தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, March 8, 2013

10 and 11 ICT Book

 இலங்கை கல்வி வெளியீட்டுத்தினைக்களம் இலங்கை தகவல் தொழில் நுட்ப மாணவர்களுக்கு (தரம் 10)  தேவையான பாடப்புத்தகத்தினை வெளியிட்டு உள்ளது. இது குறிப்பிட்ட மாணவருக்கு மாத்திரம் அன்றி தகவல் தொழில் நுட்ப அறிவினை பெற விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளது என்பதனால் அதனை பதிவிறக்கம் செய்வதற்க்கான சுட்டிகள் தரப்பட்டுள்ளது.  


Chapter2
Chapter3

Chapter4
Chapter5
Chapter6
Chapter7
Chapter8
Chapter9

Tuesday, March 5, 2013

இணையத்தின் வரலாறு

இணையத்தைப் பயன்படுத்தும் நீங்கள் இணையத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.
                                     1967ம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புத்துறை (Department of Defense) தங்களதுபாதுகாப்புக்காக ARPANET என்ற வலையமைப்பை ஆரம்பித்தது. ARPA என்பது Advanced Research Project Agencyஎன்பதன் சுருக்கம். ஆரம்பத்தில் கலிஃபோர்னியாவில் மூன்று கணிணிகளுடனும் உதாவில் (Utah) ஒரு கணிணியுடனும் இந்த வலைப்பின்னல் தொடர்பு ஆரம்பிக்கப்பட்டது. இராணுவ கருவி ஆராச்சியளர்கள்,இரானுவ உதவி பெறும் பல்கலைக்கழகங்கள் இந்த வலையமைப்பில் செயற்பட்டன.
                                   ARPANET வெற்றியைப் பார்த்த அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் எல்லாம் சேர்ந்து இந்த வலையமைப்பை இரண்டாகப் பிரித்தார்கள். ஒன்று MILNET என்ற பெயரில் ஒன்று மற்றயது ARPANET ல் இணைத்தார்கள்.
                                1970ம் ஆண்டில் மேலும் பல வலையமைப்புக்கள் தோன்றின. BITNET, USENET, UUCP போன்ற வலையமைப்புக்கள் செம்மையாகச் செயலாற்றின.
                               1980ம் ஆண்டளவில் NSFNET என்ற பெயரில் புதிய வலையமைப்பு தோன்றியது.  National Science Foundation என்பதன் சுருக்கமே NFS ஆகும். பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராச்சிக் கூடங்களில் உள்ள சுப்பர் கணிணிகள் இதில் இணைக்க அனுமதிக்கப்பட்டன.
            இணையத்தை சைபர்ஸ்பேஸ் (Cyber Space), இனபோமேஷன் சுப்பர்ஹைவே (Information Superhighway)என்றெல்லாம் அழைக்கின்றனர்.
            சாலைகளில் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் வேறுபட்ட வாகனங்களைவைத்திருப்பவர்கள்  பயணம் செய்கிறார்கள். எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.அல்லவாஅதைப் போண்றுதான்  வித்தியாசமான கணிணிகளை (Windows, Macintosh, Linux) வைத்திருப்பவர்கள் வித்தியாசமான வசதிகளை ( E-Mail, Discussion Group, Games)அனுபவிக்கலாம்.
            தகவல்கள் இணையத்தில் தங்கு தடையின்றிதுரித வேகத்தில் பிரயானம் செய்வதனால்இணையத்தை  சுப்பர்ஹைவே என்கிறார்கள்.



                                1982ம் ஆண்டு வில்லியம் கிப்ஸன் (William Gibson) என்பவர் தனது நேரோமென்சர் (Neuromancer)என்ற விஞ்ஞான நாவலில் சைபர்ஸ்பேஸ் என்ற வார்த்தையை புகுத்தினார்.கணிணி மயமான வருங்கால உலகை சைபர்ஸ்பேஸ்  என் குறிப்பிட்டார். இணைய் உலகமும் சைபர்ஸ்பேஸ் போன்றதே என்பதைக் குறிக்க இணையத்தை சைபர்ஸ்பேஸ்  என் அழைக்கின்ற்னர்.

இணையம் இலவசமா?
              இணையத்தில் யாரும் நுழையலாம்அதில் எந்தக் கட்டணமும் கிடையாது ஆனால் இணயத்தில் நுழைய நீங்கள் கட்டணம் கட்ட வேண்டும். இணைய வசதியை வழங்கும் நிறுவனங்கள் உண்டு. இவற்றை இணைய சேவை வழங்குநர்கள் (Internet Service Providers) என்பர். சுருக்கமாக ISP எனலாம்.இவர்களிடம் பணம் கட்டி சந்தாதாரர் ஆக வேண்டும். இலங்கையில் பிரதான இணைய சேவை வழங்குனராக Srilanka telecom, Mobitel, Dialog போன்ற நிறுவனங்கள் காணப்படுகின்றன.

Friday, March 1, 2013

Windows Tips

எனது கன்னி முயற்சியாக இந்த முதலாவது Blog இனை வெளியிடுகிறேன்.
நாம் கூடுதலாக பயன்படுத்தும் windowsXP operating syste த்தில் உருவாகும் பல பிரச்சனைகளை திருத்தமுடியாதவர்கலாக அதனை format செய்து மீண்டும் ஒவ்வொன்றாக install செய்யும் வாடிக்கையினையே நாம் அனேகமாக கொண்டுள்லோம். இவ்வாறு நாம் சந்திக்கும் ஒரு windows booting பிரச்சனை பற்றிய குறிப்பினை பகிர்ந்து கொள்வோம்.


Windows NT could not start because the below file is missing or corrupt:

X:\\WINNT\\System32\\HAL.dll
(OR)

NTLDR is Missing
Press any key to restart
போன்ற error தோன்றும் சந்தர்ப்பங்களில் பின்வரும் படிமுறைகளை செய்வதன் ஊடாக இலகுவாக சிக்கல் இன்றி தீர்வு கண்டு கொள்ள முடியும்.





  • 1: C:\WINDOWS
    (C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)
    இது சரியெனில் டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை டைப்செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லைஅப்படியிருந்தால் வெறுமனே என்டர் கொடுத்தால்போதுமானது).
    இப்பொழுது திரையில்,
    C:\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும்இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
    CD ..
    ATTRIB -H C:\boot.ini
    ATTRIB -S C:\boot.ini
    ATTRIB -R C:\boot.ini
    del boot.ini
    BOOTCFG /Rebuild
    CHKDSK /R /F
    FIXBOOT

    • இறிதியாக ”Sure You want to write a new boot sector to the partition C: ?" என கேட்க்கப்படும் பொழுது 'Y' இனை கொடுத்து Enter செய்யவும்.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews