நாளைய உலகின் தொலைக்காட்சி - IPTV ?
செய்மதிதி தொலைக்காட்சி சேவை, கேபல் தொலைக் காட்சி சேவை, Direct-To-Home எனும் டீடிஹெச் சேவை, ஹைடெபினிசன் டிவி (High Definition TV) என்பன தொலைக்காட்சித் தொழில் நுட்பம் கண்ட முக்கிய வளர்ச்சிப் படிகள் எனலாம். தற்போது, இவற்றையெல்லம் பின்னே தள்ளி விட்டு தொலைக் காட்சி சேவை வழங்குவதில் பலமான பின்னணியுடன் அறிமுகமாகியிருக்கிறது ஐபிடிவி எனும் தொலைக் காட்சி சேவை.
தற்போது நாம் கண்டு களித்து வரும் தொலைக் காட்சி சேவை செய்மதி மூலமோ, கேபல் மூலமோ அல்லது தரை வழி ஒளிபடரப்பான சாதாரண என்டெனா மூலமோ நமது தொலைக் காட்சிப் பெட்டியை டிஜிட்டல் வடிவிலோ அல்லது எனலொக் (analogue) வடிவிலோ வந்தடைகிறது.
ஆனால் வழமையான என்டனாவோ மற்றும் சேட்டலைட் டிஸ் எதுவுமின்றி தொலைபேசி இணைப்பு வழங்கப்படும் கேபல் வழியாக வரும் தொலைக் காட்சி ஒளிபரப்பே ஐபிடிவி. IPTV என்பது Internet Protocol Television என்பதைக் குறிக்கிறது. ப்ரோட்பேண்ட் (Broadband) எனும் அதி வேக இணைய இணைப்பினைப் பயன்படுத்தி தொலைக்காட்சி சேவையை வழங்குதலை ஐபிடிவி எனப்படுகிறது. உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியை அதி வேக இணைய இணைப்பில் தொடுக்கப்படுவதன் மூலம் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவையை இணையத்தின் மூலம் கிடைக்கக் கூடியதாயுள்ளது. இந்த ஐபிடிவி அனேக நாடுகளில் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது.
ப்ரோட்பேன்ட் எனும் அதிஉ வேக இணைய சேவை நிலத்தின் கீழ் போடப்பட் டிருக்கும் பைபர் ஒப்டிக் கேபல் (fiber optic cable) மூலமாக வழங்கப்படுகிறது. இந்த கேபல் 500 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களை ஒரே நேரத்தில் கடத்தக் கூடிய ஆற்றல் வாய்ந்தவை.
உலBல் முதன் முதலாக ஐபிடிபவி 1994 ஆம் ஆண்டில் அறிமுகமானது. அமெரிக்காவின் தொலைக் காட்சி சேவையான ABC நிறுவனத்தின் நிகழ்ச்சிகளே இணையத்தின் மூலம் முதன் முதலில் ஒDபரப்பாகியுள்ளது.
இது வரை மேற்குலக நாடுகளில் மட்டுமே அறிமுகமாகியிருந்த ஐபிடிவிC தற்போது நமது நாட்டிலும் அKமுகமாBIருக்Bறது. இலங்கைIல் கடந்த மாதம் 22 ஆம் திகதி ஸ்ரீலங்கா டெலிகொம்மின் துணை நிறுவனமான விசன்கொம் நிறுவனத்தால் ஐபிடிவி சேவை முதன் முதலாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஐபி (IP) என்பது இன்டர்நெட் ப்ரொட்டகோலைக் (Internet Protocol) குறிக்கிறது. இணையத்தில் TCP/ IP எனும் ப்ரொட்டகோல் பயன்பாட்டிலுள்ளது. ப்ரொட்டகோல் என்பது டேட்டாவை இணையத்தில் அனுப்ப பெற கடைபிடிக்கப்படும் பொதுவான சில விதி முறைகளைக் குறிக்கும். இமெயில் அனுப்பவும் பெறவும், இணைய தளங்களைப் பார்வையிடவும், தொடர்பாடவும் இந்த TCP/ IP எனும் இன்டர்னெட் ப்ரொட்டகோலே நமக்கு உதவுகிறது.
ஐFடிCIல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்டர்னெட் புரட்டகோல் எனப்படும் இணையத்தில் அல்லது ஒரு கணினி வலையமைப்பில் பின்பற்றப் படும் விதி முறைகளுக்கமைவாக சிறு சிறு பகுதிகளாக உடைக்கப்பட்டு "பெக்கட்ஸ்" (packets) எனும் பொதிகளாக தொலைபேசி கேபல் மூலம் நமது கணினியை அல்லது தொலைக்காட்சிப் பெட்டியை வந்தடைகிறது.
ஒரு வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைக்கப்படிருக்கும் ஒவ்வொரு கணினியும் அல்லது சாதனமும் தனக்குரிய (unique) ஒரு எண்ணைக் கொண்டிருக்கும். நான்கு பகுதிகளைக் கொண்டுள்ள இந்த எண் மூலமே ஒவ்வொரு கணினியும் ஒரு வலையமைப்பில் அடையாளம் காணப்படுகிறது. இந்த எண்ணையே ஐபி முகவரி எனப்படுகிறது. இந்த ஐபி முகவரி, ஐபிடீவி சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இணையத்தின் வழியாக ஏதெனுமொரு வீடியோ க்ளிப்பை அல்லது ஒரு சினிமா படத்தை கணினியில் பார்வையிட்டிருந்தால் ஐபிடிவியை நீங்கள் ஏற்கனவே நுகர்ந்திருக்கிறீர்கள் எனச் சொல்லலாம்.
தொலைபேசி கேபல் வழியாகாவே ஐபிடிவி சேவை வழங்கப்படுவதால் ஐபிடிவி சேவை வழங்குவதில் தொலைபேசி நிறுவனங்களே அதிக அளவில் முதலீடு செய்கின்றன. முன்னர் தொலைபேசி சேவை மட்டுமே வழங்கி வந்த இந் நிறுவனங்கள் தற்போது ஒலி (voice), ஒளி (video) , டேட்டா எனும் மூன்று துறைகளிலும் தமது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளன. அதாவது ஒரே கல்லில் மூன்று மாங்காய்களைப் பறித்து விடுகின்றன. இம்மூன்றும் இணைந்த சேவையை "Triple Play" எனப்படுகிறது.
ஐபிடிவி சேவையை சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்து ரசிக்க விரும்பும் ஒருவர் முதலில் ஐபிடிவி இணைப்பை சேவை வழங்கும் ஒரு நிறுவனத்திடம் பெறுவதுடன் அதற்கான செட்-டொப்-பொக்ஸையும் (Set-Top-Box) அந்நிறுவனத்திடமிருந்தே பெற வேண்டும். அத்துடன் ADSL மோடம் மற்றும் (filter) பில்டர் என்பனவும் அவசியம்.
ஐபிடிவி எவ்வாறு செயற்படுBறது?
வெDநாட்டு மற்றும் உள் நாட்டு தொலைக் காட்சி சேனல்கள் செய்மதி மூலமோ அல்லது வேறு வழிகளிலோ தொலைபேசி நிறுவனத்தின் மத்திய நிலையத்தில் பெற்றுக் கொள்ளப்படுகிறது. வெவ்வெறு ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் மத்திய நிலையத்தில் உள்ள சேர்வரில் (Server) சேமிக்கப்பட்டு இணையத்தின் மூலம் பெறக்கூடியதாக "பக்கட்" வடிவில் சிறு சிறு பகுதிகளாக உடைக்கப்படுவதோடு அந்த சிக்னலை அதிகாரமற்றோர் பெற முடியாவண்ணம் என்க்ரிப்ட் (encrypt) செய்து அதாவது வேறொரு வடிவில் மாற்றப்பட்டு தொலைபேசி கேபல் வழியே செலுத்தப்படுகிறது.
கேபல் வழியே பயணம் செய்யும் அந்த டேட்டா ஐபிடிவி சேவையைப் பெற்றிருக்கும் வாடிக்கையாளரை வந்தடைகிறது. வாடிக்கையாளரின் வீட்டில் பொருத்தியுள்ள ADSL மோடம் ஊடாக Fன்னர் அந்த Hக்னல் அவரது செட்-டொப்-பொக்ஸை அடைகிறது. செட்-டொப்-பொக்ஸ் எனும் சாதனம் என்க்ரிப்ட் செய்யப்பட்டு வரும் அந்த சிக்னலை (decrypt) டிக்ரிப்ட் செய்வதோடு அதாவது என்க்ரிப்ட் செய்வதற்கு முன்பிருந்த வடிவிற்கு மாற்றி "பெக்கட்" வடிவில் சிறு சிறு பகுதிகளாக வரும் டேட்டாவை மறுபடி ஒன்று சேர்த்து தொலைக்காட்சிப் பெட்டியில் காட்சிப் படுத்துகிறது. இந்த செயற்பாடுகள் அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிவதால் ஒளிபரப்பில் எந்த தாமதத்தையும் நம்மால் உணர முடிவதில்லை.
இந்த செயற்பாடு, கட்டணம் செலுத்திப் பெறும் செய்மதி தொலைக் காட்சிச் சேவை ஓரளவு ஒத்திருக்கிறது. எனினும் இங்கு நாம் எந்த ஒரு என்டனாவையும் பொருத்த வேண்டியதில்லை.
ஐபிடிவி மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கும் அதேவேளை ADSL மோடம் கருவியை கணினியுடன் இணைப்பதன் மூலம் இணைய சேவையையும் நம்மால் அதே நேரத்தில் பெற முடிவதோடு தொலைபேசியையும் கூட அதே நேரத்தில் உபயோகிக்கக் கூடியதாயிருக்கும்.
ஐபிடிவி ஏனைய தொலைக்காட்சி ஊடகங்களைப் போலன்றி பல வசதிககளைத் தருகிறது. ஐபிடிவி மூலம் எவ்வாறு புதிய சேவைகளையும் வசதிகளையும் வழங்கலாம் அதன் மூலம் எவ்வாறு வருவாயைப் பெருக்கலாம் என இன்னும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன. ஐபிடிவி இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தொலைக் காட்சி சேவை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழமையான தொலைக் காட்சி சேவை போல் ஒரு நிகழ்சியை பல பேருக்கு ஒரே நேரத்தில் ஒளிபரப்புவது (multicast) மற்றும் ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்ட ஒரு வாடிக்கையாளருக்கு மட்டும் (unicast) அவர் கேட்கும் போது வழங்குவது என ஐபிடிவி சேவை இரண்டு வழிகளில் கையாளப்படுகிறது.
ஐபிடிவி வழமையான டிவி சேனல்களையோ அல்லது களஞ்சியப்படுத் தப்பட்டுள்ள வீடியோ படங்களிலிருந்து நமக்குத் தேவையானதைத் தெரிவு செய்து பார்ப்பதற்கான வசதியை அளிக்கிறது. அதனை வீடியோ ஒன் டிமாண்ட் (Video On Demand) என அழைக்கப்படும். ஐபிடிவியின் முக்கிய அம்சமாக இந்த வீடியோ ஒன் டிமான்ட் எனும் வசதியைக் குறிப்பிடலாம். பாவனையாளர் தொலைக்காட்சிப் பெட்டியில் தோன்றும் ஒரு மெனுவிலிருந்து என்னென்ன படங்கள் வீடியோ க்ளிப்புகள் உள்ளன என ரீமோட் கன்ட்ரோலை அழுத்துவதன் மூலம் தெரிந்து கொண்டு தமக்கு தேவையான வீடியாவை தெரிவு செய்து கண்டு களிக்கலாம்.
இந்த வீடீயோ பட்டியலில் சினிமாப் படங்கள் மட்டுமன்றி பாடல்கள், முக்கிய நிகழ்வுகள், தொலைக் காட்சி நிகழ்ச்சிகள், தொலைக் காட்சித் தொடர்களின் வேவ்வேறு அங்கங்கள் என எதுவாகவும் இருக்கலாம். இவை தொலைபேசி நிறுனத்தின் மத்திய நிலையத்திலுள்ள வீடியோ செர்வரில் (server) சேமிக்கப்படிருக்கும். அவற்றை வாடிக்கையாளர் தாம் விரும்பிய நேரத்தில் கேட்டுப் பெறலாம். எனினும் இந்த சேவையைப் பெற அதற்குத் தனி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஐபிடிவியில் சாதாரண வீடியோ கேசட் ப்லேயரில் போன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் போது அதனை தற்காலிகமாக நிறுத்தி விட்டு (Pause) மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருதல்,ரீவைண்ட் (rewind) செய்து ஆரம்பத்திலிருந்து பார்த்தல், ஸ்லோ மோசனில் (slow-motion) மெதுவாக ஓட விடல், பாஸ்ட் போர்வர்ட் (fast-forward) செய்து விரைவாக ஓட வைத்தல் போன்ற வசதிகளையும் பெறலாம்.
ஐபிடிவியில் நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பது வழமையான டிவியில் போலன்றி ஒரு புதிய அனுபவத்தைத் தரும். தமக்கு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து, தமக்கு விருப்பமான நேரத்தில் (Time Shift TV) தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் தமக்கு
சௌகரியமான முறையில் பார்த்து ரசிக்கலாம். நீங்கள் பார்க்கத் தவற விட்ட ஒரு நிகழ்ச்சியை அல்லது சீரியலைக் கூட பிரிதொரு நேரம் பார்க்கலாம். வழமையான தொலைக்காட்சி ஒளிபரப்பு போன்றே உயர் தரத்திலான வீடியோ மற்றும் ஓடியோவை ஐபிடீவியில் பெறலாம்.
கேபல் டிவி செய்மதி தொலைக்காட்சி சேவை போலன்றி ஐபிடிவியில் Interactivity எனும் வசதியும் கிடைக்கிறது. இதன் முலம் நேரடி போட்டி நிகழ்ச்சிகள் (Game Shows) ஒளிபரப்பகும்போது அந்த ஸ்டுடியோவில் இருக்கும் பார்வையாளர்கள் போல் வீட்டில் தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருப் போரும் பங்கு பெறலாம். தொலைக் காட்சி விளம்பரத்தில் வரும் ஒரு பொருளை டிவியிலிருந்தே ஓடர் செய்து வாங்க முடியும்.
டிவி சேவை வழங்கும் நிறுவனமும் நிகழ்ச்சிகளை வீட்டில் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பவரும் நிகழ் நேரத்தில் (real time) தொடர்பாடும் வாய்ப்பு ஐபிடிவியில் கிடைக்கிறது. இன்டர்னெட் ப்ரொட்டகோலைப் பயன் படுத்துவதனால் தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து வீட்டுக்கும், வீட்டிலிருந்து தொலைக் காட்சி நிறுவனத்திற்கு மென இரு வழித் தொடர்பாடலை மேற்கொள்ள முடியும்.
ஐபிடிவி நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தொலைக்காட்சித் திரையில் உங்கள் இமெயில் கணக்கிற்கு மின்னஞ்சல் வந்திருந்தால் அது பற்றி அறிவிக்கும். அதேபோல் தொலைபேசி அழைப்புகள் வரும்போது அழைப்பபின் இலக்கம் (Caller ID அல்லது CLI எனும் Caller Line Identification வசதி) தொலைக் காட்சித் திரையில் மின்னுவதையும் காணலாம்.
மேற் சொன்னவை போன்ற பல வசதிகளை ஐபிடிவி மூலம் பெறக்கூடிய சாத்தியம் உள்ளது எனினும் தற்போது ஐபிடிவி சேவை வழங்கும் நிறுவனங்கள் இவையனைத்தையும் வழங்கி வருகின்றன என நான் சொல்லவில்லை.
அதிவேக இணைய இணைப்பு மற்றும், சவீடியோவை சுருக்கும் தொLல் நுட்பத்தில் கண்டிருக்கும் வளர்ச்சி என்பவற்றால் தெளிவான உயர் தரத்திலான வீடியோ மற்றும் ஓடியோ கலந்த தொலைக் காட்சி சேவையை ஐபிடிவி மூலம் வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க முடியுமாயுள்ளது. இணையத்தைப் பயன்படுத்தி தொலைக் காட்சி சேவையை வழங்குவது என்பது மற்றுமொரு கவர்ச்சியான அதேவேளை எல்லையற்ற சேனல்களை வழங்கக் கூடிய ஊடகமாகவே கொள்ளலாம்.
இன்னும் சில வருடங்களில் தொலைபேசி, இணையம், தொலைக்காட்சி, வனொலி என அனைத்து வசதிகளையும் ஒரே ஒரு கேபலே நம் வீட்டுக்கு அள்ளிக் கொண்டு வரும் என எதிர் பார்க்கலாம்.
நாளைய உலகில் ஐபிடிவியே ஒரே ஒளிபரப்பு ஊடகமாக இருக்கப் போகிறது என பில் கேட்ஸ் கூட எதிர்வு கூறியிருந்தாலும் தொலைக் காட்சி சேவைகளை வழங்குவய்ஜில் தற்போதுள்ள தரை வழிஒDபரப்பு (terrestrial transmission), கேபல் டிவி, டீடிஹெச் எனும் செய்மதி ஒளிபரப்பு போல் மற்றுமொரு ஊடகமாகவே ஐபிடிவியும் இருக்கப் போகின்றது என்பதே எனது கருத்தாகும்.
0 comments:
Post a Comment