தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, December 6, 2014

பூமி தோன்றியது எப்போது?

தற்போது இந்த பூவுல கில் மனிதர் கள் எண் ணற்ற அதிசயங்கந ளயும், வெற்றிகளையும் கண்டு வருகின் றனர்.முன்பிருந்த காலத்தோடு ஒப்பி டுகையில் தற்போது மனிதர்கள் பல்வித மான முன்னேற்றங்களைக் கண்டு விட்டனர்,கண்டும் கொண்டிருக்கின்றனர். 

இந்த மனிதன் எங்கிருந்து தோன்றினான்?

இந்த பூமி எப்போது தோன்றி யது?

எங்கிருந்து மனிதனுக்கு இவ்வளவு  ஆற்றல் கிடைத்தது என்பது இன்றும்,இவையெல்லாம் நம் சிந்தனைக்கு எட்டாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.இதற்கான தேடல்களும், ஆராய்ச்சிக ளும் பல மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இவை எப்போது தோன்றின என்பதற் கான
விடைகள் இன்னும் சரியாக கணக் கிடப்படவில்லை. இருப்பினும் அறிவியல் ஆய்வாளர்கள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டிருந்த பல ஆய்வுகளின் முடிவின்படி இந்தப் பூவுலகம் எப்போது தோன்றியது என்பது ஓரளவு கணிக்கப்பட்டிருக்கிறது. பூமியில் மனிதனின் தோற்றம், அவன் மொழி யைக் கற்றுக் கொண்ட விதம் பற்றிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.


வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்த உயிரினமும், பயிரினமும் கொண்ட அண்டகோளமானது நாம் வசிக்கும் இந்த பூகோளம். இந்த கோளம் சுற்றிவரும் சூரியன் ஒரு சுய ஒளி விண்மீன். அவ்வாறாக கோடான கோடி விண்மீன்களைக் கொண்டது ஒளிமய மந்தை எனப்படும் "கேலக்ஸி" (Galaxy). இந்த "கேலக்ஸியில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கிரகமானது நம் பூமி.
அறிவியலாளர்கள் பல மூலங்களைப் பயன்படுத்தி பூமி தோன்றிய காலத்தை பல வகையாக கணித்திருக்கின்றனர். பெரிய பாறைகள், பூமியில் விழுந்த விண்கற்கள் ஆகியவற்றைக் கொண்டு பல ஆய்வுகளை நடத்தி, பூமி இப்பொழுதுதான் தோன்றிய காலைத்தைப் பற்றிய சில முடிவுகளை நமக்குக் கொடுத் திருக்கின்றனர்.

பூமி சுமார் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது என்பது விஞ்ஞானி களின் ஒருமித்த கருத்து. பூமி தோன்றிய நாள் முதலாக, பூமியின் தளவடிவம் தொடர்ந்து மாறுபட்டு வந்திருக்கிறது என்று வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பூமியிலிருக்கும் மிக்க முதுமை யான பாறையைக் கொண்டு அறிவியலாளர் கள் ஓர் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர். அந்த ஆய்வின்போது அப்பாறையின் மூலத்தின் கதிரியக்கத் தேய்வை (Radioactive Decay of Elemets) ஆராய்ந்து, பூமியின் வயது 3.8 மில்லியன் என்று கணிக்கிட்டிருக்கிறார்கள்.

ஆனால், பூமியில் விழுந்த மிகப் புராதன விண்கற்களின் (Meteorites) மூலக் கதிரியக்கத் தேய்வை ஆராய்ந்த போது, மீண்டும் சூரியக் குடும் பத்தில் பூமியின் வயது 4.6 மில்லியன் என்று கணித் திருக்கின்றனர். விண்வெளி விஞ்ஞானம் பேரளவில் விருத்தி அடைந்து கொண்டிருக்கும் இந்த மகத்தான யுகத்திலே, வானியல் நிபுணர்கள் பிரபஞ்சத்தின் வயதைக்கூட கணக்கிட பல்வேறு முறைகளையும் ஆய்வுகளையும் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். இருப்பினும் பிரபஞ்சத்தின் உண்மையான வயதை தெரிந்து கொள்ள இன்றும் முடியவில்லை.பூமிக்கடியில் புதைந்திருக்கும் புராதனப் பாறைகளில் உள்ள மூலங்களின் கதிரியக்கத் தேய்வை கணக்கிட்டு பூமியின் வயது 4.6 பில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று அறியப்பட்டது. 

வான்மண்டலத்தில் ஒளிமிக்க விண்மீன்களின் ஒளித்திரட்சியையும் அதன் உஷ்ணத்தையும் பல மாதங்களுக்குப் பதிவு செய்து விண்மீனின் தூரத்தோடு ஒப்பிட்டு பிரபஞ்சத்தின் வயதை 12 பில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டது. இதைத் தவிர, சூரியன் தோற்றுவித்த காலத்தையும் சில ஆய்வுகளின் மூலம் தெளிவு செய்துள்ளனர். சூரிய பரிதியின் பிளாஸ்மா (Plasma) எனப்படும் ஒளிப்பிழம்பின் வெப்பத்தையும், அதன் வாயுக்களையும் கொண்டு செய்த ஓர் ஆய்வில் சூரியன் 10 பில்லியன் வயது கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது.

பூமி தோன்றிய காலத்தைப் பற்றிய ஆய்வுகளின் முடிவுகள், குத்துமதிப்பாக பூமி மேற்குறிப்பிட்ட காலத்தில் தோன்றியிருக்கும் என்றுதான் கூறுகின்றன. ஆனால் மனிதன் எப்போது தோன்றினான், அவனின் மொழி எப்படி தோன்றியது என்பதனைப் பற்றிய ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொள்வதை விடவில்லை. இதற்கும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இறுதியில் இதற்கான பதிலையும் அறிவியலாளர்கள் கணித்தனர். மனிதன் தோன்றிய காலத்தில் அவன் தனது இனத்தோடு தொடர்பு கொள்ள தற்போது இருக்கும் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம், கிரேக்கம், அரபு மொழிகள் அல்லது இதர மொழிகளைப் பயன்படுத்தவில்லை. இவைகளெல்லாம் மனிதன் தோற்றுவித்து பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டவை என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி மனிதர்கள், விலங்கினக் கூட்டத்தில் சேர்ந்த ஒரு இனமே. ஆறாவது அறிவு எனக்கூறப்படும் பகுத்தறிவு கொண் டவன் என்பதே அவனை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டு காட்டுகிறது. விலங்குகள் மனிதர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை.
ஏறக்குறைய மனிதனை ஒட்டிய குணாம்சங்கள் அவைகளுக்கு உண்டு. பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களின் ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

வாய் வழி ஒலி எழுப்பி மற்றவர்களோடு தொடர்பு கொண்ட மனிதன், காலப்போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கலாம் என்பது
தெளிவு. ஆனால் மனிதன் முதலில் சைகைகளையும், உடல் அசைவுகளையும் மூலமாகக் கொண்டு  செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருப்பார்கள் என்பதனை ஆதாரப்பூர்வமாகக் கூறுகின்றனர் நம் அறிவியலாளர்கள்.
 
மனிதர்கள் இயல்பாகவே அதிகமாக அங்க அசைவுகள் சைகைகள் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியவர்கள். மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியது. பிறகு பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்த பின், பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.மேலும் மனிதன் சைகைகளுக்கு வலது கைகளையே அதிகம் பயன்படுத்துகிறான். வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்க மூளையில்தான் என்பதன் மூலம் மனித இனத்தின் மொழி சைகைகளில் உருவாகியது என்பதில் சந்தேகமில்லை.

உங்களது பேஸ்புக்கில் வீடியோ சேட்டிங்கில் பேசி மகிழலாம்.

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும்.இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். 

இதன் மூலம் நம் வேலைகளை எல்லாம் மறந்து நண்பர்களோடு அரட்டையில் மகிழ்கிறோம். இப்பொழுது மேலும் ஒரு படி மேலே சென்று நம் நண்பர்களின் முகத்தை பார்த்து கொண்டே எப்படி அரட்டை அடித்தால் எப்படி
இருக்கும்.
1. அதற்கு முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள்.
2. அடுத்து இந்த லிங்கில் FACING CALL செல்லுங்கள்.
3. வரும் பக்கத்தில் உள்ள Go to App என்ற பட்டனை அழுத்தவும்.
4. அடுத்து உங்களுக்கு வேறு ஒரு பக்கம் ஓபன் ஆகும். அதில் உள்ள Allow என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
5. அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும்.
6. அதன் பின் ஓபன் ஆகும் விண்டோவில் உள்ள Allow என்ற பட்டனை அழுத்திவிடவும்.
7. அவ்வளவு தான் உங்கள் கணக்கில் வீடியோ சாட்டிங் ஆக்டிவேட் செய்யப்பட்டு விட்டது.
8. இவ்வசதியை பயன்படுத்த உங்கள் கணணியில் வெப் கேமரா அல்லது மைக்ரோபோன் வசதி இருக்க வேண்டும்.
9. இதில் உள்ள invite friends என்ற வசதி மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இணைத்து அவர்களோடு வீடியோ சேட்டிங்கில் பேசி மகிழலாம்.

மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 67 கோடி



சென்ற ஏப்ரல் மாதம், ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்திலான, மொபைல்போன் சேவையை பெற்ற வாடிக்கையாளர் எண்ணிக்கை, 65 லட்சம் அதிகரித்துள்ளது.

ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்இதன் மூலம், நாட்டில் இச்சேவையை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 67 கோடியாக உயர்ந்துள்ளது என, இந்திய மொபைல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில், மொபைல் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம். என இருவகை தொழில்நுட்பத்தில், மொபைல் சேவையை வழங்கி வருகின்றன. இதில், ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர் எண்ணிக்கையே சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில், மொபைல் போன் சேவையில் முதலிடத்தில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், மிகவும் அதிகபட்சமாக, 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த மொபைல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 18.33 கோடியாக உயர்ந்துள்ளது.

மொபைல்போன் சேவையில், இரண்டாவது இடத்தில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், அதன் புதிய வாடிக்கையாளர்கள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிடவில்லை.

வோடபோன் இந்தியா மதிப்பீட்டு மாதத்தில், மொபைல் போன் சேவையில், மூன்றாவது இடத்தில் உள்ள, வோடபோன் இந்தியா நிறுவனம், 8 லட்சத்து 20 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 15 கோடியே 13 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதே மாதத்தில், மொபைல் சேவையில், நான்காவது இடம் வகிக்கும், ஐடியா செல்லுலார் நிறுவனம், 14 லட்சம் 90 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டது.


இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 11 கோடியே 42 லட்சமாக உயர்ந்துள்ளது.டெலினார் இந்தியா நிறுவனத்தின், வாடிக்கையாளர் எண்ணிக்கை, 11 லட்சத்து 20 ஆயிரம் உயர்ந்து, 4 கோடியே 36 லட்சமாக அதிகரித்துள்ளது

இணையத்தின் வளர்ச்சி படிகள் - சில ஆச்சரிய தகவல்கள்

நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்ட இணையத்தின் வயது 43.நாற்பது ஆண்டுகளுக்கு முன் இரண்டு கணினிக்கு தகவல் பரிமாற்றம் செய்யத் தொடங்கி
இன்று அபார வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்து உலாவிகளின் செயல்பாடு நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியை பெற்று வேகமாக வளர்ந்து வருகிறது


1969 :
செப்டம்பர் 2-ஆம் தேதி ,கலிபோர்னியா பல்கலைகழகத்தில்இரண்டு கணினிகள் சில தகவல்களை பரிமாறிகொண்டன.இது Arpanet ,ராணுவத்தின் சோதனை இணையமாகும்.

1972:
Ray Tomilinson மின்னஞ்சலை மற்ற கணினிகளுக்கு அனுப்பும்முறையை கண்டுபிடித்தார்.

1973 :
Arpanet மூலம் இங்கிலாந்து மற்றும் நார்வே நாடுகளில்வெற்றிகரமாகசெயல்படுத்தப்பட்டது.

1974 :
Viant Cerf and Bob kahn தகவல் தொடர்பில் ஒரு புரட்சியானTCP உருவாக்கினர்.இதன் மூலந்தான் உண்மையான இணையம்உருவானது.

1983 :
வலைத்தளங்களுக்கு Domain Name System கொண்டு வரப்பட்டது".com".அடுத்த வருடங்களில் ".gov" and ".edu" அறிமுகபடுத்தபட்டது.

1988 :
இணையத்தை தாக்கியது Internet Worm Morris ,ஆயிரக்கணக்கானகணினிகள் சேதமடைந்தன.

1990 :
Tim Berners-Lee World Wide Web (WWW) உருவாக்கினர்.

1994 :
Andreessen மற்றும் குழுவினர் உலகின் முதல் கமர்ஷியல்இணைய உலாவியான Netscape-ஐ உருவாக்கினர்.

1998 :
Larry Page and Sergey Brin கூகுளை உருவாக்கினர் Stanford பல்கலைகழகத்தில்.

1999 :
Napster ஒரு பெரும் புரட்சியை இசை கோப்புகளை பரிமாறுவதிலும்வாங்குவதிலும் ஏற்படுத்தியது.

2000 :
இணைய தளங்கள் அதிகமாக தொடங்கியது.

2004 :
Mark Zuckerberg Facebook-ஐ உருவாக்கினர் Harvard பல்கலைகழகத்தில்.

2005 :
வீடியோ படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் Youtube உருவானது .

2007 :
Apple Iphone-ஐ வெளியிட்டது ,இதன் மூலம் லட்சகனக்கனர்வர்கள்
இணையத்தை உபயோகப்படுத்த தொடங்கினர்.

2008 :
Twitter உதயம்...


2010:
anbuthil.blogspot.comஉதயம்...

2012:
www.anbuthil.com உலகம் முழுவதும் உதயம்...

உலகம் முழுவதும் இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை:


China - 29.8 கோடி (22.4%)
USA - 22.7 கோடி (74.7%)
Japan - 9.4 கோடி (73.8%)
India - 8.1 கோடி (7.1%)

Brazil - 6.8 கோடி (34.3%)

Germany - 5.5 கோடி (67%)

UK - 4.8 கோடி (72%)

France - 4.1 கோடி (66%)

Russia - 3.8 கோடி (27%)

S.Korea - 3.7 கோடி (76%)

Australia - 1.7 கோடி (80.6%)

விண்டோஸ் 8 ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

விண்டோஸ் கீ : தொடக்க நிலையில் உள்ள மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் இறுதியாகப் பயன்படுத்திய அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஆகிய இரண்டையும் இந்த கீ அழுத்துவதன் மூலம் மாற்றி மாற்றிப் பெறலாம்.


விண் கீ + C: சார்ம்ஸ் பாரினைத் (charms bar) தரும்.
விண் கீ +Tab : மெட்ரோ டாஸ்க் பார் கிடைக்கும்.
விண் கீ + I: செட்டிங்ஸ் சார்ம் அணுகலாம்.
விண் கீ + H:ஷேர் சார்ம் கிடைக்கும்.
விண் கீ + K: டிவைசஸ் சார்ம் பெறலாம்.
விண் கீ + Q: அப்ளிகேஷன் தேடலுக்கான சர்ச் திரை கிடைக்கும்.
விண் கீ + F:பைல்களைத் தேடுவதற்கான தேடல் திரை கிடைக்கும்.
விண் கீ + W : செட்டிங்ஸ் மாற்றுவதற்கான தேடல் திரை காட்டப்படும்.
விண் கீ + P : செகண்ட் ஸ்கிரீன் பார் கிடைக்கும்.
விண் கீ + Z: மெட்ரோ இயங்குகையில் அப்ளிகேஷன் பார் பெற
விண் கீ + X:விண்டோஸ் டூல் மெனு பார்க்க
விண் கீ +O:ஸ்கிரீன் இயக்க மாற்றத்தை வரையறை செய்திட
விண் கீ + .: ஸ்கிரீன் பிரித்தலை வலது பக்கமாகக் கொண்டு செல்ல
விண் கீ +Shift + . : ஸ்கிரீன் பிரித்தலை இடது புறமாகக் கொண்டு செல்ல
விண் கீ +V: இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைக் (Toasts/Notifications) கொண்டு வர
விண் கீ +:இயக்கத்தில் இருக்கிற அனைத்து டோஸ்ட்ஸ் மற்றும் அறிவிப்புகளைப் (Toasts/Notifications) இறுதி நிகழ்விலிருந்து கொண்டு வர
விண் கீ + PrtScn: அப்போதைய திரைத் தோற்றத்தினை ஒரு பதிவாக எடுத்து, தானாகவே Pictures folderல் பதிந்து சேமித்து வைக்க. இந்த படங்கள் Screenshot (#) என்ற பெயரில் பைல்களாகப் பதியப்படும். அடைப்புக்குறிகளுக்குள் வரிசை எண் தரப்பட்டிருக்கும்.
விண் கீ + Enter : Narrator இயக்கப்படும்.
விண் கீ + E: கம்ப்யூட்டர் (மை கம்ப்யூட்டர்) போல்டர் திறக்கப்படும்.
விண் கீ + R: ரன் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.
விண் கீ + U :Ease of Access Center திறக்கப்படும்.
விண் கீ + Ctrl + F: Find Computers டயலாக் பாக்ஸ் திறக்கப்டும்.
விண் கீ + Pause/Break: System பேஜ் காட்டப்படும்.
விண் கீ +1..10: டாஸ்க் பாரில் பின் செய்து வைத்துள்ள புரோகிராம்களை, விண் கீ + உடன் தரப்படும் எண்ணுக்கேற்ப வரிசையிலிருந்து காட்டப்படும். அல்லது இயக்கத் தில் இருக்கும் புரோகிராம்களை, டாஸ்க் பாரில் பின் செய்த வரிசைப்படி எடுத்துக் காட்டும்.
விண் கீ + Shift + 1..10: டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம் வரிசையிலிருந்து இதில் தரப்பட்டுள்ள எண்ணுக்கேற்ப, புரோகிராமின் புதிய இயக்கம் ஒன்றைத் திறக்கும்.
விண் கீ + Alt + 1..10:டாஸ்க் பாரில் உள்ள ஜம்ப் லிஸ்ட் பட்டியலில் பின் செய்து வைக்கப்பட்டுள்ள புரோகிராம்களில், கொடுக்கப்படும் எண் படி புரோகிராம் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்கப்படும்.
விண் கீ + B: நோட்டிபிகேஷன் ஏரியாவில் முதல் புரோகிராமைத் தேர்ந்தெடுக்கும். பின்னர் அம்புக் குறிகளை அழுத்தினால் அதற்கேற்ப சுழற்சி முறையில் காட்டும். எந்த புரோகிராம் வேண்டுமோ அது காட்டப்படுகையில் என்டர் தட்ட, அந்த இயக்கம் காட்டப்படும்.
விண் கீ + T: டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்களைச் சுழற்சி முறையில் தொட்டுச் செல்லும்.
விண் கீ + M: இயக்கத்தில் உள்ள அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.
விண் கீ + Shift + M: மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் திரைக்கு வரும்.
விண் கீ + D: டெஸ்க்டாப் காட்டப்படும்/ மறைக்கப்படும் (அதாவது திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் மினிமைஸ் மற்றும் மீள் இயக்கத்திற்குக் கொண்டு வரப்படும்)
விண் கீ + L: கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்.
விண் கீ + Up Arrow: அப்போதைய விண்டோ மேக்ஸிமைஸ் செய்யப்படும்.
விண் கீ + Down Arrow: அப்போதைய விண்டோ மினிமைஸ் செய்யப்படும்/ மீளக் கொண்டு வரப்படும்.
விண் கீ + Home: அப்போதைய விண்டோ தவிர மற்றவை யாவும் மினிமைஸ் செய்யப் படும்.
விண் கீ + Left Arrow: ஸ்கிரீன் இடது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.
விண் கீ + Right Arrow: ஸ்கிரீன் வலது பக்கமாக விண்டோ டைல் செய்யப்படும்.
விண் கீ + Shift + Up Arrow: அப்போதைய விண்டோவினை மேலிருந்து கீழாக விரிக்கும்.
விண் கீ + Left/Right Arrow: அப்போதைய விண்டோவினை ஒரு மானிட்டரிலிருந்து அடுத்த மானிட்டருக்கு நகர்த்தும்.
விண் கீ + F1: Windows Help and Support இயக்கப்படும்.


விண் கீ இணைப்பில்லாத மற்ற ஷார்ட்கட் கீ தொகுப்புகள்
Page Up : முந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சி யைக் காட்டும்
Page Down : பிந்தைய மெட்ரோ ஸ்கிரீன் காட்சியைக் காட்டும்
Esc: அப்ளிகேஷன் இயக்க முடிவு (charm) முடிக்கப்படும்.
Ctrl + Esc: இறுதியாக அணுகிய அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் ஆகியவற்றை அடுத்தடுத்து காட்டும்.

Ctrl + Mouse scroll wheel: மெட்ரோ ஸ்கிரீனில் Semantic Zoom இயக்கத்தினைக் கொண்டு வரும்.

உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற சிறந்த தளம்


அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம். உங்கள் கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றிக் கொள்ளலாம்.கையெழுத்தை FONT டாக மாற்றித் தருகிறது . இது ஒரு ஆன்லைன் சேவையாகும்.


கையெழுத்தைத் திருத்தமாக எழுது! அழகாக எழுது! என்று சின்ன வயதில் ஆசிரியர் எத்தனையோ தடவை அறிவுரை சொன்னார்தான். நான்தான் கேட்கவில்லையே! எனக்குத்தான் கையெழுத்து ஒழுங்காக வராதே என்ற கவலையும் வேண்டாம். அதற்கு நீங்கள் அழகான கையெழுத்தைக் கொண்ட ஒருவரின் உதவியை நாடலாம்.


சரி, இதற்கு எந்த மென்பொருளை நிறுவிக் கொள்வது? எந்த மென்பொருளும் நிறுவ வேண்டாம். உங்களிடம் ஒரு ப்ரிண்டர், ஸ்கேனர் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும்.


கையெழுத்தை பொண்ட் பைலாக மாற்ற முதலில் www.fontcapture.com எனும் இணைய தளத்திற்குப் பிரவேசியுங்கள். அவர்கள் வழங்கும் பொண்ட் டெம்ப்லேட் (template) பைலை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள். இது PDF பைலாகக் கிடைக்கும். அதனை ப்ரிண்ட் செய்து கொள்ளுங்கள்.


அடுத்து அந்த டெம்ப்லேட்டை இணைய தளத்தில் அறிவுறுத்தியிருப்பதன் பிரகாரம் உங்கள் கையெழுத்தால் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த டெம்ப்லேட்டை ஒரு இமேஜ் பைலாக ஸ்கேன் செய்து மறுபடி அதே இணைய தளத்திற்குச் சென்று (upload) அப்லோட் செய்து விடுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்கள் கையெழுத்தைக் கொண்ட ஒரு பொன்ட் பைலாக அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


என்னுடைய கையெழுத்து (தலையெழுத்து மாதிரியே)
மோசமாக அமைந்து விட்டதால் நான் இதனைப் பரீட்சித்துப் பார்க்க வில்லை. நீங்கள் ஒரு முறை முயன்று பாருங்கள்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews