பிளாக்கருக்குத் தேவையான புதிய Grid style image விட்ஜெட்..!
![Grid Style recent post widget Grid Style recent post widget](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbV3h5hl2_c-IMHDNrFbg887OImEILnLLbxhAoVmYf2-kqUWZuBeiUsKa3uVyQ64V5GMuQTGUkuvrbrWTW4kRtRwvT1Bb47bAiRKot-xYzHd9cvxTVm0YzkdLA12Nj5cwdK63zl-GjgmsD/s200/Grid-Style-Recent-Post-Widget.jpg)
அவ்வாறில்லாமல் வெறும் படத்தை மட்டுமே ஒவ்வொரு இடுகைக்கும் காட்டுமாறு அமைத்தால் எப்படி இருக்கும்? இந்த எண்ணத்தைச் செயல்படுத்தி விட்ஜெட் ஒன்றை உருவாக்கித் தந்திருக்கிறார்கள் http://www.bloggerplugins.org தளத்தினர்.
வழக்கம்போல உங்கள் பிளாக்கர் தளத்தில் லாகின் செய்துகொள்ளுங்கள்.
Design==>Page Elements==>Add Gadget==> Popular Post என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அதில் படத்தில் காட்டியுள்ளபடி image thumbnail என்பதில் மட்டும் டிக் மார்க் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
பிறகு Save கொடுத்து சேமித்துக்கொள்ளுங்கள்.
முன்பே popular post widget உங்கள் தளத்தில் இணைத்திருந்தால் மேற்சொன்ன மாற்றத்தை மட்டும் செய்து சேமித்துவிடுங்கள்.
இப்போது வார்ப்புருவில் படங்களை மட்டும் Grid Style-ல் காட்டுவதற்கான நிரல்வரிகளைச் சேர்க்க வேண்டும். அதற்கு Design ==> Edit HTML என்பதை திறந்துகொள்ளவும். Expand Widget Template என்பதில் டிக்மார்க்கை ஏற்படுத்த வேண்டாம். அதில் காட்டப்படும் வலைப்பூவின் வார்ப்புரு நிரலில் இந்த வரிகளைத் தேடுங்கள்.
மேற்கண்ட நிரல்வரிகளை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக கீழிருக்கும் நிரல்வரிகளை கொடுத்து Save Template அழுத்தி செய்த மாற்றத்தை சேமித்துக்கொள்ளவும்.
பிறகு Template Designer என்பதைச் சொடுக்கி தோன்றும் பக்கத்தில் இறுயில் இருக்கும் Advanced என்பதை கிளிக் செய்யவும்.
இப்போது தோன்றும் பக்கத்தில் Add Custom CSS என்பதில் கீழ்க்கண்ட நிரல்வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்துகொள்ளவும்.
அவ்வளவுதான். முடிந்தது. இப்போது உங்கள் பிளாக்கரில் Grid style image recent post widget இணைந்திருக்கும்.
இதுபோன்ற விட்ஜெட்கள் படங்களை மட்டும் பதிவேற்றம் செய்யும் வலைப்பூக்களுக்கு(Image Gallery Blogs) பொருத்தமாக இருக்கும். மேலும் பலதரப்பட்ட பதிவுகளைக் கொடுக்கும் வலைப்பூக்களும் ஓரளவு பொருந்திப்போகும். இதனால் தளத்தில் வரும் வாசகர்கள்(Visitors) படங்களைப் பார்த்து கிளிக் செய்யும் வாய்ப்புகள் அதிகம். இன்னும் சொல்லப்போனால் வார்த்தைகளாக உள்ள தலைப்பைப் பார்த்து, படித்து அதை கிளிக் செய்யும் நேரத்தைவிட படமாகப்(Image) பார்த்தால் உடனே அதை கிளிக் செய்யத் தோன்றும். இந்த உத்தி உங்கள் வலைப்பூவின் தரத்தை உயர்த்தும், மேலும் வாசகர்களின் கவனத்தையும் ஈர்க்க முடியும். நன்றி நண்பர்களே..!!