தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, July 9, 2013

பிரதான கணனி நினைவகம் - 1


கணனி நினைவகம் என்னும் போது எமக்கு நினைவில் வருவது Hard Disk, CD, DVD போன்ற துனை நினைவங்கள் ஆகும். எனினும் கணனியில் பலதரப்பட்ட நினைவகங்கள் பயன்பாட்டில் உள்ளன
1. நிலையற்ற நினைவகம் (Volatile Memory)
மேலே கூறப்பட்ட துனை நினைவகங்கள் மின் இணைப்பு தூண்டிக்கப்படும்போதும் அதில் உள்ள தரவுகள் அழிவுற மாட்டாது இவை நிலையான நினைவகங்கள் ஆகும்(Non Volatile Memory).  நிலையற்ற நினைவகங்களில் மின் இணைப்பு தூண்டிக்கப்படும்போதும் அதில் உள்ள தரவுகள் அழிந்து விடும் இவ்வாறான நினைவகங்கள் நிலையற்ற நினைவகங்கள்(Volatile Memory) என அழைப்பர். கீழ்கானும் நினைவகங்கள் இவ்வகையினை சேரும்
1. எழுமாறு அணுகல் நினைவகம் (Random Access Memory - RAM)
2. பதிவகங்கள் ( Register)
3. பதுக்கு நினைவகம் ( Cash memory)


எழுமாறு அணுகல் நினைவகம் (Random Access Memory - RAM)
இவ் நினைவகத்தினை கணினியின் பிரதான நினைவகம்(Main memory) என அழைப்பர்.  கணினியின் மத்திய செயற்பாட்டு அலகிற்கு(Central Processing Unit – CPU) எதாவது ஒரு செயற்பாட்டை செய்வதற்கு தேவையான தரவுகளை அதாவது முறமை மென்பொருள், பிரையோக மென்பொருள், மற்றும் ஏனைய தரவுகளை களஞ்சியப்படுத்தி வைப்பது இவ் நினைவகம் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் செயற்பாட்டு அலகிற்கு இதில் உள்ளவகைகளை நேரடியாக பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளமயாகும். இதன் பிரவேச காலம் மிகக்குறைவு ஆகையாள் செயற்பாடுகளை மிகவும் வேகமாக செய்ய முடியும்.
இன் நினைவகத்தின் எதாவது ஒரு இடத்தில் இருந்து தரவுகளை CPUபெற்றுக்கெள்வதனால் இதற்கு ஒரு ஒழுங்குமுறையொன்று தேவையில்லை. இதனால் இன்னினைவகத்ததை எழுமாறு அணுகல் நினைவகம் என அழைப்பர்.
இவ் எழுமாறு அணுகல் நினைவகங்கள் இருவகைப்படும்
1. இயக்கவியல் எழுமாறு அணுகல் நினைவகம் (DRAM)
2. நியைியல் எழுமாறு அணுகல் நினைவகம் (SRAM)
இயக்கவியல் எழுமாறு அணுகல் நினைவகம் (DRAM)
நவீன கணினியில் காணப்படும் நினைவக வகை அசைவு எழுமாறு அனுகல் நினைவகம் ஆகும்.( Eg DDR1, DDR2, DDR3 போன்றன – Dynamic Data RAM) இவ் நினைவக கலன்களில் வைக்கப்பட்டு இருக்கும் தரவுகள் செக்கனுக்கு மில்லியன் அளவு மின்துடிப்புக்களை அனுப்பி மீண்டும் மீண்டும் புத்துனர்வூட்டும்.


 Dynamic Data RAM
நியைியல் எழுமாறு அணுகல் நினைவகம் (SRAM)
இவ் நினைவக கலன்களில் வைக்கப்பட்டு இருக்கும் தரவுகள் அடிக்கடி புத்துனர்வு ஊட்டப்படமாட்டாது. இதனால் இதில் உள்ள தரவுகள் மேல் இன்னும்மொரு தரவு எழுதப்படும்வரை அல்லது மின் இணைப்பு தூண்டிக்கப்படும்வரை தரவகள் நிலையாக இருக்கும். அத்துடன் இவ் நினைவக சிப்கள் மெல்லியனவாகவும், அசைவு எழுமாறு அனுகல் நினைவகத்தின விட வேகம் குறைவானதாகவும் காணப்பட்டது.

Statics Data RAM

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews