Youtube இல் தடைசெய்யப்பட்ட வீடியோக்களை பார்ப்பது எப்படி?
தினமும்
மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்படும் முதல்தர Video Sharing தளம்
என்றால் அது Youtube தான். கணக்கிலடங்காத வீடியோக்கள் இந்த தளத்தில் மலைபோல
குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதில் அனைத்து வீடியோக்களையும் எல்லோராலும்
பார்க்கமுடியுமா என்றால், இல்லை என்பதே பதில். இதில் இரண்டுவகையான
வீடீயோக்கள் அனைத்து மக்களாலும் பார்க்கமுடியாது இருக்கும்.
- Private Videos
- Country Blocked Videos
Youtube இல் நீங்கள் சில வீடியோக்களை பார்க்கும்போது “The Uploader has not
made this video available in your country” என்ற தகவல் வந்திருக்கும்.
இதற்கான காரணம் அந்த வீடியோவை Upload செய்தவர் அதை குறிப்பிட்ட சில
நாடுகளில் மாத்திரமே பார்க்கக்கூடியவாறு செய்திருப்பார். அந்த நாடுகளை தவிர
வேறு நாடுகளில் இருப்பவர்கள் அவ் வீடியோவை பார்க்கமுடியாது.
ஏன் Block செய்கிறார்கள் ?
சில வீடியோக்கள் குறிப்பிட்ட சில நாடுகளிலேயே ஒளிபரப்புவதற்கு
அனுமதியளிக்கப்பட்டிருக்கும் ( Copyright ). அவ்வாறு ஒளிபரப்ப அனுமதி
இல்லாத நாடுகளில் இவ்வாறு பார்ப்பதற்கு தடை செய்யப்படுகிறது. உதாரணமாக BBC
யின் “Stop Calling it a Honeymoon! - Gavin and Stacey - BBC Three”
என்ற வீடியோவை அவர்களது நாட்டில் மாத்திரம் ஒளிபரப்புவதற்கான அனுமதியை BBC
வழங்கியுள்ளது. ஏனைய நாடுகளில் இந்த வீடியோவை பார்க்கமுடியாது.
இப்படியான வீடியோக்களை பார்ப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது வழி
மிகவும் இலகுவானது. அதாவது அந்த வீடியோவிற்குரிய URL இல் சிறிய மாற்றத்தை
செய்யவேண்டும். உதாரணமாக வீடியோவிற்கான URL கீழ்கண்டவாறு இருக்கும்.
http://www.youtube.com/watch?v=F4P3j8dh2ro
இதில் watch?v= என்பதை v/ என Replace செய்யவேண்டும். Replace செய்தபின்னர் URL கீழ்க்கணடவாறு இருக்கும்
http://www.youtube.com/v/F4P3j8dh2ro
இப்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் உங்களால் தடை செய்யப்பட்ட வீடியோக்களை பார்க்கக்கூடியதாக இருக்கும்.
இரண்டாவது வழி, இதற்கான Add - on ஒன்றை உங்கள் இணைய உலாவியில் நிறுவிக்கொள்வது. Youtube Unblocker என்னும்
இந்த Add - on ஐ நிறுவிக்கொண்டால் அது Automatic ஆக தடைசெய்யப்பட்ட
வீடியோக்களை Unblock செய்கிறது. Google Chrome, Firefox, Opera, Safari
போன்ற இணைய உலவிகளில் இந்த Add - On ஐ நிறுவிக்கொள்ளலாம்.
0 comments:
Post a Comment