Youtube மூலம் Adsense கணக்கு உருவாக்குவது எப்படி?
சில மாதங்களுக்கு முன்பு Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்றொரு
பதிவை எழுதி இருந்தேன். இதில் பலருக்கு இருக்கும் சந்தேகம் எப்படி Adsense
கணக்கை உருவாக்குவது என்று. இன்று Youtube மூலம் எப்படி Adsense கணக்கை
உருவாக்குவது என்று பார்ப்போம்.
Adsense கணக்கை உருவாக்கும் முன் நீங்கள் உங்கள் வீடியோக்களை Monetize செய்ய வேண்டும்.
1. முதலில் உங்கள் Video Manager பகுதியில் இருந்து Settings என்பதை கிளிக்
செய்யுங்கள். வரும் பகுதியில் CHANNEL SETTINGS என்பதில்
உள்ள Monetization என்பதை கிளிக் செய்யுங்கள்.
2. இப்போது கீழே உள்ளது போல உங்கள் Youtube பக்கம் இருக்கும். அதில் உள்ள
Monetize Videos என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் Pop-up
விண்டோவில் Overlay in-video ads, TrueView in-stream ads என்பதை மட்டும்
தெரிவு செய்து Monetize கொடுங்கள்.
3. இப்போது உங்கள் Video Manager பகுதியில் வீடியோக்களில் பச்சை நிற $
Symbol ஒன்று தோன்றி Monetize ஆகி இருக்கும், அல்லது Under Review என்று
இருக்கும்.
4. குறைந்த பட்சம் ஒரு வீடியோ Monetize என்று வரும் வரை காத்திருங்கள்.
அதன் பின் மீண்டும் Settings >> Monetization செல்லுங்கள். அதில்
"How will i be paid" என்பதை கிளிக் செய்யுங்கள், பின் "associate an
AdSense account" என்ற லிங்க் மீது கிளிக் செய்யுங்கள்.
5. அடுத்த பக்கத்தில் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள்
Adsense Sign up பக்கத்துக்கு வந்து விடுவீர்கள். இதில் நீங்கள் உங்கள்
மின்னஞ்சல் முகவரி மூலம் Adsense கணக்கை உருவாக்கலாம்.
6. இனி நீங்கள் Adsense கணக்கை உருவாக்கி விடலாம்.
7. இந்த Adsense கணக்கு Hosted Adsense Account என்று இருக்கும். Youtube -
இல் உள்ள உங்கள் வீடியோக்கள் மூலம் மட்டுமே நீங்கள் இந்த கணக்கில்
சம்பாதிக்க முடியும். தளங்களில் பயன்படுத்த Adsense Settings பகுதியில்
உங்கள் தள முகவரியை கொடுத்து Apply செய்து, Ad Codes-ஐ உங்கள் தளத்தில்
Paste செய்ய வேண்டும். உங்கள் தளம் தகுதியானது என்றால் உங்கள் Adsense
கணக்கை உங்கள் தளத்தில் பயன்படுத்த அனுமதி கிடைக்கும்.
0 comments:
Post a Comment