தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, November 19, 2014

RAM கணணியின் வேகத்தை அதிகரிப்பத​ற்கு

கணணியின் வன்றட்டில் அதிகளவு கோப்புக்களை சேமித்தல், அளவிற்கு அதிகமான மென்பொருட்களை நிறுவுதல் போன்ற செயற்பாடுகளால் RAM கணணியின் வேகம் குறைவடையும்.

இவை தவிர ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பயனற்ற மென்பொருள் பிரயோகங்களை திறந்து வைத்திருப்பதன் மூலமும் RAM கணணியின் வேகம் குறைவடைகின்றது. 

 
இதற்குக் காரணம் திறந்த நிலையில் உள்ள மென்பொருட்கள் RAMன் இடத்தை நிரப்புவதாகும். ஆகவே இவ்வாறு திறந்த நிலையில் இருக்கும் மென்பொருட்களை பாவனையற்ற சந்தர்ப்பங்களில் Minimize செய்வதன் மூலம் RAMல் இடம் குறிப்பிட்ட அளவு காலியாகி கணணியின் வேகம் அதிகரிக்கின்றது. 
இதனைப் பரிசோதிக்கும் பொருட்டு 
1. MS Word பிரயோக மென்பொருளை திறக்கவும். 
2.CTRL+SHIFT+ESC ஆகிய கீக்களை அழுத்துவதன் மூலம் Windows Task Managerஐ Open செய்ய வேண்டும். அதில் Process என்பதை அழுத்தி WINWORD.EXEன் Mem Usageஐ தெரிந்து கொள்ளலாம். 
3.இப்போது MS Wordஐ Minimize செய்து மீண்டும் WINWORD.EXEன் Mem Usageஐ சரிபார்க்கவும். 
முன்னைய அளவை விடவும் தற்போது குறைவாகவே காணப்படும். எனவே தற்காலிகமாக பயனற்ற மென்பொருட்களை Minimize செய்வதன் மூலம் கணணி RAMன் வேகத்தை அதிகரிக்க முடியும்.

கணணியின் வேகத்தை அதிகரிப்பதற்கு


புதிதாக வாங்கும் போது கணணி மிக வேகமாக இயங்கும். நாளடைவில் கணணியின் வேகம் குறையத் தொடங்கும்.
Virus, Registry error மற்றும் Junk fileகள் கணணியின் வேகத்தைக் குறைக்கின்றன.

 
Comodo System Utility எனும் இம்மென்பொருள் கணணியின் பிழைகள் மற்றும் குப்பைக் கூளங்களை அகற்றி, கணணியின் வேகத்தை அதிகரிக்கிறது.
இதை செயல்படுத்துவதற்கு முன்பாக கணணியை Back up எடுத்து வைத்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளை இயக்குவதும் எளிது.

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட்டை எளிதான முறையில் ஒரு ஒளிப்படத்திற்கு எவ்வாறு




1.வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட ஒரு நல்ல ஒளிப்படத்தை போட்டோஷாப்பில் திறந்து கொள்ளவும். 
 

2.Ctrl + J அழுத்தி புதிய லேயரை உருவாக்கவும். படத்தின் Brightness/ Contrastஅளவுகளை சரிசெய்துகொள்ளவும். 





3.Background மற்றும் Foreground வண்ணங்கள், வெள்ளை மற்றும் கருப்பாக இருக்கவேண்டும். இதற்கு D அழுத்தவும். 
4.Filter மெனுவிற்கு சென்று Render->Clouds கிளிக் செய்யவும்.இப்போது உங்கள் படம் இப்படி இருக்க வேண்டும். 
5.Filter மெனுவிற்கு சென்று Noise-> Add Noise கிளிக் செய்து வரும் பெட்டியில் 
60 என்ற மதிப்பைக் கொடுங்கள். கீழ்வரும் வருமாறு Gaussian, Monochoromaticஎன்பதையும் டிக் செய்யவும். 
இப்போது படம் முழுவதும் புள்ளிப்புள்ளியாய் இருக்கும். 

6.Filter மெனுவில் Blur->Motion blur கிளிக் செய்யவும். பின்வரும் விண்டோவில் 
Angle என்பதில் 73 என்ற மதிப்பையும் Distance என்பதில் 10 என்ற மதிப்பையும் 
கொடுங்கள். 
இப்போது படம் அடர்த்தியான புள்ளிகளாய் இருக்கும் 
7.Layer1 ன் Blending mode ஐ Screen க்கு செட் செய்யவும். 
8.Ctrl + L அழுத்தி வரும் Levels பெட்டியில் நடுவில் உள்ள புள்ளியை உங்கள் படத்திற்கு ஏற்றவாறு நகர்த்தவும். 

இப்போது உங்கள் படத்திற்கு மழை பெய்த எஃபெக்ட் கிடைத்து விடும். பயன்படுத்திப்பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.




Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews