தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, April 9, 2013

Office 2007 இல் Font களுக்கான Short cut key

 நாம் தமிழில் தட்டச்சு செய்யும் பொழுது ஆங்கிலத்தினையும் சேர்த்து தட்டச்சு செய்யவேண்டிய நிலமை ஏற்படுவது வழமையாகும். இதன்பொழுது Mouse இன் உதவியுடன் Font இனை தெரிவு செய்து தட்டச்சு செய்வதும் பின்னர் அதேமுறையில் பழயநிலைக்கு Font இனை மாற்றுவதும் வழமையாகும். இது சிக்கல் நிறைந்த, எரிச்சல் ஏற்படுத்தும் ஒரு செயலாக காணப்படும். இதனை நிவர்த்தி செய்வதற்க்கு நாம் கூடுதலாக பயன்படுத்தும் Bamini, Times new Roman போன்ற Fontகளுக்கு Key board shortcut இனை உருவாக்கி வைத்திருந்தோம் எனின் இச்சுமை பெரிதும் நிவர்த்தி செய்யப்படும். இதனை உருவாக்குவதற்க்கான படிமுறை பற்றி பார்ப்போம். 


படிமுறை 1
                                          
                                            படத்தில் உள்ளது போல் Office Button இனை தெரிவு செய்து அதன் அடிப்பகுதியில் காணப்படும் Word options என்பதனை தெரிவு செய்யவும்.


படிமுறை 2

                              Customize என்ற பகுதியில் Key board shortcut : customize என்பதனை தெரிவு செய்யவும்.
படிமுறை 3
                                                      பின்ம்பு தோன்றும் சாளரத்தில் categories என்ற பகுதியில் Fonts இனையும்,Fonts என்ற பகுதியில் short cut கொடுக்க தேவையான Font (Bamini) இனையும் தெரிவு செய்து pres new shortcut என்ற பகுதியில் காணப்படும் Box இல் Mouse courser இனை நிறுத்தி புதிய  shortcut இனைkeyboard இல் தெரிவு செய்து Assign என்ற Button இனை தெரிவு செய்யவும். தற்பொழுது current keysஎன்ற பகுதியில் புதிய shortcut உருவாகி இருப்பதனை காணமுடியும்.

படிமுறை 4

                                               
                                                         படிமுறை 3 இல் தெரிவு செய்தது போல் உமக்கு விரும்பிய ஆங்கில எழுத்துரு ஒன்றிற்க்கும் Key board shortcut இனை தெரிவு செய்யவும். இங்கு Times new Roman என்ற எழுத்துருவுக்கு  key board shortcut வழங்கப்பட்டுள்ளது. 

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews