தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, February 13, 2014

ஆபத்து காலத்தில் கைகொடுக்கும் செல்போன் செயலிகள்.

செல்போன் செயலிகள் உடல் இளைக்கவும், புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும், ஆங்க்ரி பேர்ட்ஸ் போன்ற கேம்கள் விளையாடவும் தான் என்று நினைத்து கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள் . நடைமுறை வாழ்க்கையில் பயன் தரகூடிய செயலிகளும் பல இருக்கின்றன. அது மட்டுமா ஆபத்து காலத்தில் உதவிக்கான கோரிக்கை விடுக்க உதவும் செயலிகளும் இருக்கின்றன. செல்போன் செயலிகளில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட இந்த உயிர்காக்கும் செயலிகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
 
எப்படியும் பெரும்பாலானோர் கைகளில் செல்போன் வைத்திருக்கின்றனர். ஆபத்து என வரும் போது இந்த செல்போன்கள் மூலமே ஒரு கிளிக்கில் உதவி கோர வழிசெய்யும் ஆபத்பாந்தவனாக  உயிர் காக்கும் செயலிகள் அமைந்துள்ளன.
 
ஆபத்து என தெரிந்தால் , செல்போனில் வேண்டியவர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கோரலாம் தான். ஆனால் சில நேரங்களில் செல்போனில் உள்ள எண்களில் வேண்டியவர்களின் எண்ணை தேடி கண்டுபிடித்து அவர்களை அழைத்து உதவி தேவை என சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடியில் சிக்கி கொள்ளலாம். அதோடு ஆபத்து சூழ்ந்திருக்கும் போது பயத்திலும் பதட்டத்திலும் செல்போனில் உரியவர்களை அழைத்து உதவி கோருவது கடினமாக இருக்கலாம். எதிர்பாரமால் விபத்து ஏற்படும் சூழல், உடனடி மருத்துவ உதவி தேவையான் நிலை மற்றும் வன்செயலாளர்களிடம் சிக்கி கொள்ளும் ஆபத்தான நிலைகளில் இந்த செயலிகள் உதவிக்கு வருகின்றன. பெண்கள், குழ்ந்தைகள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இவை ஆபத்து காலத்தில் கைகொடுக்கும்.

ஹெல்ப் மீ ஆன் மொபைல்
ஹெல்ப் மீ ஆன் மொபைல் செயலி பாதுகாப்பை விரல் நுனியில் கொண்டு வருகிறது. ஆண்ட்ராய்டு போனுக்கான இந்த செயலியின் மூலம் ஆபத்தான நேரங்களில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கோரலாம். இந்த செயலியை பயன்படுத்துவதும் எளிதானது. ஆண்ட்ராய்டு போனில் இவற்றை டவுண்லோடு செய்து கொண்டால் போதுமானது.  இந்த செயலியில் உள்ள பாதுகாவலர் பகுதியில் பயனாளிகள் வீட்டில் அறியப்படும் பெயரை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு பாதுகாவலர்களின் செல்போன் எண்களை குறிப்பிட வேண்டும். தந்தை, சகோதரர், மாமா, நண்பர் ஆகியோரது செல்போன் எண்களை குறிப்பிடலாம். ஆபத்தில் சிக்கி கொள்ளும் நிலை ஏற்பட்டால் , இந்த செயலியின் உதவி தேவை பகுதியை கிளிக் செய்தால் போதும் , அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு அந்த கோரிக்கை குறுஞ்செய்தியாக போய் சேர்ந்துவிடும். மேலும், பயனாளியின் இருப்பிடம்  ஜிபிஎஸ் மூலம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். அது மட்டும் அல்லாமால் , செல்போனில் இருந்து ஆபத்து எச்சிரிக்கை ஒலி கேட்டிக்கொண்டே இருக்கும். இதில் அருகே உள்ளவர்களை உதவிக்கு அழைக்கும் அபயக்குரலாக செயலபடும்.
 
இந்த செயலியை பெண்கள் விஷமிகள் மத்தியில் சிக்கி கொண்டால் அல்லது முன்பின் தெரியாதவர்களால் பின் தொடர்ப்பாட்டால் பயன்படுத்தலாம். மேலும் விபத்து நேரங்களிலும் பயன்படுத்தலாம்.
அதே போல, எங்காவது சென்றிருக்கும் போது எதிர்பார்த்ததை விட கூடுதல் நேரம் ஆகிவிட்டால் , இதில் உள்ள நான் இங்கிருக்கிறேன் வசதி மூலமாக பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தை பாதுகாவலர்களுக்கு தெரிவிக்கலாம். செல்போன் சார்ந்த மதிப்புகூட்டப்பட்ட சேவைகளை வழ்ங்கி வரும் ஆன்மொபைல் நிறுவனம் இந்த செயலியை உருவாக்கி உள்ளது. நிறுவன இணையதளம் மற்றும் கூகிள் பிலே ஸ்டோரில் தரவிறக்கம் செய்யலாம்.
இணையதள முகவரி; http://www.helpme-onmobile.com/

 
நிர்பயா செயலி.
ஆபத்தில் சிக்கி கொள்ளும் பெண்களுக்கு உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள செயலி இது. கடந்த ஆண்டு தில்லியில் வன்செயலாலர்களின் கொடுரத்துக்கு பலியான இளம்பெண் நிர்பயா பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. நிர்பயாவுக்கு நேர்ந்த கதி இனி வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படாமல் தடுக்க உதவும் வகையில் இந்த செயலியை ஸ்மார்ட் கிலவுட் இன்போடெக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. நிர்பயா – பி பியர்லெஸ் எனும் பெயரிலான இந்த செயலியில் உதவி தேவை எனும் செய்தியை குடும்பத்தினர் மற்றும் தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அதே போல உதவி தேவை எனும் தகவலை பேஸ்புக் பக்கத்திலும் நண்பர்கள் மத்தியில் பகிர்ந்து கொள்ள இந்த செயலி வழி செய்கிறது. விஅப்த்து மற்றும் மருத்துவ அவசர நிலைகளிலும் இந்த செயலியை பயன்படுத்தலாம். குடும்பத்தினர் தவிர காவல்தூறையினர் , மருத்துவமனை மற்றும் அவசர உதவி எண்கள் ஆகியவற்றுக்கும் உடனயாக தகவல் அனுப்ப முடியும். ஆண்ட்ராட்யு, ஐபோன் விண்டோஸ் போன் என எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம். ஆங்கில் மொழியிலானது.
இணையதள முகவரி; http://www.smartcloudinfotech.com/nirbhaya.html

ஆறு பேர் வட்டம்.
சர்கில் ஆப் 6 செயலி , ஆபத்து காலத்தில் மட்டும் அல்லாது சிக்கலான எந்த சூழலிலும் உதவி கிடைக்கசெய்கிறது. இந்த செயலியில், உங்கள் உதவி வட்டத்தில் ஆறு நபர்களின் தொடர்பு எண்களை குறிப்பிடலாம். உதவி தேவைப்படும் சூழலில் இந்த ஆறு பேருக்கும் பயனாளியின் இருப்பிடம் பற்றிய விவரத்துடன் தகவல் தெரிவிகக்ப்படும். மூன்று விதமான உதவிகளை கோரலாம். ஆபத்து இல்லை ஆனால் அச்சமூட்டும் சூழலில் இருந்தால் , உடனே வந்து அழைத்து செல்லுமாறு செய்தி அனுப்பலாம். இதற்காக கார் ஐகானை கிளிக் செய்தால் போதும். பெரும் ஆபத்து என்றால் , உதவி தேவை என்னும் தகவல் தெரிவிக்கலாம். இதே போலவே மிகவும் அறுவையான ஆசாமிகளிடம் மாட்டிக்கொண்டால் வந்து காப்பற்றுங்கள் எனும் செய்தியையும் அனுப்பலாம். குடும்ப சிக்கல் அல்லது காதல் விவகாரம் போன்றவ்ற்றால் மன் உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால் ஆலோச்னை மற்றும் ஆறுதல் தேவை என்றும் செய்தி அனுப்பலாம். அவசர எண்களை தொடர்பு கொள்ளும் வசதியும் இருக்கிறது. சர்வதேச அலவிலான செயலி இது. ஆங்கிலம் தான் பிரதான மொழி என்றாலும் இப்போது இந்தி மொழி வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராட் ,ஐபோன் இரண்டிலும் செயல்படுகிறது.
 
அமெரிக்காவில் பயனுள்ள செயலிகளுக்காக வெள்ளை மாளிகை நடத்திய போட்டியில் தேர்வான செயலி இது,.
இணையதள முகவரி; http://www.circleof6app.com/

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews