தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, December 31, 2012

திறக்க முடியாத பைல்கள்

தான் பயன்படுத்தி வந்த கம்ப்யூட்டர் சிறிது சிறிதாகப் பிரச்னை கொடுத்துப் பின் மொத்தமாய் செயல் இழந்து முடங்கிப் போனதால் புதிய கம்ப்யூட்டருக்கு மாறிய ஒரு வாசகர் தன்னால் பழைய இரு வகை பைல்களை புதிய கம்ப்யூட்டருக்கு மாறிய பின் திறக்க முடியவில்லை என எழுதியுள்ளார். அந்த பைல்கள் .odt மற்றும் .ods என துணைப் பெயருடன் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு பைல்களையும் திறக்க ஓப்பன் ஆபீஸ் என்னும் புரோகிராம் வேண்டும். இது இல்லாததால் இவற்றைத் திறக்க முடியவில்லை.
இந்த ஆபீஸ் புரோகிராம் இலவசமாக http://download.openoffice.org என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் கிடைக்கிறது. புதிய கம்ப்யூட்டரில் ஆபீஸ் 2000 அல்லது ஆபீஸ் 2003 அல்லது எக்ஸ்பி இன்ஸ்டால் செய்திருந்தால் இவற்றிலும் மேலே சொன்ன வகை பைல்களைத் திறந்து பயன்படுத்தலாம். ஆனால் அதற்கு ஒரு ப்ளக்–இன் பைல் சேர்க்கப்பட வேண்டும். இந்த ப்ளக் இன் புரோகிராமினை www.sun.com/software/star/odf_plugin/index.jsp என்ற முகவரியில் உள்ள தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இலவசம் தான். ஆனால் இந்த ப்ளக் இன் புரோகிராம் ஆபீஸ் 2007 தொகுப்புடன் இணைந்து செயலாற்றாது.

Saturday, December 29, 2012

PDF to Word கன்வெர்டர் மென்பொருள் லைசன்ஸ் கீயுடன்

மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவாக்கிய வேர்ட் பைல்களை நாம் பிடிஎப் பைல்களாக கன்வெர்ட் செய்து வைத்திருப்போம். ஒருசில நேரங்களில் வேர்ட் பைலை அழித்துவிட்டு பிடிஎப் பைலை மட்டும் வைத்திருப்போம்.
அந்த நேரத்தில் குறிப்பிட்ட வேர்ட் பைலில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் நம்முடைய பாடு திண்டாட்டம் தான். இதுபோன்ற சமயங்களில் பிடிஎப் பைலை எப்படியாவது கன்வெர்ட் செய்து வேர்ட் பைலாக மாற்றி எடிட் செய்துவிட வேண்டும் என்று நினைத்து இணையத்தில் இதற்கான உதவியை நாடி செல்வோம். ஆன்லைன் மூலமாக கன்வெர்ட் செய்யலாம் என்றால் சரியான முறையில் கன்வெர்ட் ஆகாது. எதாவது ஒரு மென்பொருளை தரவிறக்கி அதன் மூலம் கன்வெர்ட் செய்துவிடலாம் என்றால் அதுவும் முடியாது. நாம் தேடிபோகும் மென்பொருளில் எதாவது ஒருசில குறைகள் இருக்கும். குறிப்பாக அந்த மென்பொருளானது பணம் செலுத்தி பெற வேண்டியதாக இருக்கும். அப்படியே இலவசமாக மென்பொருள் கிடைத்தாலும் அது சரியாக வேலை செய்யாது. இதுபோன்ற குறைகள் எதுவும் இல்லாமல் ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. அதுவும் இலவச லைசன்ஸ் கீயுடன்.


மென்பொருளை தரவிறக்க சுட்டி
alt
சுட்டியில் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். லைசன்ஸ் கீயும் தரவிறக்க பகுதியிலேயே இருக்கும். YCUKF-HV9HY-DGY2X-WL735 இந்த கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக கணினியில் பதிந்து கொள்ளவும். இந்த மென்பொருளை நீங்கள் இலவசமாக 2011 ஏப்ரல் 25 வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடதக்கது. பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
alt
பின் எந்த பைலை கன்வெர்ட் செய்ய வேண்டும் அந்த பிடிஎப் பைலை தேர்வு செய்து நுழைக்கவும். பின் எந்த இடத்தில் கன்வெர்ட் செய்த பைலை சேமிக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு கொள்ளவும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்த சில மணி நேரங்களில் உங்களுடைய பைலானது வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்யப்பட்டு நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
alt
இதுபோல பைலை கன்வெர்ட் செய்யும் போது வேண்டுமானால் குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளில் ட்ராக் அன்ட் ட்ராப் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு நாம் கன்வெர்ட் செய்யும் போது மைரோசாப் வேர்ட் தொகுப்போ பிடிஎப் ரீடரோ எதுவும் தேவையில்லை. கடவுச்சொல் புகுத்தப்பட்ட பைல்களையும் கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். பிடிஎப் பைலில் இருக்கும் படம், எழுத்து ஆகியவை சரியான முறையில் கன்வெர்ட் செய்யப்படும். ஒரே நேரத்தில் பல்வேறு பிடிஎப் பைல்களை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விண்டோஸ் 98, ME, NT, 2000, XP, 2003, Vista மற்றும் விண்டோஸ் 7 ஆகிய இயங்குதளங்களில் வேலை செய்யக்கூடியது ஆகும். இந்த மென்பொருளுடைய சந்தைவிலை $29.95 ஆகும்.


Friday, December 28, 2012

System Sweeper: கணணியில் மால்வேர் வைரஸ்களை தடுப்பதற்கு...!

கணணியைப் பாதிக்கும் பல வைரஸ்கள் புதிது புதிதாக வந்து கொண்டே உள்ளன. நமது கணணியைப் பாதுகாப்பாக வைரஸ்களிடமிருந்து வைத்துக் கொள்ள ஆண்டிவைரஸ் மென்பொருள்கள் தேவைப்படுகின்றன.

சிலர் ஆண்டிவைரஸ் மென்பொருள்களை கட்டணம் செலுத்தியும் சிலர் இலவசமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். கணணியில் நல்ல ஆண்டிவைரஸ் போட்டிருப்பினும் சில நேரங்களில் மால்வேர்கள் போன்ற வகையிலான வைரஸ்களை கோட்டை விட்டு விடுகின்றன.


இதனால் மால்வேர் மற்றும் ஸ்பைவேர் போன்ற நச்சுநிரல்களுக்கு எதிராகத் திறமையாக செயல்படுகிற கூடுதலான மென்பொருள்களைப் பயன்படுத்துவது கணணிக்குப் பாதுகாப்பாக இருக்கும்.


விண்டோஸ் இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் தற்போது மால்வேர் தொல்லைகளைத் தடுக்க புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் System Sweeper.


இதன் மூலம் மால்வேர் பாதிக்கப்பட்டுள்ள கணணியில் இணைய இணைப்பில்லாத நேரத்திலும் சோதனை செய்து மால்வேர்களை அழிக்கலாம். இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது.


இதன் மூலம் உங்கள் கணணியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் போட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.


இதனைத் தரவிறக்கி கணணியில் நிறுவிப் பயன்படுத்துமாறு வழிசெய்யவில்லை. சீடி/டிவிடி அல்லது பென் டிரைவில் மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும். தரவிறக்கம் செய்யும் போது சீடியிலோ அல்லது பென் டிரைவிலோ என்று தேர்வு செய்தால் அதில் தரவிறக்கம் செய்யப்படும். பின்னர் அந்த சீடியை கணணியில் போட்டு கணணியைச் சோதிக்கலாம்.


பின்னாளில் கணணி வைரஸ் பிரச்சினை காரணமாக பூட் ஆகவில்லை என்றால் நீங்கள் இந்த மென்பொருளைப் பதிந்துள்ள சீடியைப் போட்டு பூட் செய்து கொள்ள முடியும்.


உடனே கணணியில் என்னென்ன மால்வேர் வைரஸ் உள்ளனவோ அவற்றைக் கண்டறிந்து அழித்து விடும். இந்த மென்பொருள் ஒரு ஆண்டிவைரஸ் மென்பொருளுக்கு நிகரானது அல்ல.


கணணியின் பாதுகாப்புக்கு கூடுதலாக வைத்துக் கொள்ளலாம். எதாவது வைரஸ் பிரச்சினை காரணமாக கணணி இயங்கவில்லை என்றால் அப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.


Download செய்ய இங்கே click செய்க

Thursday, December 27, 2012

அழிக்க முடியாத பைல்கள்

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும்.


பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.



சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.


அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம். எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.
1. முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.


இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது. டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!

Saturday, December 22, 2012

கடிகாரத்தை நீக்க முடியுமா?

விண்டோஸ் டாஸ்க் பாரில் நாம் கேட்காமலேயே வந்து அமர்ந்து கொள்ளும் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று ஸ்டார்ட் பட்டன். இது இல்லாமல் நாம் வேலை பார்க்க முடியாது. இன்னொன்று வலது ஓரத்தில் இயங்கும் கடிகாரம். கடிகாரத்தை நாம் நீக்க முடியும். பலர் இதைத் தேவை எனக் கருதினாலும் சிலர் “இது எதற்கு? நமக்குத் தான் கடிகாரம் வேறு வழிகளில் இருக்கிறதே“ என எண்ணுகின்றனர். இவர்களுக்காக கடிகாரத்தினை மறைக்கும் வழி இங்கே தரப்படுகிறது.


1. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் மவுஸால் வலது புறத்தைக் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில் “Properties” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.


2. இதில் Taskbar and Start Menu Properties என்ற பல டேப்கள் அடங்கிய மெனு கிடைக்கையில் அதில் “Taskbar” என்ற டேபைக் கிளிக் செய்திடவும்.


3. இதில் “Notification area” என்று ஒரு இடம் இருக்கும். இதில் என்று “Show the clock” உள்ள இடத்திற்கு எதிரே உள்ள கட்டத்தின் டிக் அடையாளத்தை மவுஸால் கிளிக் செய்து எடுத்துவிட்டுப் பின் ஓகே கிளிக் செய்து மூடவும். கடிகாரம் மீண்டும் வேண்டும் என்றால் பழையபடி அதே இடம் சென்று கட்டத்தில் டிக் மார்க் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

Friday, December 21, 2012

வியப்பூட்டும் முதல் கணினி


இன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது.
இன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது. அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விற்பனை வளாகங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ நிலையங்கள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் கணினி இன்றி ஒரு அணுவும் அசையாது எனும் நிலமை இன்று நிலைபெற்று விட்டது எனலாம்.
இன்றைக்கு இப்படி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிகச் சிறிய அளவில் நமது பைகளில்  அமைதியாய் துயிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்ப வடிவம் எப்படி இருந்தது ? அதன் பின்னால் நிகழ்ந்த பல்லாண்டு கால உழைப்பு எப்படிப்பட்டது என்பதை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பு மேலிடுகிறது.

கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும்.  அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணினியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணினியில் எடை ஆயிரம் கிலோ.
அந்தக் கணினியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணினிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணினியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.
1948ம் ஆண்டு ஜூன் 21ம் தியதி இந்த முதல் கணினி தன்னை நிரூபித்த வினாடியே உலகில் மாபெரும் தொழில் நுட்ப, அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான முளை விட்ட வினாடி எனலாம். அந்த வினாடியைப் போல உன்னதமான நிமிடம் என் வாழ்வில் வந்ததில்லை என அதைக் கண்டுபிடித்த பேராசிரியர் பிரடி வில்லியம்ஸ் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் முளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.
பேபி – என பெயரிட்டழைத்து இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்திய டாம் கில்பர்ன், மற்றும் பிரட்டி வில்லியம்ஸ் இருவருமே இன்று உயிருடன் இல்லை எனினும் அவர்களுடைய பெயர் வரலாற்றில் அழிக்கப்படாத நிலையில் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது என்பது மட்டும் நிஜம்.

Wednesday, December 12, 2012

விண்டோஸ் கணனியின் தொடக்க வேகத்தை அதிகரிப்பது எப்படி?.

கிடைக்கின்ற எல்லா மென்பொருட்களையும் கணனியில் நிறுவி கணனி ஆரம்பிக்கும் போதே அவையும் தொடங்குமாறு கட்டளை வழங்கியிருப்பீர்கள்.
இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவரும்போது முடிவில் கணனி ஆரம்பிக்கும் நேரத்திற்குள் பல வேலைகளை முடித்துவிடலாம்ம் என்ற நிலை வந்து விடும்.

பொதுவாக விண்டோஸ் கணனியில் உருவாகின்ற இந்த பிரச்சனைக்கு அதிகம் கணனி தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களை அறிந்திராத சாதரண பாவனையாளரும் பயன்பெறும் வகையில் தீர்வு கிடைக்கின்றது.

Soluto என்ற இலவச யுட்டிலிட்டி மூலம் விண்டோஸ் தொடங்கும் நேரத்தை கணக்கிட்டு எந்த எந்த மென்பொருட்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கின்றது, அவற்றில் எந்த மென்பொருட்களை நிறுத்திவிடலாம் எவற்றை நிறுத்தினால் பாதிப்பு இருக்காது போன்ற விபரங்களும் விண்டோஸ் இயங்க அவசியமான சில அப்பிளிகேஷன்களை நிறுத்த முடியாது போன்ற விபரங்களும் காட்டப்படும்.

இந்த யுட்டிலிட்டி மூலம் விண்டோஸ் தொடங்கும் போது நேரத்தை வீணாக்கும் அவசியமில்லாத அப்பிளிகேஷன்களை நிறுத்திவைக்க அல்லது தற்காலிகமாக தடைசெய்யவும் ஆப்ஸன்கள் உண்டு.


நீங்களும் பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே. டவுண்லோட் செய்ய


இணையத்தள முகவரி : http://www.soluto.com/

இந்த வீடியோவில் இன்னும் சற்று விபரங்கள் தருகிறார்கள்.

Friday, December 7, 2012

லேப்டாப் வாங்கப் போறீங்களா?

அதிகமான விலை, கூடுதலான கவனத்துடன் கையாள வேண்டிய நிலை, தூக்கிச் செல்லும் சுமை, ஒத்துழைக்காத பேட்டரி, ஆண்மையை இழக்கச் செய்திடும் தொடர் பயன்பாடு, ரிப்பேர் ஆனால் சரி செய்ய முடியாது என்றெல்லாம் உண்மையும் பொய்மையும் கலந்த காரணங்களால் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்கள் இன்று பலரின் முதுகோடு முதுகாக அமையும் தோழனாக உரு மாறி அனைவரும் விரும்பும் சாதனமாக அமைந்து விட்டது.
டெஸ்க்கில் வைத்துப் பயன்படுத்துவோர் கூட இவ்வளவு பெரிய சி.பி.யூ டவர், மானிட்ட ரெல்லாம் எதற்கு? லேப்டாப்பே வைத்துக் கொள்வோமே என்று எண்ணும் அளவிற்கு லேப் டாப் என்னும் மடிக் கம்ப்யூட்டர்கள் (மடியில் வைத்து பயன்படுத்தும் மடித்து எடுத்துச் செல்லக் கூடிய கம்ப்யூட்டர்கள்) இன்று பிரபலமாகி உள்ளன.
இன்று மார்க்கட்டில் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் லேப்டாப் கம்ப்யூட்டருக்கு வரும் விளம்பரங்கள் தான் அதிகம். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தச் சந்தையில் கூடுதல் இடத்தைப் பிடிக்க போட்டி போட்டு வருகின்றன. எச்.பி, டெல், தோஷிபா, சோனி, லெனோவோ, ஏசர்,காம்பேக் என பல பிராண்டுகளின் மாடல்கள் எங்களிடம் இல்லாத வசதியா என தம்பட்டம் அடிக்கின்றன. திரை அளவு, எடை மற்றும் புராசசர் ஆகியவை குறித்து பல அளவுகளைத் தெரிவிக்கின்றன. முதன் முதலாக லேப் டாப் வாங்க முடிவெடுக்கும் ஒருவர் இவர்களின் விளம்பரத்தைப் பார்த்து எந்த முடிவிற்கும் வராமல் குழப்பத்தில் ஆழ்ந்து போகிறார்.
இந்த தகவல்களை எப்படி அலசி ஆய்வு செய்து தனக்கு வேண்டிய சரியான லேப்டாப்பினை முடிவு செய்ய இயலாதவர்களாக பலர் உள்ளனர். இத்தகையவர்கள் முதலில் என்ன முடிவுகளை வரையறை செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம். கீழே தரப்பட்டுள்ளவை அனைத்துமே பொதுவான அனைவருக்கும் தெரிந்தது தான் நீங்கள் எண்ணினால் நல்லதை நினைத்துப் பார்ப்பது சிறந்தது என எடுத்துக் கொள்ளுங்கள்.
1. விலையும் பணியின் தன்மையும்: முதலில் இன்ன விலை என பட்ஜெட் போட்டுக் கொள்ளுங்கள். ரூ.30,000 முதல் ரூ.90,000 வரை பல மாடல்கள் உள்ளன. விலையை நிர்ணயம் செய்கையில் வரி, வாரண்டி காலம், கூடுதல் வாரண்டி என்றால் கட்ட வேண்டிய தொகை என்பதனையும் சேர்த்து கணக்கிடுங்கள். சிறிய நகரங்களில் இருந்தால் லேப் டாப் வாங்கிட பெரிய நகரத்திற்குச் சென்று திரும்பும் செலவினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
2. வேலை என்ன? அடுத்து என்ன வேலையை இந்த லேப் டாப் மூலம் மேற்கொள்ளப் போகிறீர்கள் என்று பார்க்கவும். செலிரான் பிராசசர் கொண்ட குறைந்த மெமரி கொண்ட லேப் டாப் தேர்ந்தெடுத்து அதில் போட்டோ ஷாப் மற்றும் படங்கள் எடிட்டிங் அடிக்கடி மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால் சிரமமாகும். எனவே விலையை உங்கள் வேலையின் தன்மையை இணைத்து நிர்ணயம் செய்திடவும்.
3. அளவும் எடையும்: ஸ்கிரீன் அளவு மற்றும் எடையின் அடிப்படையில் லேப் டாப் கம்ப்யூட்டர்களை வகைப்படுத்துகின்றனர். 13,14,15 மற்றும் 17 அங்குல திரை கொண்ட லேப்டாப்கள் உள்ளன. சிறிய திரை கொண்டது எடை குறைவாக இருக்கும்; எடுத்துச் செல்வது எளிது. பேட்டரியின் லைப் வெகு நாட்கள் இருக்கும். 17 அங்குல திரை கொண்ட லேப் டாப் என்றால் செயல்பாடு நன்றாக இருக்கும். எடையும் விலையும் எடுத்துச் செல்வதும் சற்று சிக்கலாக இருக்கும். 14 மற்றும் 15 அங்குல திரை கொண்ட லேப் டாப்கள் இவற்றை அட்ஜஸ்ட் செய்து போவதாக இருக்கும். 4. பிராசசிங் திறன், ஹார்ட் டிஸ்க் அளவு,மெமரி மற்றும் கிராபிக்ஸ் திறன்: இன்டெல் ஒவ்வொரு ஆறு மாத காலத்தில் ஏதேனும் ஒரு புதிய சிப் பிராசசரை அறிமுகப்படுத்துகிறது. குறைந்தது டூயல் கோர் சிப் லேப்டாப்பில் இருக்கவேண்டும். எனவே இன்டெல் நிறுவனத்தின் டூயல் கோர் 2 சிப் அல்லது ஏ.எம்.டி. எக்ஸ்2 பிராசசர் இருக்க வேண்டும். சிங்கிள் கோர் பிராசசர் என்றால் ஏற்றுக் கொள்ளவே வேண்டாம். அவை எல்லாம் காலாவதியாகி விட்டன. அடுத்து எந்த அளவில் ஹார்ட் டிஸ்க் இருக்க வேண்டும். பட்ஜெட் விலையில் கிடைக்கும் லேப்டாப்களில் கூட 160 ஜிபி ஹார்ட் டிஸ்க் உள்ளது. பலருக்கு இது போதுமானது. எனவே உங்கள் லேப்டாப்பில் குறைந்தது இது இருக்க வேண்டும். அடுத்ததாக ராம் மெமரி; பல லேப் டாப்களில் இது 1 ஜிபியாக இருக்கிறது. ஆனால் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்பாட்டிற்கு இது சரியாக அமைய வில்லை. எனவே 2 ஜிபி சிஸ்டம் மெமரி உள்ளதாகப் பார்க்கவும். டிஸ்கிரீட் கிராபிக்ஸ் (Discrete Graphics): என்வீடியா மற்றும் ஏ.டி.ஐ (Nvidia’s/ATI) வழங்கும் கிராபிக்ஸ் வசதிகளை இந்த சொற்களால் குறிப்பிடுகின்றனர். இதில் என்வீடியா தான் இன்றைக்கு முன்னணியில் உள்ளது. இன்டெல் நிறுவனம் தரும் இன்டக்ரெய்டட் சொல்யூசன்ஸ் சாதாரண கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு மட்டுமே சரியாக இருக்கும். 5.பேட்டரியின் திறன்: பொதுவாக பேட்டரிகளை அது கொண்டுள்ள செல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அளவிடுவார்கள். 4 செல் கொண்ட பேட்டரி லேப் டாப்பின் எடையை வெகுவாகக் குறைத்துவிடும்; ஆனால் பேட்டரி லைப் மிகவும் குறைந்துவிடும். 9 செல் பேட்டரி எடையை மிக அதிகமாக்கும். ஆனால் அந்த அளவிற்கு செயல் திறன் பெரிய அளவிலான வேறுபாட்டில் இருக்காது. எனவே 6 செல்கள் கொண்ட பேட்டரி தான் அனைவரும் விரும்பும் பேட்டரியாகவும் பல லேப்டாப்கள் கொண்டதாகவும் உள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இரண்டரை மணி நேரம் லேப்டாப்பைப் பயன்படுத்தலாம். 6. மற்றவற்றுடன் தொடர்பு: இது பல வகை தொடர்பினை உள்ளடக்கியது. யு.எஸ்.பி., ஈதர்நெட் மற்றும் பயர்வயர். பெரும்பாலான லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ஸ்டாண்டர்டாக சிலவற்றை ஒருங்கிணைந்த வடிவமைப்பில் தருகின்றனர். இருப்பினும் 3 யு.எஸ்.பி. போர்ட் உள்ளது மிக நல்லது. அத்துடன் விஜிஏ / டிவிஐ (VGA/DVI) போர்ட் இருக்க வேண்டும். வயர்லெஸ் கனெக்டிவிடி பக்கம் பார்த்தால் 802.11 a/b/g கட்டாயமாகத் தேவை. இதனை 802.11n க்கு மேம்படுத்த முடியும் என்றால் நிச்சயம் அதனையே கேட்கவும். இதனால் ஸ்பீட் அதிகமாகக் கிடைக்கும். புளுடூத் 2.0 ஈ.டி.ஆர். தரப்படுவதும் நல்லது. இதன் மூலம் போன் போன்ற சாதனத்துடன் பைல்களைப் பரிமாறுவது எளிதாகும். 7. வாரண்டி: அனைத்து லேப்டாப்களும் குறைந்தது ஓராண்டு வாரண்டி தருகின்றனர். இது ரிப்பேர் மற்றும் தயாரிப்பில் காணப்படும் தவறுகளுக்கு பொறுப்பேற்கின்றன. இந்த காலத்திற்குப் பின் பிரச்னை வந்து ரிப்பேர் செய்திடப் போனால் எக்கச் சக்க செலவாகிறது. இந்த அதிர்ச்சி பின்னாளில் ஏற் படாமல் தடுக்க நீட்டிக் கப்பட்ட வாரண்டி தருவதாக இருந்தால் கேட்டு வாங்கவும். அல்லது தொடக்க வாரண்டியே மூன்று ஆண்டுகள் இருந்தால் கேட்டு வாங்கலாம்.
சரி வாங்கிவிட்டீர்களா! அடுத்து என்ன செய்திட வேண்டும்?
1. கிராப் வேர்களை (crapware) நீக்குங்கள்: முதல் முதலில் உங்கள் லேப்டாப்பினை இயக்கத் தொடங்கியவுடன் நிறைய சோதனை புரோகிராம்கள், தேவையற்ற பவர் மேனேஜ் மெண்ட் புரோகிராம்கள், புரடக்டிவிடி டூல்ஸ் என்ற பெயரில் நமக்கு என்றும் பயன்படாத புரோகிராம்கள் எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் தயாரிப்பாளருக்கு பிடிக்கும் என்பதால் மொத்தமாகப் பதிந்திருப்பார்கள். இவை அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்து நீக்கி விட்டு உங்களுக்குப் பிடித்த புரோகிராம்களை மட்டும் இன்ஸ்டால் செய்திடவும். 2. பேட்டரி பராமரிப்பு: பொதுவாக லேப்டாப் பேட்டரிகள் எல்லாம் எப்படி பயன்படுத்தினாலும் சரியாகவே இயங்கும். எளிதாக வீணாகிப் போகாது. இருந்தாலும் இவை கெட்டுப் போகாமல் இருக்க 2அல்லது திறன் இழக்காமல் இருக்க குறிப்பிட்ட கால கட்டத்தில் பேட்டரியை முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்திட வேண்டும். மேலும் ஓரடியாக பேட்டரியை சார்ஜ் செய்திடக் கூடாது. நீங்கள் லேப் டாப் பயன்படுத்த வில்லை என்றால் மெயின் பிளக்கிலிருந்து பேட்டரிக்கான கனெக்ஷனை எடுத்துவிட வேண்டும்.
மேலே கூறப்பட்டவை எல்லாம் சில அடிப்படை செய்திகளே. எந்த ஒரு லேப் டாப் வாங்குவதாக இருந்தாலும் அவற்றின் திறன் கொண்ட மற்ற லேப் டாப்களுடன் ஒப்பிட்டு, பயன்பாடு குறித்து அவற்றின் இணையதளங் களில் தகவல்கள் தேடி பின் வாங்கவும். வாங் குவதற்கு முன் லேப் டாப் விற்பனை செய் பவரின் நிறுவனமும் நிலையானதுதானா என்று பார்க்கவும். அல்லது இணைய தளங்களில் குறிப்பிட்ட நிறுவனத்தின் அத்தாட்சி பெற்ற முகவர்களின் முகவரிகள், அதே நிறுவனங்களின் கிளைகள் பட்டியல் இருக்கும்.
அவற்றை பெற்று தொடர்பு கொண்டு வாங்கலாம். லேப் டாப் கம்ப்யூட்டர்களை பெர்சனல் கம்ப்யூட்டர்களை ரிப்பேர் நாம் பழுது பார்ப்பது போல பார்க்க முடியாது. மிக நுண்மையான சாதனமாகும். எனவே ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நீங்களே கையாளும் எண்ணத்தை விட்டுவிட்டு அதற்கான் நிறுவன அலுவலகத்திற்குச் செல்லவும். தகுதி கொண்ட டெக்னீஷியனிடம் மட்டுமே காட்டவும்.

Wednesday, December 5, 2012

இணையப்பக்கங்களை அச்செடுக்க உதவும் தளம்

எப்பொழுதாவது ஏதாவது ஒரு இணையப் பக்கத்தை அச்செடுக்க முயன்றிருப்பீர்கள். ஆனால் அதில் அச்சுக்குத் தேவையில்லாத வெறும் வெற்று இடைவெளிகளும், விளம்பரங்களும், கட்டம் கட்டமாகக் காரணமே இல்லாத தகவல்களும் சேர்ந்தே அச்சாகி வெளியே வரும். இதனால் அச்சு மை, தாள், நேரம், பணம் என நிறையக் காரணிகள் செலவாகும்.

இதைத் தவிர்ப்பதற்காகவே ஒரு இணையத்தளம் உள்ளது.

தளத்தின் யு.ஆர்.எல் பெட்டியில் எந்த இணையத்தளம் என்பதன் முகவரியை உள்ளிட வேண்டும்.

பிறகு எந்த எந்தப் பகுதிகள் மாத்திரம் உங்களுக்குத் தேவை என்பதை கட்டம் கட்டிக் காண்பிக்க வேண்டும்.

பிரிண்ட் - எனக் கொடுத்தால் நமக்குத் தேவையான பகுதிகள் மாத்திரம் அச்சாகி வெளிவரும்.

சிறப்பம்சங்கள் :
எந்தவிதமான மென்பொருள் தரவிறக்கம், நிறுவுதல் எதுவும் தேவையில்லை.
பின்னால் உள்ள படங்களை அகற்றிவிட்டு அச்செடுக்கலாம்.
எழுத்துருக்களைப் பெரிதாக / சிறிதாக மாற்ற முடிகிறது.

இணையப்பக்கத்தில் எந்த குறிப்பிட்ட அம்சங்கள் மாத்திரம் உங்களுக்குத் தேவையோ அவைகளை மாத்திரம் அச்செடுக்கலாம் என்பதே இந்தத்தளத்தின் தாரகமந்திரம்.




Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews