தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, December 3, 2014

ஜிமெயிலில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களையும் Delete செய்வதற்கு



உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் குப்பை கூடையாக மாறிவிட்டதா? அனைத்து மின்னஞ்சல்களையும் ஒரே நொடியில் அழிக்க வேண்டுமா?

முதலில் ஜிமெயிலுக்கு செல்லுங்கள், இன்பாக்ஸில் உள்ள மின்னஞ்சல் அனைத்தும் உங்களுக்கு தேவையில்லை என உறுதி செய்த பிறகு Select பகுதியில் உள்ள சிறிய கட்டத்தை டிக் குறியிட்டு தெரிவு செய்யவும்.

இப்பொழுது அந்த பக்கத்தில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் தெரிவு செய்யப்படும். அத்துடன் மேல் பகுதியில் ஒரு செய்தியும் வரும், அதில் நீங்கள் இப்பொழுது தெரிவு செய்துள் மின்னஞ்சல்களின் எண்ணிக்கையும், 

அருகில் Select all என்று உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களின் எண்ணிக்கையும் காட்டும்.

இரண்டாவதாக உள்ளதை கிளிக் செய்தால் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் தெரிவு செய்யப்படும்.

இனி வழக்கம் போல Delete பட்டனை அழுத்தினால் ஒரு எச்சரிக்கை செய்தி வரும், அதில் OK கொடுத்தால் போதும். உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் அழிக்கப்பட்டு விடும்.

இந்த மின்னஞ்சல்கள் அனைத்தும் மீண்டும் வேண்டுமென்றால், Trash போல்டரில் இருந்து மறுபடியும் இன்பாக்சிற்கு கொண்டு வரலாம்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews