தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, May 30, 2012

இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை

இணையம் என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதில் நமக்கு தேவையான வீடியோக்கள் மற்றும் மென்பொருட்களை இலவசமாக டவுன்லோட் செய்து உபயோகித்து மகிழ்கின்றோம். ஆனால் இப்படி இலவசமாக இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் மென்பொருட்களினால் நம்முடைய கணினி பாதிப்பு அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே நாம் இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் சில .
இலவசம் என்று கூறியதும் அதிக மென்பொருட்களை நம் கணினியில் இன்ஸ்ரோல் செய்வதை முற்றிலும் தவிர்க்கவும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தால் மட்டும் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.

இந்த மென்பொருளால் ஒருமுறை மட்டும் தான் பயன் என்று இருந்தால் இதற்கு அந்த மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை.  ஒன்லைனிலேயே இந்த வசதியை செய்து கொள்ளலாம்.

       எந்த இலவச மென்பொருளையும் அதனுடைய தயாரிப்பு இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்வதை முற்றிலும் தவிருங்கள் ஏனென்றால் அவர்களின் மென்பொருளை பற்றி அவர்கள் உயர்த்தியே சொல்லுவார்கள் ஆதலால் உண்மை நிலையை நம்மால் கண்டறிய முடியாது. இலவச மென்பொருட்களை தொகுத்து வழங்கும் தளங்களானCnet.com , brothersoft.com மற்றும் சில தளங்களில் இருந்தே டவுன்லோட் செய்யவும்.

தகுதி வாய்ந்த தளங்களில் இருந்து டவுன்லோட் செய்தாலும் கூட நாம் டவுன்லோட் செய்யும் மென்பொருளை பற்றி மற்றவர்களின் Reviews எப்படி உள்ளது என்பதை பார்த்து டவுன்லோட் செய்யவும்.குறிப்பாக Cnet.com தளத்தில் டவுன்லோட் செய்யும் போது அதனுடைய Product Ranking 1 முதல் 2 வரை உள்ள மென்பொருட்களை மட்டுமே டவுன்லோட் செய்யவும்.

எந்த தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யும்போது மொத்த டவுன்லோட் அதிகமாக இருந்தாலும் Lastweek எவ்வளவு பேர் அதனை டவுன்லோட் செய்தார்கள் என்று பார்த்து அதிகம் பேர் பார்த்து இருந்தால் அந்த மென்பொருள் தற்போதும் நன்றாக பயன்படுகிறது ஆகவே அந்த மென்பொருட்களை டவுன்லோட் செய்து கொள்ளவும்.ஒரே வேலையை செய்ய ஒன்றுக்கு அதிகமான மென்பொருட்களை கணினியில் வைத்து கொள்ள வேண்டாம். குறிப்பாக players, cleaners, photo editors இவைகளில் உங்களுக்கு பிடித்த மென்பொருளை மட்டும் வைத்து கொண்டு தேவையில்லாத மற்ற மென்பொருட்களை தவிர்த்து விடுங்கள்.

இந்த முறைகளை கையாண்டாலே உங்கள் கணினியை பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.  

Thursday, May 24, 2012

உங்கள் கணினியை சுத்தமாக்க ஓர் மென்பொருள்

 வளர்ந்து வரும் தொழில்நுட்பதிர்க்கு ஏற்ப நம் கணினியையும் பாதுகாப்பாக வைத்து கொள்வது நல்லது. நம் கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிக்க நம்மில் பெரும்பாலானோர் CCleaner என்ற மென்பொருளை உபயோகித்து கொண்டு இருக்கிறோம். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபம். 

  புதிய பதிப்பு 64-bit கணினிகளும் உபயோகிக்கும் வரையில் வடிவமைக்க பட்டுள்ளது.இந்த பதிப்பில் ஒரு புதிய வசதிTools - Drive Wiper. இந்த வசதி மூலம் நம்முடைய கணினியில் தேவையற்ற பைல்களை தேடுவதில் அதிக கவனம்.குரோம், IE9 சப்போர்ட் செய்வதில் மேம்படுத்தப்பட்டுள்ளது.அதிவேகமாக இயங்க கூடியது. அதிகபட்சம் 2 நிமிடத்திற்குள் நம் கணினியை சுத்தம் செய்து விடலாம். 


http://www.piriform.com/ccleaner  இந்த லின்கினூடாக மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள் .இன்ஸ்ரோல் செய்து முடித்ததும் விண்டோ ஒன்று வரும். அதில் உள்ளAnalyze என்ற பட்டனை அழுத்தவும். இப்பொழுது உங்கள் கணினியில் உள்ள நீக்க வேண்டிய பைல்கள் அனைத்தும் உங்களுக்கு scan ஆகி வரும். 

இப்பொழுது நீங்கள் அதற்கு அருகில் உள்ள Run Cleaner என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து தேவையில்லாத பைல்களும் அழிந்து விடும். உங்களுக்கு Cleaning Complete என்ற செய்தி வரும். அவ்வளவு தான் உங்கள் கணினி சுத்தம் செய்ய பட்டு விட்டது.இதே முறையில் நீங்கள் உங்கள் Registry சுத்தம் செய்து கொள்ளுங்கள். 

Wednesday, May 23, 2012

உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.


அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும்.
இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?
அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.
முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.
இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.
அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது.
இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,
ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள்.
அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.

Sunday, May 20, 2012

கூகுள் வடிவத்தில் லோகோ உருவாக்க

இணையம் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது கூகுள் தான். கூகுள் ஸ்டைலில் நமக்கு வேண்டிய பெயரை உருவாக்கலாம். இதற்காக போட்டோஷோப் போன்ற எடிட் மென்பொருட்கள் தெரிய வேண்டுமென்ற அவசியம் இல்லை. மற்றும் இதை செய்ய வெறும் இரண்டு நிமிடங்களே அதிகம். இது போல் நமக்கு தேவையான பெயரையும் உருவாக்கி கொள்ளலாம்.

              இந்த பணியை சுலபமாக செய்ய ஒரு தளம் உள்ளது. www.goglogo.com/இந்த லின்கினூடாக தளம் செல்லவும். இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.  

ENTER YOUR NAME என்ற இடத்தில் உங்களுக்கு தேவையான பெயரை கொடுத்து விடவும்.அடுத்து அருகில் உள்ள Create My Search Page என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுக்கு வரும் பக்கத்தில் நீங்கள் கொடுத்த பெயர் கூகுள் ஸ்டைலில் வந்திருக்கும்.


இது போன்று நீங்கள் கொடுத்த பெயர் கூகுள் ஸ்டைலில் வந்திருக்கும். அதன் மீது மவுசில் வலது க்ளிக் செய்து SAVE IMAGE AS என்பதை தேர்வு செய்து உங்கள் கணினியில் சேமித்து கொள்ளுங்கள்.இதில் நீங்கள் சேமிக்கும் பொது ஒவ்வொரு எழுத்தாக தான் சேமிக்க முடியும். 

Wednesday, May 16, 2012

கணினி மொழிகள்

கணினி மொழிகள் என்பதை நிரல் ஏற்பு மொழி என தூய தமிழில் அழைக்கிறார்கள். இது கட்டளைகளின் மூலம் கணினியைச் செயல்பட வைப்பதாகும். சிறு கணினியின் ஒரு சின்ன செயற்பாடு முதல் ஒரு எந்திரனின் செயற்பாடு (Robot)வரை நிர்ணயம் செய்வது கணினி மொழிகள்தான்.

கணினி மொழிகளை உருவாக்குபவர்களை மென்பொறியாளர்கள் (software engineer) என அழைக்கிறோம். 

ஓவ்வொரு வருடமும் ஏராளமான புதிய கணினி மொழிகள் பயன்பாட்டிற்கு வருகின்றன. தற்போதைய நிரல் ஏற்பு மொழிகள் பயன்பாட்டு எளிமைக்காக ஆங்கில வாக்கியங்களாகவோ , வார்த்தைகளாகவோ இருக்கின்றன. இந்த நிரல் ஏற்பு மொழிகள் கணினியிலுள்ள இயந்திர மனசுக்குப் புரியும் விதமாக கொம்பைலர் (compiler) மென்பொருட்களால் இயந்திர மொழியாய் மாற்றப்பட்டு கணினியை செயல்பட வைக்கிறது என்பது அடிப்படை செயற்பாடாகும். 

C++, Java போன்றவை இப்போது அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள கணினி மொழிகளில் சிலவாகும். ஓவ்வொரு இயக்கு தளத்திற்கும் ஏற்பு கணினி மொழிகளும் வேறுபடும். இந்த நிரல் ஏற்பு மொழிகள் இல்லாமல் கணினியே இல்லை எனும் நிலை இருப்பதால்தான் இன்று மென்பொருள் நிறுவனங்கள் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளன.

Tuesday, May 15, 2012

டிவி க்களில் ஸ்கைப்...









வாய்ஸ் ஓவர் புரோட்டோகால் தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன் ஆகியவற்றின் மூலம் திரையில் ஒருவரை ஒருவர் பார்த்து உரையாடிக் கொள்ளலாம். இதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருப்பவர்கள் கூட ஒரே அறையில் அமர்ந்து பேசுவது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பல நிறுவனங்கள் அளித்து வந்தாலும், ஸ்கைப் இதில் முன்னணி இடம் பிடித்துள்ளது.
இனி இந்த வகைத் தொடர்பினை, "டிவி'க்கள் வழியாகவும் தருவதற்கு ஸ்கைப் முன்வந்துள்ளது. முதன் முதலாக "டிவி'க்களில் இந்த தொழில் நுட்பத்தினை ஸ்கைப் கொண்டு வருகிறது.
இதற்கான ஒப்பந்தத்தினை எல்.ஜி. மற்றும் பானாசோனிக் நிறுவனங்களுடன் மேற் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இன்டர்நெட் வசதி இணைந்த "டி.வி'க்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன.
இணையத் தொடர்பினை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் தொலைக் காட்சிப் பெட்டிகள் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கான புரோகிராமினை ஸ்கைப் வழங்குகிறது. பானாசோனிக் நிறுவனம் இது பற்றிக் கூறுகையில் தங்களின் 2010 Viera Castenabled HDTV செட்களை வைத்திருப் பவர்கள் இந்த தொழில் நுட்பத்தை எளிதில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.
வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு இந்த வகை "டிவி'க்கள் வரும் மாதங்களில் கிடைக்கும். எல்.ஜி. நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் Netcast Entertainment Access தொழில் நுட்பம் உள்ள தங்கள் நிறுவனத்தின் 26 மாடல் எல்.இ.டி., எல்.சி.டி. மற்றும் பிளாஸ்மா டிவிக்களில் ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்தி வீடியோ கால்களை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
வீடியோ அழைப்புகளை இந்த "டிவி'க்கள் மூலம் மேற்கொள்ள, இந்த இரு நிறுவனங்களும், மைக்ரோபோன் இணைந்த வீடியோ கேமராக்களை "டிவி'க்களில் இணைக்கும் வகையில் வடிவமைத்துத் தர இருக்கின்றன. இன்டர்நெட் இணைப்பு குறித்துக் கூறுகையில் குறைந்தது விநாடிக்கு 1 மெகா பிட் வேகம் உள்ள இணைப்பு வேண்டும் என ஸ்கைப் அறிவித்துள்ளது.
ஸ்கைப் இணைக்கும் வகையில் உள்ள டிவிக்களை எல்.ஜி. வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளும், ஸ்கைப் இணைந்த எச்.டி.டி.விக்களை வரும் மார்ச் மாதத்திற்குள் பானாசோனிக்கும் தருவதாக உறுதி அளித்துள்ளன.
இதுவரை உயர் தொழில்நுட்ப ஆய்வு மையங்கள், சில சிறப்பு கருத்தரங்க அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில் நுட்பம் மக்களுக்காக வர்த்தக ரீதியில் கிடைக்கப் போகிறது என்பது, தொலை உணர்வு வசதியை மக்களுக்கு அளிப்பதில் நாம் இன்னும் ஒரு படி உயர்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
இனி பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளை, பெற்றோர்கள் தங்கள் டிவி திரைகள் மூலம் தங்களின் வீடுகளுக்கே கொண்டு வந்து பார்த்துப் பேசி மகிழலாம்.

Wednesday, May 9, 2012

கூகுலின் புதிய சமூக வலைப்பின்னல் வசதி









ஒரு பக்கம் ஃபேஸ்புக் வளர்ந்த் கொண்டே போகிற‌து .இன்னொரு புறம் டிவிட்டர் சக்கைபோடு போடுகிறது.இரண்டுமே சமூக வலைப்பின்னல் தளங்கள்.பகிர்வும் ,சக இணையவாசிகளோடு கைகோர்ப்பதுமே இவற்றின் பலமாக இருக்கிறது. இந்த இரண்டுமே போட்டிபோட்டுக்கொண்டு பிரபலமாகி வருகின்றன.இதனால் தேடல் கொஞம் பின்னுக்குத்தள்ளப்பட்டது போல தோன்றுகிறது. இவ்வளவு ஏன் ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பயன்பாடு காரணமாக் இமெயிலை பயன்படுத்துவதே குறைந்து வருவதாக கூற‌ப்படுகிற‌து.

தேடல் முதல்வன் கூகுலுக்கு இதைவிட கவலை தரக்கூடியது வேறில்லை. ஃபேஸ்புக் ம‌ற்றும் டிவிட்ட‌ர் ச‌வாலை ச‌மாளிக்கும் வ‌கையில் கூகுல் த‌ன‌து ஜிமெயில் சேவை வாடிக்கையாள‌ர்க‌ளுக்கான‌ ச‌முக வ‌லைப்புன்ன‌ல் வ‌ச‌தியை அறிமுக‌ம் செய்துள்ள‌து.

கூகுல் பஸ் என்னும் இந்த சேவையின் மூல‌ம் ஜிமெயில் ப‌ய்னாளிக‌ள் புகைப்ப‌ட‌ம் செய்தி ம‌ற்றும் இணைப்புக‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ளோடு சுல‌ப‌மாக் ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.அத‌வ‌து ஜிமெயிலை விடவெளியேறாம‌லேயே ஃபேஸ்புக் ,டிவிட்ட‌ர் த‌ரும் வ‌ச‌தியை ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ள‌லாம். முத‌ல் க‌ட்ட‌மாக‌ தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ய‌னாளிக‌ளுக்கு இந்த‌ சேவைக்கான‌ அழைப்பு அனுப்ப‌ ப‌ட்டுள்ள‌து.அடுத்த‌ க‌ட்ட‌மாக‌ அனைவ‌ருக்கும் விரிவு ப‌டுத்த‌ப்ப‌டும் என‌ எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

இத‌ற்கான‌ ப‌க்க‌ம் அழ‌காக‌வே உள்ள‌து. ஐபோனுக்கான‌ த‌னி செய‌லியும் அறிமுக‌மாகியுள்ள‌து.இந்த‌ சேவை மூல‌ம் கூகுல் இண்டெர்நெட் உல‌கில் த‌ன‌து முன்ன‌ணி இட‌த்தை த‌க்க‌ வைத்துக்கொள்ள‌ முய‌ற்சி செய்துள்ள‌து.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews