கணினி ஒன்றை வைத்துக் கொண்டு இயக்குவது நமக்கு மகிழ்ச்சியையும் ,ஏன் சில வேளைகளில் பெருமையையும் தரும் விசயமாகும் . அனால் பிரச்சனை ஏற்படுகையில் ,சிஸ்ரம் கிராஷ் ஆகையில் நாம் கணினி கொடுத்த நிறுவனத்திடம் ,அல்லது ஆண்டு பராமரிப்பினை ஏற்றுக் கொண்ட அமைப்பிடம் ஆலோசனை கேட்டு செயற்பட வேண்டியுள்ளது.
கணினி இயக்கத்திற்கான ஆலோசனை அல்லது தீர்வினைத் தருபவர்கள் கூடுமானவரை நம்மிடம் கணினி இயங்கிய விதம் ,எந்த நிலையில் பிரச்சினை வந்தது அல்லது வருகிறது, போன்ற கூடுதல் தகவல்களை போநோலையே கேட்டு தீர்வு வழங்க முயற்சிப்பார்கள். நம்மால் பல வேளைகளில் அவர்கள் கேட்கும் தகவல்களை உடனே தர இயலாது. அல்லது சரியாக விளக்கம் சொல்ல முடியாமல் தவிப்போம் .எனவே கணினி சிக்கல் குறித்து ,சார்ந்த நிறுவனத்திற்கு தொலைபேசியில் தகவல் தரும் முன் நாம் எப்படித் தயார் செய்து கொள்ள வேண்டும் எனப் பார்ப்போம். இதன் மூலம் நமக்கும் கணினிபராமரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.
- பிரச்சினை குறித்து போன் செய்திடும் முன் ,சிக்கல் குறித்து எவ்வளவு தகவலை கைவசம் வைத்துக்கொள்ள முடியுமோ ,அவ்வளவு தகவல் களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். உங்கள் கணினியின் சீரியல் எண்.இது சி பி யு வின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் சிறிய லேபிளில் இருக்கும் .மேலும் நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன் புரோக்கிராமின் சீரியல் எண்கள் அல்லது புராடக்ட் எண்களும் கைவசம் இருப்பது நல்லது. இவற்றைத் தெரிவிப்பதன் மூலம் ,நிறுவனத்தில் உள்ள டெக்னீசியன்கள் ,பிரச்சனைகளின் தன்மையை எளிதாக உணர்ந்து தீர்வுகளைத் தர இயலும்.விண்டோஸ் ஒப்பரேடிங் சிஸ்ரம் பயன்படுத்துவதாக இருந்தால் ,எந்த சிரம் ,எந்த பதிப்பு என்ற தகவல்களும் தேவைப் படலாம் . நீங்கள் ஏதேனும் வன்பொருள் அல்லது மென்பொருள் தொகுப்புக்களை பயன்படுத்துகையில் பிரச்சனை ஏற்பட்டது என்றால் ,உண்மையான தரவுகளை தரவும் எதையும் மறப்பது சரியல்ல. நீங்கள் பெற்ற எரர் மெசேஜ் என்ன?. இதனை தெளிவாக நீங்கள் தர வேண்டும். பூசி மெழுகுவது போல சொல்லக் கூடாது. எனவே இத்தகைய எரர் மெசேஜ் கிடைக்கையில் அதனை அப்படியே திரையில் வைத்தபடி எழுதி வைக்கவும். அல்லது அதனை பிரின்ட் ஸ்கிரீன் கீ அழுத்தி பட பைலாக அமைத்து கஸ்ரமர் கேர் இமெயில் இருப்பின் அனுப்பலாம். அல்லது அவற்றை அப்படியே படித்து சொல்லலாம். பிரச்சனையைத் தீர்க்க நீங்கலாக என்ன ஸ்ரெப் எடுத்தீர்கள் என்று அவர்களிடம் மறைக்காமல் சொல்லவும்.
- குறைதீர்க்கும் பிரிவிற்கு -போன் செய்யும் முன் அவசரத்தில் படபடப்பில் பேச வேண்டாம். அல்லது நீங்கள் வேறு வேலையில் மும்முரத்தில் இருக்கும் போது பேச வேண்டாம் .எனவே முழுமையாக உங்களால் கவனம் செலுத்தி பேச முடியும் என்றாலே போன் செய்திடவும்.
- எந்த நிலையிலும் எதிர் முனையில் பேசுபவர்களைக் கேலி செய்வதோ அவர்கள் இயலாதவர்கள் என்றோ பேச வேண்டாம். சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் இது போல பேசினால் ,தொலைபேசியை அப்படியே எந்த பதிலும் கூறாமல் வைத்து விடுங்கள் என்று கூறி விடுவார்கள். எனவே எதிர்முனையில் பதில் அளிப்பவர் நாள் முழுதும் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் பணியில் உள்ளவர் எனவே நமக்கு உள்ள பிரச்சனையை நன்கு உணர்ந்து கொள்ளும் சூழ்நிலையில் உள்ளவர் என்ற அடிப்படையில் பேசவும்.
- யார் பேசினார்கள், என்ன பிரச்சனை என்ற விபரங்களையெல்லாம் பதிந்து வைக்குமாறு குறை தீர்க்கும் மையத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆலோசனை தரப்பட்டிருக்கும். மேலும் குறை கூறும் அழைப்பு உங்களிடமிருந்து தானா என்பதை உறுதிப்படுத்த உங்ககள் பெயர் , தொலைபேசி எண் ,இமெயில் முகவரி ஆகியவற்றைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.ஏனென்றால் யார் வேண்டுமானாலும் அவர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லவா?.எனவே இந்த தகவல்களை முழுமையாகக் கூறவும் .
- குறை தீர்க்கும் மையத்தில் இருப்பவர்கள் ,கணினி குறித்து ஒன்றுமே தெரியாதவர்கள் முதல் வல்லுனர்கள் வரையிலானவர்களுடன் தொடர்பு கொள்பவர்களாக இருப்பார்கள் எனவே கணினி குறித்து என்ன தெரியுமோ ,அதனை மட்டும் தெரிவிக்கவும் .எல்லாம் தெரிந்த மாதிரியோ காட்ட முயற்சிக்க வேண்டாம்.
- மையத்தில் உள்ள வல்லுனர்கள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்கவும். அதுதான் எனக்குத் தெரியுமே என்று அறிவாளிக் கொமடிஎல்லாம் தவிர்த்துவிடுங்கள். அவர்கள் சொல்வதை நன்றாகக் கேட்டுக் கொண்டால் ,நிறைய பயனுள்ள தகவல்கள் கிடைக்கும்.
- தேவையற்ற தகவலைக் கேட்டு தொந்தரவு செய்திட வேண்டாம். ஒரு கீ கழன்று விடுவது போல் உள்ளது. இந்த சொப்ட்வயர் டிஸ்கவுண்டில் கிடைக்குமா என்பது போன்ற தகவல்களுக்கெல்லாம் அவர்கள் பதில் கூற மாட்டார்கள்.மேலும் உங்களைப் போல பிரச்சனைக்குள்ளானவர்கள் பலர் அவர்களிடம் வழி கேட்க காத்திருப்பார்கள்.
- உங்களுடன் பேசத் தொடங்கும் நபர் ,முதலில் தன் பெயரைக் குறிப்பிட்டே பேசுவார். அவரின் பெயரை அவரிடமே கூறி ,அது சரியானதா என்று உறுதி செய்து ,பெயரை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மீண்டும் தொடர்பான தகவல் கிடைக்க இது வழி வகுக்கும்.
|