தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, September 18, 2013

பிளாக்கரில் இரண்டு பதிவுகளை வேறுபடுத்தி காட்ட Post Divider (Separator)

உங்கள் வலைபூவில் வாசகர்களின் வரவை அதிகரிக்க, உங்களது வலைபூ அழகாகவும், படிப்பதற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். என்னதான் பதிவுகளை நேர்த்தியாக எழுதி இருந்தாலும், அது பார்ப்பதற்கு உருத்தாதவண்ணம் இருந்தால் ப்டிக்க முடியும். நிறைய பேர் யார திட்டி பதிவு எழுதலாம்?, எந்த படத்த கடிச்சு குதறி எழுதலாம் (இதுக்காக பிளாக்ல டிக்கெட் எடுத்து படம் பார்ப்பதாய் கேள்வி) னே இருக்காங்க..
கொஞ்சம் வலைபூ அலங்காரத்தையும் கவனிக்கனும். அப்படினாத்தான் நிறைய பேருக்கு பிடித்த வலைபூவா, உங்களோடது இருக்கும். இப்ப கெளவி என்னன்னா? (மன்னிச்சுகுங்க கேள்வி!) ஒரு பதிவுக்கும், அடுத்த பதிவுக்கும் உள்ள இடைவெளிய நிரப்பமுடியுமா? அதில் ஒரு அலங்காரம் போட்டா பாக்க எப்படி இருக்கும்! அதுக்குதான் இந்த Page Divider இருக்கு… இதுல ரெண்டு பதிவுக்கும் இடையில உங்களுக்கு பிடிச்ச டிசைன் எதுவானாலும் போட்டுகலாம். அழகான் பூக்கள் நிறைந்த ஒரு லைன் போடலாம், இல்லனா ஒரு அனகொண்டாவ படுக்க வைக்கலாம். உங்க வலைபூவ பாத்தாவே தாறுமார் டாருடார் ஆயிடும். (இதெல்லாம் சின்ன பசங்க மொழி புரிஞ்சுகனும்). சரி, இப்ப மேட்டருக்கு போவோம்….
இது கொஞ்சம் இல்ல, நிறையவே குழப்பும் இருந்தாலும் கவனமா பார்த்தீங்கனா புரியும். புரியலனா இத பாருங்க Demo
1. உங்க பிளாக்கர Login செஞ்சு Dashboard >> Layout >> Edit html போங்க,
.post
2. மேல காட்டின கோடிங்கை Ctrl+F அடிச்சு தேடுங்க,
/* Footer
----------------------------------------------- */
.footer-outer {
  color:$(footer.text.color);
  background: $(footer.background);
  -moz-border-radius: $(footer.border.radius.top) $(footer.border.radius.top) $(footer.border.radius.bottom) $(footer.border.radius.bottom);
  -webkit-border-top-left-radius: $(footer.border.radius.top);
  -webkit-border-top-right-radius: $(footer.border.radius.top);
  -webkit-border-bottom-left-radius: $(footer.border.radius.bottom);
  -webkit-border-bottom-right-radius: $(footer.border.radius.bottom);
  -goog-ms-border-radius: $(footer.border.radius.top) $(footer.border.radius.top) $(footer.border.radius.bottom) $(footer.border.radius.bottom);
  border-radius: $(footer.border.radius.top) $(footer.border.radius.top) $(footer.border.radius.bottom) $(footer.border.radius.bottom);
  -moz-box-shadow: 0 $(region.shadow.offset) $(region.shadow.spread) rgba(0, 0, 0, .15);
  -webkit-box-shadow: 0 $(region.shadow.offset) $(region.shadow.spread) rgba(0, 0, 0, .15);
  -goog-ms-box-shadow: 0 $(region.shadow.offset) $(region.shadow.spread) rgba(0, 0, 0, .15);
  box-shadow: 0 $(region.shadow.offset) $(region.shadow.spread) rgba(0, 0, 0, .15);
}
.footer-inner {
  padding: 10px $(main.padding.sides) 20px;
}
.footer-outer a {
  color: $(footer.link.color);
}
.footer-outer a:visited {
  color: $(footer.link.visited.color);
}
.footer-outer a:hover {
  color: $(footer.link.hover.color);
}
.footer-outer .widget h2 {
  color: $(footer.widget.title.text.color);
}
.postCode{
background: none repeat scroll 0 0;
border:2px solid Silver;
height:'auto';
margin:10px;
overflow:auto;
padding:6px;
text-align:left;
}
3. மேலே காட்டி இருக்கறது ஒரு Exampleகாக என்னோட பிளாக்கரல இருந்து எடுத்து போட்டிருக்கேன். இங்க கலர்ல குறிச்சி இருக்கேன். அத தேடி { } – இந்த அடைப்புகுறிகுள்ள இருக்குற, கோடிங்கை தூக்கிட்டு அதாவது Cut பண்ணிட்டு (குறிப்பு: இவை எல்லா செய்யறதுக்கு முன்னாடி, உங்க Template-அ Backup எடுத்துகுங்க, எடுத்தவுடனே Save பண்ணிடாதீங்க, Preview பாருங்க கோடிங் Work ஆனா மட்டும் Save பண்ணுங்க) கீழே உள்ள கோடிங்கை அந்த அடைப்புகுறிகுள்ள Paste பண்ணுங்க.
background: url(Separator-Image-Url); background-repeat: no-repeat;background-position: bottom center; margin:.5em 0 1.5em;padding-bottom:2.5em;
4. மேலே காட்டின கோடிங்கல நீங்க, Separator-Image-Url இடத்துல உங்களுக்கு தேவையான படத்தோட Url –ல கொடுத்துக்கலாம். 2.5em-கரது சைஸ் அதயும் மாத்திக்கலாம்.
.post{margin: 0 0 40px 0;width: 90%; background: url(http://www.imagehost.com/separator.jpg); background-repeat: no-repeat;background-position: bottom center; margin:.5em 0 1.5em;padding-bottom:2.5em;}
5. உங்க Url கோடையும் சேர்த்த பிறகு இப்படி இருக்கும்.
Free Imager Url:
 
 
  image
  image
 
  image
 
http://3.bp.blogspot.com/_JwD5r652h00/Sutv2gVPVII/AAAAAAAAAOg/w1Wh7KancXM/s1600/drawing-separator.gif
6. இந்த படங்களோட URL எடுத்த அந்த கோடிங்கோட இணைச்சு, போட்டு பாருங்க சரியா வரும், வரலீனா? பின்னூட்டத்துல சொல்லுங்க சரி பண்ணிக்கலாம்.

Monday, September 16, 2013

தகவல் முறைமை - 7

சோதனை மேற்கொள்ளல் (System Testing)
வடிவமைக்கப்பட்ட முறைமையில் உள்ள குறிமுறை வழுக்கள்(Cording Errors), அமைப்பு வழுக்கள்(Designing errors) அல்லது தேவைக்குறைபாடகள்(Requirement Errors) போன்றன சோதனைக்குட்படுத்தப்படும்.
அமைப்புவழுக்கள் அல்லது தேவைக்குறைபாடுகள் என்பது நாம் வழங்கும் உள்ளீடுகளுக்கு ஏற்ப வருவிளைவு பெறப்படுகின்றனவா எனவும், முறைமையின் வினைத்திறன், நம்பகத்தன்மை, பாதுகாப்பு என்பனவும் செம்மை பார்க்கப் படுகின்றன.
ஒரு முறைமையானது 3 படிமுறைகளில் செம்மை பார்க்கப்படுகின்றது.
     1.   அலகுப் பரிசோதனை (Unit Testing)
     2.   முறைமை பரிசோதனை(System testing) / தொடர்புடைமைச் சோதனை(Integration Testing)
     3.   பாவனையாளர் அங்கிகரிப்பதற்கான சோதனை(Accepting Testing)
அலகுப் பரிசோதனை – முறைமையின் ஒவ்வரு கூறுகளுக்கும் தனித்தனியாக உள்ளீடுகளை வழங்கி வருவிளைவு செம்மை பார்க்கப்படும்
முறைமை பரிசோதனை – முறைமையின் கூறுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தப்பட்டு முறைமைக்குரிய செய்நிரல்கள் சரியான முறையில் செயல்படுத்தப்படுகின்றனவா என முறைமைக்கான உள்ளீடுகளை வழங்கி சோதனை மேற்கொள்ளல்.
பாவனையாளர் அங்கிகரிப்பதற்கான சோதனை – முறைமை வடிவமைப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பயனாளரினால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளதா என்பது பற்றி சோதனையினைக் குறிக்கும்.

முறைமையினை செயற்படுத்தல் (System Implementation)
மூலமுறைமையில் இருந்த எல்லாத்தரவுகளும் புதிய கணினி முறைமைக்கு மாற்றம் செய்தலை இது குறிக்கும். இது பின்வரும் இருவழிகளில் மேற்கொள்ளப்படுகின்றது.
            1.   நேரடி அமுலாக்கம் (Direct implementation)
            2.   சமாந்தர அமுலாக்கம் ( Parallel Implementation)
நேரடி அமுலாக்கம் – பழயமுறைமை நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்ட தினத்தில் இருந்தே கணினி மயப்படுத்தப்பட்ட முறைமை ஆரம்பிக்கப்படுதலைக்குறிக்கும்.

அனுகூலம் – செலவு குறைவு, நேரச்சிக்கனம்

பிரதிகூலம் – புதியமுறைமையில் கடினத்தன்மை ஏற்படும் பொழுது பழய முறைமைக்கு மாற முடியாது.
            புதியமுறைமைக்கு இயபாக்கம் அடைய ஏற்படும் காலதாமதம் வேலையில் கடினத்தன்மையினை உருவாக்கும்.
சமாந்தர அமுலாக்கம் – பழய முறைமையும், கணினிமயப்படுத்தப்பட்ட புதிய முறைமையும் ஒரேநேரத்தில் இயங்கும்.

அனுகூலம் – பழயமுறைமையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுபேறுகளையும், புதிய கணினி மயப்படுத்தப்பட்ட முறைமையில் பெற்றுக்கொள்ளப்பட்ட பெறுபேறுகளையும் ஒப்பிட முடியும்.
             புதிய முறைமை ஆரம்ப கட்டத்திலேயே செயல் இழப்பின் அது நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்காது

பிரதிமூகூலம் – நிறுவனத்தின் ஒவ்வரு செயல்பாடுகளும் இருமுறை செய்ப்படுவதனால் மேலதிக வேலைச்சுமையும், நேர விரையமும் ஏற்படும்.
முறைமையினை பராமரித்தல்
          1.   முறைமைப் பயன்பாட்டில் இருக்கும் பொழுது முறைமையில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும்.
          2.   பயனாளரின் புதிய தேவைகளை இனம் கண்டு மாற்றங்களை செய்வதற்கும்.
          3. எதிர்காலத்தில் ஏற்படும் தொழில் நுட்ப மாற்றங்கள் காரணமாக முறைமையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் முறைமை பராமரிப்பு அவசியமாகும்.

Sunday, September 15, 2013

தகவல் முறைமை - 6

முறைமை பகுப்பாய்வு செய்தல் (System Analysis)
முறைமையின் தேவைகள், அதன் மூலம் நிறைவேற்ற எதிர்பாக்கப்படும் கருமங்கள் பற்றி உரிமையாளர், பயனாளர் போன்றோரிடம் கலந்துரையாடி பூரண ஆய்வில் ஈடுபடுதலைக் குறிக்கும்.
இங்கு முறைமையின் தேவைகள் இருவகைப்படும்.
    1.   செயல்சார்ந்த தேவைகள் (Functional Requirement)
    2.   செயல்சாராத தேவைகள் (Non Functional Requirement)
செயல்சார்ந்த தேவைகள் (Functional Requirement) – முறைமையில் பயன்படுத்த உத்தேசிக்கும் செயல்களைக் குறிக்கும். உதாரணமாக வங்கி கொடுக்கல் வாங்கள் முறைமையில் பணம் வைப்பில் இடுதல், மீளப்பெறல், மீதியினை அறிதல், அறிக்கை தயாரித்தல் போன்ற செய்கைகளை குறிக்கும்.
செயல்சாராத தேவைகள் (Non Functional Requirement) – கணினி மயப்படுத்தப்பட்ட முறைமையின் வினைத்திறன், பாதுகாப்பு, நம்பகத்தன்மை, பயனாளர் சுலபமாக பயன்படுத்த தக்க இடை முகம் போன்ற தேவைகளைக் குறிக்கும்.
இவ்வாறான முறைமையின் செயல்சார்ந்த, செயல்சாரா தேவைகள் பற்றிய அறிக்கை முறைமையின் தேவைகள் விபரக்குறிப்பு (System Requirement Specification) என அழைப்பர்.
முறைமைக்கு தேவையான தரவுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நுட்பங்கள் (தரவுத்தளத்தினை திட்டமிடுவதற்கு)
       1.   அறிக்கை கோவைகள் ஆகியவற்றை அவதானித்தல்.
       2.   நேர்காணல்
       3.   வினாக்கொத்து பயன்படுத்துதல்
       4.   அவதானிப்புக்களை மேற்கொள்ளுதல்
       5.   மாதிரிகளை பயன்படுத்துதல்


முறைமை வடிவமைப்பு (System Design)
பயனாளரின் தேவைகள் மற்றும் ஆழமான பகுப்பாய்வு என்பவற்றுக்கு ஏற்ப முறைமை வடிவமைப்பாணது பின்வரும் இரு கட்டங்கலாக நடைபெறுகின்றது.
    1.   ஆரம்பம் அல்லது பொதுவாண வடிவமைப்பு புதிய முறைமையில் உள்ளடங்கவேண்டிய அம்சங்கள் அதாவது உள்ளீடு, செய்முறை, வருவிளைவு என்பன வரையறை செய்யப்படுகின்றது.
    2.   கட்டமைப்பு அல்லது விரிவாண வடிவமைப்புபுதியமுறைமை எழுதப்பட வேண்டிய கணினி மொழி தெரிவு செய்யப்பட்டு பாச்சல்கோட்டுப்படங்கள்(Flow chart), தரவுப்பாச்சல் படங்கள்(Data Flow Diagram – DFD),போலிக்குறிமுறைகள், தரவுத்தளம் என்பன வடிவமைக்கப்படுகின்றது.

முறைமையினை விருத்தி செய்தல் (System Development)
வடிவமைக்கப்பட்ட முறைமைக்கு கணினி நிகழ்ச்சித்திட்டம் எழுதுதல் அதாவது குறிமுறைப்படுத்தல்(Coding) இன்னிலையிலே இடம் பெறுகின்றது. குறிமுறைப்படுத்தல் பகுதி பகுதியாகவே மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு மேற்கொள்வதனால்
     1.   முறைமையினை விரைவாக அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.
     2.   முறைமையினை பராமரித்தல் இலகு.
     3.   எதிர்காலத்தில் முறைமையில் மாற்றம் செய்யும் பொழுது அவற்றினை இலகுவாக மேற்கொள்ள முடியும்(விரைவாக இற்றைப்படுத்திக்கொள்ள முடியும்)
குறிப்பு – முறைமைக்காண கணினி மொழியினை தெரிவு செய்யும் பொழுது பின்வரும் விடையங்களை கருத்தில் கொள்ளல் வேண்டும்.
    1.   பிரையோக ஆள்களம் (Application Domain)
    2.   முறைமையின் பரிமாணமும் அதன் கணிப்பீடும்
    3.   முறைமையினை செயல்படுத்துவதற்காக அம்மொழியில் உள்ள வசதிகள்.
    4.   முறைமையினை பராமரிக்க தேவையான வசதிகள்.
இங்கு பிரையோக ஆள்களம் என்பது அது செயல்படுததப்படும் பரப்பினைக்குறிக்கும் அதாவது இணைய வழி முறைமையாயின் JAVA, PHPபோன்ற மொழிகள் தெரிவு செய்யப்படும். வன்பொருள் சார்ந்த முறைமை மென்பொருட்களை உருவாக்கும் பொழுது C, C++ போன்ற மொழிகள் தெரிவு செய்யப்படும்.
முறைமையின் பரிணாமமும் அதன் கணிப்பீடும் என்னும் பொழுது, முறைமையினை நாம் துரிதமாக அமைத்துக்கொள்வதற்கு Visual Basic, Visual Cபோன்ற மொழிகளும், வல்லுனர் முறைமையினை அமைக்கும் பொழுது தர்கத்துக்கான வசதிகள் உடைய Prolog போன்ற மொழிகளும் பயன்படுத்தப்படும்.

Saturday, September 14, 2013

தகவல் முறைமை - 5

முறைமை விருத்தி வட்டம்(System Development Life Cycle - SDLC)
முறைமையினை கணினி மயப்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய படிமுறைகளை இது குறிக்கும். அவையாவன
    1.   பிரைச்சனையினை வரைவிலக்கணப்படுத்தல் (Problem Definition)
    2.   இயலுமை ஆய்வு (Feasibility Study)
    3.   முறைமை பகுப்பாய்வு செய்தல் (System Analysis)
    4.   முறைமை வடிவமைப்பு (System Design)
    5.   முறைமையினை விருத்தி செய்தல் (System Development)
    6.   சோதனை மேற்கொள்ளல் (System Testing)
    7.   முறைமையினை செயற்படுத்தல் (System Implementation)
     8.   முறைமையினை பராமரித்தல் (System Maintenance)




பிரைச்சனையினை வரைவிலக்கணப்படுத்தல் (Problem Definition)
முறைமையின் முகாமைத்துவ குழுவும், முறைமை விருத்தி குழுவும் இணைந்து முறைமையின் குறிக்கோள், உள்ளீடு, வருவிளைவு, செய்முறை, பாதுகாப்பு, முறைமையின் இடைமுகம் பற்றிய எளிய ஆவணத்தினை தயார் செய்தலைக்குறிக்கும்.
இயலுமை ஆய்வு (Feasibility Study)
முறைமையினை உருவாக்க தேவையான வளங்கள் உள்ளனவா, இப்புதிய முறைமையில் இருந்து பெறத்தக்க பொருளாதார அனுகூலங்கள் பற்றிய ஆய்வே இதுவாகும்.பின்வரும் 3 வகைகளில் இவை ஆய்வு செய்யப்படும்.
   1.   தொழினுட்ப இயலுமை – முறைமையினை உருவாக்க தேவையான தொழினுட்ப வழங்களைக் கொண்டுள்ளனவா என்பது பற்றி ஆராய்தல்.
   2.   செய்பணி இயலுமை  முறைமையினை இயக்க தேவையான மானுட, பௌதீக, நேரவளங்களைக் கொண்டுள்ளனவா என ஆராய்தல்.
   3.   பொருளாதார இயலுமை – முறைமையினை உருவாக்க தேவையான பொருளாதார வளங்கள் பற்றியும், செலவிடப்படும் பெறுமதிக்கு பொருத்தமான பயன்பாடு உள்ளனவா என்பது பற்றியும் ஆராயப்படும்.

Friday, September 13, 2013

தகவல் முறைமை - 4

தகவல் முறைமை ஒன்றின் வகைகள்
தகவல் முறைமையானது அதன் செயற்பாட்டு பிரையோக அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படும்.
    1.   கொடுக்கல் வாங்கல் முறை வழியாக்க முறைமைகள். (Transaction Processing Systems)
    2.   முகாமைத்துவ தகவல் முறைமைகள் (Management Information Systems)
    3.   தீர்மான உதவி முறைமைகள் (Decision Support Systems)
    4.   வல்லுனர் முறைமைகள் (Expert Systems)
கொடுக்கல் வாங்கல் முறை வழியாக்க முறைமைகள். (Transaction Processing Systems)
அன்றாடம் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களை முறைவழிப்படுத்துவதற்கான தகவல் முறைமையாகும்.
உ-ம் – வங்கி கொடுக்கல் வாங்கல்களை முறைவழிப்படுத்தல்
       வர்த்தக நிறுவன கொடுக்கல் வாங்கல்களை முறைவழிப்படுத்தல்

முகாமைத்துவ தகவல் முறைமைகள் (Management Information Systems)
ஒரு நிறுவனத்தின் முகாமைத்துவ தகவல்களை செயற்படுத்தும் முறைமையினை குறிக்கும்.
இவ்முறைமையின் கீழ் ஊழியர்  விபரம், சம்பளம், வரவு, செலவு, இலாப நட்ட பதிவுகள் என்பவற்றின் தரவுத்தளங்களை பேனலும், இவற்றினை முறைவழிப்படுத்தி நிர்வாகத்துக்கு தேவையான தரவுகளை பெற்றுக்கொடுத்தலும் இம் முறைமையின் பணியாகும்.

தீர்மான உதவி முறைமைகள் (Decision Support Systems)
தீர்மானம் எடுக்க தேவையான தரவுகளை பயனாளருக்கு பெற்றுக்கொடுக்கும் முறைமை இதுவாகும்.
இதற்கு கணினிக்கு தீர்மாணம் ’மேற்கொள்ளும் முறை, விதிகள், செயலொழுங்குகள், தகவல்கள் என்பவற்றை பெற்றுக்கொடுத்து முறைவழிப்படுத்தப்பட்டு தீர்மாணம் எடுக்க தேவையான தரவுகளை பயனாளருக்கு பெற்றுக்கொடுப்பதாகும்.
வல்லுனர் முறைமைகள் (Expert Systems)
மனிதர்கள் சில துறைசார்ந்த அறிவனைக்கொண்டிருப்பது போல் கணினிக்கும் சில சிறப்பான மென்பொருட்களை பயன்படுத்தி துறைசார்ந்த அறிவினை பெற்றுக்கொடுத்து உரிய நிலைமைக்கு ஏற்ப அறிவுமட்டத்திலான (Knowledge Base) ஆராய்வினை மேற்கொண்டு ஆலோனை வழங்கலை குறிக்கும்.
அதாவது கணினிக்கு செயற்கை முறை சிந்துக்கும் ஆற்றலை(Artificial Intelligent) வழங்கும் முறைமையாகும்.
உதாரணமாக கணினி சார் வைத்திய முறை(Computer Base Medicine)    

Thursday, September 12, 2013

தகவல் முறைமை - 3

முறைமை ஒன்றில் தீர்மாணம் எடுக்கம் நிலை
          1.  அதியுயர் முகாமைத்துவம் (Top level Management)
          2.  மத்திய தர முகாமைத்துவம் (Middle level Management)
          3.  களநிலைப்பகுதி (Operational level/Low level Management)

 களநிலைப்பகுதி (Operational level/Low level Management)
இங்கு நன்கு திட்டமிடப்பட்ட தகவல்கள் தேவையாக இருப்பதுடன் அதனை தொகுதியல் இருந்தே பெற்றுக்கொள்வர்
உ-ம் பாடசாலை வகுப்பறை ஒன்றின் ஆசிரியர் நிலை.

மத்திய தர முகாமைத்துவம் (Middle level Management)
இவர்கள் முறைமை ஒன்றினை கண்கானித்தல் கட்டுப்படுத்தல் போன்ற யெற்பாடுகளை மேற்கொள்வர். இவர்களுக்கு குறைந்தளவு தகவல் பொதுமானது.
உ-ம் பிரதி அதிபர், பகுதிதலைவர்

அதியுயர் முகாமைத்துவம் (Top level Management)
இவர்களுக்கு நன்கு வடிகட்டப்பட்ட சுருக்கமான நேரடியாக பயன்படத்தக்க தகவல்கள் தேவைப்படும் தேவை ஏற்படும் பொழுது முறைமைக்கு வெளியே இருந்து தகவல்களை பெற்று இறுதி தீர்மாணத்தினை மேற்கொள்வர். ஆனாலும் இவர்கள் சுயமாக செயற்பட முடியாததாக இருப்பர்.
உ-ம் பாடசாலை அதிபர்.


Wednesday, September 11, 2013

தகவல் முறைமை - 2

தொகுதி பிரதானமாக 3 செயற்பாடுகளை கொண்டது 
    1.       உள்ளீடு
    2.    முறைவழியாக்கம்
    3.   வெளியீடு

தகவல்முறைமை இருவகைப்படும்
   1.   கையினால் செயற்படுத்தப்படும்/தன்னியக்கமற்ற தகவல் முறைமை(Manual information system)
   2.   கணினி சார் தகவல் முறமை (Computer base information system)

கையினால் செயற்படுத்தப்படும்/தன்னியக்கமற்ற தகவல் முறைமை (Manual information system)
எல்லா முறைவழியாக்கமும் மனித வலு மூலம் செயற்படுத்தப்படும் முறைமை இதுவாகும். இங்கு தரவுகளும் தகவல்களும் கடதாசியில் எழுதி கோவைகளாக பராமரித்தல் வேண்டும்.
தீமைகள்
    ·         திருத்தமற்றதாக கணப்படும்.
    ·         துரிதமாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாது.
    ·         பெரும் தொகையான தகவல்களை கையாள்வது கடினம்.
    ·         வினைத்திறன் குன்றிய முறைவழியாக்கமாக காணப்படும்.
    ·         பாதுகாப்பது கடினம்.
    ·         தகவல்களை பேணுவதற்கு பெரிய இடவசதி தேவை.




கணினி சார் தகவல் முறமை (Computer base information system)
தகவல் முறைமை ஒன்றின் செயற்பாடகள் கணினி ஊடாக செயற்படுத்தப்படும் எனில் அதனை கணினி சார் தகவல் முறைமை எனப்படும். இதன் பிரதான கூறுகளாக
·         வண்பொருள்
·         மென்பொருள்
·         பயனாளர்/செய்நிரலாளர்
·         செயல்முறைகள்
·         தரவுகளும்,தகவல்களும்

முறைமை ஒன்றின் முறைவழியாக்கத்தின் வகைகள்
  1.   தொகுதி முறைவழியாக்கம் (Batch Processing)
  2.   நிகழ் நேர முறைவழியாக்கம் (Real Time Processing)
தொகுதி முறைவழியாக்கம் (Batch Processing)
முறைமை ஒன்றின் முறைவழியாகம் ஆனது தொகுதி தொகுதியாக நிறைவேற்றப்படும் ஆயின் அதனை தொகுதி முறைவழியாக்கம் என அழைப்பா்.
உ-ம்   மாணவர் தினவரவு பதிவு, பல்கலைக்கழக மாணவர் அனுமதி

நிகழ் நேர முறைவழியாக்கம் (Real Time Processing)
முறைமை ஒன்றின் முறைவழியாகம் ஆனது தொடர்சியாக இடம் பெற்றக்கொண்டு இருக்கும் ஆயின் அதனை நிகழ் நேர முறைவழியாக்கம் என அழைப்பா்.
உ-ம்   தொலைபேசி பரிவர்த்தன முறைமை, வங்கி ATM முறைமை


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews