தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, November 15, 2014

கூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன?

கூகிள் நிறுவனம் தனது Google Docs சேவையினை மேம்படுத்தி கூகிள் ட்ரைவ் (Google Drive) என்னும் புதிய சேவையினை தொடங்கியுள்ளது. இது நமது கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்க உதவும் மேக சேமிப்பு சேவையாகும்(Cloud storage service).

கூகிள் ட்ரைவ் (Google Drive) என்றால் என்ன?

நம்முடைய கணினிகளில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் என பல்வேறு கோப்புகளை சேமித்து வைத்திருப்போம். தேவைப்படும் போது அதனை பார்ப்போம். ஆனால் வெளியிடங்களுக்கோ, வெளியூர்களுக்கோ சென்றால் அவற்றை பார்க்க முடியாது. லேப்டாப், மொபைல்களில் உள்ளவற்றை மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும். அதற்கு தீர்வாக வந்தது தான் மேகக் கணிமை (Cloud Computing) தொழில்நுட்பம். கூகிள் ட்ரைவ் சேவையும் இந்த தொழில்நுட்பத்தைத் தான் பயன்படுத்துகிறது.

இந்த தொழில்நுட்பம் மூலம் நம்முடைய கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்கலாம். மேலும் நாம் எங்கு சென்றாலும் அவற்றை அணுக முடியும். உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் இருக்கும் போது ஒரு வீடியோவை கூகிள் டிரைவில் பதிவேற்றம் செய்கிறீர்கள். பிறகு வெளியூருக்கு செல்லும்போது கூகிள் டிரைவ் மூலம் உங்கள் மொபைல்களிலோ, அல்லது கணினிகளிலோ அதனை பார்த்துக் கொள்ளலாம்.

இந்த Cloud Storage சேவையினை Apple, Box.net, Dropbox, Microsoft என பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகிறது. தற்போது அந்த பட்டியலில் கூகிளும் சேர்ந்துள்ளது.

Google Drive என்பது கணினி மற்றும் மொபைல்களுக்கான மென்பொருளாகும். தற்போது ஒவ்வொரு பயனாளர்களுக்கும் 5GB சேமிப்பகத்தை இலவசமாக தருகிறது. அதற்கு மேல வேண்டுமென்றால் பணம் கட்டி பெற்றுக் கொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்:

கூகிள் ட்ரைவ் மூலமாக தனியாகவோ, நண்பர்களுடன் சேர்ந்தோ புதிய ஆவணங்களை உருவாக்கலாம். அதனை மற்றவர்களுடன் பகிரலாம்.

ஃபைல்களை நேரடியாக கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம்.

HD Video, Photoshop கோப்புகளை அந்தந்த மென்பொருள்கள் இல்லாமலேயே திறந்து பார்க்கலாம்.

கூகிள் ட்ரைவ் மூலமாகவே பல்வேறு மென்பொருள்களை பயன்படுத்தலாம்.


இன்னும் பல்வேறு வசதிகள் இருக்கின்றன. எப்போதும் போலவே தற்போதும் இந்த வசதியை சிலருக்கு மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு கிடைத்துள்ளதா? என்பதை பார்க்கhttps://drive.google.com/ என்ற முகவரிக்கு சென்று கூகிள் கணக்கு மூலம் உள்நுழையவும்.

Get started with 5GB என்று இருந்தால் கிடைத்துவிட்டது என்று அர்த்தம். அதனை கிளிக் செய்து கணினிக்கான மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். Notify Me என்று இருந்தால் இன்னும் உங்களுக்கு ஆக்டிவேட் ஆகவில்லை என்று அர்த்தம். அதனை கிளிக் செய்தால் உங்கள் கணக்கிற்கு கூகிள் ட்ரைவ் கிடைத்ததும் மின்னஞ்சல் அனுப்புவார்கள்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews