தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Sunday, September 15, 2013

தகவல் முறைமை - 6

முறைமை பகுப்பாய்வு செய்தல் (System Analysis)
முறைமையின் தேவைகள், அதன் மூலம் நிறைவேற்ற எதிர்பாக்கப்படும் கருமங்கள் பற்றி உரிமையாளர், பயனாளர் போன்றோரிடம் கலந்துரையாடி பூரண ஆய்வில் ஈடுபடுதலைக் குறிக்கும்.
இங்கு முறைமையின் தேவைகள் இருவகைப்படும்.
    1.   செயல்சார்ந்த தேவைகள் (Functional Requirement)
    2.   செயல்சாராத தேவைகள் (Non Functional Requirement)
செயல்சார்ந்த தேவைகள் (Functional Requirement) – முறைமையில் பயன்படுத்த உத்தேசிக்கும் செயல்களைக் குறிக்கும். உதாரணமாக வங்கி கொடுக்கல் வாங்கள் முறைமையில் பணம் வைப்பில் இடுதல், மீளப்பெறல், மீதியினை அறிதல், அறிக்கை தயாரித்தல் போன்ற செய்கைகளை குறிக்கும்.
செயல்சாராத தேவைகள் (Non Functional Requirement) – கணினி மயப்படுத்தப்பட்ட முறைமையின் வினைத்திறன், பாதுகாப்பு, நம்பகத்தன்மை, பயனாளர் சுலபமாக பயன்படுத்த தக்க இடை முகம் போன்ற தேவைகளைக் குறிக்கும்.
இவ்வாறான முறைமையின் செயல்சார்ந்த, செயல்சாரா தேவைகள் பற்றிய அறிக்கை முறைமையின் தேவைகள் விபரக்குறிப்பு (System Requirement Specification) என அழைப்பர்.
முறைமைக்கு தேவையான தரவுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நுட்பங்கள் (தரவுத்தளத்தினை திட்டமிடுவதற்கு)
       1.   அறிக்கை கோவைகள் ஆகியவற்றை அவதானித்தல்.
       2.   நேர்காணல்
       3.   வினாக்கொத்து பயன்படுத்துதல்
       4.   அவதானிப்புக்களை மேற்கொள்ளுதல்
       5.   மாதிரிகளை பயன்படுத்துதல்


முறைமை வடிவமைப்பு (System Design)
பயனாளரின் தேவைகள் மற்றும் ஆழமான பகுப்பாய்வு என்பவற்றுக்கு ஏற்ப முறைமை வடிவமைப்பாணது பின்வரும் இரு கட்டங்கலாக நடைபெறுகின்றது.
    1.   ஆரம்பம் அல்லது பொதுவாண வடிவமைப்பு புதிய முறைமையில் உள்ளடங்கவேண்டிய அம்சங்கள் அதாவது உள்ளீடு, செய்முறை, வருவிளைவு என்பன வரையறை செய்யப்படுகின்றது.
    2.   கட்டமைப்பு அல்லது விரிவாண வடிவமைப்புபுதியமுறைமை எழுதப்பட வேண்டிய கணினி மொழி தெரிவு செய்யப்பட்டு பாச்சல்கோட்டுப்படங்கள்(Flow chart), தரவுப்பாச்சல் படங்கள்(Data Flow Diagram – DFD),போலிக்குறிமுறைகள், தரவுத்தளம் என்பன வடிவமைக்கப்படுகின்றது.

முறைமையினை விருத்தி செய்தல் (System Development)
வடிவமைக்கப்பட்ட முறைமைக்கு கணினி நிகழ்ச்சித்திட்டம் எழுதுதல் அதாவது குறிமுறைப்படுத்தல்(Coding) இன்னிலையிலே இடம் பெறுகின்றது. குறிமுறைப்படுத்தல் பகுதி பகுதியாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு மேற்கொள்வதனால்
     1.   முறைமையினை விரைவாக அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.
     2.   முறைமையினை பராமரித்தல் இலகு.
     3.   எதிர்காலத்தில் முறைமையில் மாற்றம் செய்யும் பொழுது அவற்றினை இலகுவாக மேற்கொள்ள முடியும்(விரைவாக இற்றைப்படுத்திக்கொள்ள முடியும்)
குறிப்பு – முறைமைக்காண கணினி மொழியினை தெரிவு செய்யும் பொழுது பின்வரும் விடையங்களை கருத்தில் கொள்ளல் வேண்டும்.
    1.   பிரையோக ஆள்களம் (Application Domain)
    2.   முறைமையின் பரிமாணமும் அதன் கணிப்பீடும்
    3.   முறைமையினை செயல்படுத்துவதற்காக அம்மொழியில் உள்ள வசதிகள்.
    4.   முறைமையினை பராமரிக்க தேவையான வசதிகள்.
இங்கு பிரையோக ஆள்களம் என்பது அது செயல்படுததப்படும் பரப்பினைக்குறிக்கும் அதாவது இணைய வழி முறைமையாயின் JAVA, PHPபோன்ற மொழிகள் தெரிவு செய்யப்படும். வன்பொருள் சார்ந்த முறைமை மென்பொருட்களை உருவாக்கும் பொழுது C, C++ போன்ற மொழிகள் தெரிவு செய்யப்படும்.
முறைமையின் பரிணாமமும் அதன் கணிப்பீடும் என்னும் பொழுது, முறைமையினை நாம் துரிதமாக அமைத்துக்கொள்வதற்கு Visual Basic, Visual Cபோன்ற மொழிகளும், வல்லுனர் முறைமையினை அமைக்கும் பொழுது தர்கத்துக்கான வசதிகள் உடைய Prolog போன்ற மொழிகளும் பயன்படுத்தப்படும்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews