்டலைட் களைத் தடவி எனப் பல வகை ஊடகங்களின் வழியாக இணைக்கப் பட்டுள்ளது. இணையம் இவ்வாறு பலமுனைகளில் வளர்ந்ததனால் தான், இன்று நம் வாழ்க்கையின் பல பரிமாணங்கள் இணையத்தைச்
சார்ந்தே உள்ளன.

இணையத்தின் ஊடாகச் செல்லும் இணைப்புகள் வளைந்து கொடுக்கும் தன்மையுடையன. உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி இணையத் தில் இணைப்பு கொண்ட இன்னொரு கம்ப்யூட்டரைத் தொடர்பு கொள்கையில் ஏற்படும் டேட்டா பரிமாற்றம், பல லட்சம் இணைப்பு வழிகளில் ஒன்றில் மேற்கொள்ளப்படுகிறது.



நீங்கள் ஒரு பைலை டவுண்லோட் செய்கையில், இணையம் வழியே அது பல தகவல் பொட்டலங்களாகப் பயணம் செய்து உங்களை அடைகிறது. இந்த தகவல் பொட்டலங்கள் ஒரே வழியில் மட்டுமே பயணிப்பதில்லை. பல வழிகளை மேற்கொள்கின்றன. ஒரு குறிப்பிட்ட வழியில், ஏதேனும் ஓர் இடத்தில் தடங்கல் ஏற்பட்டால், உடனே மாற்று வழியில் தகவல் பயணம் மேற்கொள்ளப்படும்.

இதனால் தான், நாம் இணையத்தின் மீது நம்பிக்கை வைத்து நம் வாழ்வின் பல செயல்பாடுகளை ஈடேற்றி வருகிறோம். இயற்கை அழிவினாலோ, அணுக்கதிர் தாக்கத்தினாலோ, இணையத் தின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டாலும், இன்னொரு பகுதியின் மூலம் இணையம் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அழிக்கப்படும் பகுதியில் உள்ள டேட்டா ஒருவேளை மீட்கப்படாத அளவில் அழியலாம்; ஆனால் இணையம் உயிரோடு தான் இயங்கும்.

இணையத்தை மொத்தமாக அழிக்கும் வகையிலான சூழ்நிலைகளை நாம் கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க இயலாது. இருந்தாலும் அப்படி ஒரு வேளை இணையம் அழியும் என்றால், என்ன என்ன விளைவுகளை நாம் சந்திக்க வேண்டிய திருக்கும்? நம் வாழ்வு,நாம் இணையத்திற்கு முன்னால் கொண்டிருந்த தகவல் தொடர்பு சாதனங்களின் துணையுடன் மீண்டும் தொடருமா? என்பதே இன்றைய சிந்தனைப் போக்காக அமைகிறது.

இணையம் இல்லாத வாழ்க்கை நமக்கு மிகவும் விநோதமாகத்தான் இருக்கும். மொபைல் போன் சேவை, அதன் மூலம் கிடைக்கும் டெக்ஸ்ட் மெசேஜ் பரிமாற்றம் எல்லாம் என்னவாகும்? கேபிள் வழி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடைக்கும் என்றாலும், இணையம் சார்ந்த சாட்டலைட் வழி கிடைத்த தொடர்பு அறுந்தால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடைக்காதே?

பேஸ்புக், ட்விட்டர் எல்லாம் பழங்கதை ஆகிவிடும். மீண்டும் ""அன்புள்ள அண்ணனுக்கு'' என போஸ்ட் கார்டில் பணம் கேட்டு எழுத வேண்டி இருக்கும். நம் நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உடனுடக்குடன் அறிய முடியாது. சீமந்தம் குறித்த செய்தி கிடைக்கும் போது அங்கு குழந்தை பிறந்து தவழ ஆரம்பிக்கலாம்.

கம்ப்யூட்டர்களில் பைல்களை ஸ்டோர் செய்திடலாம். ஆனால், தொலைவில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டருக்கு மாற்ற முடியாது. எவ்வளவு நீளத்திற்கு கேபிள் இணைப்பு கொடுக்க முடியும்? கிரிட் கம்ப்யூட்டிங் முறையெல்லாம் இல்லாமல் போய், குழப்பமான கணக்கீடுகள் எல்லாம் எண்ணிப் பார்க்கக் கூட இயலாமல் போய், அறிவியல் ஆய்வுகள் தாமதமாகலாம்.

இணையம் இல்லாமல் போனால், பொருளாதாரச் சீரழிவு மிகவும் மோசமான நிலையை எட்டும். எலக்ட்ரானிக் பேங்கிங் மறைந்து போய், செக்குகளை வைத்துக் கொண்டு நீண்ட வரிசையில் நிற்க வேண்டும். கூகுள் அல்லது அமேசான் போன்ற இன்டர்நெட் நிறுவனங்கள், சரித்திரத்தில் மட்டுமே இடம் பெறும்.

மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தங்களின் வர்த்தக இலக்குகளை கனவுகளாக எண்ணி அமைதியடைய வேண்டி வரும். கோடிக்கணக்கில் மக்கள் தங்கள் வேலைகளை இழந்துவிடுவார்கள். பல கோடி டாலர் மதிப்பிலான வர்த்தகம் இயங்கும் எல்லை தெரியாமல் மூடப்படும். ஒரு சில வகை வர்த்தகங்களே இன்டர்நெட் உதவியின்றி இயங்கும்.

அப்படியானால், இணையம் அழியும் சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்று ஒருவித பயம் கலந்த கேள்வி எழுகிறதா? இதற்கான பதில் நிச்சயமாய் இல்லை. இன்டர்நெட் என்பது ஆன்/ஆப் செய்யக் கூடிய ஸ்விட்ச் கொண்டு இயங்கும் மந்திரப்பெட்டி இல்லை. ஏதாவது ஒரு பிளக்கை இழுத்துவிட்டால், இயக்கம் இன்றி அணைந்துவிடக் கூடிய எலக்ட்ரானிக் சாதனம் இல்லை. இன்டர்நெட், பலவகையான சாதனங்கள் இயங்கும் ஒரு பெரிய வலைப்பின்னல்.


அது மட்டுமின்றி, நாள் தோறும், கணந்தோறும் அது தன்னை மாறுதலுக்கு உள்ளாக்கிக் கொண்டே உள்ளது. இன்டர்நெட்டின் ஒரு பகுதியில் சேதம் ஏற்பட்டாலும், மற்ற பகுதிகளின் துணை கொண்டு அதனை சரி செய்திடும் வகையில் தான் இன்டர்நெட் இயங்கி வருகிறது. எனவே அர்த்த மற்ற பயம் இன்றி, இன்னும் அதனை வலுப்படுத்தும் முயற்சி யில் இறங்குவோம்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews