தகவல் முறைமை - 1
தகவல்முறைமையும் தகவல் தொழில் நுட்பமும்
(Information System and information Technology)
முறைமை (System)
யாதாயினும் ஒரு குறிப்பிட்ட செயலை அல்லது குறிக்கோளை நிறைவேற்று வதற்றுவதற்காக அத்தியாவசியமான குறிப்பிட்ட செயன்முறையினை மேற்கொள்கின்ற ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல்வேறு கூறுகளின் சேர்கையே முறைமையாகும்.
ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல்வேறு கூறுகள் உபமுறைமையாகும்(Sub system)
உதாரணம் 1. பாடசாலை முறைமை
உபமுறைமை விளையாட்டுத்துறை
பரீட்சைப்பகுதி
நிர்வாகபகுதி
2. வியாபார உற்பத்தி நிறுவனமுறைமை
உபமுறைமை உற்பத்திபகுதி
சந்தைப்படுத்தல் பகுதி
நிர்வாக பகுதி
3. மனித உடல் முறைமை (இயற்கை முறைமை)
உபமுறைமை சுவாச தொகுதி
குருதி சுற்றோட்டத் தொகுதி
நரம்புத் தொகுதி
சமிபாட்டுத் தொகுதி
முறைமை மாதிரி