Hardware (வன்பொருள்)
கணினியினை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதும், Software இனால் செயற்படுத்தப்படுவதுமான இலத்திரனியல் பகுதிகள் Hardware என அழைக்கப்படுகின்றது .
Software (மென்பொருள்)
கணினியினால் செயற்படுத்தப்படுகின்ற அறிவுறுத்தல்களின் பட்டியல் Software என அழைக்கப்படுகின்றது. இவை பிரதானமாக மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அவையாவன :
1. Firmware
2. System software
3. Application software
Firmware
கணினி வன்பொருள் உற்பத்தியாளர்களால் கணினியின் வன்பொருளில் இல் நிரந்தரமாகப் பதியப்படும் ஒரு தொகுதி அறிவுறுத்தல்கள் Firmware என அழைக்கப்படுகின்றது. இதனை அடிப்படையாக வைத்தே கணினியின் ஏனைய மென்பொருட்கள் இயங்குகின்றன.
உதாரணம் : BIOS (Basic Input Output System) Program
System Software (பணிச்செயல்முறை)
கணினியின் வன்பொருள் பகுதியினைப் பயனுள்ளதாக்குகின்ற சகல நிகழ்ச்சித்திட்டங்களும் System Software என அழைக்கப்படுகின்றன. கணினியின் செயற்பாட்டுக்கு தேவையான மென்பொருள் தொகுதியினை இது கொண்டிருக்கும்.
உதாரணம் :
1. Ms DOS
2. Windows (XP, Vista, Windows7)
3. UNIX
4. Linux (Ubuntu, Fedora, K Ubuntu etc..)
5. Mac OS
Application Software (பிரயோக மென்பொருட்கள்)
கணினியில் குறிப்பிட்ட வேலைகளைச் செய்யவென பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் பிரயோக மென்பொருட்கள் என அழைக்கப்படு கின்றன. இவை System Software இனை அடிப்படையாக வைத்துக்கொண்டு செயற்படுகின்றன. பிரயோக மென்பொருட்கள் ஆனது பிரதானமாக இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.
அவையாவன :
1. Application Package.
2. Programming Language
Application Package
கணினியில் குறிப்பிட்ட வேலையினை செய்வதற்கென பயனாளர் இடைமுகத்தினைக்கொண்ட பிரத்தியோக மென்பொருள் பொதி இதுவாகும்.
உதாரணம்
1. Microsoft office Application (Word, Excel, Access, Power point)
2. Photoshop.
3. Note pad
Programming Language
கணினியில் மென்பொருள் நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்ட மொழி இதுவாகும். இதில் பிரதானமாக மூன்று பிரிவுகள் உள்ளன.
அவையாவன:
1. Machine Language
2. Low level Programming language
3. High level Programming language
Machine Language
1 இனையும் 0 இனையும் பயன்படுத்தி உருவாக்கும் கணினி நிகழ்சித்திட்ட மொழி இதுவாகும். இதனை Binary Language எனவும்அழைக்கப்படும். இதுவே கணினி விளங்கிக்கொள்ளும் மொழி யாகும்.ஏனைய மொழிகளில் நிகழ்ச்சித்திட்டங்களை எழுதினாலும் அவை அவற்றுக்குரிய மொழிமாற்றிகள் (Translator Program) மூலம் கணினிக்கு புரியும் மொழியான Machine language இற்கு மாற்றியே செயற்படுத்தப் படுகின்றன.
Low level Programming language
இதனை Assembly language என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் Low level Programming language இல் இந்த Assembly language மட்டுமே உண்டு. இது விளங்கக்கூடிய குறியீட்டு வடிவில் அமைந்த மொழியாகும். இது, Machine Language இனைவிட இலகுவாக விளங்கக்கூடிய ஒரு மொழியாகும்.
இம் மொழியில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களைக் கணினி நேரடியாக ஏற்றுக்கொள்ள மாட்டாது. எனவே இவை Machine Language இற்கு மாற்றப்பட்ட பின்னரே அதனை கணினி விளங்கிக்கொள்ளும் பின் அதில் உள்ள அறிவுறுத்தல் களின்படி தொழிற்படும்.
Low level Programming language இல் எழுதப்படும் நிகழ்ச்சித்திட்டங்களை Machine Language இற்கு மாற்றும் செயற்பாட்டினையும் கணினியே செய்கிறது. இதற்குத்தேவையான மொழிபெயர்ப்பு நிகழ்ச்சித்திட்டமான (Translator Program) assembler எனும் நிகழ்ச்சித்திட்டம் எழுதப்பட்டு கணினிமொழியுடனேயே உற்பத்தியாளர்க ளினால் விற்கப்படுகின்றது.
High level Programming language
இம்மொழி Low level Programming language இலும் முன்னேற்றகரமானது. கணினிக்கு Assembly language இல் பல அறிவுறுத்தல்களில் கொடுக்க வேண்டிய விடையத்தினை இந்த மொழிமூலம் ஒரே அறிவுறுத்தலில் கொடுக்கக்கூடியவாறு இருக்கின்றது. மற்றும் Assembly language இல் programஎழுதுவதற்கு Hardware பற்றிய அறிவு தேவைப்பட்டது.
எனவே விஞ்ஞானிகள் மட்டுமே Assembly language இல் program எழுதக்கூடியவாறு இருந்தது (எழுதினார்கள்).
ஆனால் High level language ஆனது இலகுவானதாகவும் ஆங்கில மொழியில் அமைந்திருப்பதனாலும் இதில் சாதாரண அறிவுடனேயே நிகழ்ச்சித்திட்டங்களை தயாரிக்கக்கூடியவாறு இருந்தது (இருக்கின்றது). பல High level language கள் உருவாக்கப்பட்டுள்ளன.
உதாரணம் :
BASIC, Pascal, Java, C++, C#, PHP
High level language இல் எழுதப்பட்டprogram இனை Machine Language இற்கு மாற்றுவதற்காக மூன்று வகையான Translator கள் பயன்படுத்தப்படுகின்றன.
அவையாவன:
1. Compiler (தொகுப்பி)
2. Interpreter (பொருள்கோடலி)
3. இவை இரண்டும் இணைந்த மாற்றிகள்.
Compiler இ ற்கும் Interpreter இற்கும் இடையேயான வேறுபாடுகள்.
Compiler ஆனது source program இனை முழுமையாக ஒரேதடவையில் இயந்திர மொழியாக மாற்றப்படும்.
ஆனால், Interpreter ஆனது source program இனின் ஒவ்வொரு கட்டளைகளை செயற்படுத்தும்போதும் அதற்குரிய இயந்திரமொழியாக மாற்றப்டும்.