தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Sunday, September 30, 2012

கூகுளில் PDF பைல்களை மட்டும் தனியாக தேட



இணையத்தில் கூகுள் என்பது இன்றியமையான ஒன்றாக உள்ளது. கூகுள் பல வசதிகளை தான் வாசகர்களுக்கு வழங்குகிறது. அந்த வசதிகளில் தவிர்க்க முடியாத வசதி கூகுள் தேடியந்திரம்(Search Engine). கூகுளில் தேடியந்திரங்கள் வாசகர்களுக்கு தேடுவதை துல்லியமாக தருவதில் கூகுளிற்கு நிகர் யாரும் இல்லை. அவ்வளவு பெருமை மிக்க தேடியந்திரத்தில் நமக்கு தேவையான PDF பைல்கள் மட்டும் வேண்டுமென்றால் சரியாக வருவதில்லை.

PDF பைல்கள் மட்டுமின்றி PDF என்ற வார்த்தைகள் உபயோக படுத்த பட்டிருக்கும் சிறந்த தளங்கள் எமக்கு வருகின்றது. ஆகையால் நாம் PDF பைல்களை தேடி கண்டு பிடிப்பது கடினமான காரியமாக உள்ளது. ஆகவே நாம் தேடுதலில் எப்படி PDF பைல்கள் மட்டும் கொண்டு வருவது என்று பார்ப்போம். 
  • நீங்கள் முதலில் கூகுள் தளத்திருக்கு செல்லுங்கள்.
  • நீங்கள் தேடுவதற்கு பொருத்தமான வார்த்தையை கொடுத்து அதற்கு அருகே Filetype:pdf என்று கொடுக்கவும்.
  • பின்பு search பட்டனை அழுத்தவும்.
  • இப்பொழுது உங்களின் தேடலின் முடிவுகள் அனைத்தும் pdf பைல்களாகவே வந்திருக்கும்.
  • இதை உறுதி படுத்தும் வண்ணம் அனைத்து முடிவுகளுக்கு முன்னும் [PDF] என்று வந்திருக்கும்.
  • உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்த்து கொள்ளவும்
                      

Sunday, September 23, 2012

ஜாவா இன் அடிப்படை விளக்கம்



ஜாவா ஆனது உயர் தர மொழிகளில் ஒன்றாகும். இது அமைப்புகளை (object oriented language) கொண்ட கணணிமொழி ஆகும். ஜாவா coding ஆனது Text Editor களில் ஆங்கில சொற்களை பாவித்து எழுதப்படும். Text Editor க்குஉதாரணம் ஆக Notepad, word pad. Notepad++ போன்றனவற்றை கொள்ளலாம்.ஜாவா code இனை சேமித்து DOSகட்டளையின் முலம் நெறிபடுத்தி (Compile) விளைவு பெறப்படும் (Run). ஜாவா code ஆனது சிறிய பெரியஎழுத்துகள் வேறுபாடை கொண்டது இதனை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
Notepad இனை பெறல்.
Start-->All programs-->Accessories--> Notepad
ஜாவா code இன் அடிப்படை கட்டமைப்பு (எதாவது ஒரு Text Editor அழுத்தலாம்)
public class Example
{
public static void main(String arg[ ] )
{
statement1;
statement2;
----------------
statement3;
}
}
இதனை சேமிக்கும் முறை 
இதனை சேமிக்கும் போது வகுப்பு (class) பெயர் இல் சேமித்தல் வேண்டும்
Example.java
DOS கட்டளை இனை திறக்கும் முறை 
Start-->Run
Run Box இல் cmd என அழுத்தி ok பொத்தனை அழுத்தவும்.
compile செய்யும் முறை 
javac Example.java
Run செய்யும் முறை 
java Example
உதாரணம் 1
class Example1
{
public static void main(String arg[ ])
{
System.out.print("Hello World");
}
}
சேமித்தல் :- Example1.java
Compile செய்தல் :- javac Example1.java
வெளியீடை பெறல் :- java Example1
வெளியீடு :- Hello World
இங்கு வகுப்பு (class) பெயர் Example1 ஆகும். public static void main(String arg[ ]) இது பிரதான மேதொட் (method)ஆகும். System.out.print(); இது ஆச்சு பதிக்க பயன்படும் மெதேட் ஆகும். 
உதாரணம் :02
class Example2
{
public static void main(String arg[ ])
{
System.out.println(“Hello”);
System.out.print(“Welcome to \n”);
System.out.print(“our webpage”);
}
}
சேமித்தல் :- Example2.java
Compile செய்தல் :- javac Example2.java
வெளியீடை பெறல் :- java Example2
வெளியீடு :- Hello
                          Welcome to
                          our webpage
வெளியீட்டில் புதிய வரியை பெற System.out.println(); மேதொட் அல்லது \n பாவிக்கபடும். 
மாறிகள் (Variables)
சிறிய முழு எண்கள் (integers) int
பெரிய முழு எண்கள் (double) double
தசம எண்கள் (float) float
உண்மை அல்லது பொய் (boolean) boolean
சொற்கள் (String) String
எழுத்துகள் (characters) char
ஜாவா இல் மாறிகளை உருவாக்குதல் 
int x;
இங்கு x ஆனது மாறியின் பெயர் 
உதாரணம் ஆக 
int y;
double z;
float x=0.00f;
String s;
char c;
ஜாவா இல் மாறிகளுக்கு பெறுமானங்களை இடல்
int x=10;
double z=10000;
float a =10.09f;
String s="jaffna "
char a ="A";
இங்கு சொற்கள் , எழுத்துகளுக்கு இற்கு " " பயன்படுத்தப்பட வேண்டும். 
தசம எண்களுக்கு கட்டியவாறு f இடப்பட வேண்டும்.
செயட்படுத்திகள் (Operations)
செயட்படுத்திகள் பல வகைப்படும்
1) கணித்தல் செயட்படுத்திகள் (Arithmetic Operations) 
    + ஊட்டல் (2+4=6)
     - கழித்தல் (4-2=2) 
     * பெருக்கல் (4*2=8) 
     / வகுத்தல் (9/2=4) 
    % மீதிகாணல்(9/2=1) 
2) ஒப்பிடும் செயட்படுத்திகள் (comparison Operatin)
    > பெரிது 
    < சிறிது 
    <= சிறிது அல்லது சமன் 
   >= பெரிது அல்லது சமன் 
    = = சமன் 
    != சமன் அல்ல 
3) ஊட்டும் அல்லது குறைக்கும் செயற்படுத்திகள்.
    ++ ஊட்டுதல் (increment)
     -- குறைத்தல் (decrement)
இங்கு x++ எனின் x=x+1 என்ற கருத்தை தரும்.
if Condition 
இது கட்டுபாடுகளை இட பயன்படுகிறது 
உதாரணமாக ஒரு நபர் வாக்களிக்கும் உரிமை உள்ளவரா இல்லையா என காண (18 வயது அல்லது அதற்கு மேல் உண்டு எனக் கொண்டால் )
class Vote
{
public class static void main(String arg[ ])
{
 int age=19;
if(age>=18)
{
System.out.print("Yes");
}
else 
System.out.print("No");
}
சேமித்தல் :- Vote.java
Compile செய்தல் :- javac Vote.java
வெளியீடை பெறல் :- java Vote
வெளியீடு :- Yes
இங்கு அவருடைய வயது 18 ஜ விட பெரிது எனவே அவருக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. 
பெறுபேறுகளுக்கு தரத்தினை இடல்
உதாரணம் 5A 75 இற்கு மேல் 
B 65 இற்கும் 75 இற்கும் இடையில் 
C 55 இற்கும் 65 இற்கும் இடையில் 
S 45 இற்கும் 55 இற்கும் இடையில் 
W 45 இற்கு கீழ் 
public class Grade
{
public static void main(String arg[ ])
{
int mark=60;
if(mark>75)
System.out.print("Grade=A");
else if(mark>65)
System.out.print("Grade=B");
else if(mark>55)
System.out.print("Grade=C");
else if(mark>45)
System.out.print("Grade=S");
else
System.out.print("Grade=W");
}
}
சேமித்தல் :- Grade.java
Compile செய்தல் :- javac Grade.java
வெளியீடை பெறல் :- java Grade
வெளியீடு :- Grade = C 
for loop திரும்பத்திரும்ப செய்ய வேண்டிய சில விடையங்களை இதனுடாக செய்வது மிகவும் இலகு ஆனது.

இதனது அடிப்படை கடமைப்பு பின்வருமாறு அமையும் 
 for(ஆரம்ப பெறுமானம் ; கட்டுப்பாடு ; அதிகரிப்பு / குறைவு)
உதாரணமாக அமது பெயரை திரும்ப திரும்ப ஐந்து தடவைகள் பதிவு செய்ய பின்வருமாறு எழுதலாம்.
class ForDemo
{
public static void main(String arg[ ])
{
for(int i = 0; i<5;i++)
{
System.out.print("gatherpage");
}
}
}
 சேமித்தல் :- ForDemo.java
Compile செய்தல் :- javac ForDemoe.java
வெளியீடை பெறல் :- java ForDemo
 வெளியீடு :- gatherpage
                        gatherpage
                        gatherpage
                        gatherpage
                        gatherpage

இங்கு i ஆனது 0 தொடக்கம் 4 வரை இயங்கும் போது ஐந்து தடவைகள் பதிவு செய்யபடுகின்றது.
உதாரணம் :-7ஒன்று தொடக்கம் பத்து வரையான இலக்கங்களை ஒன்றன் கீழ் ஒன்றாக பதிவு செய்தல் 
class Number
{
pubilc static void main(String arg[ ])
{
for(int i = 1;i<=10;i++)
{
System.out.println(i);
}
}
}
வெளியீடு :- 
1
2
3
4
5
6
7
8
9
10
உதாரணம் :-8ஒன்றுக்கும் பத்துக்கும் இடையில் உள்ள ஒற்றை எங்களை பதிவு செய்தல்.
class Odd
{
public static void main(String arg[ ])
{
for(int i= 1;i<=10;i+=2)
{
System.out.println(i);
 }
 }
 }
வெளியீடு :-
1
3
5
7
9

Tuesday, September 11, 2012

வைரஸை கட்டுப்படுத்தும் வழிகள்

எப்படி ஒரு கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராமினைப் பெறுகிறது1. ஏற்கனவே3. இன்டர் நெட்டிலிருந்து தகவல்கள் மற்றும் புரோகிராம்களை காப்பி செய்வதன் மூலம்வைரஸ் புரோகிராம் புகுந்த பைல்களை காப்பி செய்வது. 4. இமெயில் கடிதங்கள் மூலம் ஒற்றிக் கொண்டு வருதல். வைரஸ் புரோகிராமினை நீக்குவது என்பது நேரத்தையும் நம் உழைப்பையும் அதிகமான அளவில் எடுத்துக் கொள்ளும் செயலாகும்.
அதைப் பார்க்கும் முன்னர் எப்படி அவை நம் கம்ப்யூட்டரில் தொற்றிக் கொள்வதனைத் தடுக்கலாம் என்று பார்க்கலாம். ஏனென்றால் வைத்தியம் செய்வதைக் காட்டிலும் தடுப்பு வழிகள் அதிக பாதுகாப்பானது அல்லவா!
1. உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸிற்கு எதிரான antivirus program வைத்திருந்தால் (Norton, McAfee, AVG, போன்றவை) உங்கள் பைல்களை ஸ்கேன் செய்வதற்கு முன் அதனை அப்டேட் செய்திடுங்கள். மேலும் பணம் செலுத்தி வாங்கியிருந்தால் அதற்கான காலம் இன்னும் முடியவில்லை என்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பணத்திற்கான காலம் முடிந்திருந்தால் லேட்டஸ்ட் டாக வந்திருக்கும் வைரஸிற்கான விளக்கம் மற்றும் நீக்கும் புரோகிராம்களை அப்டேட் செய்திட முடியாது. இவ்வகையில் அப்டேட் செய்யாத ஆண்டி வைரஸ் புரோகிராம்களைக் கொண்டு ஸ்கேன் செய்வதில் பயனே இல்லை. ஏனென்றால் லேட்டஸ்ட்டாக வந்த வைரஸ்களை இவை கண்டறியாது.
2. அடுத்து உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் இயக்கும் முறைகளுக்கு வருவோம். இந்த புரோகிராமின் சிறிய ஐகான் நிச்சயம் உங்கள் சிஸ்டம் ட்ரேயின் வலது ஓரத்தில் மற்ற ஐகான்களுடன் இடம் பெற்றிருக்கும். பின்புலத்தில் இது இயங்கிக் கொண்டிருப்பதன் அடையாளம் இது. இதனை இருமுறை கிளிக் செய்தால் புரோகிராம் விண்டோ உங்களுக்குக் கிடைக்கும். இந்த ஐகான் இங்கு இல்லை என்றால் மற்ற புரோகிராம்களைப் பெறுவது போல Start மற்றும் All Programs சென்று இதனைப் பெறலாம்.
3. இப்போது உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராமின் main page அல்லது control center கிடைக்கும். இங்கு ஆண்டி வைரஸ் புரோகிராமின் அனைத்து செயல்பாடுகளும் உங்களுக்குக் கிடைக்கும். முழுமையாகப் பார்த்து கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை ஸ்கேன் செய்வதற்கான டேப் அல்லது பட்டனில் கிளிக் செய்து அப்போது கிடைக்கும் விண்டோவில் எவ்வகை ஸ்கேன் மற்றும் எந்த பைல்கள் என்பதனையும் தேர்ந்தெடுத்து ஓகே கொடுத்தால் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் ஸ்கேன் செய்யப்படத் தொடங்கும். இதற்கு Scan டேப் கிளிக் செய்தவுடன் எந்த பைல்கள் அல்லது டிரைவ் எனத் தேர்ந்தெடுக்க ஒரு விண்டோ கிடைக்கும். முழுமையாகக் கம்ப்யூட்டர் முழுவதும் ஸ்கேன் செய்திட Scan Computer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடனே அனைத்து பைல்களும் டிரைவ் வரிசைப்படி ஸ்கேன் செய்யப்படும். இது ஒரு விண்டோவில் காட்டப் படும். அந்த ரிப்போர்ட் விண்டோவில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட் டால் அது அழிக்கபட்டதா? வைரஸ் பாதித்த பைல் குணப்படுத்தப்பட்டதா? வைரஸ் பாதுகாப்பான இடத்தில் (quarantine) வைக் கப்பட்டதா? என்ற தகவல் உங்களுக்குக் கிடைக்கும். இருக்கிற வேலையில் பறக்கிற நேரத்தில் இந்த ஸ்கேன் செய்வதற்கு மறந்து போகிறது என்று நினைக்கிறவரா நீங்கள்? அப்படியானால் உங்கள் வேலையை எளிதாக்கிட ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் வழி தருகின்றன. தானாக ஸ்கேன் (Automatic Scan) பணி நடைபெற செட் செய்திடலாம்.
1. ஆண்டி வைரஸ் புரோகிராமைத் திறந்திடுங்கள்.
2. கிடைக்கும் விண்டோ மூலம் நீங்கள் தானாக ஸ்கேன் செய்யப்பட வேண்டிய டிரைவ் மற்றும் பைல்களைத் தேர்ந்தெடுங்கள்.
3. Tools மெனு செல்லுங்கள். அதில் Scheduler (இந்த சொற்கள் உங்கள் புரோகிராமிற்கு ஏற்றபடி மாறி இருக்கலாம்) என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். பின் Schedule Scan என்பதனைத் தேர்ந்தெடுங்கள்.
4. New என்பதில் கிளிக் செய்திடுங்கள். இதில் கிடைக்கும் விண்டோவில் சிலவற்றை நீங்கள் குறிப்பிட்டுத் தர வேண்டியதிருக்கும். முதலாவதாக ஸ்கேன் செய்யப்பட வேண்டியது எவை? இதனை சில புரோகிராம்கள் Event Type எனக் குறிப்பிட்டிருக்கும். அடுத்து எந்த நேரத்தில் மேற்கொள்ள என்பதற்கு When To Do என்ற பிரிவில் அமைக்கலாம். How Often என்பதன் மூலம் வாரம் ஒருமுறையா, தினந்தோறுமா என்று காலவரையறை செய்திடலாம். நேரத்தை வரையறை செய்திட Start Time என்பதனைப் பயன்படுத்தவும். அனைத்தையும் செட் செய்திட்ட பின்னர் Done என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த காலப்படி ஸ்கேன் நடைபெறும்.
அதெல்லாம் சரி, என்னிடம் ஆண்டி வைரஸ் புரோகிராம் இல்லையே என்று நீங்கள் கவலைப்படலாம். அப்படியானால் இன்னொரு வழியும் உள்ளது. இதற்கு உங்களிடம் இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். இணையத்தில் இலவசமாக இயங்கும் ஆண்டி வைரஸ் புரோகிராம் உள்ளது. கூகுள் அல்லது யாஹூ சர்ச் இஞ்சின் மூலம் ஒன்றைக் கண்டறிந்து இயக்கினால் பைல்கள் ஸ்கேன் செய்யப்பட்டு வைரஸ்கள் அழிக்கப்படும்.
வைரஸ் புகுந்து பிரச்னை செய்கிறதா? எப்போதாவது உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து உங்கள் கம்ப்யூட்டரின் அனைத்து கட்டுப்பாட்டினையும் அதன் பிடிக்குள் எடுத்துக் கொண்டுவிட்டதா? கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராமினையும் இயக்க விடாமல் தடுக்கிறதா? அது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் சிக்கியிருக்கிறீர்களா? இதற்காக உங்களுக்குக் கம்ப்யூட்டர் வழங்கிய நிறுவனம் அல்லது மற்றவரின் உதவியைக் கேட்டபோது அவர்கள் அதிகமான அளவில் பணம் செலுத்த சொல்கிறார்களா? இதனால் நீங்களே இதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய விரும்புகிறீர்களா? கீழே அதற்கான சில வழிகள் தரப்படுகின்றன.
1. முதலில் உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் அல்லது நெட் வொர்க்கிலிருந்து (அவ்வாறு அமைக்கப்பட்டிருந்தால்) இணைப்பு நீக்கம் செய்திடவும். இதனால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் அடுத்த கம்ப்யூட்டருக்குப் பரவுவது தடுக்கப்படுகிறது. மேலும் இன்டர்நெட் மூலமாக இமெயில் கடிதங்களில் ஒட்டிக் கொண்டு செல்வது தடுக்கப்படுகிறது. உங்கள் இமெயில் அட்ரஸ் புக்கிலுள்ள ஒவ்வொரு முகவரிக்கும் வைரஸ் அனுப்பப்படுவதும் தடுக்கப்படுகிறது. இணைப்பை நீக்க கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டிருக்கும் நெட்வொர்க் கேபிளை நீக்கினாலே போதும்.
2. அடுத்து கம்ப்யூட்டரில் உள்ள முக்கியமான பைல்கள், அல்லது அனைத்து பைல்களையும் வைரஸ் பாதிக்காத ஒரு யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவில் பேக்கப் காப்பி எடுத்துக் கொள்ளவும்.
3. அடுத்து உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள சிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) பயன் பாட்டினைக் கவனிக்க வேண்டும். இதனை அவ்வப்போது இயக்கி சில System Restore புள்ளிகளை அமைத்திருந்தால் இது போன்ற சிக்கல்கள் ஏற்படும் நாளில் அந்த நாளுக்குக் கம்ப்யூட்டரை அமைக் கும்படி செய்திடலாம். இதனால் வைரஸ் எந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதன் மூலம் வந்ததோ அது நீக்கப்படும். நீங்கள் இந்த சிஸ்டம் ரெஸ்டோர் புள்ளிகளை அமைக்க Start, Control Panel செல்லுங்கள். (உங்கள் கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருக்க வேண்டும்). அடுத்து Backup and Restore Center என்ற லிங்க்கில் கிளிக் செய்திடுங்கள்.
அடுத்து பக்கவாட்டில் கொடுக்கப் பட்டிருக்கும் பாரில் “Repair Windows Using System Restore” என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள். பின் அதில் வரிசையாகத் தரப்படும் குறிப்புகளைப் பின்பற்றினால் ரெஸ்டோர் பாய்ண்ட் களை அமைக்கலாம். ஓகே, இனி வைரஸ் பிரச்னைக்கு வருவோம். வைரஸ் எந்த பைலில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும் என்றால் அதை அழித்துவிட்டு பின் ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அதனை நீக்கிவிடலாம். வைரஸ் எங்குள்ளது என்று அறிய முடிய வில்லை என்றால் இன்டர்நெட் இணைப்பில் Trend Micro’s HouseCall Antivirus Scan என்ற புரோகிராமினைப் பயன்படுத்தி வைரஸ் எங்கிருக்கிறது என்று அறியலாம்.
இந்த புரோகிராமை http://housecalltrendmicro.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று இயக்கலாம். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் இந்த ஸ்கேனை அறியாது. எனவே முழுமையாக கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடலாம். பெரும்பாலும் பலர் நீக்க முடியாதபடி வைரஸ் வந்துவிட்டால் சி டிரைவினை பார்மட் செய்திடும் வேலையையே மேற்கொள்கின்றனர். இது சரியான வேலை என்றாலும் எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் பார்மட் செய்த பின்னர் பழைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடும்வேலை எல்லாம் நம்மைக் கொல்லாமல் கொல்லும் செயல்களாக மாறும். எனவே மேலே கூறப்பட்ட வழிமுறைகளைக் கையாண்டுவிட்டு

Sunday, September 9, 2012

மென்பொருட்களின் சீரியல் எண்ணை இலவசமாக பெற





இன்று உலகில் கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லை எனலாம். அந்த அளவிற்கு கணினி வளர்ச்சி அடைந்துள்ளது. இப்பொழுது கம்ப்யூட்டர் குறைந்த விலையில் கூட கிடைக்கின்றது. ஆனால் குறைந்த விலையில் கம்ப்யூட்டர் வாங்கினாலும் உடனே அதில் வேலை செய்ய முடியவில்லை . அதில் இயங்குதளங்களை பதிந்தால் மட்டுமே நாம் அனைவரும் உபயோகிக்க முடியும். மற்றும் எமக்கு பிடித்த மென்பொருட்களை இணையத்தில் இருந்து இலவசமாக தரவிறக்கி கொள்கிறோம். ஆனாலும் அப்படி தரவிறக்கம் செய்யும் மென்பொருட்களை விட விலை கொடுத்து வாங்கும் மென்பொருட்கள் மிகுந்த வசதிஉடனும் பாதுகாப்புடனும் இருக்கும். ஆனால் எம்மால் விலை கொடுத்தும் வாங்க முடியாது.

இந்த நிலையில் எமக்கு உதவி செய்கிறது இந்த இணையதளம். இணையத்தில் அனைத்து மென்பொருட்களும் (traial versions)இலவசமாக கிடைக்கும். அதை தரவிறக்கி கம்ப்யூட்டரில் சேமித்து கொள்ளவும். அதை install செய்வதற்கு முன்னால் இந்த இணயத்தளம் செல்லவும் http://www.youserials.com/ இதில் அனைத்து வகையான மென்பொருட்களின் சீரியல் எண்களும் கொடுத்து உள்ளார்கள். உங்களுக்கு எந்த மென்பொருட்களின் சீரியல் எண் வேண்டுமோ அந்த மென்பொருட்களின் பெயரை அதில் ரைப் செய்து என்ட்டர் கொடுக்கவும் . இப்பொழுது கிடைக்கும் எண்ணை copy செய்து நீங்கள் இன்ஸ்டோல் செய்யும் போது கொடுக்கவும்  

                                      

Sunday, September 2, 2012

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்


10. DOWNLOAD 3000 - RANK 4201 இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.download3000.com/


9. SOFT32- RANK 3909 இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.soft32.com/

8. DOWNLOAD ATOZ- RANK 2508 இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.downloadatoz.com/

7. DL 4 ALL- RANK 1404 இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.dl4all.com.

6. FREE DOWNLOAD CENTER- RANK 1256 இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும் http://www.freedownloadscenter.com/

5. ZDNET - RANK 1224 இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://downloads.zdnet.com/

4. FILE HIPPO - RANK 688 இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.filehippo.com/

3. SOFTPEDIA - RANK 348 பல எண்ணற்ற மென்பொருட்களை உள்ளடக்கியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விளங்குகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.softpedia.com/

2. BROTHER SOFT - RANK 300 எண்ணிலடங்கா மென்பொருட்களை உள்ளடக்கியது தினம் தினம் புது புது இலவச மென்பொருட்களை போட்டி போட்டு வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.brothersoft.com/

1. CNET - RANK 159 முதலிடத்தை பிடித்ததில் இருந்தே நம் அனைவருக்கும் விளங்கி விட்டது இத் தளத்தின் அருமை. சென்று பாருங்கள் இங்கு கிடைக்காதது எதுவுமே இல்லை.இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://download.cnet.com


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews