பழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்
இரண்டாம் நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும். ஆனால் எதில் தான் சிக்கல் இல்லை? பதிந்த சிடிக்களை பத்திரமாக வைத்திருப்பது தான் பெரிய தலைவலி. சில நேரம் ஒரே இடத்தில் வைத்திருந்தால் கூட எப்படியாவது பழுதாவதற்கு வாய்ப்புகள் அதிகம் தான். சிடியின் தகவல் எழுதப்பட்ட பகுதியில் ஏதேனும் கோடுகள், சிராய்ப்புகள் (scratches)...