தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, November 18, 2014

உங்கள் கணினி Registry Clean செய்ய Wise Registry Cleaner மென்பொருள்


 நாம் கணினியில் சில மென்பொருட்களை இன்ஸ்டால் செய்திருப்போம். நாளடைவில் அது வேண்டாமென்று Uninstall செய்து விடுவோம். ஆனால் அப்படி செய்யும் போது சில தேவையில்லாத பைல்கள் நம் Registry லேயே தங்கிவிடும்.  இதனால் தான் நம் கணினி மிகவும் மந்தமாக  வேலை செய்யும்.
இந்த பைல்களை அழித்தாலே நம் கணினியின் வேகத்தை கண்டிப்பாக  கூட்ட முடியும் என்பதில் ஐயமில்லை. இதுவரை இந்த வேலைக்கு நான் வேறொரு நிறுவனத்தின் மென்பொருள் உபயோகித்து வந்தேன் ஆனால் இந்த மென்பொருள் அதைவிட நன்றாக உள்ளது. ஆதலால் இந்த Sofware அனைவருக்கும் உபயோக படும் என்று பதிவிடுகிறேன். 

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள டவுன்லோட் BUTTON ஐ  அழுத்தவும்.
 
DOWNLOAD செய்தவுடன் உங்களுக்கு வரும் WDCfree என்ற setup பைலை RUN செய்து  இன்ஸ்டால் செய்து கொள்ளவும். உங்களுக்கு இரண்டு shortcut keys வந்திருக்கும். அதில் Clear with 1 click  என்பதை டபுள் கிளிக் செய்தாலே உங்கள் கணினியின் registry SCAN ஆகி அதில் உள்ள தேவையில்லாத பைல்கள் ஸ்கேன் ஆகி தானாகவே பைல்களை delete செய்து விண்டோவும் CLOSE ஆகிவிடும். 
   
இந்த வேலைகளை Manual ஆக செய்ய வேண்டுமானால் Wise Registry Cleaner என்ற Shortcut KEYயை DOUBLE CLICK செய்து இயக்கி இடது பக்க மூலையில் மேலே உள்ள Scan என்ற பட்டனை அழுத்தினால் உங்களுடைய கணினி SCAN ஆகி 
வந்ததும் நான்காவதாக உள்ள Fix என்ற  பட்டனை அழுத்தி உங்கள் கணினியை CLEAN செய்து கொள்ளுங்கள்.
 முன்னர் உங்கள் கணினி இயங்கியதற்கும் இப்பொழுது இயங்குவதற்கும் நிறைய மாற்றங்கள் கண்டிப்பாக தெரியும்.நன்றி வணக்கம் .

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews