தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, July 20, 2012

கணணியை சுத்தப்படுத்த 10 வழிமுறைகள்

கம்ப்யூட்டரைப் பராமரிப்பதற்கான செலவினைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றால் அதனை அவ்வப்போது சுத்தப் படுத்தி வைத்திருக்க வேண்டும்.

பலர் கம்ப்யூட்டரின் சிபியு கேபினட்டை டேபிளின் அடியில் சிறு பெட்டி போன்ற அமைப்பில் வைத்து .அதற்குக் கதவும் வைத்து பூட்டி விடுவார்கள். பின்புறமாக கேபிள்கள் இணைக்கப் பட்டிருக்கும் டேபிளை சுவர் ஓரமாக வைத்துவிட்டால் சிபியு கேபினட்டை சுத்தம் செய்வதனையே மறந்து விடுவார்கள். விளைவு? ஒரு நாள் கம்ப்யூட்டர் பூட் ஆகாது. சுத்தம்செய்யாததால் தூசியும் ஈரமும் சேர்ந்து மதர்போர்டு அல்லது இணைக்கும் வயர்கள் கெட்டுப் போயிருக்கலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளைக் கடைப்பிடித்தால் கம்ப் யூட்டருக்குப் பாதிப்பு வருவதைத் தடுக்கலாம்.

1. உங்கள் கம்ப்யூட்டரை எப்போ தும் தரையில் வைத்து இயக்க வேண்டாம். கம்ப்யூட்டர் டேபிள் அல்லது ஷெல்ப் மீது வைத்து பயன்படுத்த வேண்டும்.









2. கம்ப்யூட்டரைச் சுத்தம் செய்திடும் முன் கம்ப்யூட்டருக்கு வரும் மின் சக்தியை நிறுத்தவும். சிபியூவிற்குச் செல்லும் அனைத்துக் கேபிள்களையும் எது எது எங்கு மாட்டப்பட்டுள்ளது என்பதைக் குறித்துக் கொண்டு கழற்ற வும்.

3. இப்போது வேக்குவம் கிளீனர் போன்ற சாதனம் அல்லது சைக்கிளுக்கு காற்றடிக்கும் பம்ப் போன்றவற்றை வைத்து காற்றை கேபினுக்குள் அடிக்கவும். காற்று தரும் முனை அரை அடியாவது விலகி இருக்க வேண்டும். நன்றாக அனைத்து தூசியும் வெளியே வரும் வகையில் இந்த ட்ரீட்மெண்ட் கொடுக்கவும்.





4. இறுதியில் கம்ப்யூட்டர் கேபினுக்கு வெளியே ஈரத் துணி கொண்டு அனைத்தையும் அழுத்தம் தராமல் துடைக்கவும். கிளினிங் ப்ளூயிட் இருந்தால் அதனை லைட்டாக ஸ்பிரே செய்து அது உலர்ந்தவுடன் பேப்பர் டவல் கொண்டு சுத்தம் செய்திடவும்.

5. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் கம்ப்யூட்டர் உள்பாகத் தினை அல்லது மதர் போர்டினை ஈரத் துணி கொண்டு துடைக்கக் கூடாது. உள்ளே ஸ்பிரே செய்யக் கூடாது.


6. கம்ப்யூட்டரில் செயலாற்றுகை யில் அதன் அருகே டீ, காபி கப் வைத்தல், குடித்தல் போன்றவை கூடாது. சிறிய பின், கேர் பின், ஜெம் கிளிப் போன்றவற்றை கீ போர்டு அல்லது சிபியூவின் மேல் வைத்தல் கூடாது.


7. கீ போர்டினைக் கிளீன் செய்கையில் அதிகக் கவனம் தேவை. கீ போர்டை அதன் இணைப்பை விலக்கி விட்டு தலைகீழாகத் திருப்பி மெதுவாகத் தட்டவும். உள்ளே நுழைந்து குடி இருக்கும் சிறிய துகள்கள் மற்றும் தூசி வெளியே வரும். பின் நெட்டு வாக்கில் இரு புறமும் நிறுத்தி தட்டலாம். இனி வேக்குவம் கிளீனர் அல்லது அது போன்ற சாதனத்தைக் கொண்டு காற்றை உள் செலுத்தி சுத்தம் செய்யலாம். கீ போர்டின் மேலாக கிளீனிங் ப்ளூயிட் நனைத்த துணியைக் கொண்டு சுத்தம் செய்திடலாம். பின் ஈரத் துணி கொண்டு சுத்தப்படுத்தலாம். மெம்ப் ரேன் கீ போர்டாக இல்லாமல் மெக்கானிக்கல் கீ போர்டாக இருந்தால் கீ போர்டின் பின்புறம் உள்ள ஸ்குரூக் களைக் கழற்றி உள்ளே இருக்கும் போர்டில் உள்ள தூசியினைத் துடைத்து எடுக்க லாம். மெம்ப்ரேன் எனில் அதனைச் சரியாக மீண்டும் பொருத்துவது கடினம். எனவே கழட்டாமல் இருப்பது நல்லது. தூசி நிறைந்த சூழ்நிலையில் நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குபவராக இருந்தால் கீ போர்டுக்கென விற்பனை செய்யப் படும் பிளாஸ்டிக் கவரினைக் கொண்டு கீ போர்டை மூடி இயக்குவது நல்லது. எப்படி இருந்தாலும் மாலையில் அல்லது இரவில் பணி முடித்துச் செல்கையில் கீ போர்டுக்கான கவர் போட்டு மூடவும். பெரும்பாலும் ஐவரி வண்ணத்தில் கீ போர்டுகள் உள்ளன. கறுப்பு வண்ணத்திலும் கிடைக்கின்றன. ஐவரி வண்ணத்தில் இருந்தால் அடிக்கடி துடைத்தால் தான் அழுக்கு படிவது தெரியாது. வெகுநாட் களாகத் துடைக்காமல் இருந்து அது மஞ்சள் அல்லது கருப்பாகிப் போனால் பின் என்ன அழுத்தி துடைத்தாலும் பழைய வண்ணம் கிடைக்காது.


8. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன் பாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் உண்டென்றால் அது மவுஸ்தான். எனவே தான் அதனைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் தேவை. மவுஸ் பல திசைகளில் நகர்வதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால் அதனை அவசியம் சுத்தம் செய்திட வேண்டும். முதலில் மவுஸைக் கழட்ட வேண்டும். ட்ராக் பால் மவுஸாக இருந்தால் அதன் மேலாக உள்ள சிறிய வீல் போன்ற பாகத்தினை ஆண்டி கிளாக் வைஸ் திசையில் திருகினால் தனியே வந்துவிடும். ட்ராக் பாலும் வெளியே வரும். நிச்சயம் அந்த சிறிய பந்தில் நிறைய அழுக்கு சேர்ந்து கருப்பாகி இருக்கும். இதனைத் தண்ணீர் அல்லது கிளீனிங் லிக்விட் போட்டு துடைக்க வேண்டும். அது இருந்த இடத்தில் சிறிய கம்பிகள் இரண்டு தெரியும். இதில் சிறிய முடி அல்லது அழுக்குகள் சேர்ந்திருக்கும். இதனையும் முழுமை யாகச் சுத்தப்படுத்த வேண்டும். இனி ட்ராக் பாலினை அதன் இடத்தில் வைத்து மேலாக வீல் போன்ற பிளாஸ்டிக் வளையத்தை வைத்து கிளாக் வைஸ் திசையில் சிறிது சுழட்டினால் அது கெட்டியாக அமர்ந்து கொள்ளும். இனி மவுஸைப் பயன்படுத்துவது இலகுவாக இருக் கும். பிற வகை மவுஸ்களைச் சாதாரண மாக அதன் வெளிப்புறத்தில் துடைத் தால் போதும்.


 

9. மானிட்டரையும் தரையில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. மானிட்டரின் பின்புறம் உள்ள கவரை எப்போதும் கழட்டக் கூடாது. அழுத்தமான காற்றை பின்புறம் இருந்து முன் புறமாகச் செலுத்தினால் தூசு தானாக வெளியேறும். இதைப் பலமுறைச் செயல் படுத்தி தூசியை வெளியேற்ற வும். பின் ஈரத்துணி அல்லது கிளீனிங் லிக்விட் பயன் படுத்தி மானிட்டரின் வெளிப் பாகம் மற்றும் திரையைச் சுத்தம் செய்யலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிய துளைகளின் வழியாக எதுவும் ஸ்பிரே செய்யக் கூடாது.








10. ஆர்வக் கோளாறினால் எந்த துணை சாதனத்தையும் கழற்றிப் பார்க்கக் கூடாது. பின் மீண்டும் அதனை மாட்டுவது கடினமாகிவிடும்.

Saturday, July 14, 2012

கணிப்பொறியால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபட

நீங்கள் பணிபுரியும் போது கீழ்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்


  • அதிக விசை கொடுத்து மவுஸ்சை பிடிக்காதீர்கள்..
  • நேரடி வெளிச்சத்தில் அமர்ந்து பணிபுரிவதை தவிர்க்கவும்..
  • தோள்களை இலகுவாக வைத்திருக்கவும், கைமூட்டுக்களை இலகுவாக, நேராகவும் வைத்திருக்கவும்.
  • மணிக்கட்டுக்களை நீட்டி நேராகவும் மேசைக்கு இணையாகவும் வைக்கவும்.
  • உங்கள் பர்வை மட்டத்தில் கொஞ்சம் கீழே இருக்குமாறு திரையை அமைக்கவும்.
  • கழுத்தை கொஞசம் தாழ்த்தியே வைத்திருக்கவும், தலையை முன்னோக்கி நீட்டி இருக்கக்கூடாது.
  • உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையே 60 சென்ரி மீட்ரர் இடைவெளியிருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு முக்கால் மணி நேரத்திற்கொரு முறை திரையிலிருந்து பார்வையை விலக்கி ஒரு வெற்று இடத்தை கொஞ்சம் நேரம் பார்க்கவும். 
  • முதுகினை எப்பொதும் இருக்கையில் சாய்ந்திருக்குமாறு அமரவும்.
  • கால் பாதங்கள் தரையில்படும்படி இருக்கவும்
  • கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றவும்.
  • இரண்டு மணி நேரத்திற்குகொரு முறை சிறிது உலாவி வரலாம் காரியாலையத்தில் வேலை பார்ப்பவர்கள் வேறு எதாவது வேலைகளை பார்க்கலாம்.
  • திரை ஆன்டிகிளேர் திரைகள் திரையிலிருந்து வரும் கதிர்கள் நம் கண்களை பாதுகாக்கின்றது
  • கீபோர்ட் பாவிக்கும் போது மணிக்கட்டை ஓய்வாகவைத்திருக்கவும். கீபோர்ட் பட்டன்களை மெதுவாக அழுத்தவும். அச்சு தட்டில் தூசிகள் படியாது வண்ணம் பாதுகாத்துக்கொள்ளவும்.
  • மவுஸ் உள்ளங்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்காதவாறு சிறிய மவுஸ்களை வாங்கவும். ஸ்க்ரோலிங் பட்டன் உள்ள மவுஸ் வாங்குவது சிறந்தது.
  • இருக்கை,  மேசைகள்: மலிவாக கிடைக்கின்றது என்பதற்காக முறையற்ற கதிரை, மேசைகளை வாங்காது. முதுகுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டவைகளை வாங்கவும்.

Tuesday, July 10, 2012

கம்ப்யூட்டர் வைரஸ் :அறிவது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதை எப்படி அறிவது? நிச்சயம் நான் வந்துவிட்டேன் என்று இப்போதெல்லாம் வைரஸ் பைல் அறிவிப்பு வருவதில்லை.

ஆரம்ப காலத்தில் பி.சி.ஸ்டோன் என்று ஒரு வைரஸ் டாஸ் இயக்கத்தில் வந்தது. அந்த வைரஸ் உள்ளே புகுந்து இயங்கத் தொடங்கியவுடன் உங்கள் கம்ப்யூட்டர் கற்களால் தாக்கப்பட்டுள்ளது

 என்று கல் மழை பொழியும் காட்சியைத் திரையில் காட்டும். பின் அந்த காட்சியைத் தான் பார்க்க முடியும். வேறு எதுவும் வேலை பார்க்க முடியாது.சில வேளைகளில் நாம் வைரஸ் இணைந்த அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட பைல் ஒன்றை இயக்குவோம்.


 வைரஸ் கம்ப்யூட்டர் உள்ளே புகுந்து கொள்ளும். ஆனால் அப்போது நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் அதன் பின் கம்ப்யூட்டர் இயக்கத்தில் பல மாறுதல்கள் தெரியும். 


அதனைக் கொண்டு நம் கம்ப்யூட்டரில் வைரஸ் வந்துள்ளது என அறியலாம். அத்தகைய மாறுதல்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

1. முதலில் வழக்கத்திற்கு மாறாக உங்கள் கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும்


2. ஒரு சில கட்டளைகளுக்குப் பணிந்து விட்டு பின் கம்ப்யூட்டர் இயங்காமல் அப்படியே உறைந்து போய் நிற்கும். இந்நிலையில் என்ன நடக்கிறது என்ற பிழைச் செய்தி கிடைக்காது. ஒரு சில வேளைகளில் இந்த பிழைச் செய்தி கிடைக்கலாம்


3. உங்கள் கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி உடனே தானே ரீ பூட் ஆகும். இது ஒவ்வொரு சில நிமிடங்களுக்கு ஒரு முறை தானே நடக்கும். ஏனென்றால் உங்கள் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி சிஸ்டத்தினை கம்ப்யூட்டர் உள்ளே வந்துள்ள வைரஸ் உடைக்க முயற்சிக்கிறது. அப்போது விண்டோஸ் தானாக ரீபூட் செய்கிறது. ஆனால் அவ்வாறு ரீபூட் ஆன பின்னரும் அது முடங்கிப் போய் நிற்கும்.


4. ஹார்ட் டிஸ்க்கில் உள்ள டேட்டா உங்களுக்குப் பிரச்சினையைத் தரலாம். அல்லது ஹார்ட் டிஸ்க்கை அணுக முடியாமல் போகலாம்.


5. திடீர் திடீர் என தேவையற்ற பிழைச் செய்தி வரலாம். உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் உள்ளது. இலவசமாக ஸ்கேனிங் செய்து தருகிறோம் என்று ரிமோட் கம்ப்யூட்டரிலிருந்து செய்தி வரும். இதன் மூலம் வைரஸை அனுப்பி உங்கள் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேறு ஒருவர் தன் கம்ப்யூட்டர் மூலம் முயற்சிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.


6. கம்ப்யூட்டரில் கிடைக்கும் மெனுக்களும் டயலாக் பாக்ஸுகளும் கன்னா பின்னா என்று தெரிகிறதா? வைரஸ் பாதித்ததன் அடையாளம்தான் இது.


7. கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அப்ளிகேஷன் சாப்ட்வேர் அனைத்தின் இ.எக்ஸ்.இ. பைல்கள் அங்கும் இங்குமாய் பல நகல்களில் இருக்கும். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஷார்ட் கட் ஐகான்களில் கிளிக் செய்தால் அதற்கான புரோகிராம் இயங்காது.மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளெல்லாம் பொதுவாக தற்போது உலா வரும் வைரஸ்களினால் ஏற்படும் மாற்றங்கள்.

 இன்னும் பல வகைகளில் வைரஸ் பாதிப்பினை கம்ப்யூட்டரில் அறியலாம். வழக்கமான வகையில் இல்லாமல் கம்ப்யூட்டர் இயக்கத்தில் இன்டர்நெட் இணைப்பில் மாறுதல் இருந்தால் உடனே எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது நல்லது.


முதலில் உங்கள் டேட்டா அனைத்தையும் பேக் அப் எடுத்துவிடுங்கள். ஆண்டி வைரஸ் தொகுப்பினை அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள். நேரம் கிடைக்கும்போது மாதம் ஒரு முறையாவது ஆண்டி வைரஸ் தொகுப்பினை இயக்கி அனைத்து டிரைவ்களையும் சோதித்துவிடுங்கள்.

Thursday, July 5, 2012

கணினி என்றால் என்ன...?

கணினி என்பது பல எலொக்ரொனிக் இளைகளினால் ஆன transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால் பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஓர் எலெக்ரொனிக் இயந்திரம்

ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும் புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து,அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும், வேகமாகவும்; தன்னிச்சையாக செயல் பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணினி என அழைக்கப் பெறுகின்றது.


கணினியின் முழுச் செயற்பாட்டிற்கும் அதில் உட்புகுத்தப் பெற்றுள்ள ஒபறேற்ரிங் சிஸ்ரமே அடித்தளமாகவும், உந்துசக்தியாகவும் அமைந்து; எல்லா உறுப்புகளையும் ஒன்றாக இணைத்து இயக்குகின்றது.


அது Application Software ன் பாவனையின் போது அதனுடன் இணைந்து அது இயங்கும் மேடையாக அமைந்து தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, அவ்வப்போது அவற்றில் முன்கூட்டியே பதியப்பெற்றுள்ள உபதேசங்களிற்கு அமைய; கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் CPU க்கு வழங்குவது ஒபறேற்ரிங் சிஸ்ரமே.



கணினிகளின் வகைகள்:

எல்லோருடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பலவித அளவுகளில் கணினிகள் உருவாக்கப் பெற்று, அவைகள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப் பெற்றுள்ளன.


அவையாவன:

1. Personal -Computers;
Desktop – Pc
Tower – Pc
Laptop – Pc
Hand held – Pc
Network – Pc
PC – Personal Computer – பிரத்தியேக கணினி என பொருள்படும்


2. Mini – Computers:
இது ஒரு டிபாட்மென்ரில் பாவிப்பது. இதன் மூலம் நூற்றுக் கணக்கான கணினிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

3. Mainfram – Computers:
பெரிய நிறுவனங்களில் பாவிப்பது. இதன் மூலம் பல ஆயிரம் கணினிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.


4. Super – Computers:
நாசா போன்ற பெரிய ஆராச்சி நிலையங்களில் பாவிப்பது. வேகத்தில் கூடியதும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரு செக்கண்டில் செய்யக்கூடியது.


இந்த எலெக்ரொனிக் (System Unit) இயந்திரத்தை உடம்பு எனவும், அதனை இயக்கும் (Operating System) ஒபறேற்ரிங் சிஸ்ரம் எனும் புறோக்கிறாமை உயிர் எனவும் அழைப்பர். உயிர் புகுத்தப்பெறாவிடில் உடலான இயந்திரம் இயங்காது. இந்த இயந்திரத்தில் உள்ள உறுப்புகளை Hard Ware “வன் பொருள்” எனவும்; இதில் (Install) உள்ளூட்டல் செய்யப்பெற்ற Operating System த்தையும் Application software யும் Soft Ware “மென் பொருள்” எனவும் அழைப்பார்கள்.



இந்த எலெக்ரொனிக் இயந்திரத்திற்கு மனித மொழி தெரியாது, ஆனால் மின்சாரம் பாயும் போது ”on” “1″ என்பதையும் மிசாரம் இல்லாத பொழுது ”off” “0″ என்பதனை மட்டும் உணரக்கூடியது. இதனை ஆதாரமாக வைத்தே இதனை இயக்கும் Soft Ware என்னும் மென்பொருள் Operating System எழுதப் பெற்று Install செய்கின்றார்கள். அதன் பின்னரே மனித மொழியை கணினி புரிந்து செயல்படுகின்றது. இந்த Soft Ware எழுதுவதற்கென்றே பல கணினி மொழிகள் உருவாக்கப் பெற்றுள்ளன (C++, Java, Pascal போன்றவை).

Wednesday, July 4, 2012

லேப்டாப் கம்ப்யூட்டர்கள் - சில யோசனைகள்

நாள்தோறும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாடு தொடர்ந்துஅதிகரித்துக் கொண்டே போகிறது. உயர்கல்வி மாணவர்கள் அனைவரும் லேப்டாப் கம்ப்யூட்டர் தங்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவை என உணரத் தொடங்கி விட்டனர். அதே போல பல இடங்களுக்குச் சென்று, வர்த்தகம் மேற்கொள்பவர்களும் அலுவல் ரீதியாகப் பணியாற்றுபவர்களும் லேப்டாப்கம்ப்யூட்டரைத் தங்கள் மொபைல் அலுவலகமாகவே தூக்கிச் செல்கின்றனர்.
டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் சூழ்நிலைக்கும் லேப்டாப் பயன்படும் சூழ்நிலைக்கும் பலத்த வித்தியாசம் உள்ளது. பயன்படுத்தப்படும் வகையிலும் வேறுபாடான நிலைகள் உள்ளன. இவற்றின் அடிப்படையில் ஒருவர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கே காணலாம்.
1. எந்த அளவிற்கு வெப்பம் வெளிவருகிறதோ அந்த அளவிற்கு லேப்டாப்பின் ஏதேனும் ஒரு பகுதி பிரச்னை கொடுக்கலாம். லேப்டாப்பை தொடர்ந்து மெத்தையில் வைத்தோ அல்லது தலையணையை சப்போர்ட்டாக வைத்தோ பயன்படுத்தி வந்தால் கம்ப்யூட்டரிலிருந்து வெப்பம் வெளியாவதற்குத் தரப்பட்டிருக்கும் துளைகளை மூடிவிடுகிறோம். இதனால் வெப்பம் வெளியேறும் வாய்ப்பின்றி உள்ளே இயங்கும் உறுப்புகளைக் கெடுத்துவிடும் வாய்ப்புகள் உள்ளன.
டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் உள்ளது போல கேபின் உள்ளே பேன்களைச் சுழலவிட்டு உள்ளிருக்கும் வெப்பத்தை வெளியேற்ற முடியாது. எனவே வெளியே இருந்தவாறே இயங்கும் சிறிய பேன்கள் லேப் டாப் கம்ப்யூட்டருக் கென்றே கிடைக்கின்றன. இவற்றை வாங்கி இணைத்துப் பயன் படுத்தலாம். இவை பெரு ம்பாலும் யு.எஸ்.பி. யில் இணைத்து இயக்கலாம். லேப்டாப்பில் எங்கெல் லாம் வெப்பம் வெளிவரத் துளைகள் உள்ளனவோ அங்கெல்லாம் அதிக வேகமாக காற்று பீய்ச்சி அடிக்கும் சாதனம் மூலம் தூசியை வெளி யேற்ற வேண்டும்.
2. எந்த கம்ப்யூட்டரிலும் ஹார்ட் டிஸ்க் தான் நம்மை உற்சாகப்படுத்தும் மற்றும் ஒரேயடியாக வெட்டிச் சாய்க்கும் சாதனமாகும். சிறிய பிளாட்டர்கள், ரீட்/ரைட் ஹெட்கள் மற்றும் அதனுள்ளே அமைந்திருக்கும் நகரும் சிறிய உறுப்புகள் ஆகியவை நம் இதய இயக்கத்திற்கு ஒத்ததாகும். ஏதேனும் பலத்த அதிர்ச்சி, தட் என்று லேப்டாப்பை மெத்தையின் மீது போடுவது போன்ற செயல்கள் இவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இயக்கத்தை நிறுத்தலாம்.
இதன் இயக்கத்தில் ஏற்படும் வெப்பமும் வெளி யேற்றப்பட வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அண்மைக் காலத்தில் சாலிட் ஸ்டேட் எனப்படும் ஹார் ட் டிஸ்க்குகள் வெளிவந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்த டிரைவ்களில் நகரும் உறுப்புகள் இல்லை. பிளாஷ் மெமரி பயன்படுகிறது. எனவே மிக மிகக் குறைந்த அளவிலே தான் வெப்பம் வெளிப்படுகிறது. மேலும் இவை அதிர்ச்சி, அதிக பட்ச சீதோஷ்ண நிலை ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. தற்போது இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் விரைவில் விலை குறையும் என எதிர்பார்க்கலாம். அப்போது இவற்றையே ஹார்ட் டிரைவாக வாங்கிப் பயன்படுத்துவது நல்லது.
3. வேலை பார்த்தபின் அலுவலகத்திலிருந்து லேப் டாப்புடன் வருகிறீர்கள். படுக்கை அறையில் உள்ள மெத்தையில் பொத்தென்று அதனை வைக்கிறீர்கள். அது சிறிது மேலே எழும்பி கீழே விழுகிறது. அதன் பின் அய்யோ அம்மா என்று கத்தி என்ன பிரயோஜனம். லேப்டாப் கம்ப்யூட்டரை எப்போதும் முட்டைகள் அடங்கிய பையைக் கொண்டு வருவது போல் கொண்டு வர வேண்டும். எனவே லேப்டாப் நிறுவனம் தந்துள்ள பையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதையும் கவனமாக மெதுவாகப் பயன்படுத்த வேண்டும். அல்லது அதைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு தரும் பை ஒன்றைப் பயன்படுத்தலாம்.
பை இல்லாமல் லேப் டாப்பைத் தூக்கிக் கொண்டு வருகையில் அதன் மீது அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். ஒரு சிலர் பையின் உள்ளே உள்ள சிறிய அறைகளில் பைல்கள், தாள்கள், பேனாக்கள், மொபைல் போன் சார்ஜர்கள் என இன்றைய காலத்தில் எப்போதும் தேவைப்படும் சில சாதனங்களை திணித்து எடுத்து வருவார்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
4. எப்படி மரணமும் அரசு விதிக்கும் வரிகளும் உறுதியானவையோ அதே போல பேட்டரிகள் ஒரு காலத்தில் தன் பவரை இழந்துவிடும் என்பதுவும் உறுதியே. எனவே பயன்படுத்த பயன்படுத்த இவை ஒரு காலத்தில் மொத்தமாகத் தன் திறனை இழக்கும். பல்வேறு கணக்கீடுகளின்படி சராசரியாக ஒரு பேட்டரி அதிக பட்சம் 500 முறை சார்ஜ் செய்திடும் வரையே சரியாகச் செயல்படுகிறது. 18 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வரலாம். அதன்பின் வேறு பேட்டரிதான் போட வேண்டும். பேட்டரி பவரில் லேப் டாப்பினைப் பயன்படுத்துகையில் லோ பேட்டரி சிக்னல் வரை பயன்படுத்தி பின்னர் சார்ஜ் செய்திடவும். எப்போதும் பேட்டரியிலிருந்து இது போன்ற சிக்னல் வருகையில் சார்ஜ் செய்வதே நல்லது.
5. லேப் டாப்பினை ஸ்டேண்ட் பை நிலையில் வைக்க வேண்டாம். இந்த நிலையிலும் பேட்டரி திறன் பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். இதற்குப் பதிலாக லேப்டாப்பினை ஷட் டவுண் செய்து பின் மீண்டும் இயக்கலாம்.

Tuesday, July 3, 2012

கண்களை பாதுகாக்க Software ?

நம்முடைய கணணியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப்பதை பலர் மறந்துவிடுகிறோம்.

அதிக நேரம் கணணி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் அதிகம் கணணியில் பணிபுரிபவர்கள் எனில் உங்கள் கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள்.
பகல் நேரங்களில் உங்கள் மொனிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும். அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.
 நம் மொனிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.
 இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மொனிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.
 இதனை தரவிறக்கியதுடன் உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். பிறகு Change Settings சென்று

1. ADJUST YOUR LIGHTING FOR DAY AND NIGHT: உங்களுக்கு வேண்டியவாறு பகலிலும், இரவிலும் எவ்வளவு வெளிச்சம் வேண்டும் என்பதை தேர்வு செய்யுங்கள்.
 2. SET YOUR LOCATION: இதில் சென்று Change அழுத்தினால் where am i? என்று தோன்றும். windowsல் locate என்பதை கிளிக் செய்து வரும் mapல் உங்கள் இருப்பிடத்தினை தேடி latitude and longitudeனை copy செய்து அதில் தரவும்.
 3. TRANSITION SPEED: திடீர் என்று மொனிட்டரின் வெளிச்சம் அதிகரிப்பதே, குறைவதே நம் கண்களுக்கு ஒவ்வாது. ஆகவே வெளிச்சம் மாறும் வேகத்தை உங்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்யுங்கள்.
இது முற்றிலும் இலவசமானது. linux மற்றும் mac பதிப்புகளும் உள்ளன.

Download செய்ய இங்கே click செய்யவும் :flux

Sunday, July 1, 2012

ISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்டபிள் பைல்களாக மாற்ற

ISO பைல்களை பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய நாம் நீரோ அல்லது Poweriso, MagicISO, ISO Burner இதில் எதாவது ஒரு ரைட்டிங் சாப்ட்வேரினை பயன்படுத்தியே மாற்றம் செய்வோம். ISO பைல்கள் பெரும்பாலும் அதிக அளவுடையதாகவே இருக்கும். இந்த ISO பைல்களை நாம் பெண்ட்ரைவ்களில் பூட்டபிள் பைல்களாக மாற்றம் செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தினை நாம் USB வழியாக பூட் செய்ய இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மென்பொருளானது Freeware அப்ளிகேஷன் ஆகும். 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த மென்பொருளை Unzip செய்துகொள்ளவும்.  IsoBurner என்பதன் மீது வலதுகிளிக் செய்து தோன்றும் பாப்அப் விண்டோவில் Run as Administrator என்பதை தேர்வு செய்யவும். பின் ஒப்பன் ஆகும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான தேர்வை ஒகே செய்து விட்டு Next பொத்தானை அழுத்தி பூட்டபிள் பைலை உருவாக்கி கொள்ள முடியும். 

இந்த மென்பொருளின் உதவியுடன் நாம் பெண்ட்ரைவுகளிளும் பூட்டபிள் பைல்களை உருவாக்க முடியும். நேரிடையாக CD/DVDக்களில் ISO இமேஜ்களை  ரைட் செய்யவும் 

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews