தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, March 13, 2014

உங்கள் பிளாக்கிற்கு என ஒரு Android App இலவசமாக உருவாக்க - AppsGeyser


Android மொபைல்களில் உபயோகிக்க லட்சகணக்கான மென்பொருட்கள்(Apps) உள்ளது. நீங்களும் உங்கள் பிளாக்கிற்கென ஒரு Android மென்பொருளை உருவாக்கி உங்கள் வாசகர்கள் சுலபமாக உங்கள் தளத்தை மொபைலில் படிக்கும் வசதியை அளிக்கலாம். இந்த Android App உருவாக்க அதிகளவிலான தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. அதிக நேரமும் செலவாகாது. அதிக பட்சம் ஐந்து நிமிடத்திற்குள் மென்பொருளை உருவாக்கிவிடலாம். கீழே உள்ள வழிமுறையை தொடருங்கள்.

மென்பொருள் உருவாக்கும் வேலையை சுலபமாக செய்ய appsgeyser என்ற ஒரு தளம் உதவி செய்கிறது. முதலில் இந்த லிங்கில் கிளிக் செய்து Apps உருவாக்கும் பகுதியை ஓபன் செய்து கொள்ளுங்கள். கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள MOBILE WEBSITE என்ற பட்டனை அழுத்தவும்.


உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அதில் உங்களுடைய தளத்தின் URL மற்றும் அங்கு கேட்கப்படும் விவரங்களை கொடுக்க வேண்டும். 

  • மேலே படத்தில் உள்ளது போல விவரங்களை கொடுத்து கீழே உள்ள CREATE என்ற பட்டனை அழுத்தவும். 
  • இதில் icon பகுதியில் டீபால்ட் ஐகானுக்கு பதிவல் உங்களுடைய ஐகானும் தேர்வு செய்து கொள்ளலாம். 
  • CREATE பட்டனை அழுத்தியவுடன் உறுப்பினர் படிவம் ஓபன் ஆகும் அதில் உங்கள் விவரங்களை கொடுத்து உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். அல்லது பேஸ்புக் மூலம் உறுப்பினராகி கொள்ளலாம். 

முடிவில் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும் இப்பொழுது உங்கள் பிலாக்கிர்க்கான மென்பொருள் தயாராகி விட்டது. 



1. TEST YOUR APP - இந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் உருவாக்கிய மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த டவுன்லோ லிங்கை உங்கள் பிளாக்கில் கொடுத்து உங்கள் வாசகர்களுக்கும் பகிரலாம். 

2. DISTRIBUTE- உங்கள் பிளாக்கில் மென்பொருளை பிரபல படுத்த விரும்பினால் இந்த லினகை கிளிக் செய்து Android மார்க்கெட்டில் உங்கள் மென்பொருளை வெளியிடலாம். ஆனால் இது இலவசம் அல்ல குறைந்தது $25 செலவாகும். AppsGeyser தளத்தின் Gallery பகுதியில் உங்கள் மென்பொருளை வெளியிட பணம் தேவையில்லை ஆனால் அவர்கள் உங்கள் மென்பொருளை Approval செய்ய வேண்டும்.

3. MONETIZE - மென்பொருள் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் வழி ஆனால் இதற்கும் அவர்களின் approval கிடைக்க வேண்டும்.

இனி உங்கள் வாசகர்கள் உங்கள் பதிவுகளை சுலபமாக Android மொபைல்களில் படித்து கொள்ளலாம். 

டிஸ்கி: இந்த தளத்தில் தெரியும் உங்கள் தளத்தின் மாதிரியை போலவே மொபைல்களிலும் தெரியாது. குறிப்பாக விளம்பரங்கள் இருந்தால் அவைகள் தவிர்க்கப்படலாம்.

மென்பொருள் இல்லாமல் கைத்தொலைபேசியில் Folder ஐ மறைக்க

உங்கள் கைத்தொலைபேசியில் உள்ள சில படங்கள் அல்லது வேறு ஏதும் ஆவணங்கள் போன்றவற்றை தேவையில்லாதவர்கள் பார்ப்பதை தடுக்கவேண்டுமென எண்ணுகின்றீர்களா? மென்பொருட்கள் எதுவுமின்றி மிக இலகுவான வழி உங்கள் தேடலுக்காக இப்பதிவினூடாக….
இதற்காக நீங்கள் JAVA Applications உள்ள எந்தவொரு கைத்தொலைபேசியையும் பயன்படுத்தலாம்.
கீழ் உள்ள படிமுறையைப் பின்பற்றவும்.

01) நீங்கள் எந்த Folder இல் உள்ள ஆவணங்களை பிறர் கண்களில் இருந்து மறைக்க வேண்டுமென எண்ணுகின்றீர்களோ அந்த Folder தெரிவு செய்யவும்.

02) இப்போ அந்த Folder க்கு உங்களுக்கு விரும்பிய பெயரில் Rename செய்யவும். இதன்போது இறுதியில் “ .jad “ என்றுவருமாறு Rename ஐக் கொடுக்கவும். (உதாரணமாக: Video.jad )

03) இப்போ அதே இடத்தில் (same directory) புதியதொரு Folder ஐ உருவாக்கி அதற்கு அதே பெயரில் ஆனால் பின்னாலே .jar என வருமாறு கொடுக்கவும். (உதாரணமாக: Video.jar )

04) அவ்வளவுந்தான்! உங்கள் தேவையான Folder மறைக்கப்பட்டு புதிதாகத் திறந்த New Folder மட்டும் தென்படும்.

இப்போ உங்கள் மொபைலில் உள்ள பிரத்தியேகமான ஆவணங்கள் பிறர் கண்ணில் படாமல் மறைக்கப்பட்டுவிடும்.

மீண்டும் அந்த ஆவணங்களை பார்க்கவேண்டுமெனின் நீங்கள் இரண்டாவதாக உருவாக்கிய New Folder ஐ (உதாரணமாக: Video.jar ) அழித்திவிடவேண்டியதுதான்.

இனிமேல் என்ன உங்கள் எண்ணம்போல்தான்….????

μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி

இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

Torrent ஆனது peer to peer முறையில் கோப்புக்களைப் பரிமாறும் ஓர் வழிமுறையாகும்.

இம் முறையில் கோப்புகளை தரவிறக்குவதற்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் μTorrent ஆனது அனைவராலும் பாவிக்கப்படுகின்ற ஒரு இலவச மென்பொருளாகும்.
 
இம் மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் μTorrent
மென்பொருளை கூடிய வினைத்திறனுடன் பயன்படுத்த முடியும். அது சிறிது கடினமான வேலை என்பதால் μTorrent
 
இன் வினைத்திறனைக் கூட்டக்கூடிய சில மென்பொருட்கள் உள்ளன. இதன் முலம்
 
Download பண்ணும் வேகத்தினையும் upload பண்ணும் வேகத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்

அவ்வாறான 2 மென்பொருட்கள் இங்கு தரப்பட்டுள்ளது அவற்றில் ஏதாவது ஒன்றை
 
Install பண்ணி Accellerate என்ற Button ஐ click பண்ணுவதன் மூலம் μTorrent மென்பொருளின் தரவிறக்க வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

எச்சரிக்கை !! Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள் – தயவுசெய்து படியுங்கள்

#‎எச்சரிக்கை :- Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு Contact வடிவில் வரும்.
இதனை நீங்கள் Contact ஆக சேமித்துவிட வேண்டாம். மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும்.

அப்படி என்னதான் செய்கிறது இத்தீய செய்நிரல்?

priyanka எச்சரிக்கை !! Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள்   தயவுசெய்து படியுங்கள்
இதனை நீங்கள் சேமித்துவிட்டால் உங்கள் Contact இல் சேமித்திருக்கும் அனைத்து இலக்கங்களையும் Priyanka என மாற்றிவிடுகின்றது.

தீர்வு தான் என்ன?

Priyanka என்றோ அல்லது வேறு சந்தேகத்துக் கிடமாகவோ வரும் Contact அல்லது கோப்புக்களை சேமிக்காதீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவ்வாறு சேமித்திருந்தால் Settings இல் இருக்கும் Application Manager ஊடாக சென்று WhatsApp Application ஐ தெரிவு செய்து Force stop என்பதனை சுட்டிய பின் Clear Data என்பதனை சுட்டுங்கள் அவ்வளவு தான்.
எது எப்படியோ உங்களது அனுமதியின்றி இதனால் தன்னைத்தானே சேமித்துகொள்ள முடியாது எனவே சற்று அவதானத்துடன் இருப்பதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்திடலாம்.

10 நிமிடங்களில் உங்கள் பாஸ் வோர்ட்டை திருடலாம். எப்படி?

password

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய பாதுகாப்பை தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நம்பர்களைப் பயன்படுத்துகிறோம்.

நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும். நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான்.

உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும். பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எழுத்துக்களில் abc யும், எண்களில் 123456 ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாக பயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6 இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக 44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.

அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?

இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.

6 எழுத்துக்கள் சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 10மணி நேரம்+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்.

7 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்+ பெரிய எழுத்துடன்(Upper Case) : 23 நாட்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்.

8 எழுத்துக்கள் – சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்+ எண்கள், குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

9 எழுத்துக்கள் – சிறிய எழுத்துக்கள் (Lower Case): 4 மாதங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்+ எண்கள் குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்

உங்களது சொந்த தகவல்கள் இணையத்தில் பரவியிருப்பதால் கவலையா? இணையத்திலிருந்து ஒழிந்துகொள்வது எப்படி எனத் தெரிந்துகொள்வோம்!

இணையத்தளத்தில் உங்களது சொந்த தகல்களை கொடுத்துவிட்டு அதனால் ஏற்படுகின்ற பிரச்சினைகளால் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களா?
உங்களுக்காவே ஒரு இணையத்தள நிறுவனம் பெரும் கைங்கரியம் ஒன்றைச் செய்துள்ளது.
இன்று எம்மில் பலரின் உண்மையான சொந்தத் தகவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. தனி மனித தரவுகளை உளவு பார்ப்பதற்கு இவை துணைபோகின்றன. இது பெரும் அசௌகரிகத்தை ஏற்படுத்துகின்றது.
தனி மனித தகவல் திருட்டுக்காகவே இன்று பல இணையத்தளங்கள் உலவுகின்றன.
இதனால் தற்போது பலருக்கும் தாங்கள் தரவேற்றிய சொந்த தகல்களை நீக்கி இணையத்திலிருந்து ஒழிந்திருக்க விரும்புகின்றனர்.
இந்நிலையில் எவ்வாறு இணையத்திலிருந்து ஒழிந்துகொள்வது என ‘WhoIsHostigThis’ என்ற இணையத்தளம் 9 படிமுறை வழிகளைக் கூறியுள்ளது.
1. முதன்மையான சமூக வலைத்தளங்களை செயலிழக்கச் செய்தல் – பேஸ்புக், டுவிட்டர், லிங்ட்இன், கூகுள்பிளஸ்

2. வேறு ஏதாவது உங்கள் சமூக வலைத்தள கணக்குகளை மறந்துபோயிருக்க வாய்ப்புண்டு அதனை தேடி செயலிழக்கச் செய்தல் – மைஸ்பேஸ், பெபோ என பல கணக்குகள்
 
3. செயலிழகச்செய்ய முடியாத கணக்குகளில் பெயர் உள்ளிட்ட பிழையான தரவுகளைத் தரவேற்றம் செய்தல்.
 
4. சந்தாதார ஈ-மெய்லகள் அனைத்தையும் நிறுத்துதல் – நியூஸ்லெட்டர், விளம்பரங்கள், ப்ரொமோஷன்ஸ் போன்றவற்றை அன்சப்ஸ்க்ரைப் செய்தல்

5. தேடு பொறிகளில் உங்களுடன் தொடர்புடைய தகவல்களை நீக்குதல் – தேடுபொறிகளிடம் (Search Engines) இதற்கான வேண்டுகோளை விடுக்க முடியும். கூகுளில் இதற்கான டூல் உள்ளது.

6. இணையத்தளங்களிலுள்ள தகவல்களை குறித்த இணையத்தளங்களின் இயக்குநர்களிடம் கேட்டு அகற்றலாம். இதனை இணைய இயக்குநர்களே மேற்கொள்ள முடியும். இது சற்றே விவாதத்துக்குரியதாக அமையலாம்.

7. தரவுகளை விற்பனை செய்யும் இணைய நிறுவனங்களிடம் உங்களது தரவுகள் இருக்கும் பட்சத்தில் அதனை அவர்களிடத்தில் அழிக்கமாறு கேட்க வேண்டும்.

8. தொலைபேசி தரவுப் புத்தகம் மற்றும் இணைய தரவுக் கோப்பிலிருந்து உங்களது தரவுளை நீக்க கோருதல்.

9. உங்களது ஈ-மெய்ல் தேவைகள் அனைத்தும் முடிந்தவுடன் உங்களது ஈ-மெய்ல் கணக்குகள் அனைத்தையும் மூடுதல்.

மென்பொருட்களை எவ்வாறு கிரக்கிங்(Cracking) செய்வது எனப் பார்ப்போமா?

வர்த்தக நோக்கம் கொண்ட பரிட்சார்த்த(Trial) மென்பொருட்களை கிரக்கிங்(Cracking) செய்வதன் மூலம் நாம் அதன் முழு பயன்பாட்டினையும் பெறலாம். இன்று அதிகமாக பெரும்பாலானோர் வின்டோஸ் தொடக்கம் அடோப் தயாரிப்புக்கள் வரை கிரக்கிங் செய்யப்பட்டவற்றையே இலவசமாக உபயோகிக்கின்றனர்.
 
நாம் இன்றைய வீடியோவில் எவ்வாறு கிரக்கிங் செய்வதென பார்ப்போம். இதற்கான மென்பொருட்கள்(hiew32,w32dsm) கிடைக்கப் பெறுவது அறிது. தேவைப்படின் தொடர்பு கொள்ளவும்.

வீடியோவினை பதிவிறக்க

Download

 

உங்களது கணணியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை மற்றவர்களிடமிருந்து எளிதில் மறைக்கலாம்.

உங்களது கணணியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை மற்றவர்களிடமிருந்து எளிதில் மறைக்கலாம்.
இச்செயலை மேற்கொள்ள பல்வேறு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை தேர்ட் பார்ட்டி புரோகிராம் என அழைக்கிறார்கள். இவற்றைப் பயன்படுத்துவது நூறு சதவிகிதம் பாதுகாப்பு எனச் சொல்ல முடியாது.
எனவே விண்டோஸ் இயக்கம் தரும் பாதுகா
ப்பு வழியை இங்கு காணலாம். இதற்கு கீழ்க்காணும் வழிகளை பின்பற்ற வேண்டும்
.
1. முதலில் உங்கள் கணணியில் நீங்கள் Administratorஆக லொகின் செய்திருக்க வேண்டும்.
2. இனிமேல் மறைத்து வைக்க வேண்டிய தகவல் உள்ள கோப்புகள் அனைத்தையும் ஒரு புதிய கோப்பறையில் போட வேண்டும். எடுத்துக்காட்டாக  D ட்ரைவில் Data என ஒரு கோப்பறையை உருவாக்கலாம்.
3. அதன் பின் Start பட்டனை அழுத்தி ரன் பாக்ஸில் CMD என டைப் செய்திடவும். பின் Ok அழுத்த உங்களுக்கு டாஸ் இயக்க கட்டளைப் புள்ளி(command prompt) கிடைக்கும்.
4. இங்கு நீங்கள் மறைத்து வைக்க வேண்டிய கோப்பறையின், அதற்கான பாத் உடன் பின்வருமாறு டைப் செய்திட வேண்டும். உதாரணமாக attrib+s+h D:Data என இருக்க வேண்டும். இதன்பின் உங்கள் கோப்பறை மறைக்கப்படும். உடனே நீங்கள் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து சோதித்துக் கொள்ளலாம்.
மறைத்து வைத்துள்ள கோப்பறைகள் என்றாவது ஒருநாள் அல்லது ஒருநேரம் இதனை வெளியே தெரியும் படி வைக்க எண்ணலாம் அல்லது மேலும் சில கோப்புகளை இதன் பின் மறைத்து வைக்க எண்ணி இந்த கோப்பறையில் போட்டு வைக்க திட்டமிடலாம். அப்போது attrib s h D:Data என டைப் செய்திட வேண்டும்.

உங்கள் Mobile Phoneல் இருந்து Computerயை இயங்க வைப்பது எப்படி?


Remote Control,computer,Android deviceஅநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இதை இலவசமாக உங்கள் Android போனுக்கும் பயன்படுத்த இயலும். இந்த இந்த Application மூலம் உங்கள் கணினியில் Team Viewer இருந்தால் அதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் Android ஃபோனை பயன்படுத்தி Control செய்யலாம்.

இதன் மூலம் உங்கள் கணினியில் ஆன்டிராய்ட் போன் பயன்படுத்தி, உங்களுக்கு தேவையான வேலைகளை செய்து கொள்ள முடியும். கணினியில் வரும் File Transfer வசதி மட்டும் அலைபேசியில் இல்லை.

Online ல் இருக்கும் Team Viewer நண்பர்களை காண இயலும். விண்டோஸ், லினக்ஸ், மேக் என்று அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்க முடியும்.

Keyboard பயன்படுத்தும் வசதியை மிக எளிதாக வழங்கி உள்ளது. இதன் மூலம் கணினியில் உள்ள Keyboard தரும் வசதிகளை நீங்கள் இதிலேயே செய்யலாம்.

left click, right click, drag & drop, scroll wheel, zoom போன்ற அனைத்தும் உள்ளது. இதனால் உங்கள் வேலை மிகவும் எளிதாகிறது, அதே சமயத்தில் எந்த இடத்தில் இருந்தும் உங்கள் கணினியை இயக்க முடிகிறது.

Team Viewer பற்றி அறிந்தவர்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒன்று இது. முக்கியமாக உங்கள் கணினியில் Team Viewer இருக்க வேண்டும்.

இதை தரவிறக்கம் செய்ய...
https://play.google.com/store/apps/details?id=com.teamviewer.teamviewer.market.mobile

கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு

கணனியில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான கோப்புக்கள் தவறுதலாக அழிந்து விடுவதனால் சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
எனினும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் கைகொடுப்பதற்காக பல்வேறு Recovery மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் சொற்ப அளவே இலவசமாகக் கிடைக்கக்கூடியதாக இருப்பதுடன் அவ்வாறு இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்கள் துல்லியமாக கோப்புக்களை மீட்டுத்தரும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.
ஆனால் uFlysoft இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்றதுடன் jpeg, png, gif, bmp, tiff, psd, tga, eps போன்ற ஏராளமான புகைப்படக் கோப்பு வகைகள் உட்பட avi, flv, mp4, mov, wmv, 3pg, mpg போன்ற வீடியோ கோப்புக்கள் மற்றும் mp3, wma, wav, ogg, flac போன்ற ஆடியோக் கோப்புக்களையும் துல்லியமாக மீட்டுத்தருகின்றது.

Rs 2100 மதிப்புள்ள Aoao Video Watermark + Crack Full Version இலவசமாக டவுன்லோட் செய்ய


                                     

நண்பர்களே..!இன்றையப் பதிவில் ஒரு அருமையான வீடியோ எடிட்டிங் மென்பொருளைப் பற்றிப் பார்ப்போம்.

      null

Aoao Video Watermark எனும் மென்பொருள்மூலம் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வீடியோகும் அழகிய Watermark இனை இட்டுக்கொள்ள முடியும். இன்னும் பல அம்சங்களை கொண்ட இந்த மென்பொருளை  டவுன்லோட்செய்வதற்கு


      
                     
                                       

               RAR PASSWORD:  99likes.blogspot.com 

எப்படி Crack மென்பொருளை Installing செய்து பயன் படுத்துவது ? வாங்க வீடியோ பாக்கலாம் .

         


Internet Download Manager 6.17+Path Full Version இலவசமாக டவுன்லோட் செய்ய

                                         

 இணையத்தில் ஆயிரக்கணக்கான காசுகொடுத்து வாங்கும் மென்பொருட்கள் இருப்பினும் ஒரு சில மென்பொருட்கள் தான் பெரும்பாலானவர்களின் மனதை கவர்ந்ததுடன் பயனுள்ளதாகவும் உள்ளது.  அந்த வரிசையில் இன்று Internet Download Manager .


இந்த மென்பொருள்  மூலம் இணையத்தில் நாம் டவுன்லோட் செய்யும் பைல் எந்த வகையை இருத்தலும் வேகமாக  டவுன்லோட் செய்யலாம். இன்னும் பல அம்சங்களை கொண்ட இந்த மென்பொருளை  டவுன்லோட்செய்வதற்கு


      
                     
                                       

               RAR PASSWORD:  99likes.blogspot.com

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews