தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, February 17, 2012

இணையத்தில் தகவல் தேடுவோருக்கு ..

ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் கூகில் அல்லது வேறு தேடல் பொறிகளைப் பயன்படுத்தி இணையத்தில் தகவல் தேடுவோர் பலருக்கும் ஒரு தலையிடியாக இருப்பது தகவல் தேடும் போது தாம் பயன்படுத்திய தேடற்சொல் (keywordஅடுத்தவர் பார்வைக்கும் போய்விடுவதே.
அதாவது கூகில் தேடுபொறியின் முகப்புப் பக்கத்திலுள்ள தேடற் சொற்களை டைப் செய்யும் கட்டத்தில் நீங்கள் முன்னர் பயன்படுத்திய சொற்கள் அனைத்தையும் திரும்பத் திரும்ப பட்டியலிட்டுக் காண்பிக்கும். எங்கள் வசதிக்காக பிரவுஸர் தரும் இந்த உதவி சில நேரங்களில் சங்கடத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இதன் மூலம் இணையத்தில் என்ன தகவலைத் தேடினோம் என்பதை அடுத்தவர்களும் அறிந்து கொள்கிறார்கள். அதனால் தங்கள் அந்தரங்கம் வெளியில் தெரிந்து விடுமோ கௌரவம் பாதிக்கப்படுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருக்கும். அனேகமாக இணையத்தில் ஸஸஸ தளங்களைப் பார்வையிடுபவர்களுக்கே இந்தப் பயம் அதிகம் இருக்கும்.

முன்னர் தேடும் போது உபயோகித்த தேடற் சொற்கள் வராமல் செய்வது எப்படி என்ற கேள்வி பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. பிரவுஸரிலுள்ள Auto Complete என்பதன் மூலமே இந்த வசதி கிடைக்கிறது. இந்த வசதி உங்களைச் சங்கடப் படுத்துமானால் அதனைத் தடுக்கப் பின்வரும் வழி முறையைக் கையாளலாம்.

நீங்கள் உபயோகிப்பது இன்டர்னெட் எக்ஸ்ப்லோரராயிருந்தால் பிரவுசர் விண்டோ வில் Tools மெனுவில் Internet Options க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் Content டேபின் கீழ் வரும் AutoComplete எனும் பட்டனில் க்ளிக் செய்ய இன்னுமொரு சிறிய டயலொக் பொக்ஸ் தோன்றும். அதில் Clear Forms பட்டனில் க்ளிக் செய்ய முன்னர் பயன்படுத்திய தேடற் சொற்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். அதேபோல் இனிமேல் இந்த தேடற் சொற்கள் பதிவாகாமல் இருக்க அதே டயலொக் பொக்ஸில் Use Autocomplete for என்பதன் கீழ் Forms என்பதை தெரிவு நிலையொலிருந்து (uncheck) நீக்கி விடுங்கள்.

தேடற் சொற்கள் மட்டும்ன்றி முன்னர் பார்த்த இணைய தளங்கDன் பெயர்களும் கூட பிரவுஸரின் எட்ரஸ் பாரில் தோன்றும். முன்னர் பார்த்த இணைய தளங்களின் பெயர்களை மீண்டும் டைப் செய்யாமலேயே அத்தளங்களைப் பார்ப்பதற்கே இந்த வசதி. இங்கும் நீங்கள் பார்த்த இணைய தளங்களின் பெயர்கள் அடுத்தவர்களின் பர்வைக்கு வருவதால் அப்போதும் உங்கள் அந்தரங்கம் பாதிக்கப்படலாம். இதனைத் தடுக்க வேண்டுமானால் மேற்சொன்ன அதே டயலொக் பொக்ஸில் Web Addresses என்பதை தெரிவு நிலையிலிருந்து நீக்கி விடுங்கள்.
அவ்வாறே முன்னர் பார்த்த இணையப் பக்கங்களும்கூட உங்களை சங்கடத்தில் மாட்டி வைக்கும். அதனைத் தடுக்கவும் வழி இருக்கிறது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதே Internet Options டயலொக் பொக்ஸில் Genaral டேபின் கீழ் வரும் Clear History பட்டனில் க்ளிக் செய்து விடுங்கள். உங்கள் இன்டர்நெட் சரித்திரமே எந்தத் தடயமுமில்லாமல் அழிக்கப்பட்டு விடும்.
மேற் சொன்ன இதே வசதிகளை மொஸில்லா பயர்பொக்ஸ் இணைய உலாவியும் தருகிறது. பயர்பொக்ஸில் இந்த வசதிகளை இல்லாமல் செய்ய Tools மெனுவில் Options க்ளிக் செய்ய வரும் டயலொக் பொக்ஸில் Privacy டேபின் கீழ் வரும் History பகுதியில் இருக்கும் மூன்று தெரிவுகளையும் நீக்கி விடுங்கள். இணையத்தில் இனி இஷ்டம் போல் உலாவுங்கள்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews