இலவச மென்பொருட்களின் நந்தவனம்...
வணக்கம் நண்பர்களே..! மென்பொருள்கள் என்ற வார்த்தை இப்போது தமிழில் பிரபலம்.. அதுவும் இலவச மென்பொருள் என்றாலே இன்னும் கூடுதல் பிரபலமாகிய வார்த்தை.. யார் ஒருவர் கூகிளில் தேடினாலும் ஆங்கிலத்தில் Free software for... என்றும், தமிழில் இலவச மென்பொருள்.. என்றும் தேடியே தங்களுக்குத் தேவையான மென்பொருள்களை தேடித் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி மகிழ்கின்றனர்..
அவ்வாறான தளங்களில் மிகச் சிறப்பானதொரு தளமாக என் கண்ணில் பட்டதுதான் இந்த File Hippo தளம்.. இதில் அடங்கியுள்ள மெனபொருட்கள்ஏராளம்..
ஏராளம்.. அது நமக்கு கிடைப்பதோ... தாராளம்.. தாரளம்...
மிக எளிதாக இத்தளத்தில் நமக்கு வேண்டிய மென்பொருட்களைத் தேடிப் பெறலாம்..
ஒரு மென்பொருளைப் பற்றித் தேடி பெறும்போது, அதன் தொடர்புடைய மென்பொருட்களையும், அந்த மென்பொருட்களின் சமீபத்திய புதுப்பித்தலையும் காட்டுவதோடு, மென்பொருள்களின் ஆரம்ப பதிப்புகளையும் பட்டியலிட்டு காட்டுகிறது.
உதாரணமாக நான் என்னுடைய VLC மென்பொருளை மேன்படுத்துவதற்காக தேடியபோது.. அந்த மென்பொருளின் முந்தைய பதிப்புகளையும் அட்டவணைப்படுத்தி காட்டியபோது எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.. உடனே இந்தப் பதிவை எழுத ஆரம்பித்துவிட்டேன்..
இத்தளம் மென்பொருட்களின் சுரங்கம் என்றால் அது மிகையாகாது.
இத்தளத்தில் drivers, networks and administrators, file sharing, browsers and plugins, cd and dvd tools, system tuning firewall and security,Developer Tools, Drivers, Office and News, Photos and Images, Compression and Backup, File Transfer, Desktop, System Tuning, Messaging and Chat, என்பன போன்ற தலைப்புகளில் உங்களுக்கு வேண்டிய மென்பொருட்களை அட்டவணைப்படுத்தி கொடுக்கிறார்கள்.
இத்தளத்தின் முகவரி: FILEHIPPO.COM
இந்த வசதி மட்டுமா? ஒவ்வொரு மென்பொருளின் புதிய அப்டேட்களையும் தவறாமல் அறிவித்துவிடுகிறார்கள்.
மேலும் ஒரு கூடுதல் தகவல்களாக ஃபைல் ஹிப்போ தளத்தில் இதுவரைக்கும் அதிகம் பயனாளர்களால் தரவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்களையும் வரிசைப்படுத்திக் காட்டுகிறது..
இதிலுள்ள அனைத்து மென்பொருட்களையும் இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்பெறலாம் என்பது கூடுதல் வசதி..
இந்த பயனுள்ள தளத்தை தங்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி.. உங்களுக்கு எப்படி?
0 comments:
Post a Comment