தகவல் முறைமை - 2 No comments | தொகுதி பிரதானமாக 3 செயற்பாடுகளை கொண்டது 1. உள்ளீடு 2. முறைவழியாக்கம் 3. வெளியீடு தகவல்முறைமை இருவகைப்படும் 1. கையினால் செயற்படுத்தப்படும்/தன்னியக்கமற்ற தகவல் முறைமை(Manual information system) 2. கணினி சார் தகவல் முறமை (Computer base information system) கையினால் செயற்படுத்தப்படும்/தன்னியக்கமற்ற தகவல் முறைமை (Manual information system) எல்லா முறைவழியாக்கமும் மனித வலு மூலம் செயற்படுத்தப்படும் முறைமை இதுவாகும். இங்கு தரவுகளும் தகவல்களும் கடதாசியில் எழுதி கோவைகளாக பராமரித்தல் வேண்டும். தீமைகள் · திருத்தமற்றதாக கணப்படும். · துரிதமாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாது. · பெரும் தொகையான தகவல்களை கையாள்வது கடினம். · வினைத்திறன் குன்றிய முறைவழியாக்கமாக காணப்படும். · பாதுகாப்பது கடினம். · தகவல்களை பேணுவதற்கு பெரிய இடவசதி தேவை. கணினி சார் தகவல் முறமை (Computer base information system) தகவல் முறைமை ஒன்றின் செயற்பாடகள் கணினி ஊடாக செயற்படுத்தப்படும் எனில் அதனை கணினி சார் தகவல் முறைமை எனப்படும். இதன் பிரதான கூறுகளாக · வண்பொருள் · மென்பொருள் · பயனாளர்/செய்நிரலாளர் · செயல்முறைகள் · தரவுகளும்,தகவல்களும் முறைமை ஒன்றின் முறைவழியாக்கத்தின் வகைகள் 1. தொகுதி முறைவழியாக்கம் (Batch Processing) 2. நிகழ் நேர முறைவழியாக்கம் (Real Time Processing) தொகுதி முறைவழியாக்கம் (Batch Processing) முறைமை ஒன்றின் முறைவழியாகம் ஆனது தொகுதி தொகுதியாக நிறைவேற்றப்படும் ஆயின் அதனை தொகுதி முறைவழியாக்கம் என அழைப்பா். உ-ம் மாணவர் தினவரவு பதிவு, பல்கலைக்கழக மாணவர் அனுமதி நிகழ் நேர முறைவழியாக்கம் (Real Time Processing) முறைமை ஒன்றின் முறைவழியாகம் ஆனது தொடர்சியாக இடம் பெற்றக்கொண்டு இருக்கும் ஆயின் அதனை நிகழ் நேர முறைவழியாக்கம் என அழைப்பா். உ-ம் தொலைபேசி பரிவர்த்தன முறைமை, வங்கி ATM முறைமை Share This: Facebook Twitter Google+ Stumble Digg A/L or O/L ICT
0 comments:
Post a Comment