தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, November 29, 2014

தொலைந்து போன MOBILE-லை மீட்டெடுக்க


Mobile Phone Thieves
உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.
இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
IMEI என்பது International Mobile Equipment Identity
என்பதின் சுருக்கம் ஆகும்.
சரி. இந்த IMEI International Mobile Equipment Identity எண்ணை எப்படிக் கண்டறிவது.?
  • உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்
  • உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.
  • அதை பாதுகாப்பாக ஒரு இடத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  • எப்போதாவது உங்கள் மொபைலை நீங்கள் இழக்க நேரிடும்போது இந்த எண் உங்களுக்கு உதவும். 
  • மேலும் தொலைந்து போன மொபைலை சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்களிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்க உதவும்.
  • IMEI எண் மொபைலை எப்படி கண்டுபிடிக்க உதவும்? அல்லது எப்படி பாதுகாக்க உதவும்?
  • உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதற்குcop@vsnl.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
மின்னஞ்சலில் முக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள்
  • பெயர்(NAME)
  • முகவரி(ADDRESS)
  • போன் என்ன மாடல்(MOBILE PHONE MODEL)
  • அந்த போனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர்(MOBILE PHONE COMPANY)
  • கடைசியாக போன்செய்த எண்(LAST DIALED NUMBER)
  • உங்கள் மின்னஞ்சல் முகவரி(EMAIL ADDRESS)
  • எந்த தேதியில் தொலைந்து(LOST ON DATE)
  • போனின் அடையாள எண் (IMEI) 
ஆகிய தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் தகவல்களைச் சேர்க்கலாம்.
Police Department -ன் திறன் வாய்ந்த GPRS and INTERNET இணைந்த வலுவானதொரு கட்டமைப்பின்(Strong Structure) மூலம் உங்கள் போனை யாராவது பயன்படுத்தும் பட்சத்தில் அந்நபர் இருக்கும் இடம், மற்றும் பயன்படுத்தும் நபரைக் கண்டுபிடித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். உங்களுக்கும் இதுப் பற்றிய தகவல்களைத் தெரியப்படுத்துவார்கள்.
அதனால் நண்பர்களே முதலில் உங்களுடைய மொபைல் போனில் IMEI எண்ணை மறக்காமல் உங்கள் டயரி போன்ற ஏதாவதொன்றில் *#06# என்பதைக் கொடுத்து தோன்றும் எண்ணைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் விலையுயர்ந்தCostly Mobile Phone தொலைந்துபோனால் காவல்துறை உதவியுடன் மீண்டும் பெற அது வழிவகுக்கும். மீண்டும் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

இத்தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews