தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, April 27, 2012

பேஸ்புக்கில் உள்ள புகைப்படங்களை பதிவிறக்கம் செய்வதற்கு


பேஸ்புக் தளமானது நண்பர்களிடம் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் தளம் ஆகும்.
இந்த தளத்தில் நம்முடைய கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், சுயதகவல்களை உள்ளிட்டு அதனை நண்பர்களிடம் பரிமாறிக் கொள்ள முடியும். இதில் உள்ள தகவல்களை நாம் தரவிறக்கி பயன்படுத்தி கொள்ள முடியும்.
ஆனால் நாம் தரவிறக்கம் செய்வதற்கான வழிகள் யாவும் பேஸ்புக் தளத்தில் நேரிடையாக கொடுக்கப்பட்டிருக்காது. எனவே பேஸ்புக் தளத்தில் உள்ள வீடியோ, புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் மூன்றாவது வழியை மட்டுமே நாட வேண்டும்.
புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் அதற்கும் பல்வேறு வழிகள் இணையத்தில் உள்ளன. அதில் ஒன்று தான் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்தி பேஸ்புக் புகைப்படத்தினை தரவிறக்கம் செய்தல் ஆகும்.
கூகுள் குரோம் உலவியினை திறந்து இந்த நீட்சியை பதிந்து கொள்ளவும். பின் ஒருமுறை கூகுள் குரோம் உலவியினை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் பேஸ்புக் கணக்கை திறந்து எந்த புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அந்த இடத்திற்கு செல்லவும்.
உதாரணமாக உங்களுடைய நண்பரின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் அவருடைய பேஸ்புக் கணக்கிற்கு சென்று அவருடைய புகைப்பட பட்டியை அழுத்தி புகைப்பட மெனுவிற்கு செல்லவும். இப்போது Download Facebook album's photos என்னும் ஐகானை அழுத்தவும்.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் "Ctrl+S" ஐகான்களை ஒருசேர அழுத்தி படங்களை கணணியில் சேமித்துக் கொள்ள முடியும். முழு வலைப்பக்கமும் சேமிக்கப்பட்டு விடும். இந்த நீட்சியானது பேஸ்புக் படங்களை மிக துல்லியமாக தரவிறக்கம் செய்ய உதவுகிறது. மேலும் உங்களுடைய நண்பர்களுடைய புகைப்படங்களை மிக எளிதாக தரவிறக்கம் செய்ய இந்த நீட்சி உதவும்.

பயன் தரும் தளங்கள்

இன்றைய நமது செய்தியாக உங்களுக்கு பயன் தரக்கூடிய தளங்கள் சில 


1) அனைத்து முக்கிய மென்பொருள்களினதும் பழைய தொகுப்புக்களினை தரவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய ஓர் தளம் 
இணையதள முகவரி : http://www.oldversion.com 2) இணையத்தில் நமது புகைப்படங்களை இலக்கங்களாக மாற்றும் ஓர் தளம் 

இணையதள முகவரி : http://www.picascii.com 

3) 3D-ல் படம் வரையக்கற்றுத்தரும் ஓர் தளம் 

இணையதள முகவரி : http://www.3dtin.com 

4) கார்களை பழுதுபார்க்கக் கற்றுத்தரும் ஓர் தளம் 

இணையதள முகவரி http://www.vehiclefixer.com 
5) இணையத்தில் யுனிட் கன்வர்டர் செய்யக்கூடிய ஓர் தளம் 

இணையதள முகவரி : http://www.digitaldutch.com/unitconverter/ 
6) இணையத்தினூடாக பி.டி.எப் பைல்களை எக்செல் பைல்களாக மாற்ற உதவும் ஓர் தளம் (PDF to Excel) 

இணையதள முகவரி : http://www.pdftoexcelonline.com 
7) இணையத்தினூடாக உங்கள் புகைப்படத்தை முப்பரிமாணமாக (3D) மாற்ற ஓர் தளம் 

இணையதளமுகவரி : http://3d-pack.com 
8) உங்கள் ஓவியப்படைப்புகளை விற்பனை செய்ய ஓர் தளம் 

இணையதள முகவரி : http://www.artflock.com 9) யுடியூப் வீடியோவினை எம்.பி.3 (MP 3 ) பாடலாக மாற்றுவதற்கான ஓர் தளம் 

இணையதள முகவரி : http://www.listentoyoutube.com 
10) கணனியின் அனைத்து மென்பொருட்களிற்குமான சோர்ட்கட்களை கற்றுத்தரும் ஓர் தளம். 

இணையதள முகவரி : http://www.shortcutworld.com ___

Thursday, April 19, 2012

கணணியை முழுவதுமாக ஸ்கேன் செய்வதற்கு


 




நமது கணணியில் உள்ள டிரைவ் எதுவாக இருந்தாலும் சரி அது எந்த அளவு உபயோகிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கோப்புகளின் அளவு என்ன என தெளிவாக அறிய இந்த மென்பொருளால் முடியும்.
மேலும் இதிலிருந்தே ரீ-சைக்கிள் பின்னை சுத்தம் செய்யலாம். Control Panelல் உள்ள Add Removeல் உள்ள கோப்புகளை நீக்கலாம். வன்தட்டை ஸ்கேன் செய்து காலியிடங்களை பார்க்கலாம்.
இந்த மென்பொருளை தரவிறக்கியதுடன் தோன்றும் விண்டோவில் Download Scanner கிளிக் செய்யவும். அதில் உங்கள் வன்தட்டின் மொத்த விவரம் தெரிய வரும். அந்த விண்டோவில் தோன்றும் எதாவது ஒரு நிறத்தின் மீது கர்சரை வைத்தால் அந்த டிரைவின் பெயர், அதில் உள்ள கோப்பறை, அதில் உள்ள கோப்புகளின் அளவு விவரம் மேல் புறத்தில் தெரிய வரும்.
இதைப் போலவே நீங்கள் உங்கள் வசம் உள்ள அனைத்து டிரைவ்களின் விவரத்தை நொடியில் அறிந்து கொள்ளலாம். வலப்புறம் மேலே உள்ள கட்டத்தை கிளிக் செய்வது மூலம் நேரடியாக Add/Remove Programs சென்று அதில் உள்ளவைகளை நீக்கி பின் ஸ்கேன் டிக்ஸ் செய்து காலியிடங்களை பார்வையிடலாம்.
அதிலேயே கீழே உள்ள ரீ-சைக்கிள் பின் கிளிக் செய்து அதில் உள்ள குப்பைகளை நீக்கலாம்.

Tuesday, April 17, 2012

கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை மறைக்க

ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து ஸ்டார்ட் ரன் என்பதை தேர்வு செய்யவும்
<இப்பொழுது ரன் பாக்ஸ்-ல் cmd என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்
(கமாண்ட் பிராம்ட் (command prompt) வரும்)
இப்பொழுது diskpart என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்
) இப்பொழுது list volume என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்
இப்பொழுது கணினியில் உள்ள அனைத்து தகவல்கள் வரும் இது பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டியது இல்லை நீங்கள் செய்யவேண்டியது
உங்களுக்கு எந்த டிரைவ் மறைக்க விரும்புகிறீர்களோ அந்த டிரைவ்-ன் எழுத்தை உள்ளீடவும்
உதாரணமாக: volume F என்றால் Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்
இப்பொழுது இதன் கீழே Volume 0 is the selected volume என்று வரும்
remove letter F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்.இப்பொழுது கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் இப்பொழுது டிரைவ் மறைந்திருக்கும்.
மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முன் கூறியபடியே முதல் நான்கு நிலைகளையும் செய்து Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்
அடுத்து assign letter F என்று உள்ளீடவும்
இப்பொழுது கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் மறைந்திருந்த டிரைவ் மீண்டும் கணினியில் இருக்கும்
பின்குறிப்பு :இதனால் உங்கள் கணினியில் உள்ள தகவல்கள் இழக்கபடுவதில்லை

வழிமுறை -2
1) ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து ரன் கமாண்ட் தேர்வு செய்யவும்
2) ரன் கமாண்டில் regedit என்று டைப் செய்யவும் (இப்பொழுது ரிஜிஸ்டரி எடிட்டர் திறக்கும்)
3) இதில் தாங்கள் செல்லவேண்டிய பகுதி
HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesExplorer
4) Explorer-கிளிக் செய்தவுடன் இதன் வலப்புறம் ஒரு சிறிய விண்டோ தோன்றும்
5) இதில் ஏதேங்கிலும் ஒரு வெற்று இடத்தில் வலது கிளிக் செய்து New என்பதனை தேர்வு செய்து DWORD Value என்பதை தேர்வு செய்யவும் பின்னர் அதை Rename செய்து NoDrives என்று பெயரிடவும்
Drive Value
A: 1
B: 2
C: 4
D: 8
E: 16
F: 32
G:64
H:128
I:256
J:512
K:1024
Z: 33554432

இப்படியாக கூடி கூடி போகும்
6) தங்களுக்கு எந்த டிரைவ் மறைக்க விரும்புகிறீர்களோ அந்த எண்னை NoDrives கிளிக் செய்து Modify என்பதை செலக்ட் செய்து C டிரைவ் என்றால் 4 என்று உள்ளீட்டு
Decimal என்பதை செலக்ட் செய்து OK கொடுக்கவும்

(கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் டிரைவ் மறைந்து போயிருக்கும்)
மீண்டும் மறைத்த டிரைவ் வரவைப்பதற்கு முதல் 5 நிலைகள் சென்று தாங்கள் உண்டாக்கிய NoDrive என்பதை டெலீட் செய்துவிடவும்
(கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் டிரைவ் மீண்டும் வரும்)

Wednesday, April 11, 2012

உங்கள் கண்களை பாதுகாக்க


நம்முடைய கணணியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப்பதை பலர் மறந்துவிடுகிறோம்.
அதிக நேரம் கணணி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் அதிகம் கணணியில் பணிபுரிபவர்கள் எனில் உங்கள் கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள்.
பகல் நேரங்களில் உங்கள் மொனிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும். அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.
நம் மொனிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.
இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மொனிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.
இதனை தரவிறக்கியதுடன் உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். பிறகு Change Settings சென்று
1. ADJUST YOUR LIGHTING FOR DAY AND NIGHT: உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் எவ்வளவு வெளிச்சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.
2. SET YOUR LOCATION: இதில் சென்று Change அழுத்தினால் where am i? என்று தோன்றும். windowல் locate என்பதை கிளிக் செய்து வரும் mapல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitudeனை copy செய்து அதில் தரவும்.
3. TRANSITION SPEED: திடீர் என்று மொனிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதே, குறைவதே நம் கண்களுக்கு ஒவ்வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்.
இது முற்றிலும் இலவசமானது. linux மற்றும் mac பதிப்புகளும் உள்ளன.

Sunday, April 8, 2012

பயர்பொக்ஸின் புதிய வசதி: உங்கள் நீட்சியின் வேகத்தை அறிந்து கொள்ள


இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு அடுத்து அதிகமாக உபயோகப்படுத்தப்படும் பிரவுசர் மொசில்லா நிறுவனத்தின் பயர்பொக்ஸ் ஆகும்.
தற்போது இதன் புதிய பதிப்பான பயர்பொக்ஸ் 4 வெளியிட்டு உள்ளார்கள். இருக்கும் எல்லாம் பிரவுசர்களின் ஒரே பிரச்சினை வேகம் தான். இதில் எது சிறப்பாக செயல்படுகிறதோ அந்த மென்பொருள் தான் அதிகமாக விரும்பப்படுகிறது.
பிரவுசர்களில் இல்லாத சில வசதிகளை பெற நாம் நீட்சிகளை உபயோகிக்கிறோம். இது ஒரு அளவிற்கு இருந்தால் பராவாயில்லை. கணக்கில்லாமல் நீட்சிகளை நம் கணணியில் சேர்த்து கொள்கிறோம். இதனால் தான் பிரச்சினையே, சில மூன்றாம் நபர் நீட்சிகளை உபயோகிப்பதால் நம்முடைய பிரவுசரின் வேகம் பாதிக்கப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவுகட்டும் வகையிலே பயர்பொக்சை திறக்கும் பொது தாமதமாகும் நீட்சிகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த நீட்சிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது Foxlingo எனப்படும் நீட்சியாகும். இது தான் அதிக நேரம் எடுத்து கொள்வதாக பயர்பொக்ஸ் அறிவித்துள்ளது.
இதில் எது அதிக சதவீதம் காட்டுகிறதோ அந்த நீட்சி தான் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறது. இது போல சுமார் 50 நீட்சிகளின் பெயர்கள் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இனி பயர்பொக்ஸ் உபயோகிப்பாளர்கள் இந்த பட்டியலில் அதிக சதவிகிதத்தை உடைய நீட்சியை தவிர்த்தால் உங்கள் பிரவுசரை வேகமாக்கலாம்.
முழு பட்டியலையும் பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

Tuesday, April 3, 2012

கையடக்கத்தொலைபேசிகளில் பயன்படுத்தவென திருக்குறள்-மென்பொருள் வடிவில்


ஒப்பற்ற உலகப்பெரும் தமிழ் இலக்கியமாக திகழும் திருக்குறளானது தற்பொழுது கையடக்கத்தொலைபேசிகளில் பயன்படுத்தத்தக்க வகையில் மென்பொருள் வடிவமாக உருவாக்கப்படுள்ளது. இந்த மென்பொருளை கையடக்கத்தொலைபேசிகளில் தரவிறக்கி தமிழ்மொழியிலையே பயன்படுத்தத்தக்க முறையில் இந்த மென்பொருளானது வடிவமைக்கப்படுள்ளது.
மூன்று பால்களாகிய அறத்துப்பால்,பொருட்பால்,காமத்துப்பால் என்னும் மூன்று பெரும் பிரிவுகளுக்குள் பதின்மூன்று அதிகாரங்களையும் தாங்கி 1330 குறள்களுடனும் அதன் பொருள்விளக்கங்களுடனும் மென்பொருளானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் பயனுள்ளதொரு மென்பொருள்.
மென்பொருள் தரவிறக்க சுட்டிகள்:
கணனியில் தரவிறக்க இணையச்சுட்டி: Thirukkural
கையடக்கத்தொலைபேசியில் தரவிறக்க இணையச்சுட்டி: http://m.getjar.com/
                                                                                              


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews