சென்ற வாரம் வேர்ச்சுவல் கணினி என்றால் என்ன எனப் பார்த்தோம். இன்று வேர்ச்சுவல் கணினியில் ஒரு இயங்கு தளத்தை எவ்வாறு நிறுவு வது எனப் பார்ப்போம்.
மைக்ரோஸொப்ட் வேர்ச்சுவல் பீசி மென்பொருள் கொண்டு விண்டோ ஸின் எப்பதிப்பையும் வேர்ச்சுவல் கணினியில் இயங்கு தளமாக நிறுவிக் கொள்ளலாம். விண்டோஸ் மட்டுமன்றி விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போன்ற வேறு இயங்கு தளங்களையும் கூட நிறுவிக் கொள்ளலாம்.
இங்கு பிரதான இயங்கு தளமான விண்டோஸ் எக்ஸ்பீயில் லினக்ஸின் Ubuntu பதிப்பை வேர்ச்சுவல் கணினியில் எவ்வாறு நிறுவுவது எனச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
வேர்சுவல் கணினியை உருவாக்குவதற்கு முதலில் உங்கள் கணினி ஆகக் குறைந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதாயிருத்தல் வேண்டும். உங்கள் கணினியில் நிறுவியிருக்கும் பிரதான இயங்கு தளம் சிக்கலின்றி இயங்கவும் நிறுவவிருக்கும் ஏனைய வேர்ச்சுவல் இயங்கு தளங்களை சிறப்பாக செயற்படவும் போதிய அளவு நினைவகமும் ஹாட் டிஸ்கில் காலியிடமும் இருத்தல் அவசியம். நினைவகத்தின் அளவு அதிகமிருப் பின் ஒன்றுக்கு மேற்பட்ட வேர்சுவல் கணினிகளை உருவாக்Bக் கொள்ளலாம்.
வேர்ச்சுவல் கணினியில் இயங்கு தளமொன்றை நிறுவத் தேவையான நினைவகத்தின் அளவு ஹாட் டிஸ்க் காலியிடம் என்பவற்றினை அறிந்து கொள்ள பின்வரும் அட்டவணை உதவியாயிருக்கும் என நம்பு கிறேன்.
Operating System Memory Hard Disk Space
Windows 98 Second Edition 64 MB 500 MB
Windows 2000 Professional 128 MB 2 GB
Windows XP Professional 256 MB 2 GB
Windows Server 2003 256 MB 4 GB
Windows Vista Ultimate 512 MB 15 GB
முதலில் வேர்சுவல் பீசீ மென்பொருளை கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். நிறுவிய பிறகு ஸ்டாட் மெனுவிலிருந்து அதனைத் இயக்குங்கள். அப்போது ஒரு விசர்ட் தோன்றும். இங்கு Use default settings to create a virtual machine தெரிவு செய்வதன் மூலம் வேர்ச்சுவல் ஹாட் டிஸ்க் தவிர எல்லா செட்டிங்ஸையும் வேர்ச்சுவல் கணினியே நிர்ணயித்துக் கொள்ளும். இதன் மூலம் இலகுவாக இரண்டாவது கட்டத்திற்கு வந்து சேரலாம். எல்லா செட்டிங்ஸையும் நீங்களாகக் குறிப்பிட Create a Virtual Machine என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அப்போது தோன்றும் பெட்டியில் வேர்ச்சுவல் மெசீன் பெயரையும் அதனை உருவாக்க வேண்டிய இடத்தையும் குறிப்பிடல் வேண்டும். இங்கு Ubuntu என டைப் செய்து அடுத்த கட்டத்திற்கு தாவுங்கள். வேர்ச்சுவல் மெசீனை உருவாக்க வேண்டிய இடத்தைக் குறிப்பிடா விட்டால் டிபோல்டாக My Virtual Machines போல்டரில் உருவாக்கப்படும்.
அடுத்து நிறுவவிருக்கும் இயங்கு தளத்தைத் தெரிவு செய்யுங்கள். Ubuntu என்பது விண்டோஸ் அல்லாத இயங்குதளமாதலால் இங்கு Other தெரிவு செய்யுங்கள்.
அடுத்து நினைவகத்தின் அளவைக் குறிப்பிடல் வேண்டும் இங்கு வேர்ச்சுவல் கணினி சிறப்பாக இயங்குவதற்கும் அதன் மேல் மேலும் பல பயன்பாட்டு மென்பொருள்களை நிறுவவும் அதிக நினைவகத்தை ஒதுக்க வேண்டும். அதற்கு நீங்கள் Adjusting RAM க்ளிக் செய்து நினைவகத்தின் அளவைக் கூட்டிக் கொள்ளலாம். நினைவகத்தின் அளவைக் கூட்ட அவசிய மில்லை எனின் Using the recommended RAM தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.
அடுத்த கட்டத்தில் வேர்ச்சுவல் ஹாட் டிஸ்கை குறிப்பிட வேண்டும். இங்கு A new virtual hard disk என்பதைத் தெரிவு செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள். இங்கு வேர்ச்சுவல் ஹாட் டிஸ்காக rowse பட்டனில் க்ளிக் செய்து ஒரு இடத்தையும் அதற்கான பெயரையும் குறிப்பிடலாம். அவ்வாறு குறிப்பிடா விட்டால் டிபோல்டாக My Virtual Machines போல்டரில் ஒரு பைலை உருவாக்கிக் கொள்ளும். வேர்ச்சுவல் ஹாட் டிஸ்க் என்பது நிஜக் கணினியில் ஒரு பைலையே குறிக்கிறது.
அடுத்து Next க்ளிக் செய்து அடுத்த கட்டத்திற்குத் தாவி Finish க்ளிக் செய்து முடிவுக்கு வரலாம்.
இப்போது வேர்ச்சுவல் மெசீனை உருவாக்குவதில் முதல் கட்டம் முடிவுக்கு வருகிறது. ஆனால் இன்னும் வேர்ச்சுவல் கணினியில் இயங்கு தளத்தை நிறுவும் பணி பூர்த்தியாகவில்லை.
இரண்டாவது கட்டமாக புதிய ஒரு இயங்கு தளத்தை வேர்சுவல் மெசீனில் நிறுவ வேண்டும். இங்கு நாங்கள் Ubuntu பதிப்பை நிறுவப் போகிறோம். இதற்கு உங்களிடம் Ubuntu சீடி இருத்தல் வேண்டும். (இந்த Ubuntu சீடீயை Ubuntu நிறுவன இணையதளத்திற்குச் சென்று விண்ணப்ப்ப்பதன் மூலம் இலவசமாக வீடு தேடி வர வைக்கலாம்) சீடீ இல்லா விடின் இணையத்திலிருந்தும் டவுன்லோட் செய்து கொள்ளலாம். எனினும் அதன் பைல் அளவு 600 எம்பீயிற்கு மேல் இருப்பதால் அதிவேக இணைய இ¨ணைப்பிருந்தால் மட்டுமே சாத்தியம். இணையத் திலிருந்து டவுன்லோட் செய்த பைலாயின் அது .ISO இமேஜ் பைல் வடிவிலிருக்கும். எனினும் அதனை சீடியில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இப்போது Virtual PC Console விண்டோவில் ஸ்டார்ட் பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ தோன்றி சுவல் மெசீன் பூட் ஆக ஆரம்பிக்கும். ஒரு இயங்கு தளத்தை கணினியில் நிறுவும் போது எவ்வாறு காண்பீர்களோ அத்தனை படி முறைகளையும் இந்த விண்டோவிலும் காணலாம்.
வழமையான சிஸ்டம் சோதனைக்குப் பின்னர் பூட்டபல் சீடியை தேட ஆரம்பிக்கும். இங்கு வேர்ச்சுவல் மெசீன் விண்டோவில் CD க்ளிக் செய்து பின்னர் Capture ISO Image என்பதைக் க்ளிக் செய்து .ISO பைலை சேமிக்கப் பட்டிருக்குமிடத்தைக் காட்டி விட வேண்டும்.
.ISO பைல் அல்லாது சீடியிலிருந்தே நிறுவ வேண்டுமாயின் சீடீயை ட்ரைவிலிட்டு சீடீ மெனுவில் Use Physical Drive க்ளிக் செய்து பின்னர் Action மெனுவில் Reset க்ளிக் செய்து விடுங்கள். இப்போது சீடி ட்ரைவிலிருந்து பூட் ஆக ஆரம்பிக்கும்.
இனி வரும் ஒவ்வொரு கட்டமும் வழமையான ஒரு இயங்கு தளத்தை நிறுவுவது போன்றதே.