தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, March 13, 2014

எச்சரிக்கை !! Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள் – தயவுசெய்து படியுங்கள்

#‎எச்சரிக்கை :- Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு ஒரு Contact வடிவில் வரும்.
இதனை நீங்கள் Contact ஆக சேமித்துவிட வேண்டாம். மீறி சேமித்து விட்டால் இது உங்கள் மொபைலில் தனது கை வரிசையை காட்ட ஆரம்பித்து விடும்.

அப்படி என்னதான் செய்கிறது இத்தீய செய்நிரல்?

priyanka எச்சரிக்கை !! Priyanka இடம் ஏமாந்து விடாதீர்கள்   தயவுசெய்து படியுங்கள்
இதனை நீங்கள் சேமித்துவிட்டால் உங்கள் Contact இல் சேமித்திருக்கும் அனைத்து இலக்கங்களையும் Priyanka என மாற்றிவிடுகின்றது.

தீர்வு தான் என்ன?

Priyanka என்றோ அல்லது வேறு சந்தேகத்துக் கிடமாகவோ வரும் Contact அல்லது கோப்புக்களை சேமிக்காதீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவ்வாறு சேமித்திருந்தால் Settings இல் இருக்கும் Application Manager ஊடாக சென்று WhatsApp Application ஐ தெரிவு செய்து Force stop என்பதனை சுட்டிய பின் Clear Data என்பதனை சுட்டுங்கள் அவ்வளவு தான்.
எது எப்படியோ உங்களது அனுமதியின்றி இதனால் தன்னைத்தானே சேமித்துகொள்ள முடியாது எனவே சற்று அவதானத்துடன் இருப்பதன் மூலம் உங்களை நீங்கள் பாதுகாத்திடலாம்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews