தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, November 15, 2014

FACEBOOK ஐ இலவசமாக பயன்படுத்த வேண்டுமா?

இன்றைய செய்தி பேஸ்புக் பிரியர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று நினைக்கிறேன்.ஏன் என்றால் இந்த முறையில் பேஸ்புக் இற்கு சென்றால் எந்தவிதமான GPRS கட்டனங்களும் அரவிடப்படாது அல்லது நீங்கள் இணையத்தை பயன்படுத்துவதற்காக செயற்படுத்திய Data களில் எந்தவிதமான MBயும் குறையாது............அதை பற்றித்தான் இன்றைய பதிவு.



http://0.facebook.com  இங்கு செல்லுங்கள் (Computer & Mobile இரண்டிலும் வேலை செய்கிறது) எந்தவிதமாக கட்டனங்களும் அரவிடப்படமாட்டாது அதாவது உங்கள் கணக்கில் Rs.00.00 கிடந்தாலும் Facebook மட்டும் இந்த http://0.facebook.com முகவரி ஊடாக வேலை செய்யும்.

குறிப்பு : இதை நான் இலங்கையில் Mobitel இல் மாத்திரம் பயன்படுத்தி பார்த்தேன் வேலை செய்கிறது ஆனால் ஏனைய வலையமைப்பு மற்றும் ஏனைய நாடுகள் பற்றி தெரியாது பயன்படுத்தி வேலை செய்தால் சொல்லுங்கள்.

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?






மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறதுஇதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.

உங்கள் போனில் இருந்து பாட்டரிசிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும்பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும். 

உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல் வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம்உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும்இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும்ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் ).
 அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம். Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம்.

போன் நன்றாக காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் அதை ஆன் செய்ய முயற்சிக்கவும்பெரும்பாலும் ஆன் ஆகிவிடும்இல்லை என்றால் வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும்அப்போதும் ஆன் ஆனால் போன் ஓகேபேட்டரி பிரச்சினைஅப்போதும் இல்லை என்றால் கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுக்கவும்.

ஒரே நிமிடத்தில் உங்கள் பெயரில் அழகான mobilephone வால்பேப்பர்

நண்பர்களே உங்கள் மொபைல் போனிலுள்ள வால்பேப்பர்களை பார்த்து பார்த்து நீங்கள் சலிப்படைந்து விட்டிர்களா,அப்படியானால் உங்களுக்காகதான் இந்த பதிவு. கிழே குறிப்பிட்டுள்ள தளத்திற்கு சென்று உங்கள் பெயரிலே அழகான அனிமேஷன் வால்பேப்பர்களை நீங்களே உருவாக்கிகொள்ளுங்கள்.



இந்த வலைதளத்தில் அழகான wallpaper  மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான wallpaper ஐ முதலில் தேர்வு செய்ய வேண்டும் . 

பின் உங்கள் செல்போன் வகை மற்றும் அதன் மாடல் எண்ணை குறிப்பிடவேண்டும் . பின் உங்கள் பெயரை அங்கே உள்ள textbox ல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் பெயரோடு அழகான Wallpaper உங்களுக்கு கிடைக்கும் . இதை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து பின் செல்போனில் ஏற்றி கொள்ளலாம் .

உங்கள் செல்போன் Model அங்கு இல்லையெனில் உங்கள் செல்போன் Resolution மட்டும் கூறினால் போதும் . உதாரணமாத Nokia e63 செல்போன் Resolution 240x320 அதை கொடுத்தால் போதும்.

எனது தளத்தின் பெயரில் நான் உருவாக்கிய சில மாதிரி Wallpaper களை கீழே காணலாம் 

வலைதள முகவரி : http://reddodo.com/
 
 

Nokia தொலைபேசிகளின் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை இலகுவாக Unlock செய்வது எப்படி?

கைத்தொலைபேசிகளில் Memory Card ஆனது தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய External Storage ஆக செயற்படுகிறது. பெரும்பாலானவர்கள் MP3 பாடல்கள், வீடியோக்கள் போன்றவற்றை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் தனிப்பட்ட தகவல்கள், Contacts, Message போன்றவற்றை இரகசியமாக சேமித்து வைத்திருப்பார்கள்.

அவ்வாறு இரகசியமான தகவல்களை சேமித்து வைத்திருக்கும்போது Memory Card இற்கு பாஸ்வேர்ட் பாதுகாப்பு கொடுத்திருப்பார்கள். பாஸ்வேட் மறக்காதிருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை. ஒருவேளை பாஸ்வேர்டை மறந்துவிட்டால் அத்தனை தகவல்களையும் இழக்கவேண்டியதுதான். Memory Card இற்கு பாஸ்வேட் பாதுகாப்பு கொடுத்தால் தொலைபேசியை கணினியுடன் இணைத்தால் கூட Memory Card இனை Windows Explorer காண்பிக்காது. இருக்கும் ஒரேயொரு வழி Memory Card ஐ Format செய்வதுதான். இதனால் சேமித்து வைத்திருக்கும் அத்தனை தகவல்களும் பறிபோய்விடும்.
சரி.. Format செய்யாமல் memory card ஐ Unlock செய்யமுடியாதா? முடியும். அதற்கு உதவி செய்கிறது FExplorer என்ற இலவச மென்பொருள். 
  • இந்த இணைப்பில் சென்று தரவிறக்கி தொலைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள்FExplorer
  • அதன் பின்னர் FExplorer ஐ Open செய்து C: ட்றைவினுள் செல்லுங்கள்
  • C: System செல்லுங்கள்
  • அங்கே mmcstore எனும் பெயரில் உள்ள File ஐ உங்கள் கணினிக்கு காப்பி செய்துகொள்ளுங்கள்
  • காப்பி செய்ததும் Notepad உடன் Open செய்யுங்கள் 
  • இப்போது அதில் நீங்கள் Memory Card இற்கு கொடுத்த பாஸ்வேர்டை காணலாம்.
(Nokia s60 இல் பரீட்சித்து பார்த்தேன். 100% வேலை செய்கிறது.. வேறு மாடல்களில் செய்து பார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்)

Smartphone- களை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவல்கள்

வெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட Smartphone- களை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவல்கள் என்ன?

ஏன் Smartphone ?

உங்களுடைய செயல்கள் அனைத்தையும் Smart ஆக செய்ய உதவுகிறது இது. எந்த ஒரு செயலுக்கும் தனித் தனியாக Application என்று கணினி போல இருப்பதால் மிக எளிதாக உங்கள் வேலை முடிந்துவிடும். Smartphone- இல் பெரும்பாலான பயன்பாடுகள் இணையம் சார்ந்தே இருக்கும். உங்கள் தினசரி வேலையில் இருந்து, உங்கள் தொழில் வரை அனைத்துக்கும் உதவும் வகையில் செயல்படுகின்றன. எங்கே இருந்து வேண்டுமானாலும், நீங்கள் நினைத்த வேலையை செய்து முடித்திடலாம்.

விலை (Price) :

எல்லோருக்கும் முதலில் இதை சொல்லி விடுவது உத்தமமாய் இருக்கும். முதலில் நீங்கள் எவ்வளவிற்கு வாங்க போகிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதன் பின் கீழே உள்ளவற்றை பொறுத்து உங்கள் பணத்திற்கு ஏற்ப ஒரு அலைபேசி வாங்கி விடலாம்.

இயங்கு தளம் (Operating System) :

எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஒரு இயங்கு தளத்தில் (OS) தான் இயங்கும். இதில் பிரபலமானவை iOS, Android, Windows, Blackberry, Symbian. இதில் iOS என்பது ஆப்பிள் நிறுவன அலைபேசிகளில் மட்டும், Blackberry என்பது Blackberry நிறுவன அலைபேசிகளில் மட்டும், Symbian என்பது நோக்கியா அலைபேசிகளில் மட்டுமே.

இதில் ஆப்பிள் விலை பற்றி சொல்லவே வேண்டாம், கொஞ்சம் அதிகம் பணம் உள்ளவர்கள் தான் வாங்க முடியும் என்ற போதும் இதன் மிகப் பெரிய பலன் Upgrade வசதி. நீங்கள் எப்போது வாங்கி இருந்தாலும், புதிய Version OS வெளியாகும் போது அதற்கு Upgrade வசதி தரப்படுகிறது. இதனால் புதிய வசதிகளை எளிதாக பெற முடியும்.

அதே போல தான் Blackberry, ஆப்பிளை விட விலை குறைவு என்ற போதிலும், இதன் கட்டமைப்பு, பயனர் இடைமுகப்பு (User Interface) போன்றவை எல்லாரும் பயன்படுத்த உகந்ததாக இல்லை என்பது ஒரு குறை. இது Business சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப் பொருத்தமான அலைபேசி. இதிலும் Upgrade வசதி வழங்கப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டு வரை Smartphone உலகின் ராஜாவாக இருந்த Symbian, அதன் பின்னர் Android வளர்ச்சியால் அடிவாங்க ஆரம்பித்து, இன்று அடியோடு நின்றுவிட்டது. இதை வாங்குவதை தவிர்ப்பது நலம்.

அடுத்த நிறைய பேரின் வேட்கையான ஆன்ட்ராய்ட் (Android), அதிகமான மக்களின் ஸ்மார்ட்போன் கனவை நனவாக்கியது இது தான். விலை குறைவு, அதிக வசதிகள், பெரும்பாலும் இலவசம் என்ற அதிரடிகளுடன் மிகப் பெரிய மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து வருவதால் கூகுளின் இந்த பிள்ளை நன்றாகவே வளர்கிறது. இதில் ஒரு பிரச்சினை குறிப்பிட்ட மாடல் அலைபேசி ஒன்றை நீங்கள் வாங்கும் போது Upgrade என்பது எல்லா முறையும் கிடைக்காது. உதாரணமாக 2.3 OS வந்த போது வாங்கியவர்கள் பெரும்பாலும் 4.1 OS வரை Upgrade செய்ய வாய்ப்பு பெற்றார்கள். ஆனால் அதற்கு பிறகு கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. இந்த கேள்விக்குறி கூட இல்லாமல் 2.3 OS - யில் நின்று விட்டவர்கள் பலர். ஆனால் Upgrade எல்லாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2.3 OS இருந்தால் ஒரு ஆன்ட்ராய்ட் போனை கண்டிப்பாக வாங்கலாம். அதற்கு கீழ் போக வேண்டாம்.

அடுத்து Windows OS. நம் கணினியில் இயங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான இது போன் மாடல்களினால் தடுமாறி வருகிறது. இயங்கு தளத்தில் பிரச்சினை இல்லை என்ற போதும் Phone Specification இதை வாங்க வேண்டுமா என்று உங்களை யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். ஆனால் மிக எளிதான Interface, செயல்பாடை விரும்புபவர்கள் இதை வாங்கலாம். குறைந்தபட்சம் 7.5 தெரிவு செய்யவும்.

வடிவமைப்பு, டிஸ்ப்ளே (Body, Display):

ஒரு போன் வாங்கும் அது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை Body என்பதன் கீழ் வரும். இதில் நீங்கள் குறிப்பாக கவனிக்க வேண்டியது. எடை. பெரும்பாலும் எடை குறைவாக இருக்கும்படி பார்க்கவும்.

Display

அடுத்து Display, இது மிக முக்கியமான ஒன்று. எப்படியும் Touch Screen போன் தான் வாங்க போகிறீர்கள். அப்படி என்றால் அது என்ன வகை என்று நீங்கள் பார்க்க வேண்டும். Resistive, Capacitive என்ற இரண்டு வகை உள்ளன. இதில் நீங்கள் சமரசமே இல்லாமல் தெரிவு செய்ய வேண்டியது Capacitive Touch Screen. தப்பித் தவறி Resistive வாங்கி விட்டால், இங்க் ரப்பர் பயன்படுத்துவது போலத்தான், போனை போட்டு தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்றபடி Capacitive தெரிவு செய்யும் நீங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ப TFT, AMOLED மற்றும் பல Features கிடைக்கும். அதோடு நீங்கள் வாங்கும் போன் MultiTouch Support செய்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள், குறைந்த பட்சம் இரண்டு விரல்கள் கட்டாயம் தேவை. விளையாட்டு ரசிகர்களுக்கு இது அவசியம்.

Display Size என்பது உங்கள் விருப்பம். ஆண் என்றால் 4 இஞ்ச்க்கு மேல் வாங்கினால் எங்கே வைக்க போகிறீர்கள் என்று யோசித்து வாங்க வேண்டும். ஏன் என்றால் சில நேரங்களில் பெரிதாக வாங்கி விட்டால் பிறகு உங்கள் போனுக்கு தனியாக அளவெடுத்து பாக்கெட் தைக்க வேண்டி வரலாம். பெண்களுக்கு பிரச்சினை இல்லை. iPad போல 10 இஞ்ச் என்றாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். :-)

நினைவகம் (Memory) :

அடுத்து மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. Smartphone - கள் கணினி போலவே RAM, Internal Memory போன்றவற்றோடு வருகின்றன. எனவே உங்கள் விலைக்கு எது சிறந்தது என்று பார்த்து வாங்க வேண்டும். RAM 512MB குறைந்த பட்சம் இருந்தால் நலம், அதே போல Internal Memory குறைந்த பட்சம் 150 - 200 MB அவசியம்.

External Memory பெரும்பாலும் MicroSD Card Support செய்வதாக வந்து விட்டது. அது 32GB வரை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

கேமரா (Camera):

பெரும்பாலும் எந்த Phone வாங்கும் போதும் கவனிக்க வேண்டிய விஷயம் இது. எத்தனை மெகா பிக்ஸல் கேமரா என்று முடிவு செய்து கொண்டு வாங்க வேண்டும். அதோடு உங்களுக்கு Flash முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இரவில் படம் எடுக்கும் போது உங்களுக்கு சிரமம்.

Video Recording என்பதையும் இதில் கவனிக்க வேண்டும். 5MP Camera என்றாலே 720p(தரமான வீடியோ) அளவுக்கு Video Recording வசதி வந்துவிட்டது. 5MP வாங்கி விட்டு VGA Recording(தரம் குறைவான வீடியோ) செய்து கொண்டிருந்தால் வீண்தான்.

வீடியோ Calling வசதி வேண்டும் என்பவர்கள் சிரமப்படாமல் இருக்க Front Camera இருக்கும் போன் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள்.

ப்ராசஸர் (Processor):

மிக மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. உங்கள் போனுக்கு இதயம் போன்ற பகுதி இது தான். இதில் நான் Chip-set, GPU என்றெல்லாம் குழப்ப விரும்பவில்லை. குறைந்த பட்சம் 800Mhz இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

பாட்டரி (Battery) :

எல்லாமே சரி. பாட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பது தான் ஒரு போனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். இதில் Smartphoneகளுக்கு 1100 போல பத்து நாள் சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வாங்கும் பாட்டரி லித்தியம் அயான்(Li-Ion) ஆக இருக்க வேண்டும், அதுவும் குறைந்த பட்சம் 1500 mAh தெரிவு செய்தால் தான் ஒரு நாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும் (உங்கள் பயன்பாடுகளை பொறுத்து).

இணையம் & இணைப்புத்தன்மை (Internet & Connectivity):

நீங்கள் வாங்கும் மொபைல் 3G enabled Phone தானா என்று உறுதி செய்து கொள்வது அவசியம். அதே போல Bluetooth, Wi-Fi, GPS, USB வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். Bluetooth Version குறைந்த பட்சம் 2.1+ EDR ஆக இருத்தல் நலம்.

ப்ரௌசெர் HTML வசதியுடன் வரும், அதே சமயம் Flash இருந்தால் இன்னும் சிறப்பு.

இவையே ஒரு Smartphone வாங்கும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள்.

தரமான NOKIA MOBILE ய் எவ்வாறு தெரிந்து கொள்வது ?

நாம் பயன்படுத்தும் அல்லது வாங்கும் நோக்கியா மொபைல் தரமானதா என்று எப்படி தெரிஞ்சுகொள்வது கடைகாரர் எல்லா போன்களும்

தரமானதுதான்னு சொல்லுவார் உங்கள் நோக்கியா போனின் தரத்தை

எளிதாக கண்டுபிடிக்கலாம் .கடைகாரரிடம் போனை வாங்கி *#06# டயல் செய்ங்க. சில எண்கள் வரும்

இதை "IMEI" நம்பர் என்று சொல்லுவாங்க. (International Mobile Equipment Identity) (கேள்விபட்டுருபீங்க).பிறகு அந்த எண்களில் ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கங்களை பாருங்கள்.


Phone serial no. x x x x x x ? ? z z z z z z z
(XXXXXX - Approval code, ZZZZZZZ - Serial number)

ஏழாவது மற்றும் எட்டாவது இலக்கம்

0 2 அல்லது 2 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு EMIRATES ,தரம் : மோசம்

0 8 அல்லது 8 0 - என்றால் அந்த போன் தயாரான நாடு GERMANY , தரம் : சுமார்

0 1 அல்லது 1 0 என்றால் அந்த போன் தயாரான நாடு FINLAND ,தரம் : நல்ல தரம்

0 4 என்றால் அந்த போன் தயாரான நாடு CHINA . தரம் : நல்ல தரம்
( CHINA என்றதும் பயப்பட வேண்டாம்.அதனுடைய software வேறு நாட்டில் தாயரிக்கபட்டது.)


0 3 என்றால் அந்த போன் தயாரான நாடு KOREA . தரம் : நல்ல தரம்

0 5 என்றால் அந்த போன் தயாரான நாடு BRAZIL . தரம் : சுமார்


0 0 என்றால் அந்த போன் ஒரிஜினல் நோக்கியா தொழிற்சாலையில் தயாரானது. தரம் : மிக மிக நல்ல தரம், மற்றும் உடலுக்கு எந்த தீங்கும் இழைக்காதது.


1 3 என்றால் அந்த போன் தயாரான நாடு AZERBAIJAN ,தரம் : மிக மோசமான தரம்.எளிதில் பழுதடையும் . மேலும் உங்கள் உடலுக்கு தீங்கானது.

இனிமேல் NOKIA MOBILE வாங்க சென்றால் இந்த எண்களை மறக்காமல் எழுதிக்கொண்டு போங்க. பதிவு பயனுள்ளதாக இருந்துருக்கும் என நம்புகிறேன்-

கெடுதல் விளைவிக்கும் வைரஸிலிருந்து கணனியை பாதுகாக்க



தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கணனியின் அவசர கால உதவிக் குழுவானது (Computer Emergency Response Team (CERTIn)), இந்தியாவில் ஸ்கைப் பயன்படுத்துவோருக்கு கெடுதல் விளைவிக்கும் ஸ்பாம் மெயில் குறித்து எச்சரிக்கை கொடுத்து வந்தது.

தற்போது இந்த ஸ்பாம் வேகமாகப் பரவி வருவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் மட்டுமே இது வேகமாக இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்கைப் பயன்படுத்துவோரின் காண்டாக்ட் முகவரிகளிலிருந்து மெசேஜ் கிடைப்பது போல செய்தி வருகிறது.
இதில் ஏதேனும் ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். இதில் கிளிக் செய்தால், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் புரோகிராம் கணனியில் வந்தமர்ந்து கொள்கிறது.

பின்னர் இந்த புரோகிராம், கணனியில் தரப்படும் பெர்சனல் தகவல்களை, இணையம் மற்றும் வங்கி அக்கவுண்ட்களுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை, தொலைவில் உள்ள இன்னொரு சர்வருக்கு அனுப்புகிறது.
அதனை இயக்குபவர், அங்கிருந்தே பாதிக்கப்பட்ட கணனியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இந்த வைரஸ் புரோகிராம் செயல்படுகிறது.
இதனைத் தவிர்க்க, அண்மைக் காலத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்கைப் புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.

 ஸ்கைப் காண்டாக்ட் முகவரியில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வரும் இன்ஸ்டண்ட் மெசேஜில் உள்ள லிங்க்கில் கிளிக் செய்திடக் கூடாது.
இன்ஸ்டண்ட் மெசேஜில் அனுப்பப்படும் பைல்களை டவுண்லோட் செய்திடக் கூடாது. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை அப்டேட் செய்து, எப்போதும் இயக்கியபடி வைக்கவும் என தகவல் தொடர்பு அமைச்சகத்தின் மேற்சொல்லப்பட்ட அமைப்பு எச்சரிக்கை தந்துள்ளது.  

Flash கோப்புக்களை .exe கோப்புக்களா​க மாற்றியமைப்​பதற்கு

கண்கவர் அனிமேசன்களை அடிப்படையாகக் கொண்டு கற்றல் உபகரணங்கள், கணனி விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்க முடியும் என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
இவ்வாறு உருவாக்கப்படும் கோப்புக்கள் பொதுவாக .swf எனப்படும் Flash கோப்புக்களாகவே காணப்படும்.

இவ்வாறான கோப்புக்களை கணனியில் நிறுவி பயன்படுத்துவதற்கு .exe போர்மட்டிற்கு மாற்றியமைக்க வேண்டும்.
இவ்வசதியினை ஒன்லைன் மூலம் செய்து கொள்வதற்கு http://www.swf-to-exe.com/ எனும் இணையத்தளம் உதவி புரிகின்றது.

இதற்கு குறித்த தளத்திற்கு சென்று உங்கள் கணனியில் காணப்படும் .swf கோப்பினை தரவேற்றம் செய்து அதனை .exe கோப்பாக மாற்றி மீண்டும் தரவிறக்கம் செய்து கணனியில் நிறுவிக் கொள்ள முடியும்.
இது தவிர மென்பொருளின் உதவியுடனும் இச்செயன்முறையை மேற்கொள்ள முடியும்.
தரவிறக்க சுட்டி

GNU/Linux: "எழுதுபவர்களுக்கு" ஒரு மென்பொருள்

நண்பரோடு தொலைபேசிக்கொண்டே Gnomefiles வலைத்தளத்தை மேய்ந்துகொண்டிருந்தபோது இந்த ஆர்வமூட்டும் மென்பொருள் கண்ணில் பட்டது.

இது "எழுதுபவர்களுக்கானது".

எழுதுங்கள்; எழுதுவதை மட்டுமே செய்யுங்கள் என்பதே இதன் அடிப்படைக் கோட்பாடு.

எழுதும் மனநிலையை சிதைக்கும் ஏராளம் விஷயங்கள் குறுக்கிட்டுக்கொண்டிருக்கும் கணித்திரை எழுத்துச் சூழலில் கணித்திரை எழுத்தாளர்களுக்கு மிகவும் உதவும் ஒரு மென்பொருள் இது.


Pyroom என்று பெயரிடப்பட்டுள்ள இது வழக்கமான உரைதிருத்திகளைப் (Text Editors) போன்றதுதான். ஆனால் என்ன, நீங்கள் எழுதத்தொடங்கிவிட்டால் வேறு எதையும் நீங்கள் பார்க்க வேண்டியதில்லை. எங்கேயும் கவனம் சிதற வேண்டியதில்லை. நீங்கள் எழுதுவதை மட்டுமே நீங்கள் கவனிக்க முடியும்.

எழுத்தாளர்களின் உளவியல் அறிந்து இதனை வடிவமைத்திருக்கிறார்கள்.

"எழுதுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை" ;)

உங்கள் கணினியின் திரையை கருமை நிரப்பிவிட எழுதும் திடலை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்.

திடலைச் சுற்றியிருக்கும் எல்லைக்கோட்டினைக்கூட நீங்கள் அகற்றி விடலாம்.

படத்தில் இருக்கும் கருப்பில் பச்சை நிற இடைமுகப்பு எனக்கு வசதியாக இருக்கிறது. வேண்டுமானால் நீங்கள் உங்களுக்கு வேண்டியபடி நிறங்களை அமைத்துக்கொள்ளலாம்.

இந்த வலைப்பதிவை இம்மென்பொருள் கொண்டே எழுதிக்கொண்டிருக்கிறேன். உண்மையிலேயே மிகவும் பயனுள்ளதாய்ப் படுகிறது

தமிழ் ஒருங்குறிக்கு ஆதரவுண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட ஆவணங்களை எழுதும் விதமாக Buffer அடிப்படையிலான வசதி உண்டு. தானாக குறிப்பிட்ட நேரத்துக்கொருமுறை ஆவணத்தைச் சேமித்துவிடுகிறது. வேகமாக விசைப்பலகை கொண்டே அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்த முடியும்.

பொதுமக்கள் உரிமத்தில் அமைந்த கட்டற்ற மென்பொருள்தான் இது என்பதையும் சொல்லவேண்டுமா என்ன?

பத்திரிக்கை நிறுவனங்களில் தட்டெழுத்தாளர்கள் இவ்வாறான கருந்திரை முனையங்களைப் பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன்.

நம் வலைப்பதிவாளர்களுக்கு மிகவும் பயன்படும் மென்பொருள்.

பயன்படுத்திப் பார்த்துவிட்டுக் கருத்துச்சொல்லுங்கள்.

எழுதுங்கள், எழுதுங்கள்; எழுதும்போது எழுதுவதை மட்டுமே செய்யுங்கள் ;-)

மிக வேகமாக செயல்படக்கூடிய கணணி சிப் கண்டுபிடிப்பு

வேகமாக இயங்கக் கூடியதும், அதிக பதிவுத் திறன் கொண்டதுமான புதிய கணணி சிப்பை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு மெம்ரிஸ்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லண்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் அந்தோணி கென்யோன் கூறுகையில்,
இந்தச் சிப்பை மலிவான விலையிலே உருவாக்க முடியும் என்றும், இது இப்போது உள்ள செமிகண்டக்டர் சிப் உருவாக்கும் தொழில்நுட்ப அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ப்ளாஷ் மெமரி சிப்பை விட மெம்ரிஸ்டர் சிப் 100 மடங்கு அதி வேகமாக செயல்படும் எனவும் தெரிவித்தார்.

Skype வீடியோ கோல்களை பதிந்து கொள்ள இலவச மென்பொருள் !




ஸ்கைப் (Skype) ஊடான மேற்கொள்ளப்படும் வீடியோ அழைப்புக்கள் அனைத்தையும் ஒலி-ஒளி வடிவமாக உயர் தரத்தில் (HD) பதிந்துகொள்ள (Record) உதவும் ஒரேயொரு சிறந்த மென்பொருளையே இன்று நீங்கள் தரவிறக்கப்போகிறீர்கள்.

சிறப்பம்சங்கள்.

வீடியோ கோல்களை நேரடியாக உங்கள் கணனியில் பதிந்துகொள்ள முடியும். ( ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கும் அழைப்புக்களையும் பதிந்துகொள்ள முடியும்! )
screen sharing இன் போதும் வீடியோவை பதிந்துகொள்ள முடியும். ( இது ஒன்லைன் கல்வியின் போது பயண்படும்)
தன்னியங்கி அழைப்பு பதிவு. (Automatic call recording )
தானியங்கி சட்டிங் பதில் அளிப்பு. (Automatic chat reply)
அளவு :10.6 MB

தரவிறக்க :Download Here

புதிய PcBoost 4.1.7.2013 மூலம் உங்கள் கணினி Speed அதிகரிக்க

சாதாரண வேகத்தை விட சிறந்த வேகத்துடன் உங்கள்  கணனியை இயக்க அனுமதிக்கிறது ஒரு மென்பொருள் மென்பொருள். அது விளையாட்டுகள், வீடியோ தயாரிப்பு, புகைப்பட எடிட்டிங் மென்பொருள் மற்றும் மென்பொருள் முதலில் வடிவமைக்கப்பட்டது விட வேகமாக இயங்க அதிக திறன் தேவைப்படுகிறது என்று எந்த மென்பொருளும் வேலை செய்யும். புதிய version4.1.7.2013 சமீபத்தில் வெளியிடப்பட்டது. இங்கே இலவச பதிப்பை பெற்றுக்கொள்ளாம்.

அம்சங்கள்:

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 8, 7, விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் சர்வர் 2012, 2008, 2003 இணக்கத்தன்மை. தயாராக 32-BIT/64-BIT.
இந்த திட்டங்கள் வேகமாக இயங்க அனுமதிக்கிறது, தற்போது செயலில் விண்ணப்பத்தை செயலி முன்னுரிமை நூல் அதிகரிப்பதன் மூலம் விளையாட்டுகள் மற்றும் பயன்பாடுகள் ஒருங்கிணைக்கிறது.
மென்பொருள் அமைதியாக ரன் மற்றும் பயனர் குறுக்கீடு இல்லாமல் பயன்பாடுகளை அதிகரிக்க அனுமதிக்கிறது பின்னணி, இயங்கும்.
புதிய சிறந்த செயலி அமைப்பு தானாக பயன்பாடுகள் முழுமையாக பயன்படுத்தப்படுவதில்லை என்று செயலி கோர்கள் பயன்படுத்த அமைக்கிறது.
செயலி கோல்களாக சோதனை அம்சம் வேகம் மற்றும் நிலையான உங்கள் கணினி செயலி எப்படி ஒரு மதிப்பீட்டின்படி பெற சேர்க்கப்பட்டுள்ளது.
உள்ளமை மற்றும் முழுமையாக திருத்தும்படி போன்ற குறைப்பதற்கு அல்லது கணினி மோதல்கள் போன்ற மென்பொருள் பிரச்சனைகளை தடுக்க, இணக்கமான இல்லாத பயன்பாடுகளின் பட்டியலை தடுக்க.
புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன பயனர் இடைமுகம், விண்டோஸ் பயனர் இடைமுகத்தை விதிமுறைகளுக்கு எளிதாக பயன்படுத்த உள்ளுணர்வு மற்றும் இணக்கமான.
மென்பொருள் மேம்படுத்தல்கள் எங்கள் வலைத்தளத்திற்கு இல்லாமல் பதிவிறக்கம் நேரடியாக விண்ணப்பத்தை உள்ளே இருந்து நிறுவ முடியும்.

To Download – Click Here

1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்றக்கூடிய மென்பொருள்

பொதுவாக நாம் அதிககொள்ளவு கொண்டகோப்புகளை WinZip, 7-Zip போன்ற மென்பொருட்களின் துணையுடன் தான் கோப்புகளை Compress செய்து பயன்படுத்துவோம். இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும் பத்து மடங்குகுறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாக மாற்றித்(compression) தருகிறது.




மென்பொருளின் பெயர்: KGB Archiver
இம்மென்பொருளானது நம்முடைய கோப்புகளை மிகவிரைவாக,குறைவான அளவுள்ள கோப்புகளாக மாற்றித் தருகிறது. 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்றித்தருகிறது.


இவ்வாறு குறைந்த அளவாக compress செய்து தருவதால் அதிககொள்ளவுகொண்ட Fileகளையும் நாம் எளிதாக பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை ஆதரிக்கிறது.
compression அளவுகளை உங்கள் விருப்படி Very Weak, Low, Normal, Maximum, Highஎன்னும் வகையில் நாம் அமைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருள் நிறுவஉங்கள் கணினியில் 1.5 GHz Processer, குறைந்த பட்சம் 256 MB Ram நிச்சயம்இருக்க வேண்டும்.



குறிப்பு: இம்மென்பொருளைக் கொண்டு compression செய்த File-களை இதே மென்பொருளைக் கொண்டுதான் விரிக்க முடியும். எனவே இம்மென்பொருளானது உங்கள் நண்பர்களிடத்தும் நிச்சயம் இருக்க வேண்டும். இம்மென்பொருளின் மூலம் வீடியோ கோப்புகளை compress செய்யமுடியாது.

மற்ற வகைக் கோப்புகளை எளிதாக Compression செய்து தருகிறது. மற்ற Compression Software-களைக் காட்டிலும், கோப்புகளை குறைந்த அளவிற்கு சுருக்கித் தருவதால் இம்மென்பொருள் உண்மையிலேயே அதிக பயன்தரக்கூடிய ஒன்று. அடிக்கடி அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை பரிமாற்றம்செய்து கொள்ளும் நண்பர்களுக்கு இம்மென்பொருள் உதவும் என்பதில் சந்தேகமில்லை.


http://download.cnet.com/KGB-Archiver/3000-2250_4-10814647.html

கணணி பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பெற


உங்களுக்கு உங்கள் கணணி உதிரிபாகங்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்காது. சிலருக்கு தெரிந்திருக்கலாம். பலருக்கு தெரியாதிருக்கலாம்.

உங்கள் கணணியில் உள்ள மதர்போர்டு, மெமரி, மற்றும் கணணி பற்றிய அனைத்து தகவல்களும் உடனடியாக ஒரே விண்டோவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த மென்பொருளின் பெயர் CPU-Z என்பதாகும். இதன் அளவு மிக குறைந்த அளவு தான்.

இதை உங்கள் கணணியில் தரவிறக்கி கொண்டால் போதும். அதன் பின் அதை ரன் செய்தால் அதில் உங்கள் கணணியின் அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் உங்களுக்கு தெரிவித்து விடும்.

உங்கள் CPU- வை பற்றி தெரிவிக்கும். உங்கள் கணினியின் cache மெமரியின் அளவை காண்பிக்கும். அதுமட்டுமில்லாமல் மதர்போர்டு, ராம் மெமரி மற்றும் கிராபிக்ஸ் பற்றிய அனைத்து அளவுகளையும் இது உங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கிறது.

download link

பென்ரைவை பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் !!

பென்ரைவ் என்பது இப்பொழுது கணணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில்பதியவோ உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த பென்ரைவ்களில் என்ன பிரச்சினை என்றால், இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. USB WRITE PROTECTOR
இந்த மென்பொருள் உங்களுடைய பென்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது.

இதனால் உங்கள் பென்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த பென்ரைவ்களை கண்டறிய முடியவில்லை.

http://www.gaijin.at/dlusbwp.php இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

2. USB FIREWALL
பென்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USB யில் இருந்து கணணிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன்படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணணியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்.

ஏதேனும் வைரஸ் உங்கள் கணணியில் ஊடுருவ முயற்சிக்கும் போது இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது.

http://www.net-studio.org/eng/usb-firewall.html இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

3. PANDA USB VACCINATION TOOL
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணணியில் நிறுவினால் பென்ரைவில் உள்ள autorun.inf கோப்பை முற்றிலுமாக தடைசெய்கிறது.

உங்கள் பென்ரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கப்படுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சோட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

http://download.cnet.com/Panda-USB-Vaccine/3000-2239_4-10909938.html இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

4. USB GUARDIAN
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்பை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.

http://www.usb-guardian.com/ இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

1000 Fonts for free Download..

தினமும் பலவகையான எழுத்துருக்கள் (Fonts ) பல தளங்களில் இலவசமாக கொடுத்தாலும் அதிகாரப்பூர்வமாக நம் பர்சனல் மற்றும் அலுவலகப்பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் வசூலிக்கின்றனர் ஆனால் ஒரு தளம் முற்றிலும் இலவசமாக Fonts -ஐ தறவிரக்கி நம் பர்சனல் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. டிசைனர் மட்டும் இல்லாமல் சாதரணமாக கணினி பயன்படுத்தும் அனைவருமே விரும்பும் ஒன்று என்னவென்றால் அது Fonts என்று சொல்லக்கூடிய எழுத்துருக்கள் தான். அழகான எழுத்துருக்களை தினமும் ஒவ்வொரு அங்கீகாரம் பெறதாதத் தளமாக சென்று தறவிரக்க வேண்டாம். முழுமையான அதிகாரத்துடன் அனைத்துவகையான அழகான எழுத்துருக்களையும் இலவசமாக தறவிரக்க நமக்கு ஒரு தளம் உதவுகிறது.

இணையதள முகவரி : http://www.fontsquirrel.com/

இத்தளத்திற்கு சென்று நாம் அனைத்து வகையான எழுத்துருக்களையும் நொடியில் தறவிரக்கலாம். Comic எழுத்து முதல் Pixel எழுத்துருக்கள் வரை அனைத்துமே தனித்தியாக பிரித்து வகைக்கப்பட்டுள்ளது. தற்போது வெப் டிசைனர்கள் பயன்படுத்தும் Font முதல் DTP யில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள் வரை அனைத்தையும் இலவசமாக இத்தளத்தில் இருந்து தறவிறக்கலாம். குழந்தைகளுக்கான சிறப்பு Fonts முதல் அனைத்து வகையான Fonts Preview உடன் கிடைக்கிறது. நாம் உருவாக்கும் எழுத்துக்கள் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை பார்த்து பிடித்த எழுத்துருக்களை எளிதாக் தறவிரக்கலாம். கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இலவச போட்டோஷாப் மென்பொருளான Gimp-2.6.12 புதிய பதிப்பு டவுன்லோட் செய்ய

போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் போட்டோஷாப் ஆகும் ஆனால் போட்டோஷாப் மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் போட்டோஷாப் மென்பொருளை கிராக் செய்து உபயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் போட்டோஷாப் போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் போட்டோசாப்பில் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் போட்டோஷாப்பில் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்த மென்பொருள் இலவசமாக கொடுப்பது தான் ஆச்சர்யம். இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது.






சிறப்பம்சங்கள்:

இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும்.
TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற இமேஜ் பார்மட்டுகளுக்கு சப்போர்ட் செய்கிறது.
முற்றிலும் இலவசமான மென்பொருள்.
மென்பொருள் இயங்க போட்டோஷாப் போன்று கணினியில் அதிக இடம் எடுத்து கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை.
போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றி கொள்ளலாம்.
Linux, Mac, Windows போன்ற கணினிகளில் இயங்க கூடியது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய - GIMP 2.6.12
இந்த மென்பொருளின் பயனர் கையேடு(Users Manual) டவுன்லோட் செய்ய -English

உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க

இணையத் தளத்தில் பாடல்கள் , படங்கள் மற்றும் பல்வேறு கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு மிக நீண்ட நேரம் எடுகின்றதா ?? இந்தக் குறையை ( FDM ) எனப்படும் free Download Manager மூலம் , வேகமாக , பாதுகாப்பாக , மற்றும் எளிதாக கோப்புகளை தரவிறக்கம் செய்யலாம் .




இதன் சிறப்புகள் .

உங்கள் தரவிறக்கத்தின் வேகத்தை ( Download speed ) 600 % வரை அதிகமாக்குகிறது , மேலும் தரவிறக்கத்தின் போது ஏதேனும் தடை ஏற்பட்டால் , மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்காமல் தடை ஏற்பட்ட இடத்தில் இருந்து மீண்டும் செயல் பட வல்லது .

HTTP/FTP/BitTorrent போன்ற அனைத்திற்கும் ஏற்றது .

யு டுயுப் மற்றும் பிளாஷ் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும் வசதி .

இவ்வாறு பல வசதிகளை கொண்ட இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் .

தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்

உங்கள் ஆன்ட்ராய்ட் போன்களை கணினியில் கையாள இலவச மென்பொருள்

இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில் 90 சதவீதம் ஆன்ட்ராய்ட் வகை போன்களே அதிகமாக உள்ளது. குறைந்த விலை ஏராளமான வசதிகள் லட்சகணக்கான இலவச மென்பொருட்கள் போன்ற காரணங்களால் Android போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. இன்று Android போன்களை கணினியோடு இணைத்து பல பயனுள்ள வசதிகளை அளிக்கும் ஒரு இலவச மென்பொருளை பற்றி பார்க்க போகிறோம்.




SnapPea என்ற இலவச மென்பொருள் மூலம் Android போன்களில் செய்ய கூடிய பல வசதிகளை உங்கள் கணினியின் மூலமாகவே செய்யலாம். இந்த மென்பொருள் மூலம் செய்யகூடிய சில முக்கிய வசதிகளை இங்கு காண்போம்.

சில பயனுள்ள வசதிகள்:


உங்கள் கணினியில் உள்ள வீடியோ, போட்டோ மற்றும் பாடல்களை போனுக்கும், போனில் இருந்து கணினிக்கும் பரிமாறி கொள்ளலாம்.
போனில் உள்ள தொடர்பு எண்களை(Contacts) கணினியில் சேமிக்கலாம்.
லட்சகனக்கனா இலவச மென்பொருட்களை Google Play மற்றும் 1mobile apps தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
கணினி மூலம் மென்பொருட்கள் டவுன்லோட் செய்து கொள்வதால் உங்கள் மொபைல் data plan வீணாகாது.
கணினியில் இருந்தே மொபைலில் உள்ள எந்த எண்ணுக்கும் SMS அனுப்பலாம்.
உங்களின் iTunes library யை Android போனில் import செய்து கொள்ளலாம். இதிலுள்ள மேலும் பல வசதிகளை காண கீழே உள்ள வீடியோவை காணுங்கள்.


மென்பொருளை டவுன்லோட் செய்ய - SnapPea

வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்கம்

வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தமிழ் பாண்ட் டவுன்லோட்




தரவிறக்கம்

பல்வேறு கோப்புகளை எளிதாக scan செய்ய

பொதுவாக அனைவரும் புகைப்படங்கள் , மற்றும் கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கு போடோஷாப்
 ( photoshop) அல்லது( ms paint ) போன்ற மென்பொருட்களையே பயன்படுத்துவர் . குறைவான கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கு இந்த மென்பொருட்கள் போதுமானதே ஆனால் பல் வேறு கோப்புகளை ஒரே நேரத்தில் scan செய்வதற்கு இந்த மென்பொருட்கள் பொருத்தமானது இல்லை ஏன் எனில் ஒவ்வொரு தடவை ஸ்கேன் செய்யும் போதும் அதை உடனே save செய்து விட வேண்டும் .
உதாரணத்திற்கு 50 பக்கங்கள் கொண்ட ஒரு கோப்பை ( document ) ஸ்கேன் செய்ய வேண்டுமெனில் 50 தடவை ஒவ்வொரு பக்கத்தையும் சேமிக்க ( save ) செய்ய வேண்டும் .இவ்வாறு செய்வது சலிப்பையும் ,மற்றும் நேரத்தை விரயமாக்கும் ஓர் செயலாகும் .


இவ்வாறு நேரம் விரயம் ஆகுவதை தவிர்க்கவென்றே அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருளே ( scan to pdf ) ஆகும் .இந்த மென்பொருளின் மூலம் 50 என்ன ஒரே நேரத்தில் 500 பக்கங்களை கூட எளிதாக ஸ்கேன் செய்யலாம் . அதோடு ஸ்கேன் செய்த பக்கங்களை எளிதாக ( .pdf , .tiff , .psd ) போன்ற வடிவத்துக்கு மாற்றிக் கொள்ளலாம் .பல்வேறு ஸ்கேன் மென்பொருட்களை விட குறைந்த அளவான நேரத்திலயே எளிதாக இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் .எந்த ஒரு scanner ஐயும் இந்த மென்பொருள் மூலம் எளிதாக உபயோகப்படுத்தலாம் .அலுவலகம் மற்றும் வீட்டுத்தேவை இரண்டுக்கும் இந்த மென்பொருள் ஏற்றது .நீங்கள் பல்வேறு கோப்பு மற்றும் படங்களை அடிக்கடி ஸ்கேன் செய்பவராக இருந்தால் இந்த மென்பொருள் நிச்சயம் உங்களுக்கே . கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .


தரவிறக்கம்

கணினியில் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை காண

நாம் கணினியில் பல கட்டண மென்பொருட்களை நிறுவி இருப்போம். உதாரணமாக OS, மைக்ரோசாப்ட் ஆபிஸ்,போட்டோசாப் போன்ற மென்பொருட்களை நம்முடைய கணினியில் கட்டாயம் நிறுவி இருப்போம். அதை நிறுவும் பொழுது அதற்க்கான சீரியல் எண்களை கொடுத்து இன்ஸ்டால் செய்து இருப்போம். ஆனால் அந்த சீரியல் எண்களை இப்பொழுது நம்மால் பார்க்க முடியாது. ஒருவேளை அந்த சீரியல் எண்களை நாம் குறித்து வைக்காமல் இருந்தால் கணினியில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டால் திரும்பவும் நிறுவ அந்த சீரியல் எண் மிகவும் அவசியம். இது போன்ற சூழ் நிலையில் நமக்கு உதவத்தான் இந்த சூப்பரான மென்பொருள் உள்ளது.


இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளவும் இதை இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம்.
அந்த மென்பொருளை Extract செய்து பின்னர் அதன் .exe பைலை ஓபன் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.


அடுத்து Search என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Time counter ஓடி கொண்டிருக்கும். முடிந்ததும் ok என்ற பட்டன் வரும் அதை க்ளிக் செய்யவும்.
அவ்வளவு தான் உங்களுடைய கணினி ஸ்கேன் ஆகும். ஸ்கேன் ஆகி முடிந்ததும் உங்கள் கணினியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள் தெரியும்.


இப்படி உங்களுக்கு கணியில் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள் வரும்.
உங்கள் கணினி மட்டுமல்லாது அலுவலகங்களில் உங்கள் கணினியோடு லோக்கல் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கணினியின் சீரியல் எண்களை பார்த்து கொள்ளலாம்.
அதற்க்கு local host என்ற இடத்தில க்ளிக் செய்தால் உங்கள் கணினியோடு இணைந்துள்ள மற்ற கணினியின் சீரியல் எண்களையும் அவர்களின் அனுமதியின்றி பார்த்து கொள்ளலாம்.


HKEY_LOCAL_MACHINE என்ற இடத்தில் மாற்றம் செய்தும் மற்ற கணினிகளின் சீரியல் எண்களை பார்த்து கொள்ளலாம்.
உங்களுடைய நண்பர்களின் கணினிகளில் நிறுவியும் அந்த சீரியல் எண்களை குறித்து வைத்தும் நீங்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த அணைத்து வசதிகளையும் இலவசமாக நமக்கு வழங்குகிறது இந்த மென்பொருள்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய - Licence Crawler1.6.0.182

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews