இணையப் பக்கங்களை பி.டி.எப் ஆக மாற்ற
பல வேளைகளில் , நாம் பார்க்கும் போது பக்கங்களை அவை தரும் தகவல்களுக்காக, சேவ் செய்திட விரும்புவோம். அனைத்துப் பிரவுஸ்சர்களும் இதற்கான வசதியைத் தருகின்றன. பிரவுசரின் எடிட் மெனுவில் க்ளிக் செய்து கிடைக்கும் மெனுவில், சேவ் அல்லது சேவ் ஆஸை தேர்ந்தெடுத்து பைலை பதிந்திடலாம். ஆனால் இது எச்.டி.எம்.எல். பைலாகத் தான் இருக்கும். அவ்வாறு பதிவது நமக்கு உகந்ததாக இருக்காது. ஏனென்றால் தேவையற்ற பல விஷயங்களுடன், பைல்களுடன் அந்தப் பைல் பதிவாகும். ஒரு டொக்கியுமென்டாக பதிவாகாது. ஆனால் இதனையே ஒரு பி.டி.எப் பைலாக பதிந்தால், ஒரே பைலாக அனைத்துத் தகவல்களுடன் கூடிய பைல் ஒன்று கிடைக்கும். இதனை மற்றவர்கள் பெற்றுப் பயன்படுத்துவதும் எளிதாகும்.
சரி, இணையத்தளப் பக்கத்தினை எப்படி பி.டி.எப் பைலாக மாற்றுவது? இதற்கு உதவிடும் வகையில் கிடைப்பது Joliprint bookmarklet என்னும் புரோகிராம் ஆகும். புக்மார்க்குகள் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களிலும் இது இயங்கும்.
புக்மார்க்லெட் என்பதும் ஒருவகை புக்மார்க் தான். புக் மார்க்குகள் அனைத்தும் ஏதேனும் ஒரு இணையத்தளத்தின் சுருக்கு வழிகளாக அமையும். ஆனால் இந்த புக்மார்க்லெட் ஜாவா ஸ்கிரிப்ட் குறியீடுகள் அமைந்ததாக இருக்கும்.
இவை இயக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட இணையத் தளத்துடன் இணைந்து இயங்கும். தானாகவே இணையத் தளத்தினை ஒரு பி.டி.எப் பைலாக மாற்றும். இந்த புக்மார்க்லெட்டில் க்ளிக் செய்து விட்டு, அது மாற்றப்பட்டு கிடைப்பதனை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம்.
இதன் இயக்கத்தில் இன்னொரு சிறப்பு என்னவெனில், இணையப் பக்கத்தில் உள்ள தேவையற்ற மெனு, விளம்பரங்களை இது தானாகவே நீக்கி விடுகின்றது. போர்மட்டிங், லிங்க்ஸ், கட்டுரைக்கான படங்கள் ஆகியவற்றை மட்டும் தக்கவைத்துக் கொள்கிறது.
இந்த புரோகிராம் இயங்கும் போது, கணினியுடன் இணைந்த இன்டர்நெட் இணைப்பு இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஜோலிபிறின்ட் புரோகிராமினை,நாம் கணினியில் இன்ஸ்டோல் செய்திடத் தேவையில்லை.
ஜோலிபிறின்ட் இணையத்தளத்தில் இதன் ஐகனைக் க்ளிக் செய்து, இழுத்து புக்மார்க்காக அமைந்துவிட்டால் போதும். பின் தேவைப்படுகையில் இந்த புக்மார்க்கில் க்ளிக் செய்து, இணையத்தளங்களை பி.டி.எவ்.பைலாக மாற்றலாம்.
இந்த ஜோலிபிறிண்ட் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணையத்தள முகவரி http://joliprint.com/bookmark-instructions/
0 comments:
Post a Comment