தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, November 19, 2014

போட்டோஷாப்பில் செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட்டை எளிதான முறையில் ஒரு ஒளிப்படத்திற்கு எவ்வாறு




1.வெளிப்புறத்தில் எடுக்கப்பட்ட ஒரு நல்ல ஒளிப்படத்தை போட்டோஷாப்பில் திறந்து கொள்ளவும். 
 

2.Ctrl + J அழுத்தி புதிய லேயரை உருவாக்கவும். படத்தின் Brightness/ Contrastஅளவுகளை சரிசெய்துகொள்ளவும். 





3.Background மற்றும் Foreground வண்ணங்கள், வெள்ளை மற்றும் கருப்பாக இருக்கவேண்டும். இதற்கு D அழுத்தவும். 
4.Filter மெனுவிற்கு சென்று Render->Clouds கிளிக் செய்யவும்.இப்போது உங்கள் படம் இப்படி இருக்க வேண்டும். 
5.Filter மெனுவிற்கு சென்று Noise-> Add Noise கிளிக் செய்து வரும் பெட்டியில் 
60 என்ற மதிப்பைக் கொடுங்கள். கீழ்வரும் வருமாறு Gaussian, Monochoromaticஎன்பதையும் டிக் செய்யவும். 
இப்போது படம் முழுவதும் புள்ளிப்புள்ளியாய் இருக்கும். 

6.Filter மெனுவில் Blur->Motion blur கிளிக் செய்யவும். பின்வரும் விண்டோவில் 
Angle என்பதில் 73 என்ற மதிப்பையும் Distance என்பதில் 10 என்ற மதிப்பையும் 
கொடுங்கள். 
இப்போது படம் அடர்த்தியான புள்ளிகளாய் இருக்கும் 
7.Layer1 ன் Blending mode ஐ Screen க்கு செட் செய்யவும். 
8.Ctrl + L அழுத்தி வரும் Levels பெட்டியில் நடுவில் உள்ள புள்ளியை உங்கள் படத்திற்கு ஏற்றவாறு நகர்த்தவும். 

இப்போது உங்கள் படத்திற்கு மழை பெய்த எஃபெக்ட் கிடைத்து விடும். பயன்படுத்திப்பார்த்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.



0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews