தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, October 31, 2013

கல்வியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பங்கு

பொதுவாக, கல்வியில் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்துவத்தை அனைவரும் அறிவர்.
ஆனால், தகவல் தொடர்பு நுட்பத்தின் குறிப்பிட்ட பங்கு மற்றும் அதன் முழுமையான பலனை பெருதல் குறித்தே விவாதங்கள் நடந்து வருகின்றன. இப்பகுதி, கல்வித்துறையில் தகவல் தொடர்பு நுட்பத்தின் தாக்கம் பற்றிய கட்டுரைகள், வலைதளங்கள், கருத்தாய்வுகள் போன்றவைகளை கொண்டுள்ளது. அத்துடன், பள்ளிகளில் எந்த நோக்கில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்தும் இப்பிரிவில் காணலாம்.
தகவல் தொடர்பு பயன்பாடு, அதன் மூலம் ஏற்படும் நன்மைகள், தகவல் தொடர்பு நுட்பங்களை கல்வித் திட்டங்களுடன் ஒருங்கிணைக்க வழிமுறைகள் பற்றிய அனுபவங்களும், இப்பிரிவில் வழங்கப்படுகின்றன.
பயன்படும் தொழில்நுட்பங்கள்
உலகளவில் தொழில் நுட்ப பயன்பாட்டின் அனுபவங்களைப் பார்க்கும் போது, பெரும்பாலும் அவை கீழ்கண்ட தலைப்புகளுள் அடங்கும்
* பல்வேறு ஊடகங்கள் மூலம் கற்றல்
* கல்வித்தொலைக்காட்சி
* கல்வி வானொலி
* இணையதளம் மூலம் ஆலோசனை வழங்குதல்
* நூலகங்கள் மூலம் ஆராய்தல்
* அறிவியல் தொழில்நுட்பத்தில் செயல்முறைகள்
* ஊடகங்களின் பயன்பாடு
* இளம் குழந்தை வளர்ச்சி, குறைந்தளவு மக்கள்தொகை உள்ள இடங்களில் கல்வி, முதியோர் கல்வி, பெண்கல்வி, வேலைத்திறனை அதிகரித்தல் ஆகிய பகுதிகளில் தகவல் தொடர்பு நுட்பங்கள் குறிப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
* ஆசிரியர்களை தயார் செய்யவும், அவர்களது பணிக் காலத்தில் பயிற்சி அளிப்பதற்கான நுட்பங்கள்.
* கொள்கைளைத் திட்டமிடல், உருவாக்குதல், புள்ளி விவரங்கள் பராமரித்தலுக்கான நுட்பங்கள்.
* பள்ளிகள் பராமரிக்கத் தேவையான நுட்பங்கள்.
இன்றைய நுட்பங்கள்
கல்வி கற்றலுக்கு பயன்படும் நுட்பங்கள் குறித்த ஆய்வில், கீழ்கண்ட நுட்பங்கள் அடங்கும்
* கற்பிக்கும் உபகரணங்கள்
* ஆடியோ, வீடியோ மற்றும் இணைய வடிவிளான கருவிகள்
* மென்பொருள், பொருளடக்கம்
* இணைக்கும் முறைகள்
* ஊடகம்
* கல்வி சம்பந்தப்பட்ட இணையதளங்கள்.
கற்பித்தல் பணியை கற்பவர்கள் மையமாக மாற்றுவதில் தகவல் தொடர்பு நுட்பத்தின் பங்கு என்ன?
21ம் நூற்றாண்டில் கல்வித்துறை மாற்றத்தில், தகவல் தொடர்பு திட்டம் பேருதவி புரிந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் முறையாக செயல்படுத்தபடுமேயானால், வாழ்நாள் முழுக்க பயன்படும் கல்வி அறிவு மற்றும் திறமையை மாணவர்கள் எளிதாக பெற இயலும்.
தகவல் தொடர்பு நுட்பம், குறிப்பாக, கணிணி மற்றும் இணையதளம் முறையாகப் பயன்படுத்தப்பட்டால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் பயன்பெரும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் புதிய முறை பாடம் கற்பித்தலில், ஆசிரியர்கள் மாணவர்களை மையப்படுத்தி கற்பிக்க வழிவகுக்கிறது.
ஆர்வத்துடன் பயிலுதல்: தகவல் தொடர்பு தொழில் நுட்ப பயன்பாட்டின் மூலம், பல புதிய முறைகளில் தகவலை பயன்படுத்த மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. மணப்பாடம் செய்து படிப்பதைக் காட்டிலும், வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல், கற்றலை எளிமையாக்குதல், கற்போரின் வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி அமைதல் ஆகியவை சாத்தியமாகும்.
கூட்டாக பயிலுதல் : தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிலுதல் முறையானது, மாணவர்கள், ஆசிரியர்கள், வல்லுநர்களிடையே அவர்களுடைய இடம், தகுதியை கணிக்காமல் கலந்துரையாட ஊக்குவிக்கின்றது. பலவிதமான கலாச்சார பிரிவினரிடையே பழகுவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. இதன் மூலம் கற்போருடையே ஒருமித்த கருத்தும், தகவல் பரிமாரிக் கொள்ளும் திறனும் அதிகமாக உதவி செய்கிறோம். மேலும் கல்வி பயிலுதல் ஒரு காலகட்டத்திற்கு மட்டும் என்றில்லாமல், வாழும் காலம் முழுக்க தொடர்பணியாக மேற்கொள்ளப்படுகிறது.
தகவல் தொடர்பு தொழில் நுட்பம் பயிலுதலை உண்மையிலேயே அதிகப்படுத்தி உள்ளதா?
தகவல் தொடர்பு நுட்பத்தினால் கல்வியில் தாக்கம் ஏற்படுவது, அது எப்படி பயன்படுத்தப்படுகிறது, எதற்காக பயன்படுத்தப்படுகிறது, என்பதைப் பொறுத்து அமையும். மற்ற கல்வி கற்கும் சாதனங்கள், கருவிகள், மாதிரிகளைப் போல, தகவல் தொடர்பு நுட்பம் எல்லாருக்கும், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி செயல்படுவதில்லை.
கல்வி பயிலுதலை சாத்தியமாக்குதல்:
தகவல் தொடர்பு நுட்பம், அடிப்படை கல்வி பயிலுதலை எவ்வளவு அதிகப்படுத்தியுள்ளது என்பதை கணித்தல் கடினமாகும். ஏனென்றால் இதற்காக நடத்தப்பட்ட ஆய்வுப்பணி சிறிய அளவிலானது. முழுமையாகவும் அது பற்றி கருத்து தெரிவிக்கப்படவில்லை. தொடக்கப் பள்ளி அளவில் தகவல் தொடர்பு நுட்பம் கடைபிடிக்கப்பட்ட மாதிரிகளும் இல்லை. உயர் கல்வி மற்றும் பெரியோர் கல்வியில்,
பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு தகவல் தொடர்பு நுட்பங்கள் மூலம் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பதிவு செய்வதை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது விளங்கும்.
தரம் உயர்த்துதல்:
வானொலி, தொலைக்காட்சி மூலம் கல்வி ஒளிபரப்பின் தாக்கம் குறித்த முழுமையான ஆய்வு நடத்தப்படவில்லை என்றாலும், சிறிதளவு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, சாதாரண பள்ளிக்கூடகல்வி முறையோடு இம்முறை ஒத்திருப்பதாக தெரிய வருகிறது. இம்முறையால் மாணாக்கர்களின் மதிப்பெண்களும், அவர்கள் பள்ளிக்கு வருகின்ற நாட்களும் உயர்ந்திருப்பதாக தெரிகிறது.
மாறாக, கணிணிப் பயன்பாடு, இணையதள மற்றும் அது தொடர்பான நுட்பங்களின் பயன்பாட்டால், பயிலுதலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது. ஆனால், இது பற்றி கருத்து பேதங்களும் நிலவுகிறது.
கணிணியின் பயன்பாட்டால், இருக்கக்கூடிய பாடத்திட்டத்தின் பயன்பாட்டளவு உயர்ந்துள்ளதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, கணிணி, ஒரு ஆசிரியராக இருந்து, எப்போதும் பயன்படுவதால், பாடங்களில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற உதவி புரிந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மாணவர்களும் விரைவாக கல்வி பயிலுகின்றனர். கற்கும் திறன் அதிகமாகின்றது. மாணவர்கள் கணிணியை பயன்படுத்தும்போது, அதிகமாக படிக்கத் தூாண்டுதல் ஏற்படுகின்றது. இவ்வளவு முடிவுகள் தெரிவிக்கப்பட்டாலும் இதிலும் சில குறைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கணிணி பயன்பாடு, இணையதளம், அது சார்ந்த நுட்பங்கள், ஆசிரியர் பயிற்சியும், படிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்கவும், உதவி செய்கிறதாம். இந்த ஆய்வுகள் அனைத்தும், விமர்சனத்திற்கு உட்பட்டவை. இதில் குறைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சரியான புள்ளி விபரங்கள் இல்லாததே குறையாகும். மாணவர்கள் ஆசிரியர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றம், கல்வி கற்றலில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வரும் என கூறுப்படுகிறது.
கணிணி மற்றும் இணைய தளங்களின் பயன்பாட்டை கணிப்பதில் உள்ள ஒரு பிரச்சனை, கற்போரை மையமாக வைக்கும் கல்வி சூழலை பரிசோதிக்க, தற்போது நடைமுறையில் இருக்கும் அளவீடுகளால் முடியாது. அத்துடன் கற்கும் முறையோடு, தொழில்நுட்ப பயன்பாடும், ஒருங்கிணைந்து வருவதால், எந்த நுட்பம் சரியானது என்பதை கண்டுபிடிப்பதும் கடினம். கற்றலில் ஏற்படும் மாற்றத்திற்கு, நுட்பங்கள்தான் காரணம் என்பதையும் முடிவு செய்ய இயலாது.

கட்டுரை: http://teacherlibrariannp.wordpress.com/

Tuesday, October 29, 2013

WiFi தொழில்நுட்பம்

Wi-Fi இன் விரிவு”wireless fidelity” மேலும் இது high-frequency wireless local area network (WLAN)
தற்காலத்தில் Wireless Network மிகவும் பிரபலமடைந்து வருகிறது, Laptops, PDA Phone , VoIP phone access போன்றவற்றிலும், அலுவலகங்களிலும் இது பயன்படுத்தப்படுகிறது. பழைய முறையான Wired Network-கை காட்டிலும் இது சுலபமான முறையாகும். Installation and Configuration போன்றவை மிகவும் சுலபமாக செய்யலாம்.
இத்தொழில்நுட்பத்தை அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் 1992ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்கள்
இந்த Wireless Network – WiFi அல்லது 802.11 Network என அழைக்கப்படுகிறது. கீழ்கண்ட படம் ஒரு WiFi Network – ஐ விளக்குகிறது,
.
WLAN தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் IEEE 802.11 standards அடிப்படையாகக் கொண்டது.
Wireless Network-ஆனது, TV, Radio மற்றும் Cell Phones போல Radio Waves எனப்படும் ரேடியோ அலைகளை பயன்படுத்தி வேலை செய்கிறது. இதை தொழில்நுட்ப சொல்லில் Two Way Radio Communication என அழைக்கலாம். இதன் தகவல் எல்லை 100 Meters வரை இருக்கும்.
ஒரு கம்ப்யூட்டரில் உள்ள Wireless Network Adapter அருகில் உள்ள Wireless Access Point- உடன் எப்பொதும் தொடர்பில் இருக்கும், அது Computer Signal-களை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக Wireless Access Point அல்லது Router-க்கு அனுப்பி வைக்கிறது, பின்னர் Router ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) பின் internet-உடன் தொடர்பு கொள்கிறது. அதேபோல், Internet- இல் இருந்து தகவல்களை பெற்றபின் அதை Radio அலைகளாக மாற்றி (coding) தன்னிடமுள்ள Antenna மூலமாக கம்ப்யூட்டரின் Wireless Network Adapter-க்கு அனுப்பிவைக்கிறது. Wireless Network Adapter ஆனது அதை திரும்பவும் Computer Signal-ஆக மாற்றி (Decoding) திரையில் நமக்கு காண்பிக்கப்படுகிறது.
இந்த Radio Signal, மற்ற Radio Signal-களைவிட முற்றிலும் வேறுபட்டது, இதன் அலைவரிசை 2.4 GHz – 5 GHz ஆகும், இது மற்றவற்றைவிட கூடுதல் ஆகும், இந்த கூடுதல் அலைவரிசை அதிகபடியான தகவல்களை Transmit செய்ய உதவுகிறது. கீழ்கண்டவை 802.11 Network Standard-ன் வகைகள் ஆகும் ;
802.11a – இதன் அலைவரிசை 5 GHz வரை, வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது. இது orthogonal frequency-division multiplexing
(OFDM) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Radio Signal-களை பல Sub-Signal-களாக பிரித்து கையாளுவதால் தகவல் இழப்பின்றியும் நல்ல வேகத்துடனும் இயங்குகிறது.
802.11b – இதன் அலைவரிசை 2.4 GHz வரை, வினாடிக்கு 11 Mbps வரை மட்டுமே தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இது complementary code keying
(CCK) modulation என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
802.11g – இதன் அலைவரிசை 2.4 GHz வரை, ஆனால் வினாடிக்கு 54 Mbps வரை தகவல் பரிமாற்றம் செய்யும் திறன் வாய்ந்தது, இதுவும் orthogonal frequency-division
multiplexing (OFDM) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
802.11n – இதுவும் 802.11g Network போலேதான், ஆனால் இதன் வேகம் 802.11g – ஐ விட மூன்று மடங்கு அதிகம், தோராயமாக 140 Mbps. இது Multiple Input, Multiple Output
(MIMO) என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறது.
பொதுவாக நாம் பயன்படுத்தும் Wireless Network – க்கு ஒரு பெயர் உண்டு, அதை – SSID (service set identifier ) எனபர். பொதுவாக இது Wireless Router – இன் தயாரிப்பாளரின் பெயரிலேயே இருக்கும், வேண்டுமானால் இதை நாம் மாற்றி கொள்ளலாம். ஒவ்வரு Wireless Router-க்கும் ஒரு Channel இருக்கும், இந்த Channel – ன் அடிபடையிலேயே தகவல் பறிமாற்றம் நடைபெறும். ஒருவேளை நாம் இரண்டு Wireless Router-களை பயன்படுத்தினால் இரண்டிற்கும் வேறு வேறு Channel-களை பயன்படுத்தவேண்டும், இல்லையென்றால் தகவல் பறிமாற்றத்தில் சில குறைபடுகள் ஏற்படும்.
மற்றும், நம்முடைய Wireless Router – களை Secure Mode – லேயே Configure செய்து வைக்கவேண்டும், இல்லையென்றால் வெளியார்கள் நம்முடைய Network-ஐ தவறாக உபயோகிக்கக்கூடும்.
WiFi Protected Access – WPA, Wired Equivalency Privacy – WEP போன்றவை Wireless Security -ன் சில வகைகள் ஆகும்.

கட்டுரை: http://teacherlibrariannp.wordpress.com/

Monday, October 28, 2013

டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்


கம்ப்யூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் C ஆகவும் மற்றவை அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது கம்ப்யூட்டரில் உள்ள இயக்கத் தொகுப்பு தானாகவே ஒரு எழுத்துப் பெயரை சூட்டிக் கொண்டு பின் அதனை எடுத்தவுடன் நீக்கி விடுகிறது. ஆனால் A முதல் Z வரை இந்த டிரைவ்களுக்குப் பெயர் சூட்டலாம், அதுவும் நீங்களே சூட்டலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள டிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்நாப் இன் (Disk Management snapin) என்ற சாப்ட்வேர் சாதனம் இந்த வசதியைத் தருகிறது.

உங்களுடைய கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு A மற்றும் F எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின் செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை என்றால் A மற்றும் F எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப் பயன்படுத்தலாம். ஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன் பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள் கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.

1. பின் Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக்கிடவும்.
(குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.)\

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும் டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. கிடைப்பதில் Add என்பதைக் கிளிக்கிடுக.

5. இப்போது “Assign the following drive letter” என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
டிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று பார்ப்போம்.
1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.
2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.
3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. “Assign the following drive letter” என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம் செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும் இடங்களில் எல்லாம் தென்படும்.


ஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.

1. Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும். இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து நீக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக் கொடுத்து பார்க்கலாம்.

Sunday, October 27, 2013

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்

புளுடூத் தொழில்நுட்பம்
வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத்.இந்த தொழில்நுட்பமாது இன்று Personal Area Network எனப்படும் வீடுகளில் கணினிகள்,பிறுன்ராகள்,மற்றும்  செல்பேசிகள் என்பவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வலையமைப்பில் பயன்படுகிறது. அன்றாடத் தேவைகளில் பலவகையான இணைப்புக்களை நாம் பயன்படுத்திவருகின்றோம்.இவ்விணைப்புக்களை பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
 ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.
இந்த Personal Area Network இல்( PAN 0r piconet) இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க்(புளுடூத்) அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.
புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்:
அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம்.
பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும். கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன.
உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.
புளுடூத் செக்யூரிட்டி:
எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும்.
உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.

Thursday, October 24, 2013

பாடல் வரிகளை (Lyrics ) WMP and Winamp - ல் தெரிய வைக்க...


ஆங்கில பாடல்களை கேட்கும் நண்பர்கள் பலபேர் அதற்க்கான வரிகளை (Lyrics) தேடி அலைவர். நிறைய வெப்சைட்களில் இதற்க்கான பாடல் வரிகள் கிடைக்கும் ஆனால் அவை NotePad-ல் வைத்து பார்ப்பது போல தான் கிடைக்கும். அதாவது Text பைல் ஆகதான் கிடைக்கும். 

 

இதற்கு மாற்றாக Player-லே நாம் பார்த்துக் கொள்ளும்வண்ணம் சின்ன மென்பொருள்கள் உள்ளன. அவைதான் Plugin எனப்படுகிறது. நிறைய பேர் உபயோகப்படுத்தும் WMP - Windows Media Player-ல் இதற்கான வசதி உள்ளது.
                                                                                                      இந்த Plugin-யை நீங்கள் Install செய்து விட்டால் போதும். நீங்கள் எந்த ஆங்கில பாடல்களை கேட்க விரும்புகிறீர்களோ, அதற்கான Lyrics-யை இது Online-ல் இருந்து தானாக Download செய்துகொள்ளும். (குறிப்பு: இதற்க்கு Net Connection அவசியம்).
இந்த வசதி Winamp-லயும் உள்ளது. அதற்கான Plugin-யை நீங்கள் Download செய்து install செய்து கொண்டால் போதும். அப்புறம் எல்லாம் ”இங்கிலீஸ் பாடலையும் மனப்பாடம் செய்துகிட்டு, பீட்டர் விடலாம்”.
மேலும் இதை நீங்கள் விரும்பிய வண்ணம் Configure செய்து கொள்ளலாம்.

Download:
                  Click Here

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews