புகைப்பிடித்தலை விட ஆபத்தான செயல் டிவி பார்ப்பதாம்..!!
ஒரு நாளைக்கு 6 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்ப்பது 5 வருடங்களைக் குறைக்குமென்று ஓர் ஆய்வு கூறுகின்றது. 25 வயதிற்குப் பின்னர் ஒருவர் தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொரு மணித்தியாலமும் வாழ்நாளில் 22 நிமிடங்களைக் குறைக்குமென ஓர் அவுஸ்திரேலிய ஆய்வு கூறுகின்றது. இது புகைத்தலைப் போல ஆபத்தானது. ஆனால் புகைத்தல் வீதங்கள் குறையுமளவிற்குத் தொலைக்காட்சி பார்க்கும் வீதம் குறையவில்லை என்பதுதான் உண்மை. கடந்த வருடம் இடம்பெற்ற இன்னோர் ஆய்வில் ஒரு மணித்தியாலம் தொலைக்காட்சி பார்ப்பது 8% ஆயுளைக் குறைக்குமென்றது. அவுஸ்திரேலியர்கள் ஒரு நாளைக்கு 2 மணித்தியாலங்கள் பார்க்கின்றனர்.
இதனால் ஆண்களிற்கு அவர்களது ஆயுட்காலத்திலிருந்து 1.8 வருடங்களும் பெண்களுக்கு 1.5 வருடங்களும் குறைகின்றதென்கின்றனர். பிரித்தானியர்களோ நாளொன்றிற்கு 3 மணித்தியாலம் தொலைக்காட்சி பார்க்கின்றனர் என்கின்றது இந்த ஆய்வு. உடற்பயிற்சியின்றி ஒரேயிடத்தில் இருப்பதால் இது இதய நோய்களைக் கொண்டுவருகின்றது. வழமையாகவே உடற்பயிற்சியின்றி இருப்பது எமது சுகாதாரத்திற்குக் கேடு என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த அறிக்கையானது, 1999-2000 இற்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு 25 வயதிற்கு மேற்பட்டவர்களில் இன்னும் 11,000 பேரை உட்படுத்தி மீளச் செய்தபோதே கிடைத்தது.
0 comments:
Post a Comment