இணையதளம் வடிவமைக்க உதவும் ஓன்லைன் எடிட்டர்
இணையதள வடிவமைப்புக்கு உதவும் மொழிகளில் அடிப்படை மொழியான HTML மொழியை எழுதும் போதே உடனுக்கூடன் சோதித்து தெரிந்து கொள்ளும் பொருட்டு ஓன்லைன் மூலம் ஒரு HTML எடிட்டர் வந்துள்ளது.
தற்போது இணையதளத்தை தாமாகவே வடிவமைப்பதில் பலதரப்பட்ட மக்களிடத்திலும் விருப்பம் அதிகமாகி வருகிறது. இணையதள வடிவமைப்பின் அடிப்படை மொழியான HTML கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு HTML பற்றிய அடிப்படை அறிவை உடனடியாக வளர்ப்பதற்காக ஒரு தளம் நமக்கு உதவுகிறது.
சாதாரண Notepad ல் கூட நாம் Html மொழியை தட்டச்சு செய்து நம் உலாவில் சோதித்து பார்க்கலாம். ஆனால் இந்தத் தளத்திற்கு சென்று இடது பக்கம் Html மொழியை தட்டச்சு செய்தால் உடனடியாக வலது பக்கத்தில் Output உடனுக்கூடன் காட்டப்படுகிறது.
Html மொழி கற்க விரும்புபவர்கள் ஒவ்வொரு Html கட்டளையும் உலாவியில் எப்படி இயங்குகிறது என்று உடனடியாக சரிபார்க்கலாம். இணையதளத்தின் அடிப்படை மொழியை கற்க விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.
|
0 comments:
Post a Comment