கணினியின் அடிப்படை- 5
தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் (Information and Communication Technology - IT )
கணினிக்கு உரித்தான இயல்புகள்
தரவு (Data)
தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப உபகரணம் (ICT Tools)
b. வேகம் 5000 Calculation/second
c. 1500 சதுர அடி இடம் தேவைப்பட்டது.
கணினிகளுடன் தகவல்களை ஒழுங்கமைப்பு செய்தல் அதாவது கணினி,இலத்திரனியல்,தொலைத்தொடர்பு போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை ஒரு செய்முறைக்கு உட்படுத்தி ஒழுங்கமைப்பு செய்தல், பரிமாற்றம் செய்தல் போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கியது தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம் எனப்படும்.
- வேகம் (Speed)
- திருத்தம் (Accuracy)
- நம்பக தன்மை (Reliability)
- சேமித்தல் தன்மை (Storage)
- குறைச்த கட்டனம் (Reduced Cost )
- இணையம் (Internet)
தரவு (Data)
ஒழுங்கமைப்பு செய்யக் கூடியதும் சேமிக்கக் கூடியதுமான தன்மையைக் கொண்ட எழுத்துக்கள், சத்தங்கள் ,குறியிடுகள் என்பன தரவாகும்.
இயல்புகள் :
- ஒழுங்கமைப்பு செய்யக் கூடிய தன்மையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- செய்முறைக்கு உட்படுத்தி (Process) தகவலாக (Information) மாற்றக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
தகவல் (Information)
தரவுகளை (Data) ஒரு செய்முறைக்கு உட்படுத்தி அதிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுவது தகவல்லாகும்.
இயல்புகள்:
- கருத்துள்ளதாக இருத்தல் வேண்டும்.
- பெறுமதி மிக்கதாக இருத்தல் வேண்டும்.
- முழுமையாக இருத்தல் வேண்டும்.
- பொருத்தமான நேரத்தில் பெற்றுக்கொண்டதாக இருத்தல் வேண்டும்.
தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப உபகரணம் (ICT Tools)
தகவல் தொடர்பாடல் தொழில் நுட்ப செயல்பாடுகளுக்கு பயன்படும் சாதனங்கள் அனைத்தும் ICT toolsஎனப்படும்.
- கணினியும் அதனுடன் பயன்படுத்தப்படும் உபகரணங்களும்
Eg: Microphone, scanner, digital camera, web camera.... - தொடர்பாடல் உபகரணம்.
Eg: Fax, Phone, Modem....
1. மனிதனால் பயன்படுத்தப்பட்ட முதலாவது கணித்தல் உபகரணம் அபாக்கஸ் (Abacus)ஆகும்.
2. முதலாவது கணக்கிடும் இயந்திரத்தினை பிளேயஸ் பஸ்கால் (Blaise Pascal) என்பவர் 1642 இல் கண்டுபிடித்தார்.
3. 1882 இல் சால்ஸ் பாபேஜ் (Charls Babage) என்பவர் நவீன கணினியின் அடிப்படை தத்துவத்தை உருவாக்கினார் இவரே கணினியின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.
4. 1947 இல் முதலாவது இலத்திரனியல் கணினியான ENIAC (Electronic Numerical Integrated and Computer ) உருவாக்கப்பட்டது.
a. Vacuum taupe பயன்படுத்தப்பட்டது.b. வேகம் 5000 Calculation/second
c. 1500 சதுர அடி இடம் தேவைப்பட்டது.
5. முதலாவது வர்தக ரீதியான கணினி 1951 இல் உருவாக்கப்பட்டது இதன் பெயர் UNIVAC (Universal Automatic Computer ) இதில் Storage Memory பயன்படுத்தப்பட்டது.
Note : முதலாம் தலை முறைக்கணினிகளில் (Fist generation Computer) பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் வெற்றுக்குழாய் (Vacuum taupe) தொழில் நுட்பம் ஆகும்.
6. 1956 இன் பிற்பகுதியில் Transistor தொழில் நுட்பத்திலான இலத்திரனியல் கணினிகள் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக இவற்றில் Punch card, Magnetic storage device என்பனவும் பயன் படுத்தப்பட்டதன. இவை இரண்டாம் தலை முறைக்கணினிகள் ஆகும்.
8. 1964 இன் பிற்பகுதியில் IC (Integrated Circuits ) இனைப்பயன் படுத்தி இலத்திரனியல் கணினிகள் உருவாக்கப்பட்டது. இதில் Key board, Moniter, Storage device, Operating system (Command Line Interface - CLI) என்பன பயன்படுத்தப்பட்டது. இவை 3ம் தலை முறைக்கணினிகள் ஆகும்.
8. 1971 இன் பிற்பகுதியில் Micro processor எனப்படும் Silicon Chip களைப் பயன்படுத்தி தற்பொழுது பாவனையில் உள்ள நவீன கணினிகள் உருவாக்கம் பெற்றன. பல்லாயிரக்கணக்கான IC க்களை சுருக்கி ஒருMicro chip இல் உள்ளடக்க தக்கதாக இப்புதிய தொழில் நுட்பம் உருவாக்கப்பட்டது. இத்தொழில் நுட்பம் காரனமாக உருவத்தில் சிறிய வேகம் கூடிய கணினிகள் உருவாக்கம் பெற்றது. இது 4ம் தலைமுறைக்கணினியாகும்.
9. fifth generation computer தற்பொழுதும் ஆய்வில் உள்ள Artificial Intelligent (AI) எனப்படும் தர்க்க ரீதியாக சிந்திக்க கூடியதும் மனித உத்தரவுக்கு கட்டுபடக்கூடியதுமான கணினிகளை உருவாக்குதல் ஆகும்.