தகவல் முறைமை - 4
தகவல் முறைமை ஒன்றின் வகைகள்
தகவல் முறைமையானது அதன் செயற்பாட்டு பிரையோக அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.
1. கொடுக்கல் வாங்கல் முறை வழியாக்க முறைமைகள். (Transaction Processing Systems)
2. முகாமைத்துவ தகவல் முறைமைகள் (Management Information Systems)
3. தீர்மான உதவி முறைமைகள் (Decision Support Systems)
4. வல்லுனர் முறைமைகள் (Expert Systems)
கொடுக்கல் வாங்கல் முறை வழியாக்க முறைமைகள். (Transaction Processing Systems)
அன்றாடம் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களை முறைவழிப்படுத்துவதற்கான தகவல் முறைமையாகும்.
உ-ம் – வங்கி கொடுக்கல் வாங்கல்களை முறைவழிப்படுத்தல்
வர்த்தக நிறுவன கொடுக்கல் வாங்கல்களை முறைவழிப்படுத்தல்
முகாமைத்துவ தகவல் முறைமைகள் (Management Information Systems)
ஒரு நிறுவனத்தின் முகாமைத்துவ தகவல்களை செயற்படுத்தும் முறைமையினை குறிக்கும்.
இவ்முறைமையின் கீழ் ஊழியர் விபரம், சம்பளம், வரவு, செலவு, இலாப நட்ட பதிவுகள் என்பவற்றின் தரவுத்தளங்களை பேனலும், இவற்றினை முறைவழிப்படுத்தி நிர்வாகத்துக்கு தேவையான தரவுகளை பெற்றுக்கொடுத்தலும் இம் முறைமையின் பணியாகும்.
தீர்மான உதவி முறைமைகள் (Decision Support Systems)
தீர்மானம் எடுக்க தேவையான தரவுகளை பயனாளருக்கு பெற்றுக்கொடுக்கும் முறைமை இதுவாகும்.
இதற்கு கணினிக்கு தீர்மாணம் ’மேற்கொள்ளும் முறை, விதிகள், செயலொழுங்குகள், தகவல்கள் என்பவற்றை பெற்றுக்கொடுத்து முறைவழிப்படுத்தப்பட்டு தீர்மாணம் எடுக்க தேவையான தரவுகளை பயனாளருக்கு பெற்றுக்கொடுப்பதாகும்.
வல்லுனர் முறைமைகள் (Expert Systems)
மனிதர்கள் சில துறைசார்ந்த அறிவனைக்கொண்டிருப்பது போல் கணினிக்கும் சில சிறப்பான மென்பொருட்களை பயன்படுத்தி துறைசார்ந்த அறிவினை பெற்றுக்கொடுத்து உரிய நிலைமைக்கு ஏற்ப அறிவுமட்டத்திலான (Knowledge Base) ஆராய்வினை மேற்கொண்டு ஆலோனை வழங்கலை குறிக்கும்.
அதாவது கணினிக்கு செயற்கை முறை சிந்துக்கும் ஆற்றலை(Artificial Intelligent) வழங்கும் முறைமையாகும்.
உதாரணமாக கணினி சார் வைத்திய முறை(Computer Base Medicine)
0 comments:
Post a Comment