தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Sunday, September 30, 2012

கூகுளில் PDF பைல்களை மட்டும் தனியாக தேட



இணையத்தில் கூகுள் என்பது இன்றியமையான ஒன்றாக உள்ளது. கூகுள் பல வசதிகளை தான் வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வசதிகளில் தவிர்க்க முடியாத வசதி கூகுள் தேடியந்திரம்(Search Engine). கூகுளில் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை. அவ்வளவு பெருமை மிக்க தேடியந்திரத்தில் நமக்கு தேவையான PDF பைல்கள் மட்டும் வேண்டுமென்றால் சரியாக வருவதில்லை.

PDF பைல்கள் மட்டுமின்றி PDF என்ற வார்த்தைகள் உபயோக படுத்த பட்டிருக்கும் சிறந்த தளங்கள் எமக்கு வருகின்றது. ஆகையால் நாம் PDF பைல்களை தேடி கண்டு பிடிப்பது கடினமான காரியமாக உள்ளது. ஆகவே நாம் தேடுதலில் எப்படி PDF பைல்கள் மட்டும் கொண்டு வருவது என்று பார்ப்போம். 
  • நீங்கள் முதலில் கூகுள் தளத்திருக்கு செல்லுங்கள்.
  • நீங்கள் தேடுவதற்கு பொருத்தமான வார்த்தையை கொடுத்து அதற்கு அருகே Filetype:pdf என்று கொடுக்கவும்.
  • பின்பு search பட்டனை அழுத்தவும்.
  • இப்பொழுது உங்களின் தேடலின் முடிவுகள் அனைத்தும் pdf பைல்களாகவே வந்திருக்கும்.
  • இதை உறுதி படுத்தும் வண்ணம் அனைத்து முடிவுகளுக்கு முன்னும் [PDF] என்று வந்திருக்கும்.
  • உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்
                      

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews